என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "டி20 உலக கோப்பை கிரிக்கெட்"
- கடந்த 2023-ம் ஆண்டு ஆசிய கோப்பையின் போதும் இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஆட்டத்தை பார்க்க ரசிகை வந்திருந்தார்.
- கேமரா கவனத்திற்காக இவ்வாறு நடப்பதாக ஒரு பயனரும், கோலி ஒரு உலகளாவிய ஐகான் என சில பயனர்களும் பதிவிட்டு வருகின்றனர்.
உலக கோப்பை டி-20 கிரிக்கெட் போட்டிகள் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதிய ஆட்டம் நேற்று முன்தினம் நியூயார்க் மைதானத்தில் நடைபெற்றது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி திரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியை மைதானத்தில் இருந்த இந்திய ரசிகர்கள் பெரிதும் கொண்டாடினர்.
இந்நிலையில் இந்த போட்டியின் போது பாகிஸ்தான் ரசிகை ஒருவர், இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் படம் மற்றும் அவரது ஜெர்சி எண் 18 ஆகியவற்றை குறிப்பிடும் வகையில் அணிந்திருந்த செயின் (லாக்கெட்) இணையத்தில் வைரலானது. அவரது படத்துடன் வைரலான வீடியோவில், நியூயார்க் மைதானத்தில் விராட் கோலியின் படத்துடன் கூடிய லாக்கெட்டை கழுத்தில் அணிந்திருந்த பாகிஸ்தான் ரசிகை என பதிவிடப்பட்டிருந்தது.
இந்த ரசிகை ஏற்கனவே கடந்த 2023-ம் ஆண்டு ஆசிய கோப்பையின் போதும் இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஆட்டத்தை பார்க்க வந்திருந்தார். அப்போது அவர் அளித்த பேட்டியில், பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய 2 அணிகளையும் நான் ஆதரிக்கிறேன் என அவர் பேட்டி அளித்தது சமூக வலைதளங்களில் வைரலாகி இருந்தது.
இந்நிலையில் தற்போது அவர் கோலி படத்துடன் கூடிய லாக்கெட்டை அணிந்த வீடியோ வைரலான நிலையில் பயனர்கள் பலரும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். கேமரா கவனத்திற்காக இவ்வாறு நடப்பதாக ஒரு பயனரும், கோலி ஒரு உலகளாவிய ஐகான் என சில பயனர்களும் பதிவிட்டு வருகின்றனர்.
Pakistani girl wearing Virat Kohli's pendant despite him being their biggest nightmare pic.twitter.com/PZCqjSWLr9
— Pari (@BluntIndianGal) June 9, 2024
- உலக கோப்பையை வென்றதை சொல்வதற்கு வார்த்தைகளை கொஞ்சம் இழந்து விட்டேன்.
- ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் என இரட்டை விருதை பெற்றார்.
மெல்போர்ன்:
இங்கிலாந்து அணி பாகிஸ்தானை வீழ்த்தி 20 ஓவர் உலக கோப்பையை 2-வது முறையாக கைப்பற்றியது.
மெல்போர்ன் மைதானத்தில் நடந்த இறுதி ஆட்டத்தில் முதலில் ஆடிய பாகிஸ்தான் அணியால் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 137 ரன்னே எடுக்க முடிந்தது. இதனால் இங்கிலாந்துக்கு 138 ரன் இலக்காக இருந்தது.
ஷான் மசூத் 28 பந்தில் 38 ரன்னும் (2 பவுண்டரி, 1 சிக்சர்), கேப்டன் பாபர் ஆசம் 28 பந்தில் 32 ரன்னும் எடுத்தனர். சாம்கரன் 3 விக்கெட்டும், ஆதில் ரஷீத், கிறிஸ் ஜோர்டன் தலா 2 விக்கெட்டும், பென் ஸ்டோக்ஸ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
பின்னர் ஆடிய இங்கிலாந்து அணி 19 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 138 ரன் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்று உலக கோப்பையை கைப்பற்றியது.
பென் ஸ்டோக்ஸ் 49 பந்தில் 52 ரன்னும் (5 பவுண்டரி, 1 சிக்சர்) கேப்டன் பட்லர் 17 பந்தில் 26 ரன்னும் (3 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். பாகிஸ்தான் தரப்பில் ஹாரிஸ் ரவூப் 2 விக்கெட்டும், சதாப் கான், முகமது வாசிம் தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
இங்கிலாந்து அணி 2-வது முறையாக 20 ஓவர் உலக கோப்பையை கைப்பற்றியது. இதற்கு முன்பு 2010-ல் அந்த அணி சாம்பியன் பட்டம் பெற்று இருந்தது. ஐ.சி.சி. 20 ஓவர் உலக கோப்பையை 2 முறை வென்ற வெஸ்ட் இண்டீசுடன் (2012, 2016) இங்கிலாந்து இணைந்தது.
இந்தியா (2007), பாகிஸ்தான் (2009), இலங்கை (2014), ஆஸ்திரே லியா (2021) ஆகிய நாடுகள் தலா ஒரு முறை 20 ஓவர் உலக கோப்பையை வென்றுள்ளன.
இங்கிலாந்து உலக கோப்பையை வெல்ல வேகப்பந்து வீரர் சாம்கரன் முக்கிய பங்கு வகித்தார். இறுதி போட்டியில் 12 ரன் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்திய அவர் இந்த தொடரில் மொத்தம் 13 விக்கெட் கைப்பற்றினார். இதனால் அவர் ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் என இரட்டை விருதை பெற்றார். இது குறித்து சாம்கரன் கூறியதாவது:-
உலக கோப்பையை வென்றதை சொல்வதற்கு வார்த்தைகளை கொஞ்சம் இழந்து விட்டேன். இந்த வெற்றியை நாங்கள் கொண்டாடி வருகிறோம். பென் ஸ்டோக்ஸ் ஆட்டம் அபாரமாக இருந்தது.
ஐ.பி.எல். போட்டியில் விளையாடிய அனுபவம் உதவியாக இருந்தது. அதில் நிறைய கற்றுக் கொண்டேன். பல போட்டிகளில் ஆடிய வீரர்களிடம் இருந்து கற்றுக் கொண்டது அற்புதமான தருணம். நான் எப்போதும் கற்று வருகிறேன்.
என்னை மேம்படுத்த தொடர்ந்து முயற்சிக்கிறேன். ஐ.பி.எல். போட்டியில் மீண்டும் விளையாட வருவேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
சாம்கரன் பஞ்சாப் கிங்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்காக ஐ.பி.எல். போட்டியில் விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- உலகக் கோப்பையை வென்ற ஜாஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
- இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்த பாகிஸ்தான் அணி ரூ.7.40 கோடியை பரிசாக பெறுகிறது.
20 ஓவர் உலக கோப்பையை போட்டிகளில் மொத்த 16 நாடுகள் பெங்கு பெற்றது அந்த அணிகள் பெற்ற பரிசுத்தொகை முழு விவரம் புதுடெல்லி 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் இங்கிலாந்து இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இரண்டாவது முறையாக கோப்பையைக் கைப்பற்றியது.
உலகக் கோப்பையை வென்ற ஜாஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. கிரிக்கெட் ரசிகர்கள், முன்னாள் வீரர்கள் உட்பட பலரும் இங்கிலாந்து அணிக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
வெற்றி பெற்ற இங்கிலாந்து அணிக்கு பரிசு தொகையாக ரூ.13.84 கோடி வழங்கப்பட்டுள்ளது. இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்த பாகிஸ்தான் அணி ரூ.7.40 கோடியை பரிசாக பெறுகிறது. அதே சமயம் அரை இறுதியில் தோல்வி அடைந்த மற்ற அணிகளுக்கு ரூ.4.19 கோடி பரிசாக வழங்கப்படுகிறது.
இதில் சூப்பர் 12 சுற்றில் இந்திய அணி நியூசிலாந்தை விட கூடுதலாக ஒரு போட்டியில் வெற்றி பெற்றதால், இந்திய அணிக்கு ரூ.4.50 கோடி பரிசாக வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இருபது ஓவர் உலக கோபை போட்டியில் பங்கு பெற்ற அணிகள் பெற்ற பரிசு தொகை விவரம் வருமாறு:-
இங்கிலாந்து ரூ.13.84 கோடி பாகிஸ்தான் ரூ.7.40 கோடி இந்தியா ரூ.4.50 கோடி நியூசிலாந்து ரூ.4.19 கோடி ஆஸ்திரேலியா ரூ.1.53 கோடி தென்னாப்பிரிக்கா ரூ.1.20 கோடி வங்காள தேசம் ரூ.1.20 கோடி இலங்கை ரூ.1.85 கோடி ஆப்கானிஸ்தான் ரூ.56.35 லட்சம் நெதர்லாந்து ரூ.1.85 கோடி ஜிம்பாப்வே ரூ.88.50 லட்சம் அயர்லாந்து ரூ.1.53 கோடி வெஸ்ட் இண்டீஸ் ரூ.64.40 லட்சம் ஸ்காட்லாந்து ரூ.64.40 லட்சம் நமீபியா ரூ.64.40 லட்சம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ரூ.64.40 லட்சம்
- 1998-ம் ஆண்டு ஐ.பி.எல். தொடரில் மட்டும் பாகிஸ்தான் வீரர்கள் பங்கேற்றனர்.
- இந்திய அணி மட்டும் ஐ.பி.எல். தொடங்கிய பின், உலகக் கோப்பையை வென்றது இல்லை என்பது துரதிருஷ்டமே
இந்த போட்டிக்கு முந்தைய நாளான இன்று பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் ஆசம் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது பத்திரிகையாளர் ஒருவர், ஐபிஎல் குறித்து கேள்வி எழுப்பினார். நாளை இறுதிப் போட்டி நடைபெற இருக்கும் நிலையில், ஐ.பி.எல். குறித்து கேள்வி கேட்கிறாரே? என பாபர் ஆசமிற்கு சங்கடமாகிவிட்டது. கேள்வி கேட்டதும், அவர் பாகிஸ்தான் அணியின் மீடியா மானேஜர் நோக்கி தனது பார்வையை நோக்கினார். உடனடியாக அவர் தலையிட்டு பதில் அளித்தார்.
பத்திரிகையாளர் ஒருவர் ''ஐ.பி.எல். விளையாடுவதன் நன்மைகளைப் பற்றி பேசுங்கள், அது உங்களுக்கும் உங்கள் அணிக்கும் உதவியாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா, அதுகுறித்து உங்களுக்கு எதிர்காலத்தில் ஏதேனும் நம்பிக்கை உள்ளதா?'' எனக் கேள்வி எழுப்பினார்.
உடனடியாக பாபர் ஆசம் அவரது மீடியா மானேஜர் பக்கம் திரும்பினார். அவர் இடைமறித்து ''தற்போது நாம் உலகக் கோப்பை இறுதிப் போட்டி குறித்து கேள்விகள் எடுத்து வருகிறோம்'' என்றார்.
அதன்பின் உலகக் கோப்பை குறித்த கேள்விகள் தொடர்ந்தன.
உலகளவில் ஐ.பி.எல். மிக பணக்கார லீக்காகவும், பெரிய லீக்காகவும் அறியப்படுகிறது. இதில் விளையாடும் வெளிநாட்டு வீரர்கள் ஐ.பி.எல். தங்களது ஆட்டத்தை மேம்படுத்தியுள்ளது என தெரிவித்துள்ளனர். ஆனால், இந்திய அணி மட்டும் ஐ.பி.எல். தொடங்கிய பின், உலகக் கோப்பையை வென்றது இல்லை என்பது துரதிருஷ்டமே....
- சிறப்பாக பேட்டிங் செய்தோம். ஆனால் பவுலிங்கில் சொதப்பினோம்.
- தொடக்கத்தில் சற்று பதற்றமாக தான் தொடங்கினோம்.
அடிலெய்ட்:
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பெரும் எதிர்பார்ப்புடன் நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய அணியை 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் விராட் கோலி - ஹர்திக் பாண்ட்யா மற்றும் போராடியதால் 20 ஓவர்களில் இந்தியா 168 ரன்களை எடுத்தது. சவாலான இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணியின் ஓப்பனிங் ஜோடியே ஆட்டத்தை முடித்தனர். இந்தியாவின் பவுலிங் சொதப்பியதால் 16 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி வென்றனர்.
இந்நிலையில் இந்த படுதோல்வி குறித்து கேப்டன் ரோகித் சர்மா மனவேதனையுடன் பேசியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், மிகவும் வருத்தமாக இருக்கிறது. சிறப்பாக பேட்டிங் செய்தோம். ஆனால் பவுலிங்கில் சொதப்பினோம். தொடக்கத்தில் சற்று பதற்றமாக தான் தொடங்கினோம். இதனால் தான் தொடக்கத்தில் இருந்தே ரன்கள் கசிந்தன.
அதனை இங்கிலாந்து ஓப்பனர்கள் நன்கு பயன்படுத்திக்கொண்டனர். ஸ்கொயர் திசைகளில் தான் ரன் கசியும் என அறிவோம். ஆனால் அவர்கள் எங்களுக்கு வாய்ப்பு தரவில்லை. முதல் ஓவரில் ஸ்விங் ஆகும் என நினைத்தேன். ஆனால் நினைத்த பகுதியில் ஸ்விங் ஆகவில்லை. வங்கதேசத்துடன் இதே மைதானத்தில் தான் ஆடினோம். அப்போட்டியில் வேறும் மாதிரி இருந்தது.
திட்டங்களை சரியாக செயல்படுத்தினால் தான் பிரச்சினை ஏற்படும். ஆனால் நாங்கள் அனைத்து திட்டங்களையும் சரியாக செய்தோம். 9 ஓவர்களில் 85 ரன்களை கட்டுப்படுத்துவது கடினம் என்பது எனக்கு தெரியும். எனினும் திட்டங்களை தொடர்ந்து செய்தேன். ஆனால் துரதிஷ்டவசமாக அமைந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.
- இங்கிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- பட்லர் - அலெக்ஸ் அரை சதம் அடித்து அசத்தினர்.
டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் 2-வது அரையிறுதியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 168 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக பாண்ட்யா, விராட் கோலி அரைசதம் அடித்தனர்.
இதனையடுத்து 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான அலெக்ஸ் - பட்லர் அதிரடியாக விளையாடினர். 4 ஓவர் மீதம் உள்ள நிலையில் இங்கிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன் மூலம் இங்கிலாந்து அணி 13-ந் தேதி நடக்கும் இறுதி போட்டியில் பாகிஸ்தானுடன் மோதும்.
- விராட் கோலி இந்த தொடரில் 4 அரை சதம் அடித்துள்ளார்.
- அவருக்கு அடுத்தப்படியாக இந்திய கேப்டன் ரோகித் சர்மா உள்ளார்.
டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் 2-வது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் வெற்றி பெறவேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி விளையாடி வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 6 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்தது.
அதிக பட்சமாக பாண்ட்யா 63 ரன்களும் விராட் கோலி 50 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இந்த தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் விராட் கோலி புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
இந்த தொடரில் 4 அரை சதம் அடித்த விராட் கோலி சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 4000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். அவருக்கு அடுத்தப்படியாக இந்திய கேப்டன் ரோகித் சர்மா உள்ளார். அதனை தொடர்ந்து குப்தில், பாபர் ஆசம் உள்ளனர்.
- தடுமாற்றத்துடன் ஆடிய ரோகித் சர்மா 28 பந்துகளில் 27 ரன்களுடன் ஆட்டமிழந்தார்.
- அதிரடியாக விளையாடிய விராட் கோலி இந்த போட்டியிலும் அரை சதம் அடித்து அசத்தினார்.
டி20 உலக கோப்பையின் 2-வது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதுகின்றனர். இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய இந்திய அணி தொடக்கமே சொதப்பலாக இருந்தது. முதல் பந்தில் கேஎல் ராகுல் பவுண்டரி அடித்தாலும் 5 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து விராட் கோலி- ரோகித் சர்மா ஜோடி நிதானமாக ஆடினர். பவுர் பிளேயில் இந்தியா 1 விக்கெட் இழப்பிற்கு 38 ரன்கள் மட்டுமே அடித்திருந்தது.
தடுமாற்றத்துடன் ஆடிய ரோகித் சர்மா 28 பந்துகளில் 27 ரன்களுடன் ஆட்டமிழந்தார். இதனையடுத்து பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் களமிறங்கிய சூர்ய குமார் யாதவ் 14 ரன்னில் வெளியேறினார். அடுத்ததாக விராட் கோலி - பாண்ட்யா ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.
சிறப்பாக விளையாடிய விராட் கோலி அரை சதம் அடித்து அவுட் ஆனார். தொடர்ந்து அதிரடி காட்டிய பாண்ட்யா 29 பந்தில் அரை சதம் அடித்தார்.இறுதியில் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்தது. கடைசி 5 ஓவரில் 68 ரன்களை இந்திய அணி குவித்தது குறிப்பிடத்தக்கது.
- இறுதிப் போட்டியில் நம்முடன் மோதுவது யார் என்பதை தற்போது சொல்ல இயலாது.
- நாக்அவுட் சுற்றுக்கே முன்னேற முடியாத நிலை போன்ற நிலைகளை கடந்துதான் இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளோம்.
டி20 உலகக் கோப்பையில் நேற்று நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இன்று இந்தியா- இங்கிலாந்து அணிகள் 2-வது அரையிறுதியில் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் வெற்றி பெறும் அணி பாகிஸ்தானுடன் சாம்பியனுக்கு போட்டியிடும்.
நியூசிலாந்து அணிக்கெதிரான நேற்றைய போட்டியில் பாபர் ஆசம்- முகமது ரிஸ்வான் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 12.4 ஓவரில் 105 ரன்கள் சேர்க்க, பாகிஸ்தான் 153 இலக்கை 19.1 ஓவரில் எட்டியது.
இன்றைய போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா வெற்றி பெற்று பாகிஸ்தானுடன் பலப்பரீட்சை நடத்த வெண்டும் என கோடான கோடி ரசிகர்கள் விரும்புகின்றனர்.
இந்த நிலையில், நேற்றைய போட்டிக்குப்பின் பத்திரிகையாளர் சந்திப்பின்போது, பாகிஸ்தான் பத்திரிகையாளர் ஒருவர் ''நீங்கள் சிறந்த முறையில் தோல்வியில் இருந்து மீண்டும் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளீர்கள். இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியுன் என்பதற்கான சாத்தியக்கூறு உள்ளது என்பதை உங்களால் புரிந்து கொள்ள முடியும். இதுபோன்ற போட்டிகளில் நாம் அடிக்கடி நெருக்கடிக்கு உள்ளாகிறோம். இதுபோன்ற சூழ்நிலையில் உங்களுடைய திட்டம் என்ன?'' என கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த பாபர் ஆசம் ''இறுதிப் போட்டியில் நம்முடன் மோதுவது யார் என்பதை தற்போது சொல்ல இயலாது. எந்த அணி வருவது என்பது விஷயம் அல்ல. நாங்கள் எங்களுடைய 100 சதவீத திறமையை வெளிப்படுத்த முயற்சி செய்வோம். நாங்கள் எப்போதும் சவால்களை முறியடிக்க முயற்சி செய்வோம். இறுதிப் போட்டியில் நெருக்கடி இருக்கத்தான் செய்யும். இந்த தொடரில் நாக்அவுட் சுற்றுக்கே முன்னேற முடியாத நிலை போன்ற நிலைகளை கடந்துதான் இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளோம்.
இறுதிப் போட்டிக்குள் நுழைந்துவிட்டால், நீங்கள் பயமில்லாத ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிக்க வேண்டம். இதுபோன்ற ஆட்டத்தைத்தான் நாங்கள் 3-4 போட்டிகளில் விளையாடியுள்ளோம். அதை அப்படியோ தொடர் பார்ப்போம்'' என்றார்.
- டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
- ரிஷப் பண்டுக்கு ஆடும் லெவனில் இடம் கிடைத்துள்ளது.
அடிலெய்டு:
8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் முதலாவது அரைஇறுதியில் பாகிஸ்தான் அணி, நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இந்த நிலையில் இன்று அடிலெய்டில் 2-வது அரைஇறுதியில் இந்தியாவும், இங்கிலாந்தும் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
இந்திய அணியில் தினேஷ் கார்த்திகா அல்லது ரிஷப் பண்டா என்ற நிலையில் ரிஷப் பண்ட் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.
- நான் இந்தியா- பாகிஸ்தான் இறுதி போட்டியை விரும்புகிறேன்.
- மெல்போர்னில் நாங்கள் 1992 இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தியுள்ளோம்.
நியூசிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இன்று இந்தியா- இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் வெற்றி பெறும் அணி இறுதி போட்டியில் பாகிஸ்தானுடன் பலப்பரீட்சை நடத்தும்.
கோடான கோடி ரசிகர்கள் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் இறுதி போட்டியில் மோத வேண்டும் என விரும்புகிறார்கள். மேலும், பாகிஸ்தான் ரசிகர்கள், விமர்சகர்கள், முன்னாள் வீரர்கள் இறுதி போட்டியில் இந்தியாவுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் வெளியிட்டுள்ள வீடியோவில் தெரிவித்திருப்பதாவது:-
ஹிந்துஸ்தான், நாங்கள் மெல்போர்னுக்கு முன்னேறிவிட்டோம். உங்களுக்காக நாங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம். இங்கிலாந்தை வீழ்த்தி நீங்கள் மெல்போர்ன் வர மனதார வாழ்த்துகிறேன். மெல்போர்னில் நாங்கள் 1992 இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தியுள்ளோம்.
தற்போது 2022-வது வருடம். வருடம் வேறுபட்டிருக்கலாம். ஆனால் நம்பர் ஒன்றேதான். நான் இந்தியா- பாகிஸ்தான் இறுதி போட்டியை விரும்புகிறேன். இன்னொரு முறை மோதப் போகிறோம். நமக்கு இன்னும் ஒரு போட்டி தேவை. உலகம் முழுவதும் மூச்சு விட முடியாமல் காத்துக் கொண்டிருக்கிறது'' எனத் தெரிவித்துள்ளார்.
- நியூசிலாந்து அணி இந்த போட்டியில் 3 கேட்ச்சுகளை தவற விட்டது.
- முதல் விக்கெட்டுக்கு ரிஸ்வான் - பாபர் அசாம் ஜோடி 105 ரன்கள் குவித்தது.
டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் இன்று முதல் அரையிறுதி போட்டியில் மோதின. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன் படி களமிறங்கிய நியூசிலாந்து அணி மிட்செல்லின் அதிரடி அரை சதத்தால் 152 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது.
தொடக்க வீரர்களாக ரிஸ்வான் - பாபர் அசாம் ஜோடி ஆடினர். முதல் ஓவரிலேயே பாபர் அசாமுக்கு 0 ரன்னில் கேட்ச் மிஸ் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த ஜோடி அதிரடியாக விளையாடினர். முதல் விக்கெட்க்கு இந்த ஜோடி 105 ரன்கள் குவித்தது.
பாபர் அசாம் 53 ரன்னில் ஆட்டமிழந்தார். தொடந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிஸ்வான் அரை சதம் அடித்து அவுட் ஆனார். நியூசிலாந்து அணி இந்த போட்டியில் 3 கேட்ச்சுகளை தவற விட்டது. இறுதியில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியது.
கடைசி வரை போராடிய நியூசிலாந்து அணி எப்பவும் போல அரையிறுதி வரை வந்து கோப்பை வெல்ல முடியாமல் வெளியேறியது.
நாளை 2-வது அரையிறுதியில் இந்தியா- இங்கிலாந்து அணி மோதுகிறது. இதில் வெற்றி பெரும் அணி 13-ந் தேதி பாகிஸ்தானுடன் மோதும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்