search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருத்தலம்"

    • 10-ம் நாள் திருவிழாவான 18-ந்தேதி காலை 4.30 மணிக்கு தங்கத்தேரில் திருப்பலி நடக்கிறது.
    • காலை 9 மணிக்கு மாதா மற்றும் சூசையப்பர் ஆகிய இரு தங்க தேர்ப்பவனி நடக்கிறது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி மாவட் டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கிறிஸ்தவ திருத்த லங்களில் கன்னியா குமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தலம் முதன்மை யானது ஆகும்.

    இந்த திருத்தலத்தில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 10 நாட்கள் திருவிழா வெகுவிமரிசையாக நடை பெறுவது வழக்கம். அதே போல் இந்த ஆண்டுக் கான திருவிழா இன்று (9-ந்தேதி) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    1-ம் திருவிழாவான இன்று காலை 6 மணிக்கு சிறப்பு திருப்பலி நடை பெற்றது.அதைத்தொடர்ந்து காலை 8மணிக்குநேர்ச்சை கொடிகள் பவனிதொடங்கி யது. மாலை 4 மணி வரை இந்த நேர்ச்சை கொடிகள் பவனிநடக்கிறது. மாலை 6.30 மணிக்குதிருக்கொடியேற்ற நிகழ்ச்சி நடக்கிறது. இதனைத் தொடர்ந்து நடைபெறும் திருப்பலிக்கு குழித்துறை மறை மாவட்ட செயலாளர் அருட்பணி ரசல் ராஜ் தலைமை தாங்கி மறையுரை நிகழ்த்துகிறார்.

    2-ம் நாள் திருவிழாவான நாளை (10-ந்தேதி) அதி காலை 5 மணிக்கு பழைய கோவிலில் திருப் பலி நடக்கிறது. தொடர்ந்து 10-30 மணிக்கு புனித சூசையப்பர் பீடத்தில் திருப்பலியும் மாலை 6-30 மணிக்கு ஜெபமாலை மற்றும் திருப்பலியும் நடக் கிறது.

    இந்த நிகழ்ச்சிக்கு ஆயர் இல்ல அதிபர் அருட்பணி பஸ்காலிஸ் தலைமை தாங்குகிறார். கோட்டார் வட்டார முதல்வர் அருட்பணி ஆனந்த் மறை உரை நிகழ்த்துகிறார். இரவு 9 மணிக்கு பள்ளி மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. 10-ம் நாள் திருவிழாவான 18-ந்தேதி காலை 4.30 மணிக்கு தங்கத்தேரில் திருப்பலி நடக்கிறது. தொடர்ந்து காலை 6 மணிக்கு திருவிழா நிறைவு திருப்பலி அருட்பணி சுவக்கின் தலைமையில் நடக்கிறது. அருட்பணியாளர் மில்லர் மறைவுரை ஆற்றுகிறார். தொடர்ந்து காலை 8 மணிக்கு ஆங்கில திருப்ப லியை அருட்பணி ஆன்சல் ஆன்றனி நிகழ்த்துகிறார்.தொடர்ந்து கன்னியாகுமரி புனித ஜோசப் கலசான்ஸ் பள்ளி முதல்வர் அருட்பணி ஜீன்ஸ் மறைவுரை யாற்று கிறார்.

    தொடர்ந்து காலை 9 மணிக்கு மாதா மற்றும் சூசையப்பர் ஆகிய இரு தங்க தேர்ப்பவனி நடக்கிறது.இந்ததேர்பவனியில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மற்றும் கேரள மாநிலத்தைசேர்ந்த ஏராளமானஇறைமக்கள் கலந்துகொள்கின்றனர். 10.30 மணிக்கு மலையாள திருப்பலியை கலசான்ஸ் மழலையர் பள்ளி பொறுப் பாளர் அருட்பணி ஜில்லோ வர்கீஸ் நடத்துகிறார். புனித ஜோசப் கலசான் குழும அதிபர் ஆல்பர்ட் கிளீஸ்டஸ் மறை உரையாற்றுகிறார். தொடர்ந்து பகல் 12 மணிக்கு வடசேரி பங்கு தந்தை அருட்பணி புருணோ தலைமையில் திருப்பலி நடக்கிறது. மாலை 6 மணிக்கு திருக்கொடி இறக்கம் மற்றும் நற்கருணை ஆசீர் நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    திருவிழாவுக்கான ஏற்பா டுகளை கன்னியாகுமரி புனித அலங்கார உபகார மாதா திருத்தல அதிபர் ஆன்றனி அல்காந்தர், இணை பங்கு தந்தையர்கள் சகாய வினட் மேக்ஸ்சன், ஜான் போஸ்கோ, சேவியர் அருள்நாதன், பங்குப் பேரவை துணைத்தலைவர் ஜோசப், செயலாளர்சுமன், பொருளாளர் தீபக்மற்றும் பங்கு மக்கள் பங்கு பேரவை யினர் அருட் சகோதரிகள் செய்து வருகின்றனர்.

    • திரளான பங்கு மக்கள் பங்கேற்பு
    • பாக்கும்படி நிகழ்ச்சி முடிந்ததும் கொடிமர கம்பம் பங்கு மக்களால் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு திருத்தலத்தில் வைக்கப்பட்டது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரியில் அமைந்து உள்ள தூய அலங்கார உபகார மாதா திருத்தலம் குமரி மாவட்டத்தில் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவ திருத்தலங்களில் மிகவும் புகழ்பெற்றது ஆகும். இந்த திருத்தலத்தில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஆண்டுக்கான திருவிழா அடுத்த மாதம் (டிசம்பர்) 9-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த திருவிழா 18-ந்தேதி வரை 10 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது. திருவிழாவையொட்டி தினமும் திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீர், ஜெபமாலை, விசேஷ மாலை ஆராதனை மற்றும் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது.

    8-ம் திருவிழாவான 16-ந்தேதி இரவு சப்பர பவனியும், 9-ம் திருவிழாவான 17-ந்தேதி இரவு சூசையப்பர் தங்கத்தேர் பவனியும், 10-ம் திருவிழாவான 18-ந்தேதி காலையில் மாதா மற்றும் சூசையப்பர் ஆகிய இரு தங்கத்தேர் பவனியும் நடக்கிறது.

    திருவிழாவையொட்டி நடக்கும் நாதஸ்வரம், பேண்ட் வாத்திய இசை, ஒலி-ஒளி அமைப்பு, கோவில் மின்விளக்கு அலங்காரம், தேர்அலங்காரம், வான வேடிக்கை, மெல்லிசைக் கச்சேரி மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் உள்பட அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் பங்கு மக்கள் முன்னிலையில் வெற்றிலை பாக்குடன் முன் பணம் கொடுக்கும் "பாக்கும்படி" நிகழ்ச்சி நடந்தது.

    இந்த நிகழ்ச்சிக்கு கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தல அதிபர் ஆன்றனி அல்காந்தர், தலைமை தாங்கினார். பங்குப்பேரவை துணைத்தலைவர் ஜோசப், செயலாளர் சுமன், பொருளாளர் தீபக், துணை செயலாளர் பினோ, இணை பங்கு தந்தையர்கள் சேவியர்அருள்நாதன், மேக்சன், ஜாண்போஸ்கோ, ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதலில் தேர் அலங்காரத்துக்கான முன்பணம் செல்வம் என்பவ ருக்கு வழங்கப்பட்டது. இதில் திரளான பங்கு மக்கள் கலந்து கொண்டனர்.

    பாக்கும்படி நிகழ்ச்சி முடிந்ததும் கொடிமர கம்பம் பங்கு மக்களால் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு திருத்தலத்தில் வைக்கப்பட்டது. அதன் பிறகு மாதா தேர் மற்றும் சூசையப்பர் தேர் ஆகிய இரண்டு தேர்களும் பவனிக்கு தயார்படுத்துவதற்காக தேர் கூடத்தில்இருந்து பங்கு மக்களால் இழுத்து வெளியே கொண்டு விடப்பட்டது.

    • தேதிப்படி திருவிழா 23-ந்தேதி தொடங்குகிறது
    • 2 நாட்கள் நடக்கிறது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரியில் தூய அலங்கார உபகார மாதா திருத்தலம் உள்ளது. இந்த திருத்தலம் தமிழகத்தில் மிகவும் புகழ் பெற்ற கிறிஸ்தவ திருத்தலங்களில் ஒன்றாகும்.

    இந்தத் திருத்தலத்தில் திருவிழா முன்பு ஆண்டு தோறும் செப்டம்பர் மாதம் 10 நாட்கள் நடைபெறும். இந்த மாதத்தில் மீன் தொழில் அதிகமாக இருந்து வந்ததால் தேர்பவனி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சி கள் நடத்துவதில் சிரமம் இருந்து வந்தது. இதன் காரணமாக செப்டம்பர் மாதம் நடைபெற்றுவந்த திருவிழா பொதுமக்களின் வசதிக்காக டிசம்பர் மாதம் மாற்றி வைக்கப்பட்டது.

    இருப்பினும் பாரம்பரிய மாக நடந்து வந்த செப்டம்பர் மாத திருவிழாவை நினைவு கூறும் வகையில் ஆண்டு தோறும் செப்டம்பர் மாதம் 2 நாட்கள் மட்டும் தேதிப்படி திருவிழா என நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான தேதிப்படி திருவிழா வருகிற 23-ந்தேதி தொடங்குகிறது.

    இதனையொட்டி அன்று மாலை 6.30 மணிக்கு ஜெபமாலையும் மாலை ஆராதனையும் நற்கருணை ஆசீரும் நடக்கிறது. 2-வது நாளான 24-ந்தேதிகாலை 6 மணிக்கு திருவிழா திருப்ப லியும் முதல் திருவிருந்து விழாவும் நடக்கிறது. பின்னர் மாலை 5.30 மணிக்கு நற்கருணைப் பவனியும் அதைத்தொடர்ந்து மறையுரை நற்கருணை ஆசீரும் நடக்கிறது.

    திருவிழாவுக்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தல அதிபர் அருட்தந்தை ஆன்றனி ஆல்காந்தர், பங்குப் பேரவை துணைத்தலைவர் செல்வராணி ஜோசப், செயலாளர் சுமன், பொரு ளாளர் தீபக் மற்றும் இணை பங்குதந்தையர்கள், பங்கு பேரவையினர் அனைத்து அன்பிய ஒருங்கி ணைப்பாளர்கள் மற்றும் பங்கு மக்கள் செய்து வருகிறார்கள்.

    ×