என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பெண்கள் மனு"
- பெரிய காட்டூர் பகுதியில் கடந்த 13 ஆண்டுகளாக வசித்து வருகிறோம்.
- விரைவாக நடவடிக்கை எடுத்து பட்டா வழங்க மனு அளித்துள்ளோம்.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் ஒன்றியம் காட்டூர் பகுதியைச் சேர்ந்த சுமார் 10க்கும் மேற்பட்ட பெண்கள், அவர்கள் குடியிருக்கும் இடத்திற்கு பட்டா கேட்டு பல்லடம் தாலுகா அலுவலகத்தில், மண்டல துணை தாசில்தார் பானுமதியிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், பெரிய காட்டூர் பகுதியில் கடந்த 13 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். பட்டா கேட்டு இதுவரை பலமுறை மனு கொடுத்தும், இன்னும் பட்டா கிடைக்கவில்லை. எனவே விரைவாக நடவடிக்கை எடுத்து பட்டா வழங்க மனு அளித்துள்ளோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- எலந்த குட்டை பஞ்சாயத்திற்கு உட்பட்ட வெப்படை கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் 20 ஆண்டுகளுக்கு மேலாக வாடகை வீட்டில் வசித்து வருகின்றோம்.
- எங்களுக்கு வெப்படை பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகில் உள்ள வெப்படை பகுதியை சேர்ந்த பெண்கள், நாமக்கல் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
குமாரபாளையம் தாலுகா எலந்த குட்டை பஞ்சாயத்திற்கு உட்பட்ட வெப்படை கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் 20 ஆண்டுகளுக்கு மேலாக வாடகை வீட்டில் வசித்து வருகின்றோம். நாங்கள் அனைவரும் கூலி தொழில் செய்து வறுமைக் கோட்டிற்கு கீழ் வசித்து வருகிறோம்.
சொந்த வீடு இல்லாததால் வாடகை வீட்டில் வசித்து வரும் நாங்கள் மாத வாடகை செலுத்த முடியாமல் சிரமப்பட்டு வருகிறோம். எங்களுக்கு வெப்படை பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.
- கருப்பட்டி தயாரிக்க மானியத்துடன் கடன் வழங்க வேண்டும் என கலெக்டரிடம் பெண்கள் மனு கொடுத்தனர்.
- ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பேரூராட்சி பகுதியில் கருப்பட்டி தயாரிப்புதான் அந்த பகுதி மக்களின் பிரதான தொழில் ஆகும்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பேரூராட்சி வி.வி.ஆர்.நகர், லால்பகதுார் சாஸ்திரி தெருவில் 100-க்கும் மேற்பட்டகுடியிருப்புகள் உள்ளன. கருப்பட்டி தயாரிப்புதான் இவர்களின் பிரதான தொழில் ஆகும்.
ஆண்டுக்கு 6 மாதம் இந்த தொழிலில் வருமானம் கிடைக்கிறது.அதன்பின்னர் பதனீர் சீசன் இல்லாதால்அன்றாட வருமானத்திற்கு சிரமப்படுகின்றனர். இந்த பகுதி பெண்கள் 2018-ம் ஆண்டு பனைத்தொழில் மேம்பாட்டு திட்டத்தில் வங்கியில் அரசு மானியத்துடன் ரூ.1 லட்சம் வரை கடன் வாங்கி முறையாக கட்டி முடித்துள்ளனர்.
அதன் பிறகு அரசு மானியத்துடன்கடன் வழங்கவில்லை. மீண்டும் அரசு மானியத்துடன் வங்கியில் கடன் வழங்க வேண்டும் என்று வி.வி.ஆர்.நகர் தலைவி அந்தோணியம்மாள் தலைமையில் கலெக்டர் ஜானி டாம் வர்கீஸிடம் மனு கொடுத்தனர்.
அவர்கள் கூறுகையில், ஆண்டு தோறும் தை முதல் ஆவணி வரை கருப்பட்டி தயாரித்து விற்கிறோம். வியாபாரிகளிடம் முன்பணம் வாங்குவதால் குறைந்த விலைக்கு வாங்கி வியாபாரிகள் அதிக லாபம் அடைகின்றனர். ஏற்கனவே வங்கியில் கடன் கொடுத்தனர். தற்போது சில புரோக்கர்கள் ரூ.10 ஆயிரம் கமிஷன் கொடுத்தால் ரூ.1 லட்சம் கடன் வாங்கி தருவதாக பேரம் பேசுகின்றனர். கடந்த முறை வாங்கிய கடனை முறையாக கட்டியுள்ளோம். எனவே எங்களுக்கு சிறு தொழில் மேம்பாட்டு திட்டத்தில் வங்கியில் அரசு மானியத்தில் கடன் வழங்க கலெக்டர் உத்தரவிட வேண்டும் என்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்