என் மலர்
நீங்கள் தேடியது "குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில்"
- தினசரி காலை முதல் இரவு வரை பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடக்கும்.
- 5-ந்தேதி நள்ளிரவு 12 மணிக்கு சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறும்.
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா பெருந்திருவிழா தமிழகத்தில் முதல் இடம் வகிக்கும் திருவிழாவாகும்.
தசரா திருவிழா தொடங்குவதையொட்டி நேற்று நண்பகல் காளி பூஜை நடந்தது. இரவு 9 மணிக்கு அன்னை முத்தாரம்மன் மற்றும் ஞானமூர்த்தீஸ்வரருக்கு காப்பு கட்டப்பட்டது.
இன்று காலை 5 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட யானையில் கொடிபட்டம் வைத்து கொடிஊர்வலம் முக்கிய தெருக்கள் வழியாக சென்றது. கொடிபட்டம் கோவிலுக்கு வந்ததும், காலை 9 மணிக்கு கோவில் முன்புள்ள கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது.
தொடர்ந்து கொடிமரத்திற்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் பூஜையும் தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தது. கோவில் கொடி ஏறியதும், விரதமிருந்து வந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று கோவிலில் காப்பு வாங்கி தங்களது வலது கையில் கட்டினர். சிலர் பூசாரி கையினாலும் காப்பு கட்டினர்.
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக கொடியேற்றம் உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகள் கட்டுப்பாடுகளுடன் நடந்தது.
இந்நிலையில் இந்த ஆண்டு தொற்று பரவல் நீங்கியதையடுத்து தசரா திருவிழாவில் எந்த கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை. இதனால் தசரா திருவிழா கோலகலத்துடன் தொடங்கி உள்ளது.
தசரா திருவிழா தொடங்கியதையொட்டி கோவிலில் தினசரி காலை முதல் இரவு வரை பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடக்கும். தினசரி மாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை சமய சொற்பொழிவு மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடந்து வரும்.
ஒவ்வொரு நாளும் இரவு 9 மணிக்கு ஒவ்வொரு திருக்கோலத்தில் அன்னை முத்தாரம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுக்கும் நிகழ்ச்சியும் நடைபெறும்.
வருகிற 5-ந்தேதி நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு பூஜையுடன் அன்னை முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி கடற்கரைக்கு சென்று மகிஷாசுரனை சம்ஹாரம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறும்.
இதில் பல லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள். முன்னதாக வேடம் அணிந்து வந்த பக்தர்கள் ஆடல், பாடல், தப்பாட்டம் கரகாட்டம், போன்ற பல்வேறு கலைஞர்களுடன் ஊர் ஊராகச் சென்று கலை நிகழ்ச்சி நடத்தி அம்மன் பெயரில் காணிக்கை வாங்குவது மிகவும் சிறப்பாகும்.
மாவட்ட காவல்துறை, போக்குவரத்து துறை, சுகாதாரத்துறை, வருவாய்த்துறை உட்பட பல்வேறு துறை அதிகாரிகள், குலசேகரன்பட்டினத்தில் முகாமிட்டு பக்தர்களுக்கான அனைத்து வசதிகளையும் செய்து வருகின்றனர்.
திருச்செந்தூர் குலசேகரன்பட்டினம் உடன்குடி பகுதி முழுவதும் ஆங்காங்கே தசரா பக்தர்களாகவே காட்சி தருகின்றனர்.
பக்தர்கள் வந்து செல்ல வசதியாக முக்கியமான ஊர்களில் இருந்து குலசேகரன் பட்டினத்திற்கு அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
- இன்று காலை 9 மணிக்கு கோவில் கொடிமரத்தில் கொடியேற்றப்படுகிறது.
- 5-ந்தேதி நள்ளிரவு 12 மணிக்கு சூரசம்ஹாரம் நடக்கிறது.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா உலக பிரசித்தி பெற்றது. கோவிலில் இந்த ஆண்டு தசரா திருவிழா இன்று (திங்கட்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி நேற்று காலையில் காளி பூஜை, மதியம் அன்னதானம், மகுட இசை, சகஸ்ரநாம அர்ச்சனை, புஷ்பாஞ்சலி, மாலையில் வில்லிசை நடந்தது. இரவில் அம்மனுக்கு காப்பு கட்டப்பட்டது.
இன்று (திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு கோவில் கொடிமரத்தில் கொடியேற்றப்படுகிறது. மதியம் முதல் இரவு வரையிலும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும். இரவு 10 மணிக்கு சிம்ம வாகனத்தில் துர்க்கை திருக்கோலத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார்.
விழாவையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நேற்று காலை முதலே திரளான பக்தர்கள் செவ்வாடை அணிந்து கோவிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர். கடலில் புனித நீராடிய பக்தர்கள், தாங்கள் விரதம் இருக்கும் தசராபிறையில் தெளிப்பதற்காக புனிதநீரை எடுத்து கோவிலுக்கு வந்து வழிபட்டனர்.
இன்று கொடியேற்றத்தை தொடர்ந்து, பல்வேறு நாட்களாக விரதம் இருக்கும் பக்தர்கள் தங்களது கைகளில் மஞ்சள் கயிற்றாலான காப்பு அணிகின்றனர். பின்னர் பக்தர்கள் நேர்த்திக்கடனாக பல்வேறு வேடங்களை அணிந்து, ஊர் ஊராக சென்று காணிக்கை வசூலித்து, விழா நிறைவில் கோவிலில் செலுத்துகின்றனர்.
விழா நாட்களில் தினமும் இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், 10-ம் திருநாளான வருகிற 5-ந்தேதி (புதன்கிழமை) நள்ளிரவு 12 மணிக்கு நடக்கிறது.
விழாவையொட்டி கோவில் வளாகத்தில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளது. பல்வேறு ஊர்களில் இருந்தும் குலசேகரன்பட்டினத்துக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
- 26-ந்தேதி முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
- தீராத புற்றுநோய் குணமாகியதால் நேர்த்திக்கடன் செலுத்துகிறார்
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. முத்தாரம்மனை வழிபட பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் பல்வேறு வேடம் அணிந்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள சங்கனாங்குளம் ஊரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சந்திரன் (வயது46). இவர் சுமார் 35 ஆண்டுகளாக விதவிதமான வேடமணிந்து அம்மனை தரிசித்து வருகிறார்.
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு தொண்டை பகுதியில் கேன்சர் ஏற்பட்டு சிகிச்சைக்கு உள்ளானார். சிகிச்சையில் முன்னேற்றம் கிடைக்கப்பெறாத நிலையில் அம்மனை மனம் உருகி வழிபட்டு வந்தார். அதன் பலனாக அவருக்கு ஏற்பட்ட கேன்சர் நோயின் பாதிப்பு வெகுவாக குறைய தொடங்கியது.
அதற்கு அம்மனுக்கு நன்றி கடன் செலுத்தும் விதமாக 4 ஆண்டுகளாக சுடுகாட்டு காளி வேடம் அணிந்து விரதம் இருந்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகிறார்.
இந்த ஆண்டு வருகிற 26-ந்தேதி முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி பக்தர் சந்திரன் சங்கனாங்குளத்தில் உள்ள சுடுகாட்டில் 6 அடி அளவில் நீளமான பள்ளம் தோண்டி குடில் அமைத்து 21 நாட்கள் விரதம் இருந்து வருகிறார்.
விரதத்தை முன்னிட்டு சுடுகாட்டு காளி வேடம் அணிந்து நேர்த்திக்கடன் செலுத்தும் விதமாக விரதத்தை கடைபிடித்து வருகிறார். உணவு எதுவும், உட்கொள்ளாமல் காலை மாலை வேளைகளில் பால் கலக்காத காபியும் மற்ற வேளைகளில் தண்ணீர் மட்டும் குடித்து விரதம் கடைபிடிக்கிறார். இருவேளை பூஜை நடத்தும் இவர் பூஜைக்கு முன்னதாக குளிப்பதற்காக மட்டுமே வெளியே வருகிறார்.
பகல்- இரவு வேளைகளில் வெளியே வருவதில்லை. தொடர்ச்சியாக அம்மனின் அருள் கிடைத்ததாக கூறும் சந்திரனுக்கு ஏற்பட்ட கேன்சர் நோய் தற்போது மருத்துவ சிகிச்சை இன்றி முற்றிலும் குணமடைந்து இருப்பதாக கூறுகிறார்.
இது குறித்து சுடுகாட்டு காளி சந்திரன் கூறியதாவது:-
எனக்கு வந்த தீராத நோய் கேன்சர் என்னை மரண வாசலில் கொண்டு போய் விட்டது. அந்த நேரத்தில் மருத்துவர்களும் உறவினர்களும் என்னை கைவிட்ட நேரத்தில் என்னை காப்பாற்றியது குலசை முத்தாரம்மன் தான். நான் 35 ஆண்டுகளாக குலசை முத்தாரம்மனின் பக்தர் தான். ஆனால் நான் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட போது முத்தாரம்மன்னை மட்டுமே நம்பி இருந்தேன். என் நம்பிக்கை வீண் போகவில்லை.
அதனால் தான் உயிருடன் இருக்கும் போதே இறந்து விட்டதாக நினைத்து சுடுகாடு வரை சென்று உயிருடன் திரும்பியதால் முத்தாரம்மனின் ஒரு அவதாரமான சுடுகாட்டு காளி ஆகவே நான் கடந்த 4 ஆண்டுகளாக சுடுகாட்டு காளி வேடமணிந்து 21 நாட்கள் அன்ன ஆகாரம் உண்ணாமல் சுடுகாட்டில் உடல் அடக்கம் செய்ய தோண்டப்படும் குழி போன்று குழி தோண்டி அந்த குழியில் தங்கி இரவு பகல் வசித்து வருகிறேன் என்று கூறினார்.
- தசரா திருவிழா வருகிற 26-ந்தேதி தொடங்குகிறது.
- பக்தர்கள் வேண்டுதலுக்கு ஏற்ப 61 நாள், 41 நாள், 31 நாள் என விரதமிருந்து வருகின்றனர்.
உடன்குடி :
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா வருகிற 26-ந் தேதி(திங்கட்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வரும் அக். 5-ந்தேதி மகிசாசூரசம்காரம் நடைபெறுகிறது.
இத்திருவிழாவை முன்னிட்டு பல ஆயிரம் பக்தர்கள் வேண்டுதலுக்கு ஏற்ப 61 நாள், 41 நாள், 31 நாள் என விரதமிருந்து வருகின்றனர். மற்ற பக்தர்கள் தங்களது வசதிக்கேற்ப விரதத்தை தொடங்கியுள்ளனர்.
மேலும், விரதம் இருந்து வந்த பக்தர்கள் தாங்கள் அணிவதற்கு சுவாமிகள் உள்ளிட்ட பல்வேறு வேடங்களுக்கான தசரா பொருட்களை வாங்குவதில் தீவிரம் காட்டி வருகின்றனர். இதற்காக உடன்குடி, குலசேகரன்பட்டினம் பகுதியிலுள்ள கடைகளில் பக்தர்கள் வேடமணியும் பொருட்களை விற்பனைக்கு குவித்து வைத்துள்ளனர்.
இந்த பொருட்களை பக்தர்கள் குவிந்து போட்டி போட்டுக் கொண்டு வாங்கி வருவதால், கடைவீதிகளில் கூட்டம் அலைமோதுகிறது. இதேபோன்று மாவட்டம் முழுவதும் தூத்துக்குடி, திருச்செந்தூர், குரும்பூர், சாத்தான்குளம், ஆத்தூர், ஏரல் உள்ளிட்ட பல்வேறு ஊர்களிலும் பக்தர்களின் வேட பொருட்கள் விற்பனை களைகட்டி வருகிறது.
- இந்த திருவிழா 12 நாட்கள் நடைபெறுகிறது.
- சூரசம்ஹாரம் அக்டோபர் 5-ந்தேதி நள்ளிரவு 12 மணிக்கு நடக்கிறது.
- 7-ந்தேதி சிறப்பு பாலாபிஷேகத்துடன் விழா நிறைவு பெறுகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் தசரா திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
கோவிலில் இந்த ஆண்டு தசரா திருவிழா வருகிற 26-ந்தேதி (திங்கட்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 12 நாட்கள் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு வருகிற 25-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணிக்கு காளி பூஜை, இரவு 9 மணிக்கு அம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடக்கிறது.
முதலாம் திருநாளான 26-ந்தேதி (திங்கட்கிழமை) அதிகாலை 5 மணிக்கு யானை மீது கொடிப்பட்டம் வீதி உலா, காலை 6 மணிக்கு சிறப்பு அபிஷேகம், காலை 9.30 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது. பின்னர் கொடிமர பீடத்துக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெறும்.
தொடர்ந்து விரதம் மேற்கொள்ளும் பக்தர்களின் கைகளில் திருக்காப்பு அணிவிக்கப்படுகிறது. காப்பு அணியும் பக்தர்கள் நேர்த்திக்கடனாக பல்வேறு வேடங்களை அணிந்து, ஊர் ஊராக சென்று காணிக்கை வசூலித்து கோவிலில் செலுத்துகின்றனர்.
விழா நாட்களில் தினமும் இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் பல்வேறு திருக்கோலங்களில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். காலை முதல் இரவு வரையிலும் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெறுகிறது. மாலையில் சமய சொற்பொழிவு, பட்டிமன்றம், பரதநாட்டியம், இன்னிசை நிகழ்ச்சி போன்ற பல்சுவை நிகழ்ச்சிகள் நடைபெறும்.
விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 10-ம் திருநாளான வருகிற 5-ந்தேதி (புதன்கிழமை) நள்ளிரவு 12 மணிக்கு நடக்கிறது.
11-ம் திருநாளான 6-ந்தேதி (வியாழக்கிழமை) அதிகாலை 1 மணிக்கு சூரசம்ஹாரம் முடிந்த பின்னர் கடற்கரை மேடையில் எழுந்தருளும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெறுகிறது.
12-ம் திருநாளான 7-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மதியம் 12 மணிக்கு சிறப்பு பாலாபிஷேகத்துடன் விழா நிறைவு பெறுகிறது.
உடன்குடி
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே உள்ள குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா பெருந்திருவிழா தமிழகத்தில் முதலிடம் வசிக்கும் தசரா திருவிழாவாகும்.
திருவிழாவில் வேடம் அணியும் பக்தர்களுக்கு வேண்டுதல்கள் எல்லாம் நிறைவேறும் என்பது ஐதீகம். 2 வருடமாக கொரோனா தாக்கத்தால் கோவில் முன்பு நடந்த சூரசம்ஹாரம் இந்த ஆண்டு முதல் மீண்டும் கடற்கரையில் நடக்கிறது.
காளி வேடம் அணியும் பக்தர்கள் 61 நாள், 41 நாள் என கடும் விரதம் இருந்து காளி வேடமணிவது மிகவும் சிறப்பாகும். மேலும் 100-க்கும் மேற்பட்ட சுவாமி வேடங்களை அணிந்து 10-ம் திருநாளான சூரசம்ஹாரம் அன்று ஓம் காளி, ஜெய் காளி என்ற கோஷத்துடன் அன்னை முத்தாரம்மன்னை பின்தொடர்ந்து சென்று சூரனை சம்ஹாரம் செய்யும் காட்சி காண முடியாத ஒரு அரும்பெரும் காட்சியாகும். இப்படி சுவாமி வேடங்கள் அணியும் பக்தர்களுக்கு மிகமிக முக்கியமானது தலைமுடிதான்.
உடன்குடி மற்றும் சுற்று வட்டார பகுதியில் ஏராளமான தொழிலாளர்கள் சடைமுடி, அலங்கார முடி, சுவாமி முடி, முனிவர்கள் முடி இப்படி விதவிதமான முடிகளை தயாரிப்பது தீவிரம் காட்டி வருகின்றனர். சிலர் தலையின் சுற்றளவு கொடுத்து அதற்கு தகுந்தார் போல் முடிகளை தயார் செய்ய முன் ஆர்டர் கொடுக்கின்றனர்.
ரூ.1000 முதல் ரூ.3500 வரை தரம்வாரியாக முடிகள் உள்ளதாக தயாரிப்பவர்கள் கூறுகிறார்கள். கோவிலில் கொடி ஏறியதும் கோவிலில் திருகாப்பு வாங்கி வலது கையில் கட்டி தங்களுக்குப் பிடித்தமான வேடங்கள் அணிந்து ஊர் ஊராக சென்று அம்மன் பெயரில் காணிக்கை வசூல் செய்து 10-ம் திருநாள் ஆன சூரசம்ஹாரம் அன்று கோவிலில் காணிக்கையை சேர்ப்பார்கள்.
தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவில் பல்வேறு அனைத்து மாநிலங்களிலும், வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் தசரா திருவிழாவில் கலந்து கொள்வதற்காகவே வந்து அம்மனுக்கு வேடம் அணிவது சிறப்பாகும்.
சுமார் 10 நாட்களாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரி ஆகிய மாவட்டங்களில் ஆங்காங்கே குலசேகரன்பட்டினம் தசரா பக்தர்கள் அம்மன் பெயரில் காணிக்கை வசூல் செய்வது மேலும் சிறப்பாகும். சிறுவர்களுக்கு பிடித்தமான குரங்கு, கரடி, புலி என்று பல்வேறு மிருகங்கள் வேடம் அணிவதும் பெண் வேடம் மற்றும் மாடல் அழகிகள் உட்பட எண்ணிக்கையில் அடங்காத வேடங்கள் அணிந்து, வேடங்கள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம் என்ற சொல்லுக்கு ஏற்ப வேடம் அணிவார்கள்.
சுவாமி வேடம்அணியும் சில பக்தர்களை பார்க்கும்போது அந்த சுவாமியே நேரடியாக வந்து காட்சி கொடுப்பதாக தெரியும், இப்படி வேடம் அணிந்தவர்கள், பழங்கால தமிழர் பண்பாட்டை நினைவுபடுத்தும் கரகம், காவடி, நையாண்டி, கோலாட்டம், சிலம்பாட்டம், களியாட்டம் போன்ற கலைநிகழ்ச்சியுடன் ஊர் ஊராகராக சென்று தசரா குழு உடன் இணைந்து கலை நிகழ்ச்சி நடத்தி, அம்மன் பெயரின் காணிக்கை வசூல் செய்வது ஒரு பெரிய வரப்பிரசாதம் ஆகும்.
தசரா திருவிழாவிற்கான ஆரம்ப கட்ட பணிகள் குலசேகரன்பட்டினத்தில் வேகமாக நடந்து வருகிறது, வாகனங்கள் வந்து செல்லும் ஒரு வழிப்பாதை, இருசக்கரம் வாகனங்கள் நிறுத்துமிடம், நான்கு சக்கர வாகனங்களை எதுவரை அனுமதிப்பது? அவசர தேவையான வாகனங்கள் எந்த வழியாக வருவது?போவது இப்படி பல்வேறு நடவடிக்கைகளை கோவில் நிர்வாகத்தினர் எடுத்து வருகின்றனர்.
உடன்குடி, குலசை, திருச்செந்தூர், பகுதியில் ஏராளமான கடைகளில் தசரா வேடம் போடும் பக்தர்களுக்கு தேவையான பொருட்களும் மலை போல் விற்பனைக்கு குவிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.