என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "எஸ்.பி. வேலுமணி"
- அம்மா அவர்கள் தனது உயிரைப் பற்றி கவலைப்படாமல் 2011-ல் ஆட்சி, 2016-ல் தொடர் ஆட்சியை கொண்டு வந்தார்கள்.
- அவர்களுடைய உயிரைப் பற்றி கவலைப்படாமல்... எங்களையெல்லாம் எம்.எல்.ஏ. ஆக்கினார்கள்.
சென்னை செம்மஞ்சேரியில் நடைபெற்ற விழாவில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேசும்போது கூறியதாவது:-
அம்மா அவர்கள் தனது உயிரைப் பற்றி கவலைப்படாமல் 2011-ல் ஆட்சி, 2016-ல் தொடர் ஆட்சியை கொண்டு வந்தார்கள். அவர்களுடைய உயிரைப் பற்றி கவலைப்படாமல்... எங்களையெல்லாம் எம்.எல்.ஏ. ஆக்கினார்கள்.
அப்போது மட்டும் அம்மா அவர்கள் அமெரிக்க சென்று சிகிச்சை பெற்றிருந்தால் அம்மா இன்னும் உயிரோடு இருந்திருப்பார்கள். ஆனால் அம்மா கேட்கல... ஆட்சி நல்லா இருக்கனும், கட்சி நல்லா இருக்கனும், ஆட்சியும் கட்சியும் 100 ஆண்டுகள் நல்ல இருக்கனும் சட்டமன்றத்தில் பேசினார்கள்.
இவ்வாறு எஸ்.பி. வேலுமணி பேசினார்.
- பாஜகவுடன் அதிமுக இணைந்து போட்டியிருந்தால் 35 தொகுதிகளை பிடித்திருப்போம் என எஸ்.பி. வேலுமணி சொல்கிறார்.
- அதிமுக-வின் மற்ற தலைவர்கள் பாஜக உடன் நாங்கள் இல்லை. இதனால் வராத வாக்குகள் வரும். தற்போது எங்களுக்க நிர்பந்நம் இல்லை என்றார்கள்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று டெல்லி புறப்பட்டார். அதற்கு முன் பத்திரிகையாளருக்கு பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பாஜகவுடன் அதிமுக இணைந்து போட்டியிருந்தால் 35 தொகுதிகளை பிடித்திருப்போம் என எஸ்.பி. வேலுமணி சொல்கிறார். அதிமுக-வின் மற்ற தலைவர்கள் பாஜக உடன் நாங்கள் இல்லை. இதனால் வராத வாக்குகள் வரும். தற்போது எங்களுக்க நிர்பந்நம் இல்லை என்றார்கள். இதனால் எஸ்.பி. வேலுமணி கூறியதை பார்க்கும்போது இதை பார்க்கும்போது அதிமுக கட்சியில் எடப்பாடி- வேலுமணி இடையே உட்கட்சி பூசல் இருப்பது போல் தெரிகிறது.
2019-ல் தமிழகத்தில் அதிமுக ஆட்சி நடைபெற்றது. அப்போது மத்தியில் பாஜக 303 இடங்களை பிடித்தது. அப்போது கூட தமிழகத்தில் ஒரு இடம் கூட பிடிக்கவில்லை. அதிமுக தலைவர்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ளனர் என்பதுதான் இந்த தேர்தலின் செய்தி. அதிமுக சந்தர்ப்பவாத அரசியல் செய்வதாக மக்கள் நினைத்து விட்டார்கள். கூட்டணியில் இருக்கும்போது ஒரு பேச்சு. கூட்டணியில் இல்லாதபோது ஒரு பேச்சு.
கோவையில் தொகுதிக்கு உட்பட்ட ஆறு எம்.எல்.ஏ. தொகுதியிலும் அதிமுக டெபாசிட் இழந்துள்ளது. இதற்கு முன்னதாக கோவை தொகுதியில் இவ்வாறு பார்க்கவில்லை. கோவை மக்கள் அதிமுகவை நிராகரித்து விட்டார்கள். மக்கள் நிராகரித்ததால் வேலுமணி இவ்வாறு பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
நாங்கள் வளருகின்ற கட்சி. வளர்ந்து கொண்டிருக்கிறோம். பூனை யானையாக வேண்டுமென்றால் கடுமையான பாதையில் நடந்து செல்ல வேண்டும். 3 சதவீதம் 10 ஆக வேண்டும். 10 சதவீதம் 20 ஆக வேண்டும். 20 சதவீம் 30 ஆக வேண்டும். பின்னர் எம்எல்ஏ-வாக வேண்டும். எம்.பியாக வேண்டும். அதுவரை கடுமையாக பணி செய்ய வேண்டும். இதனால் தொண்டரக்ள் விபரீத முடிவுகள் எடுக்க வேண்டாம்.
திமுக தொண்டர்களுக்கு கை வைக்க வேண்டும் என்று ஆசை இருந்தால் என்மீது கை வையுங்கள். அப்பாவி ஆட்டை ஏன் வெட்டுகிறீர்கள்.
10 சதவீதத்திற்கு மேல் வாக்கு பெற்றது ஏற்றம் இல்லையா? 12 இடத்தில் 2-வது இடம் என்பது ஏற்றம் இல்லையா? அதிமுகவின் கோட்டை என கூறப்பட்ட கோவையில் ஜஸ்ட் டெபாசிஸ்ட் வாங்கிருக்கிறார்கள். 3 முனை போட்டி 2 முனை போட்டியாக மாறி 40 முதல் 45 சதவீத வாக்குகள் வரும்.
மின்சாரம் கட்டணத்தை உயர்த்த மத்திய அரசு சொல்லவில்லை. அதற்கான வெள்ளை அறிக்கையை தமிழக அரசு வெளியிடட்டும். 2026-ல் தமிழகத்தில் கூட்டணி ஆட்சிதான் அமையும்.
இவ்வாறு அண்ணாமலை தெரிவித்தார்.
மத்திய இணை அமைச்சர் பதவி கொடுக்கப்படுவதா கூறப்படுகிறதே? என்று கேள்விக்கு பதில் அளிக்காமல் வேறு கேள்விக்கு சென்றார்.
- மத்திய உயிரியல் பூங்கா ஆணையம் அறிவுரையின் படி மேம்படுத்த தமிழக அரசு தவறியதால் அங்கீகாரம் ரத்து என குற்றச்சாட்டு
- அரசு பூங்காவிற்கு மூடுவிழா நடத்துவது வேதனை என்று சாடல்
கோவை,
முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதா வது:-
கோவை மாநகரின் மையப்பகுதியான காந்திபுரத்தில் அமைந்துள்ள வ.உ.சி. பூங்கா என அழைக்கப்படும் வ.உ.சிதம்ப ரனார் பூங்காவை மேம்ப டுத்த மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவ டிக்கை மேற்கொள்ளாத தால் கடந்த ஆண்டு இதன் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டு, அதன் தொடர்ச்சியாக இங்குள்ள உயிரினங்கள் இடமாற்றம் செய்யப்பட்டு வருவது கடும் கண்டனத்துக்கு உரியதாகும். மேலும் கோவை மாவட்ட மக்களையும், சுற்றுலா பயணிகளையும் மிகவும் வேதனைக்கு உள்ளாக்கி உள்ளது.
இந்த பூங்கா 1965-ம் ஆண்டு நான்கரை ஏக்கர் பரப்பளவில் தொடங்க ப்பட்டு ஒரு உயிரியல் மற்றும் பொழுதுபோக்கு பூங்காவாக சுற்றுலாப யணிகளை பெரிதும் கவர்ந்து வந்தது. 2013-ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி இங்கு 335 பறவைகள், 106 பாலூட்டிகள் மற்றும் 54 ஊர்வன உள்ளிட்ட 890 விலங்குகள் இருந்தன. வ.உ.சிதம்பரம் பிள்ளையின் நினைவாக இப்பெயர் பூங்காவிற்கு சூட்டப்பட்டது. கோவை மாநகராட்சியால் பூங்கா நிர்வகிக்கப்பட்டு வந்தது.
கோவை மாவட்டத்தில் சிறந்த பொழுதுபோக்கு இடங்கள் இல்லாத நிலையில் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதி னருக்கும் இப்பூங்கா ஒரு பொழுது போக்கு மையமாக சுமார் 60 ஆண்டுகளாக விளங்கு கிறது.
முன்னாள் பிரதமர் அப்துல்கலாம் இப்பூங்கா வில் நட்ட மரம் பச்சைநாயகி என்ற பெயரில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இத்தகைய சிறப்பு மிக்க உயிரியல் பூங்காவை மத்திய உயிரியல் பூங்கா ஆணையம் அறிவுரையின் படி மேம்படுத்த கோவை மாநகராட்சி நிர்வாகமும், தமிழக அரசும் முன்வர தவறிய நிலையில் இதன் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டு உயிரினங்கள் இடம் மாற்றம் செய்யப்படு வது, மிகவும் கண்டிக்கத்தக்கது ஆகும்.
தி.மு.க. அரசு கடந்த 3 ஆண்டுகளாக கோவை மாவட்டத்திற்கென எந்தவொரு திட்டத்தையும் தராமல், அ.தி.மு.க. அரசு கோவையின் வளர்ச்சிக்கு தந்து சிறப்பித்த சாதனை திட்டங்களான பாலங்கள், குடிநீர் திட்டப்பணிகள், சீர்மிகு நகர திட்டம், சாலைகள் விரிவாக்கம் மற்றும் குளங்கள் மேம்பாடு ஆகியவற்றில் சுனக்கம் காட்டி கோவை மாவட்டத்தை புறக்கணித்து வருகிறது. இந்தநிலையில் வ.உ.சி. பூங்காவில் உள்ள உயிரினங்கள் இடமாற்றம் செய்து இந்த அரசு பூங்காவிற்கு மூடு விழா காண்கிறது.
எனவே வ.உ.சி. விலங்கியல் பூங்காவில் உள்ள உயிரினங்களை இடமாற்றம் செய்யப்படு வதை கோவை மாநகராட்சி நிர்வாகமும், தமிழக அரசும் தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை மேற்கொண்டு மேம்படுத்தி மீண்டும் சிறப்பாக செயல்படுவதை உறுதி செய்வதோடு பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் விருப்பத்தை பூர்த்தி செய்ய அரசு முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- 10 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை நடத்தினர்.
- அ.தி.மு.க. நிர்வாகிகள் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வீட்டு முன்பு குவிந்தனர்.
திருப்பூர் :
கோவையில் உள்ள முன்னாள் அமைச்சர் எஸ். பி .,வேலுமணி வீடு உள்பட 10 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை நடத்தினர். இது குறித்து தகவல் கிடைத்ததும் மாவட்டம் முழுவதும் இருந்து அ.தி.மு.க. நிர்வாகிகள் அவரது வீட்டு முன்பு குவிந்தனர்.அப்போது போலீசார் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது . இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.
இந்தநிலையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. ,வேலுமணியின் வீட்டில் நடைபெறும் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூரிலிருந்து முன்னாள் எம்.எல்.ஏ. சு.குணசேகரன் தலைமையில் மாவட்ட இணை செயலாளர் சங்கீதா சந்திரசேகர், கவுன்சிலர்கள் அன்பகம் திருப்பதி, கண்ணப்பன், பகுதி செயலாளர்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கோவை சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னாள் எம்.எல்.ஏ. குணசேகரன் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்து கோவையில் உள்ள ஒரு மண்டபத்தில் அடைத்து வைத்திருந்தனர்.இந்த தகவல் கிடைத்ததும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ,திருப்பூர் மாநகர் மாவட்ட நிர்வாகிகளை கைது செய்து அடைத்து வைக்கப்பட்டு இருந்த மண்டபத்திற்கு நேரடியாக சென்று நிர்வாகிகளை சந்தித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்