search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போக்குவரத்து தொடக்கம்"

    • சென்னை துறைமுகத்தில் இடபற்றாக்குறை இருப்பதால் அங்கு சரக்குகளை ஏற்றி இறக்க காலதாமதம் ஏற்படுகிறது.
    • கப்பல் சென்னைக்கு இன்று காலை கண்டெய்னர்களை ஏற்றி வருவதற்காக புறப்பட்டது

    புதுச்சேரி:

    சென்னை எண்ணூர் துறைமுகத்திற்கு பல்வேறு நாடுகளில் இருந்து கண்டெய்னர் கப்பல் வந்து சரக்குகளை ஏற்றி, இறக்கி செல்கிறது.

    சென்னை துறைமுகத்தில் இடபற்றாக்குறை இருப்பதால் அங்கு சரக்குகளை ஏற்றி இறக்க காலதாமதம் ஏற்படுகிறது. இதனால 100 கண்டெய்னர்களை மட்டும் புதுவை துறைமுகத்திற்கு கொண்டு வந்து இங்கிருந்து தெற்கு பகுதிக்கு டெலிவரி செய்ய 2 துறைமுகம் இடையே ஒப்பந்தம் கையழுத்தானது.

    இதற்காக ஒரு தனியார் நிறுவனம் கேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து 106 கண்டெய்னர்களை ஏற்றி செல்லும் வகையில் சிறிய ரக கப்பலை புதுவைக்கு கடந்த 11-ந் தேதி கொண்டு வந்தது. கடந்த 15 நாட்களாக துறைமுக வளாகத்தில் அந்த கண்டெய்னர் கப்பல் நிறுத்தப்பட்டிருந்தது.

    இந்த நிலையில், அந்த கப்பல் சென்னைக்கு இன்று காலை கண்டெய்னர்களை ஏற்றி வருவதற்காக புறப்பட்டது, ஆனால் துறைமுகத்தை மணல் மூடியதால் அந்த கப்பலால் கடலுக்குள் செல்லடியவில்லை இதனையடுத்து 2 படகுகளை வைத்து சிரமத்துடன் அந்த கப்பல் கடலுக்கு இழுத்து செல்லப்பட்டது.

    இதனால் கண்டெய்னர்களை ஏற்றி வர செல்லும் கப்பல் சுமார் 1 1/2 மணி நேரம் துறைமுகத்தில் இருந்து வெளியேற தாமதம் ஏற்பட்டது, சென்னையில் இருந்து கண்டெய்னர்களை ஏற்றி வரும் அந்த கப்பல், கண்டெய்னர்களை ஏற்றிய வந்த பிறகும், துறைமுகத்தில் நுழைய கப்பலுக்கு சிரமம் ஏற்படும் என தெரிகிறது.

    இதனால் நடுக்கடலில் அந்த கப்பல் நிறுத்தப்பட்டு படகுகள் மூலம் கண்டெய்னர்களை கொண்டு வர திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

    • 100 கண்டெய்னர்களை மட்டும் கப்பல் மூலம் புதுவை உப்பளம் துறைமுகத்திற்கு கொண்டு வந்து, இங்கிருந்து டெலிவரி செய்வது குறித்து 2 துறைமுகங்களுக்கிடையே ஒப்பந்தம் ஏற்பட்டது.
    • கப்பலின் பல்வேறு தேவைகளுக்காக 6 ஆயிரம் லிட்டர் டீசல் நிரப்பப்பட்டது.

    புதுச்சேரி:

    சென்னை, எண்ணூர் துறைமுகத்திற்கு, பல்வேறு நாடுகளில் இருந்து கப்பலில் வரும் கண்டெய்னர்களை ஏற்றி, இறக்குவது மற்றும் டெலிவரி செய்வதில், இடப்பற்றாக்குறை காரணமாக காலதாமதம் ஏற்படுகிறது.

    இதை சரி செய்யும் விதமாக அங்கிருந்து, 100 கண்டெய்னர்களை மட்டும் கப்பல் மூலம் புதுவை உப்பளம் துறைமுகத்திற்கு கொண்டு வந்து, இங்கிருந்து டெலிவரி செய்வது குறித்து 2 துறைமுகங்களுக்கிடையே ஒப்பந்தம் ஏற்பட்டது.

    இந்த பணிக்காக குளோபல் லாஜிஸ்டிக்ஸ் சொல்யூஷன்ஸ் என்ற நிறுவனத்தின், 106 கண்டெய்னர்களை, ஒரே நேரத்தில் ஏற்றிச்செல்லும் சிறிய ரக கப்பல் கேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து புதுவைக்கு கடந்த 11-ம் தேதி வந்தது.

    கடந்த 15 நாட்களாக உப்பளம் துறைமுக வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த இந்த கப்பல், சென்னையிலிருந்து கண்டெய்னர்களை ஏற்றி வர, இன்று சென்னைக்கு செல்கிறது.

    இந்த கப்பல் வாரத்தில் 2 நாட்கள் சென்னையில் இருந்து கண்டெய்னர்களை கொண்டு வந்து டெலிவரி செய்வது மற்றும் புதுவையில் இருந்து அவற்றை சென்னைக்கு கொண்டு செல்லும் பணியில் ஈடுபட உள்ளது.

    அதனையொட்டி, கப்பலின் பல்வேறு தேவைகளுக்காக 6 ஆயிரம் லிட்டர் டீசல் நிரப்பப்பட்டது. இன்று முதல் கப்பல் போக்குவரத்து தொடங்குகிறது.

    • ரெயில்வே நுழைவு பாலத்தில் ஏற்கனவே உள்ள கான்கிரீட் சாலையை உடைத்து அப்புறப்படுத்திவிட்டு புதிய கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டது.
    • இதில் இருவழி போக்குவரத்துக்கு அனுமதி அளிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரி க்கை விடுத்து வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு காளைமாட்டு சிலை பகுதியில் இருந்து கொல்லம்பாளையம் செல்லும் வழியில் ரெயில்வே நுழைவு பாலம் உள்ளது.

    இந்த பாலத்தின் கீழ் தண்ணீர் தேங்கியதாலும், சாலை சிதிலமடைந்ததாலும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வந்தது. இதையடுத்து ரூ. 50 லட்சம் மதிப்பில் இச்சாலையை சீரமைக்கும் பணி கடந்த ஜூன் மாதம் 20-ந் தேதி தொடங்கியது.

    இதனால் ஈரோடு நாடார்மேடு பகுதியில் இருந்து ஈரோட்டுக்கு வரும் பஸ், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் சாஸ்திரிநகர், சென்னிமலை ரோடு வழியாக ஈரோடு ரெயில் நிலையம் செல்லும் வகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.

    இதையடுத்து ரெயில்வே நுழைவு பாலத்தில் ஏற்கனவே உள்ள கான்கிரீட் சாலையை உடைத்து அப்புறப்படுத்திவிட்டு புதிய கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டது.

    இந்த பணிகள் தற்போது நிறைவடைந்து சில பராமரிப்பு பணிகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருப்பினும் அந்த வழியாக போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

    வழக்கம்போல ஈரோடு கொல்லம்பாளையம் நோக்கி செல்லும் வாகனங்கள் மட்டும் ஒருவழி பாதையாக அனுமதிக்கப்படுகின்றன. விரைவில் இதில் இருவழி போக்குவரத்துக்கு அனுமதி அளிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரி க்கை விடுத்து வருகின்றனர்.

    இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறையினர் கூறியதாவது:

    ரெயில்வே நுழைவு பாலத்தில் புதிதாக கான்கிரீட் தளம் அமைக்கும் பணிகள் நிறைவடை ந்துள்ளன. மழைநீர் வடிகாலும் அமைக்கப்பட்டு உள்ளது.

    தற்போது சில நாள்களாக பலத்த மழை பெய்தபோதும் அங்கு தண்ணீர் தேங்கவில்லை. இனி முன்பு போல அங்கு தண்ணீர் தேங்காது. போக்குவரத்து நெரிசலும் ஏற்படாது.

    தற்போது சாலை நடுவில் கொஞ்சம் கசிவுநீர் வெளியேறி வருகிறது. இதை சரிசெய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட வுள்ளன. மேலும் ரெயில்வே நுழைவுப் பாலத்தில் இருந்து கொல்லம்பாளையம் நோக்கி செல்லும் சாலை யில் கான்கிரீட் தளங்களுக்கு இடையே உள்ள சிறிய பள்ளங்களால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு ள்ளாவதாக தெரிவிக்கப்ப ட்டுள்ளது.

    அதையும் சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்ப ட்டுள்ளது. இந்த பணிகள் ஒரு வார காலத்துக்குள் முடிவடையும் என எதிர்பா ர்க்கிறோம். அதன்பின், வழக்கம்போல ரெயில்வே நுழைவு பாலத்தில் போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×