search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "7 பேர்"

    • கந்தசாமி தெருவின் அருகே ஒரு கும்பல் சூதாடியது
    • 7 பேர் கொண்ட கும்பல் சூதாடியது

    விழுப்புரம்;

    விழுப்புரம் பூந்தோட்டம் கந்தசாமி தெருவின் அருகே ஒரு கும்பல் சூதாடியதாக விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. ஸ்ரீநாதா விற்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்படி எஸ்.பி. ஸ்ரீநாதா உத்தரவின்பேரில் டி.எஸ்.பி பார்த்திபன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் மூர்த்தி தலைமையிலான போலீசார் நேற்று இரவு சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தனர். அப்போது சமீர் என்பவரின் வீட்டின் அருகே மோட்டார் சைக்கிள், மற்றும் கார் சந்தேகப்படும் படி நின்று கொண்டிருந்தது. இதனையடுத்து போலீசார் அங்கு சென்று பார்த்தபோது 7 பேர் கொண்ட கும்பல் சூதாடியது தெரியவந்தது. உடனே போலீசார் அவர்களை கையும் கலவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து ரூ.9000 பணம் மற்றும் சீட்டுகட்டுகளை பறிமுதல் செய்தனர்.

    • சேலம் மாவட்டம் ஆத்தூர் நகர பகுதிகளில் கடந்த சில நாட்களாக நகை பறிப்பு, வீடு புகுந்து கொள்ளை சம்பவங்கள் நடந்து வந்தன.
    • இந்த நிலையில் பல்வேறு இடங்களில் வழிப்பறி செய்ததாக 7 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் நகர பகுதிகளில் கடந்த சில நாட்களாக நகை பறிப்பு, வீடு புகுந்து கொள்ளை சம்பவங்கள் நடந்து வந்தன.

    இதில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த நிலையில் பல்வேறு இடங்களில் வழிப்பறி செய்ததாக 7 பேர் கொண்ட கும்பலை ஆத்தூர் நகர போலீசார் கைது செய்தனர்.

    இதில் ஆத்தூர் கோட்டை பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் குமார், ஜீவா, ஆனந்த் ,அன்புமணி, மாரிமுத்து, ஹரிஹரன், திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த சந்தோஷ், ஆகியோர் அடங்குவர். அவர்களிடம் ஆத்தூர் நகர போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதையடுத்து அவர்கள் 7 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • மணவாளக்குறிச்சி போலீசில் புகார்
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    மணவாளக்குறிச்சி அருகே சாத்தன்விளையை சேர்ந்தவர் தங்கதுரை (வயது 65). ஐ.ஆர்.இ.எல். மணல் ஆலையில் ஊழியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவருக்கு சொந்த மாக உரப்பனவிளையில் தோட்டம் உள்ளது. தங்கதுரை இந்த தோட்டத்தில் கல்தூண் மற்றும் முள் வேலி அமைத்திருந்தார். சம்பவத்தன்று அதே பகுதியை சேர்ந்த செல்வன், அசோக் என்ற இளங்கோ, செல்வகுமார், தங்கராஜ், சேகர், யுவராஜ், பாலகிருஷ்ணன் ஆகியோர் தோட்டத்தில் உள்ள கல்தூண் மற்றும் முள்வேலியை சேதப்படுத்தினார்கள்.

    இது குறித்து தங்கதுரை மணவாளக்குறிச்சி போலீசில் புகார் செய்தார்.போலீசார் முள்வேலியை சேதப்படுத்திய 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×