search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாடார் கூட்டமைப்பு"

    • ஆலோசனை கூட்டம் அகரகட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடந்தது.
    • காமராஜர் பிறந்த நாள் விழாவை முப்பெரும் விழாவாக கொண்டாடுவோம்.

    சாம்பவர்வடகரை:

    தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் அகரகட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடந்தது. நிறுவன தலைவர் லூர்து நாடார் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் ஆனந்த் காசி ராஜன், பொருளாளர் சுப்ரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் பொதுச் செயலாளர் ஆனந்த் காசிராஜன் பேசும்போது, ஜூலை 15-ந் தேதி பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளை தென்காசி மாவட்டம் முழுவதும் மிக சிறப்பாக கொண்டாடுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார். பொருளாளர் சுப்பிரமணியன் பேசுகையில், ஜூலை 23-ந்தேதி பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு நாடார் உறவின் முறைகள் கூட்டமைப்பின் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா, ஏழைகளுக்கு உதவி செய்கின்ற விழாவும் ஆகிய முப்பெரும் விழாவாக கொண்டாட வேண்டும் என்றார்.

    இதைத்தொடர்ந்து அகரகட்டு லூர்து நாடார் பேசும்போது, பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளில் தென்காசி மாவட்டத்தில் உள்ள பெருந்தலைவர் காமராஜரின் உருவ சிலைகளுக்கு தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்வோம். அதனைத்தொடர்ந்து தென்காசியில் காமராஜர் பிறந்த நாள் விழாவை முப்பெரும் விழாவாக கொண்டாடுவோம். நாம் கொண்டாடுகின்ற விழா பெருந்தலைவர் காமராஜருக்கு பெருமை சேர்க்கின்ற விழாவாக அமைய வேண்டும். அனைத்து ஊர்களில் இருந்தும் இந்த விழாவை கொண்டாடுவதற்கு நம் சமுதாய மக்களை வருகை தரச் சொல்லி அழைப்பு விடுப்போம் என்று பேசினார்.

    நிகழ்ச்சியில் மாநில துணைச்செயலாளர் ஜான் டேவிட், தென்காசி ஒன்றிய தலைவர் ராஜ் நயினார், மாவட்ட துணை செயலாளர் மோகன் வைகுண்டராஜன், முத்துராஜ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • மதுரையில் அகில இந்திய நாடார் கூட்டமைப்பு சார்பில் நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.
    • சிறப்பு அழைப்பாளராக நாடார் மகாஜன சங்க பொதுச் செயலாளர் கலந்து கொண்டார்.

    மதுரை

    அகில இந்திய நாடார் கூட்டமைப்பு நிர்வாகிகள் கூட்டம் மதுரை எம்.கே.புரம் வாணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.

    மாநில செயலாளர் செல்வராஜ் நாடார் வரவேற்றார். முருகானந்தம் நாடார் தலைமை தாங்கினார். புதிதாக தேர்வு செய்யப்பட்ட மாநில நிர்வாகிகள் பொறுப்பேற்றுக் கொண்டனர். ஏ.பி.எஸ். லிங்கம்நாடார், கிருஷ்ணா ராதாகிருஷ்ணன், சுந்தரேசனார் நாடார், முருகானந்தம் நாடார் உள்ளிட்ட பலர் பேசினர்.

    சிறப்பு அழைப்பாளராக நாடார் மகாஜன சங்க பொதுச் செயலாளர் கரிக்கோல்ராஜ் கலந்து கொண்டார். கொள்கை பரப்புத்துறை மாநில ஒருங்கிணைப்பாளர் நாலுமாவடி ராமஜெயம் நாடார் நன்றி கூறினார்.

    ×