என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பல"
- போலீசார் மீட்டு உறவினரிடம் ஒப்படைத்தனர்
- கொற்றிகோடு போலீசார் ஆற்றுகோணம் சென்று மகள், மருமகன் மற்றும் பேரக்குழந்தையை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.
கன்னியாகுமரி:
பொங்கல் அன்று தக்கலை அருகே கைசாலவிளை மேக்காமண்டபம் பகுதியில் சுமார் 75 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் ஒவ்வொரு வீடாக சென்று பார்ப்பதும் செல்வதுமாக இருந்துள்ளார்.
இதை கவனித்த அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மூதாட்டியிடம் விசாரித்துள்ளனர். அப்போது அவரது பெயர் கமலாட்சி எனவும், தனது மகளுக்கு பொங்கல் கொண்டு வந்ததாகவும் வீடு அடையாளம் தெரியவில்லை எனவும் கூறியுள்ளார்.
இது குறித்து அப்பகுதி மக்கள் தனது மகளின் பெயர் ஊர் கேட்ட போது மகள் பெயர் கிரேசி எனவும் ஊர் பெயர் தெரியவில்லை எனவும் கூறினார். மேலும் தனது மகளை பார்க்க மேக்காமண்டபம் வந்து இந்த பாதை வழியாக வருவேன் எனவும் கூறினார்.
பொதுமக்கள் மூதாட்டியை அமர வைத்து விசாரிக்க தொடங்கினர். பல மணி நேரம் ஆன பின்பும் மகள் வீடு கண்டுபிடிக்க முடியாததால் கொற்றிகோடு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து மூதாட்டியை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது அந்த மூதாட்டியின் வீடு புதுக்கடை காட்டுவிளை என கூறியதால் போலீசார் புதுக்கடை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.மேலும் மூதாட்டியின் போட்டோவையும் அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக புதுக்கடை போலீசார் விசாரணை செய்த போது மூதாட்டியின் கணவர் செல்லையா எனவும், அவர் இறந்த பிறகு மகன் தாஸ் வீட்டில் வசித்து வருவதும் பொங்கல் அன்று மகளை பார்க்க பொங்கல்படி கொண்டு சென்றுள்ளார். மகளின் வீடு ஆற்றுகோணம் பகுதியில் உள்ளது என தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து கொற்றிகோடு போலீசாருக்கு புதுக்கடை போலீசார் தெரிவித்தனர். பின்னர் கொற்றிகோடு போலீசார் ஆற்றுகோணம் சென்று மகள், மருமகன் மற்றும் பேரக்குழந்தையை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். மூதாட்டி தனது மகளையும், பேரக்குழந்தையும் பார்த்து கண் கலங்கினார். பின்னர் மூதாட்டியை அவரது மகளுடன் போலீசார் அனுப்பி வைத்தனர். மூதாட்டி வீடு அடையாளம் தெரியாமல் தவித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- சேலம் மாவட்டம் ஆத்தூர் விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பலகார சீட்டு நடத்தி பல லட்சம் மோசடி செய்தனர்.
- 100-க்கும் மேற்பட்ட பெண்கள் ஆத்தூர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
ஆத்தூர்:
சேலம் மாவட்டம் ஆத்தூர் விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த சந்திரசேகர், மாலினி, தம்பதியர். இவர்கள் கடந்த சில வருடங்களாகவே நரசிங்கபுரம், விநாயகபுரம், திருநாவுக்கரசு நகர், தில்லை நகர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட பெண்களிடம் பலகார சீட்டு நடத்துவதாக மாதம் தோறும் குறிப்பிட்ட தொகையை வசூல் செய்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர்கள் வீட்டை காலி செய்துவிட்டு சென்றுவிட்டனர். இதனால் அவர்களிடம் பணம் கட்டியவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து சுமார் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் ஆத்தூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தங்களிடம் பணம் வசூல் செய்து கொண்டு மோசடி செய்த 2 பேரிடமிருந்து தங்களுக்கு பணத்தை திரும்ப பெற்றுத் தர வேண்டும் என கூறினார்கள். இதை தொடர்ந்து சம்மந்தப்பட்ட சந்திரசேகர், மாலினி ஆகிய இருவரையும் போலீசார் அழைத்து விசாரித்தனர்.
அப்பொழுது விரைவில் அனைவருக்கும் பணத்தை கொடுத்து விடுவதாக அவர்கள் கூறினர். இதை தொடர்ந்து பெண்கள் கலைந்து சென்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்