search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நல மையம்"

    • கீழக்கரையில் விவசாயிகள் நல மையம் திறப்பு விழா நடந்தது.
    • 100% இயற்கை உரம் வழங்கும் திட்டம் மத்திய அரசு அறிமுகம் செய்யும் என்று விளக்கிக் கூறப்பட்டது.

    கீழக்கரை

    இந்தியாவில் 1.25 லட்சம் விவசாயிகள் நல மையங்களை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். ராமநாதபுரம் வடக்கு தெருவில் உள்ள மையத்தில் வீடியோ கான்பரன்ஸ் முறையில் திறப்பு விழா நடந்தது. பாரதிய ஜனதா மாவட்ட தலைவர் தரணி முருகேசன் தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6 ஆயிரம் வழங்குவதில் மீதமுள்ள 2000 மேலும் விவசாயிகள் 70 சதவீதம் இயற்கை உரம் 30 சதவீதம் கெமிக்கல் உரம் சேர்த்து பயன்படுத்துவது குறித்தும் விரைவில் 100% இயற்கை உரம் வழங்கும் திட்டம் மத்திய அரசு அறிமுகம் செய்யும் என்று விளக்கிக் கூறப்பட்டது.

    இதில் விவசாயிகள் அணி மாநில பொதுச்செயலாளர் பிரவீன், விவசாய அணி மாநில தலைவர் நாகராஜ், மாநில விவசாய அணி நிர்வாகி சுதாகர் ரெட்டி, அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம், விவசாய அணி மாநிலத் துணைத் தலைவர் எஸ்.ஆர்.தேவர், விவசாய அணி மாநில செயற்குழு உறுப்பினர் செந்தூர் பாண்டி, கயிறு வாரிய தலைவர் குப்புராம், ராமநாதபுரம் மாவட்ட விவசாய அணி ரவிச்சந்திரன், மாவட்ட துணைத்தலைவர் செந்தில்குமார், மாவட்டச் செயலாளர் கண்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.

    • சேலம் மாவட்டம் ஓமலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட புளியம்பட்டி ஊராட்சியில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டிடங்கள் பழுதடைந்து காணப்பட்டது.
    • இதை தொடர்ந்து சுமார் 8 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு புதிய கட்டிடம் கட்டப்பட்டது.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட புளியம்பட்டி ஊராட்சியில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டிடங்கள் பழுதடைந்து காணப்பட்டது. இடிந்து விழும் நிலையில் இருந்த கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டிகொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.

    இதை தொடர்ந்து சுமார் 8 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு புதிய கட்டிடம் கட்டப்பட்டது. அதேபோல புளியம்பட்டி காலனி பகுதியில், பழுதடைந்த மற்றொரு தார்சு கட்டிடமும் 2 லட்ச ரூபாய் மதிப்பில் புதுப்பிக்கப்பட்டது.

    இதையடுத்து இந்த கட்டிடங்களின் திறப்பு விழா நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தசாமி தலைமையில், தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் ரமேஷ், மாவட்ட கவுன்சிலர் அழகிரி, அ.தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர் சரவணன், முன்னாள் தலைவர்கள் கிருஷ்ணன், அய்யனார் ஆகியோர் கலந்துகொண்டு புதிய கட்டிடத்தையும், புதுபிக்கப்பட்ட கட்டிடத்தையும் திறந்து வைத்தனர்.

    தொடர்ந்து குத்துவிளக்கேற்றி பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர். முடிவில் ஊராட்சி மன்ற செயலர் லட்சுமணன் நன்றி கூறினார்.

    ×