என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "புதிய கல்விக்கொள்கை"
- ‘ஸ்ரீ பள்ளிகளை’ தமிழ்நாட்டில் தொடங்கும் திமுக அரசின் முடிவு வன்மையான கண்டனத்துக்குரியது.
- புதிய கல்விக்கொள்கையின் அனைத்து கூறுகளையும் முழுமையாக நடைமுறைப்படுத்த மோடி அரசால் உருவாக்கப்பட்டுள்ள மாதிரிப் பள்ளி திட்டம்தான் ஸ்ரீ பள்ளிகளாகும்
பாஜகவின் புதிய கல்விக்கொள்கையான ஸ்ரீ பள்ளி திட்டத்தை தமிழ்நாட்டில் தொடங்கி மாநிலக்கல்வியைக் காவிமயமாக்குவதுதான் திராவிட மாடலா? என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்திய ஒன்றியத்தை ஆளும் பாசிச பாஜக அரசால் உருவாக்கப்பட்டுள்ள வர்ணாசிரமத்தை வலியுறுத்தும் தேசியக் கல்விக்கொள்கையைப் பின்பற்றி 'ஸ்ரீ பள்ளிகளை' தமிழ்நாட்டில் தொடங்கும் திமுக அரசின் முடிவு வன்மையான கண்டனத்துக்குரியது. தேசிய கல்விக்கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டபோது தமிழ்நாட்டில் அதனை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று கூறிய முதலமைச்சர் ஐயா ஸ்டாலின் அவர்கள், தற்போது மெல்ல மெல்ல பாஜகவின் புதிய கல்விக்கொள்கையை நுழைப்பது தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்காலத்தை இருளில் தள்ளும் கொடுஞ்செயலாகும்.
புதிய கல்விக்கொள்கையின் அனைத்து கூறுகளையும் முழுமையாக நடைமுறைப்படுத்த மோடி அரசால் உருவாக்கப்பட்டுள்ள மாதிரிப் பள்ளி திட்டம்தான் ஸ்ரீ பள்ளிகளாகும். அதனை தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்த விருப்பம் தெரிவித்து, புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ள திமுக அரசு புதிதாக குழு அமைத்துள்ளது பெரும் அதிர்ச்சியளிக்கிறது.
பொதுப்பட்டியலிலுள்ள கல்வியை, ஒன்றியப்பட்டியலில் இருப்பது போலக் கருதிக்கொண்டு ஒற்றை மயத்தையும், காவிக்கொள்கையையும் திணிக்கும் பொருட்டு மோடி அரசால், எதேச்சதிகாரப்போக்கோடு உருவாக்கப்பட்ட தேசியக் கல்விக்கொள்கைக்கு மாற்றெனக் கூறி, புதிதாக மாநிலக் கல்விக்கொள்கையை உருவாக்க கடந்த 2022ஆம் ஆண்டு சூன் 1 அன்று ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் குழு அமைத்தது திமுக அரசு.
ஆனால் ஓராண்டுக்குள் தேசியக் கல்விக்கொள்கைக்கு சாதகமாக மாநிலக் கல்விக்கொள்கை உருவாக்கப்படுவதாக குற்றம் சுமத்தி, அக்குழுவிலிருந்து பேராசிரியர் ஜவகர் நேசன் அவர்கள் விலகியது திமுக அரசு உருவாக்கவுள்ள கல்விக் கொள்கையின் மீதான நம்பகத்தன்மையே கேள்விக்குள்ளாக்கியது. அதனைத் தொடர்ந்து, தேசிய கல்விக் கொள்கையின் கூறான இல்லம் தேடிக்கல்வியை தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தியதும், தமிழ்நாடு அரசுக்குச் சொந்தமான கல்வி தொலைக்காட்சியின் முதன்மை செயல் அலுவலராக மணிகண்ட பூபதி எனும் ஆர்.எஸ்.எஸ். பின்புலம் கொண்டவரை நியமனம் செய்ததும், பாஜக அரசின் புதிய கல்விக்கொள்கையை விமர்சித்ததற்காக ஆசிரியர் உமாமகேசுவரியை அண்மையில் பணி இடைநீக்கம் செய்து தண்டித்ததும் திமுக அரசின் மீதான சந்தேகத்தை மேலும் அதிகமாக்கியது.
தற்போது அத்தனை சந்தேகங்களையும் உறுதிப்படுத்தும் விதமாக பாஜகவின் வர்ணாசிரம கல்விக்கொள்கையை முற்று முழுதாக தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்த 'ஸ்ரீ பள்ளிகளை' தொடங்கும் திமுக அரசின் முடிவு பாஜகவின் கைப்பாவையாகவே திமுக செயல்படுகிறது என்பதையே காட்டுகிறது.
மாநிலத் தன்னாட்சியென வாய்கிழியப்பேசும் திமுக, மாநில அரசின் தன்னுரிமையைக் காவுகொடுத்து, பாஜக அரசின் கல்விக்கொள்கையை நடைமுறைப்படுத்தத் துணைபோவது அப்பட்டமான ஆரிய அடிமைத்தனமில்லையா? சனாதனத்திற்கு எதிரானது திராவிடமென முழங்கும் முதல்வர் ஸ்டாலின் அவர்கள், கல்வியைக் காவிமயமாக்க எப்படித் துணைபோகிறார்? இதுதான் சமூகநீதி ஆட்சியா? இதுதான் இருளகற்றும் விடியல் ஆட்சியா? இந்துத்துவ பாஜக அரசு முன்வைக்கும் ஆரிய மாடலை அடியொற்றுவதுதான் திராவிட மாடல் ஆட்சியா? இதுதான் உங்களது பாசிச எதிர்ப்பா முதல்வரே?
இதுதான் ஆரியத்தைத் திராவிடம் வீரியமாக எதிர்க்கின்ற முறையா? ஒன்றிய அரசு மாநிலப் பட்டியலில் இருந்த கல்வியை பொதுப்பட்டியலுக்கு மாற்றுவதை கைகட்டி வேடிக்கைப் பார்த்த ஒரு துரோகம் போதாதா? மக்களை இன்னும் எவ்வளவு காலம் இப்படி ஏமாற்றப்போகிறீர்கள்? இந்திய ஒன்றிய அரசின் கல்விக்கொள்கையை ஏற்க நினைக்கும் திமுக அரசின் கொள்கை நிலைப்பாடும், நிர்வாகச் செயல்பாடும் தமிழ்நாட்டு மாணவர்களுக்கும், மக்களுக்கும் மட்டுமல்ல; திராவிட ஆட்சியின் மூலவரான அறிஞர் அண்ணா அவர்களுக்கே செய்யும் கொடுந்துரோகமாகும்.
ஆகவே, இவ்விவகாரத்தில் திமுக அரசு இனியாவது தனது தவற்றை உணர்ந்து, பாஜகவின் வர்ணாசிரம கல்விக்கொள்கையை நடைமுறைப்படுத்தும் ஸ்ரீ பள்ளிகளை தமிழ்நாட்டில் தொடங்கும் முடிவை உடனடியாகக் கைவிட்டு, சமூகநீதி அடிப்படையில் தனித்துவமிக்க மாநிலக் கல்விக்கொள்கையை வடிவமைக்க வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
- நடப்பு கல்வியாண்டில் 3, 4, 5ம் வகுப்புகளுக்கும் புதிய கல்விக்கொள்கை அடிப்படையிலான பாடத்திட்டம் அமலுக்கு வருகிறது.
- முதல் வகுப்பில் மாணவர்களை சேர்க்க வேண்டுமெனில் 6 வயது பூர்த்தி ஆகி இருக்க வேண்டும்.
புதுடெல்லி:
வரும் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை பள்ளிகளில் தொடங்க உள்ள நிலையில் அனைத்து மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய கல்வி அமைச்சகம் அறிக்கை அனுப்பி உள்ளது. அதில்,
* புதிய கல்விக்கொள்கை அடிப்படையில் கடந்த ஆண்டு 2ம் வகுப்பு வரை பாடத்திட்டம் அமலுக்கு வந்தது.
* நடப்பு கல்வியாண்டில் 3, 4, 5ம் வகுப்புகளுக்கும் புதிய கல்விக்கொள்கை அடிப்படையிலான பாடத்திட்டம் அமலுக்கு வருகிறது.
* ப்ரீ கேஜிக்கு 3 வயதும், எல்கேஜிக்கு 4 வயதும், யுகேஜிக்கு 5 வயதும் பூர்த்தி ஆகி இருக்க வேண்டும்.
* முதல் வகுப்பில் மாணவர்களை சேர்க்க வேண்டுமெனில் 6 வயது பூர்த்தி ஆகி இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது.
- நான் முதல்வன் திட்டம் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இன்று நடைபெற்றது.
- புதிய கல்விக்கொள்கையால் தமிழகம் 200 ஆண்டுகள் பின் தங்கிவிடும்.
நாகர்கோவில்:
மாவட்ட அளவில் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் நோக்கில் தமிழக அரசின் சிறப்பு திட்டமான நான் முதல்வன் திட்டம் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழ்வளர்த்த மனோன்மணியம் சுந்தரனார் பெயரை தாங்கி நிற்கும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளில் கடந்த 3 ஆண்டுகளாக பட்டம் வழங்கப்படவில்லை, இக்கல்லூரியில் படித்தவர்களுக்கு ஆளுநர் விரைவில் பட்டம் வழங்க வேண்டும்.
இந்திய அளவில் பெண் கல்வி 28 சதவீதம் இருக்கும் நிலையில், தமிழகம் 78 சதவீதம் வரை வளர்ச்சி அடைந்து உள்ளது. இது தான் திராவிட மாடல் அரசின் சாதனை. புதிய கல்விக்கொள்கையால் தமிழகம் 200 ஆண்டுகள் பின் தங்கிவிடும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- 2047-ல் இந்தியா பொருளாதார அளவில் பெரும் சக்தி மிக்க நாடாக மாறும்.
- தொழில் நிறுவனங்களுக்குத் தேவையான மாணவர்களை நாம் உருவாக்க வேண்டும்.
சென்னை :
சென்னையை அடுத்த மேலக்கோட்டையூரில் உள்ள இந்திய தகவல் தொழில்நுட்பம், வடிவமைத்தல் மற்றும் உற்பத்தி நிறுவனத்தின் (ஐ.ஐ.ஐ.டி.டி.எம்.) 10-ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.
விழாவில் நிர்மலா சீதாராமன் பேசியதாவது:-
மாணவர் சமூகம் பொருளாதார முன்னேற்றம் அடைய வேண்டியது அவசியம். உலக அளவில் வளர்ந்து வரும் அறிவியல் தொழில்நுட்பங்களை போட்டி மனப்பான்மையோடு அணுக வேண்டும். அறிவியல் மற்றும் அதன் திறன் மேம்பாடு மிகவும் அவசியம். விவசாயிகளும், ராணுவ வீரர்களும் முன்னேற வேண்டும் என சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
அவர் கூறியது போல ஜெய் விஞ்ஞான், ஜெய் கிசான் மற்றும் ஜெய் அனுசந்தன் (ஆராய்ச்சி) ஆகியவற்றை நமது குறிக்கோளாகக் கொள்ள வேண்டும். விஞ்ஞானிகளும் அவர்களின் ஆராய்ச்சிகளும் நாட்டின் அடுத்த 25 ஆண்டு வளர்ச்சிக்கு அவசியம். 2047-ல் இந்தியா பொருளாதார அளவில் பெரும் சக்தி மிக்க நாடாக மாறும். அதற்கு இந்தக் குறிக்கோள்களை நாம் பின்பற்ற வேண்டும்.
தொழில் நிறுவனங்களுக்குத் தேவையான மாணவர்களை நாம் உருவாக்க வேண்டும். 2026-ல் நமது நாட்டில் வேலை பார்ப்பவர்கள் எண்ணிக்கை 65 சதவீதமாக அதிகரிக்கும். எனவே நமது நாடு 2047-ல் பொருளாதாரத்தில் முன்னேறிய சக்தியாக விளங்கும். உலக அளவில் 58 சி.இ.ஓ.க்கள் இந்தியர்களாக உள்ளனர். இவர்கள் அனைவரும் இந்தியாவில் இந்தியக் கல்வி முறையில் பயின்றவர்கள்.
சிலிகான் பள்ளத்தாக்கில் உள்ள 25 சதவீத நிறுவனங்கள் இந்தியர்களால் நடத்தப்படுகின்றன. 100 யூனிகான் நிறுவனங்கள் இந்தியர்களால் நடத்தப்படுகின்றன. இது கடந்த 5 ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. புதிய கல்விக் கொள்கை உயர் கல்விக்கு நிறைய வாய்ப்புகளைக் கொடுத்துள்ளது. 760 மெய்நிகர் அறிவியல் ஆய்வகங்கள், திறன் மேம்பாட்டு ஆய்வகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் இக்கல்வி நிறுவனத்தின் புதிய அரங்குக்கு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அடிக்கல் நாட்டினார். பின்னர் ஏ.ஐ.ஐ.ஓ.டி. ரோபோடிக்ஸ் மையத்தையும் அவர் திறந்து வைத்தார்.
விழாவில் ஐ.ஐ.ஐ.டி.டி.எம். நிறுவன குழுத் தலைவர் பேராசிரியர் எஸ்.சடகோபன், இயக்குனர் டி.வி.எல்.எம்.சோமயாஜுலு மற்றும் பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள், பெற்றோர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்