search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விசைப்படகு மூழ்கியது"

    • படகிற்குள் தண்ணீர் அதிகம் புகுந்ததால் பாரம் தாங்காமல் சிறிது சிறிதாக விசைப்படகு கடலில் மூழ்க தொடங்கியது.
    • அந்த வழியாக வந்த மற்றொரு விசைப்படகை சேர்ந்தவர்கள் பார்த்து உடனடியாக தங்கள் படகை திருப்பினர்.

    மண்டபம்:

    ராமேசுவரத்தில் இருந்து நேற்று 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இதில் ஜோசலன் என்பவருக்கு சொந்தமான படகில் 7 மீனவர்கள் சென்றிருந்தனர்.

    அவர்கள் நள்ளிரவில் தனுஷ்கோடி அருகே வலைகளை விரித்து மீன்பிடித்துக்கொண்டு இருந்தனர். இந்தநிலையில் அவர்களது படகில் திடீரென்று பலகை உடைந்து விசைப்படகிற்குள் தண்ணீர் புகுந்தது. அதனை தற்காலிகமாக சரி செய்யும் முயற்சியில் படகில் இருந்த மீனவர்கள் மேற்கொண்டனர்.

    ஆனாலும் அவர்களது முயற்சி வீணானது. தொடர்ந்து படகிற்குள் தண்ணீர் அதிகம் புகுந்ததால் பாரம் தாங்காமல் சிறிது சிறிதாக விசைப்படகு கடலில் மூழ்க தொடங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் கடலில் குதித்தனர்.

    இதற்கிடையே அவர்கள் பிடித்து வைத்திருந்த பல லட்சம் மதிப்பிலான மீன்கள், மீன்பிடி உபகரணங்கள், ஜி.பி.எஸ். கருவி உள்ளிட்டவைகளுடன் படகு முழுவதுமாக மூழ்கியது. இதனால் செய்வதறியாது தவித்த மீனவர்கள் மற்றவர்களின் உதவியை எதிர்பார்த்து கடலில் பல மணி நேரம் நீந்தியவாறு இருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த மற்றொரு விசைப்படகை சேர்ந்தவர்கள் பார்த்து உடனடியாக தங்கள் படகை திருப்பினர். நடுக்கடலில் தத்தளித்த 7 பேரையும் தங்கள் படகில் ஏற்றி இன்று அதிகாலை பத்திரமாக கரைக்கு அழைத்து வந்தனர். இந்த சம்பவம் ராமேசுவரம் பகுதியில் பரபரப்பை ஏற்ப டுத்தியது.

    • அந்தப் படகிற்கு உரிமையாளர்களான முத்து, உதயகுமார், சக்கரபாணி, குமரன் உள்ளிட்ட 20 பேர் மற்றும் மீனவ பொதுமக்கள் அங்கு திரண்டனர்.
    • எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாத வண்ணம் போலீசார் பாதுகாப்பு ப்பணியில் ஈடு பட்டுள்ளனர்.

    விழுப்புரம்: 

    மரக்காணம் அருகே கூனிமேடு குப்பம் பகுதியில் நேற்று மாலை கடற்கரை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 50 லட்சம் மதிப்பிலான விசைப்படகு எதிர்பாராத விதமாக கடலில் மூழ்கியது. இதனால் அந்தப் படகிற்கு உரிமையாளர்களான முத்து, உதயகுமார், சக்கரபாணி, குமரன் உள்ளிட்ட 20 பேர் மற்றும் மீனவ பொதுமக்கள் அங்கு திரண்டனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த விசைப்படகு புதுச்சேரி துறை முகத்தில் நிறுத்தி வைத்திருந்தனர். இதனை அடுத்து நேற்று மரக்காணம் கூனிமேடு குப்பத்திற்கு கொண்டு வந்து கடற்கரை ஓரமாக நிறுத்தி வைத்திருந்தனர். தற்போது இந்த படகு கடலில் மூழ்கியது. இதனால் அங்குள்ள மீனவர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியது.

    இதுகுறித்து கடலோர காவல் துறை ரோந்து பணியி னருக்கும், மரக்கணம் காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த மரக்காணம் போலீசார் மற்றும் தீயணைப்பு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கடலில் மூழ்கிய கப்பலை தேடும் பணியில் ஈடுபட்டனர். மேலும் இந்த பகுதியில் போதுமான வசதிகளுடைய துறைமுகம் அமைக்க வேண்டுமென அங்குள்ள மீனவ பொது மக்கள் அதிகாரிகளிடம் தெரிவித்தனர். மேலும் இது குறித்து அவர்கள் சாலை மறியல் செய்யப்போவதாக கூறினர் இதனை அறிந்த அதிகாரி கள் போலீசார் முன்னிலை யில் பேச்சுவார்த்தை நடத்தி, அங்கு எந்தவித அசம்பா விதமும் ஏற்படாத வண்ணம் போலீசார் பாதுகாப்பு ப்பணியில் ஈடு பட்டுள்ள னர். இதனால் அந்த பகுதி யில் பரபரப்பாக உள்ளது. 

    ×