என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "குடியேறும் போராட்டம்"
- இந்த பஞ்சமி நிலத்ைத மீட்க கோரி தேனி மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை
- கம்யூனிஸ்ட்டு கட்சியினர், நில உரிமையா ளர்கள், பொதுமக்கள் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேவதானப்பட்டி:
தேவதானப்பட்டி அருகே ஜி.கல்லுப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கொடைக்கானல் சாலையில் தனியார் நிறுவனம் பட்டியல் இன மக்களுக்காக வழங்கப்பட்ட 4 ஏக்கர் பஞ்சமி நிலத்தில் முறைேகடாக வீடு கட்டி விற்பனை செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த பஞ்சமி நிலத்ைத மீட்க கோரி தேனி மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. 5 ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்காததால் தீண்டாைம ஒழிப்பு முன்னணி மாநில பொதுச் செயலாளர் சாமுவேல்ராஜ் தலைமையில் கம்யூனிஸ்ட்டு கட்சியினர், நில உரிமையா ளர்கள், பொதுமக்கள் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊர்வலமாக சென்ற அவர்களை தேவதா னப்பட்டி போலீசார், வருவாய்த்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததால் அவர்கள் கலைந்து சென்றனர். இது குறித்து சாமுவேல்ராஜ் கூறுகையில்,
தமிழகம் முழுவதும் உள்ள பஞ்சமி நிலங்களில் முறைகேடாக பட்டா பெற்று ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அந்த நிலங்களை மீட்க வேண்டும். உரிய மக்களிடம் நிலத்ைத ஒப்படைக்க கோரி பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்த உள்ளோம் என்றார்.
- போராட்டம் திட்டக்குடி நகரத்தலைவர் செல்வ பூமிநாதன் தலைமையில் நடைபெற்றது.
- வீடு கட்டும் பயனாளிகளுக்கு நிலுவைத் தொகையை விடுவிக்க கோரி போராட்டம் செய்தனர்.
கடலூர்:
திட்டக்குடி நகர பாரதிய ஜனதா கட்சி சார்பாக பிரதமர் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டும் பயனாளிகளுக்கு நிலுவைத் தொகையை விடுவிக்க கோரி திட்டக்குடி நகராட்சி அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் திட்டக்குடி நகரத்தலைவர் செல்வ பூமிநாதன் தலைமையில் நடைபெற்றது. போரா ட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜா, கூட்டுறவு பிரிவு மாவட்டச் செயலாளர் வேல்முருகன்,விளையாட்டு மேம்பாட்டு துறை மாவட்ட செயலாளர் சிவா, முன்னாள் மாநில செயலாளர் அமைப்பு சாரா பிரிவு பொன் பெரியசாமி, நகரத் தலைவர் விவசாய அணி ராஜராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- ராசிபுரம் தாலுகா நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த மங்களபுரம் ஊராட்சியில் உள்ள அம்பேத்கர் நகர் பகுதியில் பல ஆண்டுகளாக வீடுகளுக்கு முன் கழிவுநீர் தேங்கி நிற்கின்றன. இதையடுத்து அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.
- இதற்காக அவர்கள் காலி குடங்கள், கியாஸ் சிலிண்டர், தட்டுமுட்டு சாமான்களை சுமந்து வந்தனர்.
ராசிபுரம்:
ராசிபுரம் தாலுகா நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த மங்களபுரம் ஊராட்சியில் உள்ள அம்பேத்கர் நகர் பகுதியில் பல ஆண்டுகளாக வீடுகளுக்கு முன் கழிவுநீர் தேங்கி நிற்கின்றன. இதையடுத்து அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.
இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நாமகிரிப்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடத்தினர். இதற்காக அவர்கள் காலி குடங்கள், கியாஸ் சிலிண்டர், தட்டுமுட்டு சாமான்களை சுமந்து வந்தனர். போராட்டத்திற்கு வி.சி.க. நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் பழ மணிமாறன் தலைமை தாங்கினார்.
நாடாளுமன்ற தொகுதி துணை செயலாளர் கபிலன், மாவட்ட துணைச் செயலாளர் நீல வானத்து நிலவன், ராசிபுரம் தொகுதி செயலாளர் செங்குட்டுவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ராசிபுரம் நகர துணை செயலாளர் சுகுவளவன், தொழிலாளர் விடுதலை முன்னணி மாவட்ட துணை அமைப்பாளர் கனகராஜ், வெண்ணந்தூர் ஒன்றிய பொருளாளர் செங்குட்டுவன், நாமகிரிப்பேட்டை ஒன்றிய பொருளாளர் தங்க வளவன், மங்களபுரம் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டனர்.
போராட்டம் நடத்தியவர்களுடன் ஊரக வளர்ச்சித் துறை இயக்குனர் கலையரசன், நாமகிரிப்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சரவணன் மற்றும் சுந்தரம் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததின் பேரில் போராட்டத்தை கைவிட்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்