search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெங்கடேஷ் அய்யர்"

    • கொல்கத்தா அணியில் வெங்கடேஷ் ஐயர் அரை சதம் அடித்து அசத்தினார்.
    • ஐதராபாத் தரப்பில் கம்மின்ஸ், ஷபாஷ் அகமது தலா 1 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    ஐபிஎல் தொடரின் இறுதிபோட்டியில் ஐதராபாத் - கொல்கத்தா மோதின. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி களமிறங்கிய ஐதராபாத் அணி தொடக்கம் முதலே மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் ஐதராபாத் அணி 18.3 ஓவரில் 113 ரன்னில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக கேப்டன் கம்மின்ஸ் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கொல்கத்தா அணி தரப்பில் ரஸல் 3 விக்கெட்டும் ஸ்டார்க், ரானா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதனையடுத்து கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக சுனில் நரைன் - குர்பாஸ் களமிறங்கினர். சுனில் நரைன் 6 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து குர்பாஸ் உடன் வெங்கடேஷ் அய்யர் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடினர். இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 91 ரன்கள் எடுத்தது.

    சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய குர்பாஸ் 32 ரன்னில் ஆட்டமிழந்தார், அடுத்து வந்த ஷ்ரேயாஸ் முதல் பந்தை பவுண்டரிக்கு விளாசினார். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய வெங்கடேஸ் அரை சதம் விளாசியது மட்டுமல்லாமல் அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். 

    இறுதியில் கொல்கத்தா அணி 10.3 ஓவரில் 114 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் ஐபிஎல் கோப்பையை 3-வது முறையாக கொல்கத்தா அணி கைப்பற்றியது. ஐதராபாத் தரப்பில் கம்மின்ஸ், ஷபாஷ் அகமது தலா 1 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    • சுனில் நரைன் 22 பந்தில் 47 ரன்கள் விளாசினார்.
    • வெங்கடேஷ் அய்யர் 30 பந்தில் அரைசதம் அடித்து ஆட்டமிழந்தார்.

    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்று சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் விளையாடிய ஆர்சிபி 6 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது. பின்னர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 19 பந்துகள் மீதம் வைத்து சேஸிங் செய்தது.

    சுனில் நரைன் 22 பந்தில் 47 ரன்களும், வெங்கடேஷ் அய்யர் 30 பந்தில் அரைசதமும் அடித்தனர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர்களால் அதிரடியாக விளையாடும்போது, விராட் கோலியால் ஏன் ஆடமுடியவில்லை. அவர் 59 பந்துகளை சந்தித்து 83 ரன்கள் அடித்துள்ளார் என விமர்சனம் எழுந்தது.

    இந்த நிலையில் 30 பந்தில் அரைசதம் விளாசி ஆட்டமிழந்த வெங்கடேஷ் அய்யர் கூறியதாவது:-

    முதல் இன்னிங்ஸ் போது ஆடுகளத்தில் இரட்டிப்பு வேகம், டபுள் பவுன்ஸ் இருந்தது. இதனால் முதல் இன்னிங்சில் பவுண்டரி அடிப்பது கடினமாக இருந்திருக்கும். ஆடுகளம் 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்ய சாதகமாக இருந்தது.

    எனக்கு முதுகுப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. அது எப்படி இருக்கிறது என்று பார்க்க வேண்டும். ஸ்கேன் பரிசோதனைக்குப் பின் தெரியவரும். 2-வது இன்னிங்ஸ் போது பந்து பேட்டிற்கு சிறந்த முறையில் வந்தது. சுனில் நரைனுக்கு நன்றி சொல்லியாக வேண்டும். அவர் விரைவாக ரன்கள் சேர்த்து எங்கள் மீதான நெருக்கடியை குறைத்தார். அதன்பின் வழக்கமான முறையில் நாங்கள் போட்டியை முடித்தோம்.

    விஜயகுமார் வைசாக் பந்தை எதிர்கொள்ள கடினமாக இருந்தது. ஆனால், வேகப்பந்து வீச்சாளர்கள் பந்து வேகமாக வீசினால், அவைகள் எளிதான சிக்கசருக்கு பறந்து விடும். நாங்கள் பந்து வீசும்போது கூட இது நிகழ்ந்தது" என்றார்.

    பிலிப் சால்ட் 20 பந்தில் 30 ரன்கள் அடிக்க கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 6.3 ஓவரில் 86 ரன்கள் குவித்தது. ஷ்ரேயாஸ் அய்யர் 24 பந்தில் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    • அதிரடியாக விளையாடிய வெங்கடேஷ் அய்யர் 51 பந்துகளில் வெங்கடேஷ் ஐயர் 104 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
    • 6 பவுண்டரிகள் 9 சிக்சர் விளாசிய வெங்கடேஷ் அய்யர் ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்.

    மும்பை:

    ஐபிஎல் போட்டியில் நேற்று பிற்பகல் 3.30 மணிக்கு மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. முதலில் விளையாடிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் குவித்தது.

    அதிரடியாக விளையாடிய வெங்கடேஷ் பவுண்டரிகளையும், சிக்சர்களையும் பறக்கவிட்டு அணியின் ஸ்கோரை வெகுவாக உயர்த்தினார். 49 பந்துகளில் அவர் சதம் விளாசினார். 51 பந்துகளில் வெங்கடேஷ் ஐயர் 104 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

    பின்னர் 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி விளையாடியது. 17.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் எடுத்து மும்பை வெற்றி கண்டது. இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி 4 புள்ளிகளுடன் 8-வது இடத்துக்கு முன்னேறியது.

    இந்நிலையில் கொல்கத்தா அணி வீரர் வெங்கடேஷ் அய்யர் பல சாதனைகளை படைத்துள்ளார். கொல்கத்தா அணிக்காக ஓர் இன்னிங்சில் அதிகபட்ச சிக்சர்களை விளாசியவர்கள் பட்டியலில் வெங்கடேஷ்ஐயர் 5-வது இடத்தில் உள்ளார்.

    நேற்றைய ஆட்டத்தில் அவர் 9 சிக்சர்களை பறக்கவிட்டார். 2008-ல் பெங்களூரு அணிக்கெதிராக கொல்கத்தா வீரர் மெக்கல்லம் 13 சிக்சர்களை பறக்கவிட்டு முதலிடத்தில் உள்ளார். 2-வது இடத்தில் ஆந்த்ரே ரஸல் (2018-ல் சென்னைக்கு எதிராக 11 சிக்சர்கள்) இருக்கிறார். 3-வது இடத்தில் ரஸலே (2019-ல் பெங்களூருக்கு எதிராக 9 சிக்சர்கள்) உள்ளார். 4-வது இடத்தில் தினேஷ் கார்த்திக் (2019-ல் ராஜஸ்தானுக்கு எதிராக 9 சிக்சர்கள்) உள்ளார்.

    15 ஆண்டுகளுக்குப் பிறகு ஐபிஎல் போட்டிகளில் கொல்கத்தா அணிக்காக சதமடித்தவர் என்ற பெருமையை வெங்கடேஷ் ஐயர் பெற்றார். இதற்கு முன்பு 2008-ல் பெங்களூரு அணிக்கெதிராக கொல்கத்தா வீரர் மெக்கல்லம் 158 ரன்கள் விளாசியதே முதல் சதமாக இருந்தது. நேற்றைய ஆட்டத்தில் வெங்கடேஷ் ஐயர் விளாசிய சதம், கொல்கத்தா அணிக்கான 2-வது சதமாக அமைந்தது.

    • முதலில் ஆடிய கொல்கத்தா 185 ரன்கள் சேர்த்தது.
    • வெங்கடேஷ் அய்யர் பொறுப்புடன் ஆடி சதமடித்து அசத்தினார்.

    மும்பை:

    16-வது ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மும்பையில் இன்று நடைபெறும் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 185 ரன்களை சேர்த்தது. நிலைத்து நின்று ஆடிய வெங்கடேஷ் அய்யர் 51 பந்துகளில் 9 சிக்சர், 6 பவுண்டரி உள்பட 104 ரன்கள் எடுத்தார்.

    மும்பை அணி சார்பில் ரித்திக் ஷோக்கீன் 2 விக்கெட்டும், கேமரூன் கிரீன், பியூஷ் சாவ்லா, மெரிடித், யான்சென் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 186 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்கியது. ரோகித் சர்மா, இஷான் கிஷன் ஜோடி அதிரடியாக ஆடியது. முதல் விக்கெட்டுக்கு 65 ரன்களை சேர்த்த நிலையில் ரோகித் சர்மா 20 ரன்னில் அவுட்டானார்.

    அரை சதமடித்த இஷான் கிஷன் 25 பந்தில் 5 சிக்சர், 5 பவுண்டரி உள்பட 58 ரன்களை குவித்தார். தொடர்ந்து பொறுப்புடன் ஆடிய சூர்யகுமார் யாதவ் 43 ரன்னில் அவுட்டானார். திலக் வர்மா 30 ரன்னில் வெளியேறினார்.

    இறுதியில், மும்பை அணி 17.4 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 186 ரன்களை எடுத்து வென்றது. டிம் டேவிட் 24 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    • இன்று நடைபெறும் முதல் போட்டியில் மும்பை, கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.
    • டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    மும்பை:

    16-வது ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மும்பையில் இன்று நடைபெறும் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.

    அதன்படி, கொல்கத்தா அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக குர்பாஸ், ஜெகதீசன் விளையாடினர். ஜெகதீசன் டக் அவுட்டானார். குர்பாஸ் 8 ரன்னில் வெளியேறினார். கேப்டன் நிதிஷ் ரானா 5 ரன்னிலும், ஷர்துல் தாக்குர் 13 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் வெங்கடேஷ் அய்யர் ருத்ர தாண்டவமாடினார். மும்பை பந்துவீச்சை சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார். தனி ஆளாக நிலைத்து நின்று ஆடி சதமடித்தார். அவர் 51 பந்துகளில் 9 சிக்சர், 6 பவுனட்ரி உள்பட 104 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

    இறுதியில், கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 185 ரன்களை சேர்த்தது. இதையடுத்து, 186 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்குகிறது.

    மும்பை அணி சார்பில் ரித்திக் ஷோக்கீன் 2 விக்கெட்டும், கேமரூன் கிரீன், பியூஷ் சாவ்லா, மெரிடித், யான்சென் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    • துலீப் கோப்பை கிரிக்கெட் தொடர் கோவையில் நடந்து வருகிறது.
    • இதில் மேற்கு மண்டலம் அணிகளும், மத்திய மண்டல அணிகளும் மோதின.

    கோவை:

    துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரில் மேற்கு மண்டலம் அணிகளும், மத்திய மண்டல அணிகளும் கோவையில் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற மத்திய மண்டல அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி மேற்கு மண்டல அணி முதல் இன்னிங்சில் 257 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இந்நிலையில், நேற்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. இதில் மத்திய மண்டல அணி பேட்டிங்கில் தடுமாறியது. அப்போது பேட்டிங் செய்து கொண்டிருந் வெங்கடேஷ் அய்யர் 6 ரன்கள் எடுத்திருந்தபோது காஜா என்ற வீரர் பந்தை பீல்டிங் செய்யும்போது எறிந்தார். அது, வெங்கடேஷ் அய்யரின் பின் தலையில் பட்டது. இதனால் வலியால் துடித்தார்.

    மைதானத்திற்குள் உடனடியாக ஆம்புலன்ஸ் கொண்டு வரப்பட்டதால் அங்கிருந்த ரசிகர்கள் பதறினர். எனினும் வெங்கடேஷ் அய்யர், அவராகவே எழுந்து நடந்து மைதானத்தை விட்டு வெளியேறினார். இதையடுத்து, உடனடியாக வெங்கடேஷ் அய்யர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு அவருக்கு ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு எந்த பாதிப்பும் இல்லை என தெரியவந்ததை அடுத்து அவர் மீண்டும் மைதானத்திற்கு வந்து பேட்டிங்கை தொடங்கினார். அவர் 14 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    ×