search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நவதிருப்பதி"

    • போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
    • வருகிற 21, 28-ந் தேதி அடுத்தமாதம் 5, 12-ந் தேதி வரை இயக்கப்படுகிறது.

    நெல்லை:

    புரட்டாசி மாதம் பிறப்பதையொட்டி நெல்லையில் இருந்து நவ திருப்பதி கோவில்களுக்கு சென்று வர போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    அதன்படி நவ திருப்பதி கோவில்களான ஸ்ரீவைகுண்டம், நத்தம், திருப்புளியங்குடி, இரட்டை திருப்பதி(2), பெருங்குளம், தென்திருப்பேரை, திருக்கோளூர், ஆழ்வார் திருநகரி ஆகிய இடங்களுக்கு இயக்கப்படுகிறது.

    அந்த வகையில் புரட்டாசி மாத சனிக்கிழமைகளான வருகிற 21, 28-ந் தேதி அடுத்தமாதம் 5, 12-ந் தேதி ஆகிய 4 நாட்கள் சிறப்பு பஸ்கள் இயக்க தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக நெல்லை மண்டலம் தகுந்த ஏற்பாடுகளை செய்துள்ளது.

    இந்த சிறப்பு பஸ்களானது புரட்டாசி மாத சனிக்கிழமை காலை 7 மணிக்கு நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு நவ திருப்பதிகளுக்கு சென்று பின்னர் இரவில் மீண்டும் புதிய பஸ் நிலையம் வந்து சேரும்.

    இதற்காக ஒரு நபருக்கு கட்டணம் ரூ.500 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக முன்புதிவு செய்ய விரும்புவோர் நெல்லை புதிய பஸ் நிலையம், தென்காசி மற்றும் சங்கரன்கோவில் பஸ் நிலையங்களில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை கட்டண தொகையை முழுமையாக செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம்.

    அல்லது அரசு போக்கு வரத்து கழக இணையதளம் www.tnstc.in மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.

    இத்தகவலை அரசு போக்குவரத்து கழக நெல்லை மண்டல மேலாளர் சரவணன் தெரிவித்துள்ளார்.

    • நேற்று 5 -வது நாள் திருவிழாவை முன்னிட்டு இரட்டை திருப்பதி கோவிலில் கருடசேவை நடந்தது.
    • மாலையில் உற்சவர்கள் கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

    தென்திருப்பேரை:

    நவதிருப்பதி தலங்களில் 4-வது தலமான தொலைவில்லிமங்கலத்தின் உள்ள இரட்டை திருப்பதி கோவிலில் பிரமோற்சவ திருவிழா கடந்த 6-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று 5 -வது நாள் திருவிழாவை முன்னிட்டு கருடசேவை நடந்தது. காலை 8 மணிக்கு விஸ்வரூபம். யாகசாலை ஹோமம் முடிந்து 10 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம், நாலாயிர திவ்ய பிரபந்தம் கூறப்பட்டு தீர்த்தம் சடாரி பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. மாலை 6 மணிக்கு உற்சவர் செந்தாமரைக் கண்ணன். உற்சவர் தேவர் பிரான் ஆகியோர் கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

    தொடர்ந்து 16-ந்தேதி தீர்த்தவாரி நடைபெறுகிறது. இதற்கான அலங்காரம் ஏற்பாடுகள் அர்ச்சகர்கள் சுந்தர ராஜன், ரகு செய்திருந்தனர்.

    இந்நிகழ்ச்சியில் ராமானுஜ சுவாமிகள், நிர்வாக அதிகாரி அஜித், தக்கார் கோவல மணிகண்டன், ஆய்வாளர் லோகநாயகி, ஸ்தலத்தார்கள் ஸ்ரீதர், சந்தானம், வாசு, முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரி. உபயதார் திருமலை, சீனிவாச சேவைகள் அறக்கட்டளை முதுநிலை செயல் அலுவலர் கசங்காத்த பெருமாள், கள இயக்குனர் விஜயகுமார், பொறியாளர் சுப்பிரமணியம் உட்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • ஆன்மிக பயணம் செல்லும் பக்தா்களுக்கு அரசு போக்குவரத்துகழகம் மேலாண் இயக்குனர் மோகன் குடிநீர், இனிப்பு, காரம், பிஸ்கெட் போன்றவைகள் வழங்கினார்.
    • பக்தர்களுக்கு ஒவ்வொரு கோவிலை பற்றிய தலவரலாறு மற்றும் அங்கு அருள் பாலிக்கும் பெருமாளின் பெருமைகளை விளக்குகின்றனர்.

    நெல்லை:

    தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி நதிக்கரையில் நவ திருப்பதி ஸ்தலங்கள் அமைந்துள்ளன.

    108 திவ்யதேச ஸ்தலங்களில் இடம் பெற்றுள்ள இத்தகைய கோவில்கள் ஸ்ரீவைகுண்டம், நத்தம், திருப்புளியங்குடி இரட்டை திருப்பதி, பெருங்குளம் தென்திருப்பேரை திருக்கோளூர் மற்றும் ஆழ்வார்திருநகரி ஆகிய இடங்களில் அமைந்துள்ளன.

    புரட்டாசி சனிக்கிழமை பெருமாளுக்கு உகந்தநாள் என்பதால் பக்தர்கள் இத்திருத்தலங்களில் தரிசனம் செய்யும் வகையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் ஆன்மிக சுற்றுலா சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

    இன்று 24-ந்தேதி, அக்டோபர் 1, 8 மற்றும் 15-ந்தேதி ஆகிய நாட்கள் நவதிருப்பதி கோவில்களுக்கு சென்று வர சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    சிறப்பு பேருந்துக்காக நபர் ஒன்றுக்கு ரூ. 500 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு முன்பதிவு நடைபெற்றது.

    புரட்டாசி முதல் சனிக்கிழமையான இன்று காலை நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து 3 பேருந்துகள் புறப்பட்டன.

    நிகழ்ச்சியில் நிர்வாக இயக்குனர் மோகன், போக்குவரத்து கழக பொது மேலாளர் சரவணன், துணை மேலாளர்கள் சாலமோன், சக்திகுமார், சங்கரநாராயணன், போல்ராஜ், கிளை மேலாளர் சிவன்பிள்ளை, புதிய பஸ் நிலையம் பொறுப்பாளர் முனியசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ஆன்மிக பயணம் செல்லும் பக்தா்களுக்கு அரசு போக்குவரத்துகழகம் மேலாண் இயக்குனர் மோகன் குடிநீர், இனிப்பு, காரம், பிஸ்கெட் போன்றவைகள் வழங்கினார்.

    ஒவ்வொரு பேருந்திலும் ஒரு ஓட்டுனர் மற்றும் நடத்துனர் முன்னின்று வழிநடத்திச் செல்கின்றனர். பக்தர்களுக்கு ஒவ்வொரு கோவிலை பற்றிய தலவரலாறு மற்றும் அங்கு அருள் பாலிக்கும் பெருமாளின் பெருமைகளை விளக்குகின்றனர்.

    காலை 7 மணிக்கு கிளம்பிய பேருந்துகள் மாலை 7 மணிக்கு மீண்டும் நெல்லை புதிய பேருந்து நிலையத்தை வந்தடைகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை அரசு போக்குவரத்துக்கழக பொது மேலாளர் மற்றும் அதிகாரிகள் செய்திருந்தனா்.

    மேலும் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற திருவேங்கடநாதபுரம் வெங்கடாஜலபதி கோவில், அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோவில், திருக்குறுங்குடி நம்பி கோவில் மற்றும் அத்தாளநல்லூர் பெருமாள் கோவில் ஆகிய இடங்களுக்கும், தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் வெங்கடாஜலபதி கோவில் ஆகிய பகுதிக்கும் நெல்லை சந்திப்பு பகுதியில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றது.

    • வருகிற 24-ந் தேதி மற்றும் அக்டோபர் 1, 8, 15 ஆகிய தினங்களில் நவதிருப்பதி கோவில்களுக்கு சென்று வர சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
    • நபர் ஒன்றுக்கு ரூ.500 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    நெல்லை:

    தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி நதிக்கரையில் நவதிருப்பதி ஸ்தலங்கள் அமைந்துள்ளன. 108 திவ்ய தேச ஸ்தலங்களில் இடம்பெற்றுள்ள இத்தகைய கோவில்கள் ஸ்ரீவைகுண்டம், நத்தம், திருப்புளியங்குடி இரட்டை திருப்பதி, பெருங்குளம், தென்திருப்பேரை திருக்கோளூர் மற்றும் ஆழ்வார் திருநகரி ஆகிய இடங்களில் அமைந்துள்ளன.

    புரட்டாசி சனிக்கிழமை பெருமாளுக்கு உகந்த நாள் என்பதால் பக்தர்கள் இந்த திருத்தலங்களில் தரிசனம் செய்யும் வகையில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

    வருகிற 24-ந் தேதி மற்றும் அக்டோபர் 1, 8, 15 ஆகிய தினங்களில் நவதிருப்பதி கோவில்களுக்கு சென்று வர சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதற்காக நபர் ஒன்றுக்கு ரூ.500 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முன்பதிவு செய்து நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் இருந்தும், சங்கரன்கோவில் பேருந்து நிலையத்தில் இருந்தும் புரட்டாசி சனிக்கிழமை அன்று இயக்கப்படும் பேருந்துக்காக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் 4 புரட்டாசி சனிக்கிழமைகளிலும் நெல்லை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருவேங்கடநாதபுரம் வெங்கடாஜலபதி கோவில், அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோவில், திருக்குறுங்குடி நம்பி கோவில் மற்றும் அத்தால நல்லூர் பெருமாள் கோவில் ஆகிய இடங்களுக்கும், தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் வெங்கடாஜலபதி கோவில் ஆகிய பகுதிக்கும் நெல்லை சந்திப்பு பகுதியில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

    ×