என் மலர்
நீங்கள் தேடியது "கோவை விபத்து"
- விபத்தில் கணவன், மனைவி 2 பேரும் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
- கணவன், மனைவி மீது மோதிய பஸ்சை ஓட்டி வந்த டிரைவர் குபேரன் என்பவர் தொண்டாமுத்தூர் போலீசில் சரண் அடைந்தார்.
வடவள்ளி:
கோவை ஆலாந்துறை அருகே உள்ள கள்ளிப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (37). இவரது மனைவி தேவி (31). இந்த தம்பதியினருக்கு தர்னிஷ், வாசுலேகா என 2 குழந்தைகள் உள்ளனர்.
ராஜேந்திரனும், அவரது மனைவி தேவியும், பூலுவபட்டி பேரூராட்சி அலுவலகத்தில் தற்காலிக தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்தனர். தினமும் கணவன், மனைவி 2 பேரும் அதிகாலையிலேயே சைக்கிளில் புறப்பட்டு வேலைக்கு செல்வது வழக்கம்.
இன்று காலையும் வழக்கம்போல கணவன், மனைவி 2 பேரும் வேலைக்கு புறப்பட்டனர். காலை 6 மணிக்கு வீட்டில் இருந்து பூலுவப்பட்டிக்கு சைக்கிளில் சென்றனர்.
அப்போது சிறுவாணி சாலையில் ஆலாந்துறை அரசு மேல்நிலைப்பள்ளி அருகே வந்து கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்கு பின்னால் ஆலாந்துறையில் இருந்து கோவை நோக்கி அரசு பஸ் வந்து கொண்டிருந்தது.
திடீரென அந்த பஸ் முன்னால் சென்று கொண்டிருந்த ராஜேந்திரனின் சைக்கிள் மீது வேகமாக மோதியது. மோதிய வேகத்தில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டு பஸ்சின் சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
பஸ்சில் 2 பேர் சிக்கியது தெரியாமல் பஸ்சை டிரைவர் வேகமாக இயக்கி சென்றதாக கூறப்படுகிறது. இதனால் 2 பேரின் உடலும் 100 மீட்டர் தூரம் இழுத்து செல்லப்பட்டது.
இந்த விபத்தில் கணவன், மனைவி 2 பேரும் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பஸ் நிற்காமல் வேகமாக சென்று விட்டது.
இந்த சம்பவத்தை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டனர். மேலும் ஆலாந்துறை போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.
தகவல் அறிந்து வந்த போலீசார் உயிரிழந்த 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இதற்கிடையே கணவன், மனைவி மீது மோதிய பஸ்சை ஓட்டி வந்த டிரைவர் குபேரன் என்பவர் தொண்டாமுத்தூர் போலீசில் சரண் அடைந்தார்.
அவரை தொண்டாமுத்தூர் போலீசார், ஆலாந்துறை போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் அவரிடம் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதிகாலை நேரத்தில் வேலைக்கு சென்ற கணவன்- மனைவி அரசு பஸ் மோதி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தம்பதியரின் உடலை பார்த்து உறவினர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதது உருக்குவதாக இருந்தது.
இதற்கிடையே சிறுவாணி சாலையில் அதிகளவில் வாகன போக்குவரத்து உள்ளது.
இதன் காரணமாக அடிக்கடி விபத்துக்கள் நடைபெற்று வருகிறது. எனவே இங்கு சாலையின் நடுவே தடுப்புகள் அமைக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- விபத்தில் இறந்த கல்லூரி மாணவர்கள் அலெக்ஸ் ஜோசப், சல்மான் ஆகியோரின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
- விபத்து குறித்து மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை:
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வெல்பட்டு ரோட்டை சேர்ந்தவர் ஜோசப். இவரது மகன் அலெக்ஸ் ஜோசப் (வயது 20). மூஞ்சுக்கல் 3-வது வீதியை சேர்ந்தவர் சல்மான் (20). இவர்கள் மதுக்கரை அருகே உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 3-வது ஆண்டு படித்து வந்தனர்.
இதற்காக இவர்கள் 2 பேரும் கல்லூரி அருகே உள்ள மேன்சனில் அறை எடுத்து தங்கி கல்லூரிக்கு சென்று வந்தனர். இன்று அதிகாலை 2 மணி அளவில் அலெக்ஸ் ஜோசப், சல்மான் ஆகியோர் அதே மேன்சனில் தங்கி உள்ள மற்றொரு மாணவரிடம் மோட்டார் சைக்கிளை வாங்கினர். பின்னர் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் மலுமச்சம்பட்டிக்கு டீ குடிக்க சென்றனர். மோட்டார் சைக்கிளை அலெக்ஸ் ஜோசப் ஓட்டிச் சென்றார். சல்மான் பின்னால் அமர்ந்து இருந்தார்.
2 பேரும் டீ குடித்து விட்டு மீண்டும் மோட்டார் சைக்கிளில் அறைக்கு திரும்பிக் கொண்டு இருந்தனர். மோட்டார் சைக்கிள் பொள்ளாச்சி-கோவை ரோட்டில் ஆஞ்சநேயர் கோவில் அருகே சென்ற போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. பின்னர் ரோட்டின் நடுவில் இருந்த தடுப்பு சுவரில் அதிவேகமாக மோதி கவிழ்ந்தது.
இதில் அலெக்ஸ் ஜோசப்பும் சல்மானும் தூக்கி வீசப்பட்டனர். 2 பேரும் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இதனை பார்த்து அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இது குறித்து மதுக்கரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
பின்னர் விபத்தில் இறந்த கல்லூரி மாணவர்கள் அலெக்ஸ் ஜோசப், சல்மான் ஆகியோரின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- மோதிய வேகத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த தந்தை, மகன் 2 பேரும் தூக்கி வீசப்பட்டு பஸ்சின் பின்புற சக்கரத்தில் சிக்கி கொண்டனர்.
- பஸ்சின் பின் சக்கரம் தங்கவேல், நந்தகுமார் மீது ஏறி இறங்கியது. இதில், 2 பேருமே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
நீலாம்பூர்:
கோவை மாவட்டம் சூலூர் அடுத்த கணபதிபாளையத்தை சேர்ந்தவர் தங்கவேலு (வயது 66). விவசாயி.
இவரது மகன் நந்தகுமார் (34). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. நந்தகுமார் அந்த பகுதியில் உள்ள ஒர்க்ஷாப்பில் வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் நந்தகுமார் இன்று ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் உள்ள ஒரு கோவிலுக்கு செல்ல முடிவு செய்தார். இதற்காக தன்னை கருமத்தம்பட்டியில் உள்ள பஸ் நிறுத்தத்தில் கொண்டு வந்து விடும்படி தனது தந்தையிடம் கூறினார்.
இதையடுத்து தங்கவேலும், நந்தகுமாரும் வீட்டில் இருந்து கருமத்தம்பட்டி நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்தனர். மோட்டார் சைக்கிளை தங்கவேலு ஓட்டினார்.
நந்தகுமார் பின்னால் அமர்ந்து இருந்தார். இவர்களது மோட்டார் சைக்கிள் கிட்டாம்பாளையம் நால்ரோடு பகுதிக்கு வந்தது.
அங்கு வந்ததும் தங்கவேலு நேரே செல்வதற்காக மற்ற பகுதிகளில் இருந்து வாகனங்கள் ஏதாவது வருகிறதா? என பார்த்த படி நின்றார். அப்போது பொள்ளாச்சியை நோக்கி தனியார் கல்லூரி பஸ் ஒன்று வந்தது. அந்த பஸ் ரோட்டை கடப்பதற்காக நின்ற மோட்டார்சைக்கிள் மீது கண்ணிமைக்கும் நேரத்தில் மோதியது.
மோதிய வேகத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த தந்தை, மகன் 2 பேரும் தூக்கி வீசப்பட்டு பஸ்சின் பின்புற சக்கரத்தில் சிக்கி கொண்டனர். இதில் பஸ்சின் பின் சக்கரம் தங்கவேல், நந்தகுமார் மீது ஏறி இறங்கியது. இதில், 2 பேருமே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
காலை நேரம் என்பதால் அந்த சாலையில் ஆட்கள் நடமாட்டம் குறைவாகவே இருந்தது. அந்த வழியாக மோட்டார் சைக்கிள்களில் சென்ற சிலர் இந்த விபத்தை பார்த்து அதிர்ச்சிக்குள்ளாகினர்.
பின்னர் விரைந்து ஓடி சென்று அவர்களை பார்த்தபோது 2 பேருமே இறந்து விட்டது தெரிய வந்தது. உடனடியாக கருமத்தம்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் இறந்து கிடந்த தந்தை, மகன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தந்தை, மகன் விபத்தில் இறந்த தகவல் அறிந்ததும் அவர்களது உறவினர்கள் ஆஸ்பத்திரியில் குவிந்தனர். அவர்கள் அங்கு அவர்களது உடல்களை பார்த்து கதறி அழுதனர். இது அங்கிருந்தவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் குறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே தந்தை- மகன் பஸ் மோதி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமிராவில் பதிவாகி இருந்தது. தற்போது அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. நெஞ்சை பதைபதைக்க வைக்கும் இந்த காட்சியை பார்த்து பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
- சிறுமுகை வழியாக ரங்கம்பாளையம் அருகே வந்த போது எதிரே வந்த லோடு ஆட்டோ மீது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து மோதியது.
- விபத்து குறித்து சிறுமுகை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை:
சென்னையை சேர்ந்தவர் பெண்டால் நாயுடு(வயது 30). இவரது நண்பர் மோகன் ரெட்டி(24).
இவர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் சென்னையில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு சுற்றுலா வந்தனர்.
பின்னர் அங்கு சுற்றிப்பார்த்து விட்டு மீண்டும் மோட்டார் சைக்கிளில் சென்னைக்கு புறப்பட்டனர். மோட்டார் சைக்கிளை பெண்டால் நாயுடு ஓட்டிச் சென்றார்.
சிறுமுகை வழியாக ரங்கம்பாளையம் அருகே வந்த போது எதிரே வந்த லோடு ஆட்டோ மீது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த பெண்டால் நாயுடு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய மோகன்ரெட்டியை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சிறுமுகை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கட்டடம் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
- நீர் ஓடையை தூர்வாரும் பணி மேற்கொள்ள இருப்பதால் கரையோர மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
கோவை:
கோவை சிவானந்தா காலனி அருகே ஹட்கோ காலனியில் 200-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
இந்த குடியிருப்பு பகுதிகளுக்கு பின்புறம் சங்கனூர் ஒடை அருகே 70-க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு வீடுகள் அமைந்துள்ளது.
இந்த நிலையில் மாநகர பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் சங்கனூர் ஓடையை தூர்வாரி கரைப்பகுதியை பலப்படுத்தி வாகனங்கள் செல்லும் வகையில் சாலைகள் அமைக்க மாநகராட்சி முடிவு செய்தது.
அதன்படி கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள போலீஸ் சோதனை புறக்காவல் நிலையம் அருகே தொடங்கி 2.3 கி.மீட்டர் தூரத்துக்கு சாலை அமைக்கும் பணி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதற்காக சங்கனூர் ஓடையின் இருபுறமும் தடுப்பு சுவர் அமைக்கும் பணி நடந்து வருகிறது. ஓடையின் கரையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட்டு வருகின்றன.
டாடாபாத் ஹட்கோ காலனி அண்ணாநகரில் சங்கனூர் ஓடைதூர்வாரும் பணி நடந்தது. சங்கனூர் ஓடையின் கரையோரம் சுரேஷ என்பவருக்கு சொந்தமான 2 மாடி வீடு உள்ளது.
கடந்த 10 நாட்களுக்கு முன்பு வீட்டின் பின்பகு தியை 10 அடி தூரம் வரை இடித்து அகற்றி தர வேண்டும் என மாநகராட்சி தரப்பில் அறிவுறுத்தப்பட்டு இருந்தது.
இதையடுத்து அந்த வீட்டின் பின்புறம் 10 அடி வரை இடித்து அகற்றப்ப ட்டது. பின்புற வீட்டை அகற்றியதால் சுரேஷ் வேறு வீட்டிற்கு சென்று விட்டார். இருப்பினும் பொருட்கள் அந்த வீட்டிலேயே இருந்தது. அவ்வப்போது அந்த வீட்டி ற்கு வந்து சென்றுள்ளனர்.
இந்த நிலையில் நேற்றிரவு 2 மாடி வீட்டில் திடீரென அதிர்வு ஏற்பட்டது. மேலும் வீடு சரிந்து கீழே விழுவது போல அசைந்து கொண்டு இருந்தது.
இதை பார்த்ததும் அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியடை ந்தனர். இந்த வீட்டில் ஏற்ப ட்ட அதிர்வு அருகே உள்ள லட்சுமணன், ரேணுகா தம்பதியரின் வீட்டிலும் காணப்பட்டது.
அவர்கள் அப்போது வீட்டிற்குள் அமர்ந்து சாப்பி ட்டு கொண்டிருந்தனர். வீடு அதிர்வது போன்று உணர்ந்ததால் உடனடியாக வீட்டை விட்டு வெளியில் ஓடி வந்தனர்.
இந்த நிலையில் சிறிது நேரத்தில் சுரேஷின் 2 மாடி வீடு முழுவதுமாக சீட்டுக்க ட்டு போல சரிந்து கீழே விழுந்தது. அருகே இருந்த 2 வீடுகளும் இடிந்து விழு ந்தன. அதிர்ஷ்டவசமாக 2 மாடி வீட்டிற்குள் யாரும் இல்லாததாலும், அருகே இருந்த வீட்டில் இருந்த வர்கள் உடனடியாக வெளி யேறியதாலும் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்ப ட்டது. வீட்டிற்குள் இருந்த டி.வி, பீரோ உள்ளிட்ட அனைத்து பொருட்களும் இடிபாடுகளுக்குள் சிக்கி சேதம் அடைந்தது.
மேலும் வீடு இடிவதற்கு கால் மணி நேரத்திற்கு முன்பு வரை, வீடு இடிந்து விழுந்த இடத்தில் 10-க்கும் மேற்பட்ட தொழிலா ளர்கள் பணியில் இருந்த னர். பணி முடிந்து அவர்கள் சென்றதால் பெரும் உயிர்சே தம் தவிர்க்கப்பட்டது.
அடுத்தடுத்து வீடுகள் இடிந்து விழுந்த சம்பவம் கோவையில் பெரும் பரபர ப்பை ஏற்படுத்தியுள்ளது. வீட்டின் உரிமையாளர்கள் வீட்டை இழந்து தற்போது சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
தகவல் அறிந்தது மாநக ராட்சி ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று இடிந்து விழுந்த வீடுகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இதற்கிடையே இந்த பகுதியில் உள்ளவர்களுக்கு மாற்று இடம் வழங்கும் வரை இங்கு பணிகளை மேற்கொள்ள கூடாது என மார்க்சிஸ்ட் கம்யூனி ஸ்டு நிர்வாகிகள் கிருஷ்ண மூர்த்தி, நாராயணசாமி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
- லாரி முன்னால் சென்ற வாகனத்தை முந்திச் செல்ல முயன்றது.
- எதிரே தந்தை-மகன் வந்த கார் மீது லாரி பயங்கரமாக மோதியது.
சூலூர்:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள சின்னாகவுண்டன் பாளையத்தைச் சேர்ந்தவர் பண்ணாரி (வயது 55). இவரது மகன் கோபால் (28).
இவர்கள் 2 பேரும் இன்று காலை உடுமலை நோக்கி ஒரு காரில் சென்று கொண்டு இருந்தனர். கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட சின்னாப்புதூர் என்ற இடத்தில் கார் சென்று கொண்டிருந்தது.
அந்த சமயம் எதிரே கோழி ஏற்றும் லாரி ஒன்று வந்தது. அந்த லாரி முன்னால் சென்ற வாகனத்தை முந்திச் செல்ல முயன்றது. அப்போது எதிரே தந்தை-மகன் வந்த கார் மீது லாரி பயங்கரமாக மோதியது.
இதில் காரின் முன்பக்கம் பலத்த சேதம் அடைந்து பண்ணாரி, அவரது மகன் கோபால் ஆகியோர் உடல் நசுங்கினர். பலத்த காயம் அடைந்த அவர்கள் 2 பேரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தனர்.
கார் மீது மோதிய லாரியின் டிரைவரும் காயம் அடைந்தார். அவரது பெயர் அருண்பிரசாத் (28), சூலூர் ஐஸ்வர்யா கார்டன் பகுதியைச் சேர்ந்தவர். அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உடுமலை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
விபத்து குறித்து சுல்தான் பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.