என் மலர்
நீங்கள் தேடியது "கார் மோதியது"
- கார் மோதி முதியவர் பலியானார்.
- விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
அரியலூர்: அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே கோமான் தூத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையன்(வயது 65). அதே பகுதியை சேர்ந்தவர் சுருதிமன்னன் (50). இவர்கள் 2 பேரும் ஒரு மோட்டார் சைக்கிளில் திருச்சி- சிதம்பரம் சாலையில் சென்று கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கார் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் கருப்பையன் உயிரிழந்தார். சுருதிமன்னன் படுகாயம் அடைந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் உடையார்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவரான கரூர் மாவட்டம் வச்சேரி கிராமத்தை சேர்ந்த ஆசைத் தம்பி மகன் கிருபா(35) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- கடலூர் அடுத்த வரக்கால்பட்டு சேர்ந்தவர் சுந்தரராமன்
- கடலூர் - பாலூர் சாலையில் சென்று கொண்டிருந்தார்.
கடலூர்:கடலூர் அடுத்த வரக்கால்பட்டு சேர்ந்தவர் சுந்தரராமன் (வயது 34). டிரைவர். சம்பவத்தன்று காராமணி குப்பத்திலிருந்து சுந்தரவாண்டி வழியாக கடலூர் - பாலூர் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலை ஓரத்தில் இருந்த பெரிய அளவிலான மின்சார டிரான்ஸ்பார்மர் மீது பலத்த சத்தத்துடன் எதிர்பாராமல் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில் மின்கம்பம் முறிந்து டிரான்ஸ்பார்மர் கார் மீது விழுந்தது.இந்த விபத்து காரணமாக உடனடியாக அந்த பகுதியில் மின்தடை ஏற்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மேலும் காரில் இருந்த டிரைவர் சுந்தர் ராமனுக்கு காயம் ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து சுந்தர்ராமனை பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்குக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நேற்று இரவு மின்சாரத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் மின்தடை ஏற்பட்டது. பின்னர் மின் இணைப்பு வழங்கி நடவடிக்கை மேற்கொண்டனர். இது மட்டுமின்றி சேதமடைந்த டிரான்ஸ்பார்மர் மற்றும் மின்கம்பத்தை அகற்றி மின்சார துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.
- டயர் வெடித்து தறிகெட்டு ஓடியதால் விபரீதம்
- 6 பேர் படுகாயம்
ஜோலார்பேட்டை:
கோயம்புத்தூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் சந்திரசேகர் ( வயது 52 ) , சக்திவேல் (40), இவர்கள் நேற்று முன்தினம் கோயம்புத்தூரில் இருந்து திருப்பதி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய காரில் சென்றனர்.
அதே பகுதியை சேர்ந்த ரத்தினசாபதி மகன் சந்திரகுமார் ( 38 ) காரை ஓட்டிச் சென்றார். தரிசனம் செய்துவிட்டு ஊருக்கு திரும்பினர். நேற்று காலை திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அருகே ஏழுரைப்பட்டி பகுதியில் கிருஷ்ணகிரி நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
அப்போது காரின் முன்பக்க டயர் திடீரென வெடித்தது. இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் முன்னால் சென்று கொண்டிருந்த 2 மோட்டார் சைக்கிள்கள் மீது மோதி சாலையோரம் உள்ள மரத்தில் மோதி நின்றது.
இதில் காரில் பயணம் செய்த சந்திரசேகர், சக்திவேல் மற்றும் கார் டிரைவர் சந்திரகுமார் , மோட்டார் சைக்கிள் ஓட்டி சென்ற வாணியம்பாடி அருகே உள்ள வீரனமலையை சேர்ந்த ஜெயச்சந்திரன் மகன் தினேஷ் (23), பின்னால் அமர்ந்து இருந்த கிருஷ்ணமூர்த்தி மகள் மஞ்சு (17), மற்றொரு மோட்டார் சைக்கிள் ஓட்டிச் சென்ற நாட்டறம்பள்ளி அடுத்த கூத்தாண்ட குப்பம் பகுதியைச் சேர்ந்த அய்யன் (55) ஆகியோர் படுகாயமடைந்தனர் .
இது குறித்து தகவல் அறிந்ததும் நாட்டறம்பள்ளி போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த வர்களை மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத் துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.