என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 266930"

    • வங்கி கடன் அல்லது தொழில் கடன் வேண்டுதல் குறித்த மனுக்கள் இருக்கக் கூடாது.
    • அடுத்த மாதம் 7-ம் தேதிக்கு பின்னர் பெறப்படும் மனுக்கள் குழுவின் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படாது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    தமிழ்நாடு சட்டசபை மனுக்கள் குழு தஞ்சை மாவட்டத்தில் விரைவில் கூடுவது என முடிவு செய்துள்ளது.

    இதனை முன்னிட்டு தஞ்சை மாவட்ட எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள தனிப்பட்ட நபரோ, சங்கங்களோ அல்லது நிறுவனங்களோ தீர்க்கப்பட வேண்டிய பொது பிரச்சனைகள் , குறைகள் குறித்தான மனுக்களை (5 நகல்கள் தமிழில் மட்டும்) தேதியுடன் கையொப்பமிட்டு தலைவர், மனுக்கள் குழு, தமிழ்நாடு சட்டசபை பேரவை, சென்னை- 600009 என்ற முகவரிக்கு அடுத்த மாதம் 7-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

    மனுக்கள் கண்ணியமான வாக்கியத்தில் இருக்க வேண்டும்.

    பல ஆண்டுகளாக அரசு அலுவலகங்களில் தீர்க்கப்படாமல் இருக்கும் பொது பிரச்சனைகள் குறித்ததாக மனுக்கள் இருக்கலாம். மனுக்கள் ஒரே ஒரு பிரச்சனையை உள்ளடக்கியதாகவும், ஒரே ஒரு துறையை சார்ந்ததாகவும் இருக்க வேண்டும்.

    மனுக்கள் பொது முக்கியத்துவம் வாய்ந்த பொருள் ஒன்றை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் ‌‌.

    ஆனால் மனுவில் உள்ள பொருளானது தனிநபர் குறை, நீதிமன்றத்தின் முன் வழக்கில் உள்ள பொருள், வேலை வாய்ப்பு, முதியோர் ஓய்வூதியம், பட்டா மற்றும் அரசு வழங்கும் இலவச உதவிகள் வேண்டுதல் , வங்கி கடன் அல்லது தொழில் கடன் வேண்டுதல், அரசு பணியில் மாற்றம் வேண்டுதல், அரசு அலுவல ர்களின் குறைகளை வெளி ப்படுத்துதல், போன்றவை குறித்து இருக்கக் கூடாது.

    இது குறித்து மனுதார ர்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து குழு ஆய்வு செய்யும் நாளில் தகவல் தனியாக அனுப்பப்படும்.

    அடுத்த மாதம் 7-ம் தேதிக்கு பின்னர் பெறப்படும் மனுக்கள் குழுவின் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படாது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • உபகரணங்கள் பாதுகாப்பு மற்றும் பயன்படுத்தும் முறை போன்றவற்றின் முக்கியத்துவம் தொடர்பாக விவசாய களை பயிற்சி அளிக்கப்பட்டது.
    • அனைத்து ஆராய்ச்சியாளர்கள், முன்னவர்கள், அலுவலர்கள், 400-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் காரையூர் ஊராட்சியில் கோர்டேவா அக்ரி சைன்ஸ் -ன் விவசாய களை பயிற்சி நடைப்பெற்றது.விவசாய புரட்சியில் பல ஆண்டுகளாக சேவை செய்து வரும் கோர்டேவா அக்ரி சைன்ஸ் நிறுவனம் சார்பில் காரையூர் கிராமத்தில், நாகை மற்றும் திருவாரூர் மாவட்ட விவசாயிகளுக்கு விவசாய களை மேலாண்மை பற்றியும், நோவ்லக்ட் களைகொல்லி பற்றியும், உபகரணங்கள் பாதுகாப்பு மற்றும் பயன்படுத்தும் முறை போன்றவற்றின் முக்கியத்துவம் தொடர்பாக விவசாய களை பயிற்சி விழா நடைப்பெற்றது.

    இதில் கோர்டேவாவின், அனைத்து ஆராய்ச்சியாளர்கள், முன்னவர்கள், அலுவலர்கள், 400 -க்கும் மேற்ற விவசாயிகள் பங்கேற்றனர். இதில் திருவாரூர் சந்தை தொடர்பாளர், வேளாண்மை அலுவலர், துணை வேளண்மை அலுவலர், ஆத்மா திட்ட மேலாளர், விவசாய சங்க தலைவர்கள், கொர்டெவா அமைப்பினர் பங்கேற்றனர். அனைவருக்கும் தென்னை மர கன்றுகள் வழங்கப்பட்டது. விவசாயிகள் மற்றும் கோர்டேவா வின் திருவாரூர் அதிகாரிகள் ஶ்ரீதர், வெங்கடேஷ், கார்த்திகேயன் ஆகியோர் பங்கேற்றனர்.

    ×