search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பள்ளத்தாக்கு"

    • பூமியில் சுமார் 192 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கமானது ஏற்பட்டுள்ளது.
    • ஆப்கானிஸ்தானில் முதலில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

    ஜம்மு காஷ்மீரில் 5.2 ரிக்டர் அளவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று காலை 10.43 மணியளவில் காஷ்மீர் பள்ளத்தாக்கில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகத்  தேசிய நில அதிர்வு கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.

    பூமியில் சுமார் 192 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கமானது ஏற்பட்டுள்ளதாக அதன் அறிக்கை தெரிவிக்கின்றது. இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள் சாலைகளில் தஞ்சமடைந்தனர்.

    இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு சம்பவங்கள் எதுவும் ஏற்படவில்லை. மேலும், பொருட்சேதமும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஆப்கானிஸ்தானில்  முதலில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்றும் அதன் காரணமாகவே ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டள்ளது. அந்நாட்டின் பல்வேறு பள்ளத்தாக்கு பகுதிகளில் இது உணரப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

    • ஓட்டுநரின் கட்டுப்பாட்டை வாகனம் இழந்திருக்கலாம் என சந்தேகம்.
    • உயிரிழந்தவர்கள் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக சென்றபோது விபத்து.

    உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பவுரி மாவட்டத்தின் வெவ்வேறு பகுதிகளில் இரண்டு கார்கள் பள்ளத்தாக்குகளில் விழுந்து மூன்று குழந்தைகள் உள்பட ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 8 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

    இதில், ஒரு விபத்து கிர்சு சௌபட்டா என்கிற பகுதியிலும், மற்றொன்று சத்புலி பகுதியில் உள்ள துத்ராகல் அருகேயும் நிகழ்ந்துள்ளது.

    இதுகுறித்து மாநில பேரிடர் மீட்புப் படையிலிருந்து (SDRF) பெறப்பட்ட தகவலை மேற்கோள் காட்டி, "கிர்சு சௌபட்டாவில் கார் சாலையை விட்டு விலகி 200 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தாக்கில் விழுந்ததில் ஏழு பேரில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக" அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மேலும், விபத்துகான காரணம் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை வாகனம் இழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

    பாதிக்கப்பட்டவர்களை மீட்க மாநில பேரிடர் மீட்புப் படையிலிருந்து பணியாளர்கள் மற்றும் போலீசார் விபத்து நடந்த இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இந்த விபத்தில் 3 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இறந்தவர்கள் ஸ்ரீஷ்டி நேகி (15), ஆருஷி (9), சௌமியா (5) மற்றும் டிரைவர் மன்வர் சிங் என்ற சோனு என அடையாளம் காணப்பட்டனர்.

    காயமடைந்தவர்களில் ஸ்ரீஷ்டியின் சகோதரி சாக்ஷி நேகி (14), சமீக்ஷா ராவத் (15) மற்றும் கன்ஹா (11) ஆகியோர் அடங்குவர்.

    சாக்ஷியும், சமீக்ஷாவும் சிறப்பு சிகிச்சைக்காக ரிஷிகேஷில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்திற்கு (எய்ம்ஸ்) விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மற்றொரு சம்பவத்தில், சத்புலி பகுதியில் உள்ள துத்ராகல் அருகே கார் 150 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தாக்கில் விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார் மற்றும் 5 பேர் காயமடைந்தனர்.

    உயிரிழந்தவர்கள் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக சத்புலிக்கு சென்று கொண்டிருந்தனன் என்பது தெரியவந்தது.

    • விபத்தில், மேலும் 15 பேர் காயமடைந்துள்ளனர்.
    • உள்ளூர் மக்களின் உதவியுடன் காயமடைந்த பயணிகளை மீட்டனர்.

    வடமேற்கு பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வாவில் நேற்று இரவு அதிவேகமாகச் சென்ற பேருந்து பள்ளத்தில் கவிழந்து விழுந்தது,

    இதில், 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 15 பேர் காயமடைந்துள்ளனர்.

    ஹரிப்பூர் மாவட்டத்தில் உள்ள கான்பூரில் இருந்து மலைப்பாங்கான கிராமத்திற்கு பேருந்து சென்று கொண்டிருந்த போது தர்னாவா என்ற இடத்தில் விபத்துக்குள்ளானது.

    அதிக வேகம் காரணமாக ஒரு திருப்பத்தின்போது பேருந்து ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் விழுந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

    இறந்தவர்களில் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் அடங்குவர்.

    விபத்து நடந்த இடத்திற்கு விரைந்த மீட்பு வாகனங்கள் மற்றும் உள்ளூர் மக்களின் உதவியுடன் காயமடைந்த பயணிகளை மீட்டு ஹரிபூர் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    • பள்ளத்தாக்கு மிகவும் சரிவாக இருந்ததால் யாரும் இறங்க முன் வரவில்லை.
    • பிரத்யேக மலையேறும் கருவியை பயன்படுத்தி 60 அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கில் இறங்கி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் வயநாடு பகுதியுள்ள பிலாத்தோட்டம் பகுதிக்கு ஜாசிம் என்பவர் தனது நண்பர்களுடன் சுற்றுலா வந்திருந்தார். அப்போது அங்குள்ள பள்ளத்தாக்கு பகுதியில் தனது நண்பர்களுடன் செல்போனில் செல்பி எடுத்தார்.

    அந்த நேரத்தில் அங்கு நின்று கொண்டிருந்த ஒரு குரங்கு, ஜாசிமின் விலை உயர்ந்த செல்போனை பிடுங்கி பள்ளத்தாக்கில் வீசியது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அங்கிருந்த உள்ளூர் மக்களிடம் உதவியை நாடினார். ஆனால் அந்த பள்ளத்தாக்கு மிகவும் சரிவாக இருந்ததால் யாரும் இறங்க முன் வரவில்லை.

    இதையடுத்து அவர் தீயணைப்பு துறையினரின் உதவியை நாடினார். ஆனால் அவர்களோ, மனித உயிர்களை காப்பாற்றவே முக்கியத்துவம் கொடுத்து மீட்பு பணியில் ஈடுபடு வோம் என்று கூறி வர மறுத்தனர்.

    ஆனால் தனது செல்போனின் விலை ரூ.65 ஆயிரம் எனவும், அதில் பல ஆவணங்கள் இருப்பதாகவும், ஆகவே தனது செல்போனை மீட்டு தருமாறு கேட்டுக் கொண்டார். இதையடுத்து தீயணைப்பு அதிகாரி ஜித்தன் குமார் நேரடியாக களத்தில் இறங்கினார்.

    அவர் பிரத்யேக மலையேறும் கருவியை பயன்படுத்தி 60 அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கில் இறங்கி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டார். மிகவும் அபாயகரமான அந்த பள்ளத்தாக்கில் தீயணைப்பு அதிகாரியே தேடுதல் வேட்டையில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கட்டுப்பாட்டை இழந்த கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
    • காயமடைந்த 3 பேரை ரிசிகேஷியில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள நியூ டெஹ்ரி பகுதியில் பத்ரிநாத் நோக்கி சென்றுக்கொண்டிருந்தபோது கார் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் மூன்று பேர் பலியாகியுள்ளனர். மேலும், 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

    மும்பையை சேர்ந்த ஆறு பேர், காரில் பத்ரிநாத் கோயிலுக்கு சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது, கட்டுப்பாட்டை இழந்த கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

    இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த மூத்த துணை ஆய்வாளர் ரமேஷ் குமார் சாயினி மற்றும் துணை ஆய்வாளர் ஆஷிஷ் சர்மா ஆகியோருடன் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் 3 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. காயமடைந்த 3 பேரை ரிசிகேஷியில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    ×