search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சூதாடிய 6 பேர் கைது"

    • விளையாடி வந்த கும்பலை சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர்.
    • அவர்களிடம் இருந்த ரூ.5,350 ரொக்க பணம் மற்றும் சீட்டுக்கட்டுக்களை பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு, 

    ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா அருகில் உள்ள தனியார் கட்டிடத்தில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதன்பேரில், டவுன் இன்ஸ்பெக்டர் தெய்வராணி தலைமையிலான போலீசார் நேற்று அங்கு விரைந்து சென்று பணம் வைத்து சீட்டாட்டம் விளையாடி வந்த கும்பலை சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர்.

    இதில், அவர்கள், ஈரோடு கருங்கல்பாளையம் காமாட்சி அம்மன் கோவில் வீதியை சேர்ந்த அலாவுதீன்(45), கலைஞர் நகரை சேர்ந்த சபரி(25), பெரியசேமூரை சேர்ந்த சேகர்(50), பெரியமாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த பொன்னுசாமி(51), நாடார்மேட்டினை சேர்ந்த பாலகிருஷ்ணன்(41), மணல்மேட்டினை சேர்ந்த சண்முகம்(58) ஆகிய 6 பேர் என்பது தெரியவந்தது. இதையடுத்து 6 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்த ரூ.5,350 ரொக்க பணம் மற்றும் சீட்டுக்கட்டுக்களை பறிமுதல் செய்தனர்.

    • சூதாட்டம் விளையாடி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
    • 6 பேரை சுற்றிவளைத்து பிடித்து விசாரித்தனா்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சிவகிரி திரு.வி.க. தெருவில் உள்ள பெருமாள் கோவில் அருகே பணம் வைத்து சூதாட்டம் விளையாடி வருவதாக சிவகிரி போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

    இதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பணம் வைத்து சீட்டாட்டம் விளையாடி வந்த 6 பேரை சுற்றிவளைத்து பிடித்து விசாரித்தனா்.

    இதில் அவர்கள் சிவகிரி இளங்கோ தெருவை சேர்ந்த கார்த்தி (38), பாரதி தெருவை சேர்ந்த வாசுதேவன் (49), விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த இளங்கோ (49), லால்பகதூர் சாஸ்திரி தெருவை சேர்ந்த சுகராஜ் (37), காந்திஜி தெருவை சேர்ந்த அருணாச்சலம் (53) ஆகியோர் என்பது தெரியவந்தது.

    இதையடுத்து 6 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த சீட்டுக்கட்டு, ரூ.2,480 ரொக்கத்தையும் பறிமுதல் செய்தனர்.

    • ரூ.2 லட்சத்து 7ஆயிரம், 8 மோட்டார் சைக்கிள், 6 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    • மூன்று பேரும் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் போலீசார் கர்ணபள்ளி பகுதியில் ரோந்து பணியில் இருந்த போது அங்கு பணம் வைத்து சூதாடி பேரிகை அண்ணாநகர் அபிலாஷ் (27),பசவராஜ் (26), சூளகிரி நாகராஜ் (25),ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர் .மேலும் ரூ.2 லட்சத்து 7ஆயிரம், 8 மோட்டார் சைக்கிள், 6 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இதே போல் ஓசூர் சிப்காட் போலீசார் சிப்காட் சின்ன எலசகிரி அருகே ரோந்து பணியில் அப்போது அந்த பகுதியில் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர். அசாம் மாநிலத்தை சேர்ந்த பசுபோமச்சி (23), அருண்ஓரங் (23), நூர்ஜல்இஸ்லாம் (21), இவர்கள் மூன்று பேரும் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பணம் ரூ.570 பறிமுதல் செய்யப்பட்டது.

    • ஒரு கும்பல் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தது.
    • லாட்டரி சீட்டுகளை விற்றுக்கொண்டிருந்த ராஜேந்திரன்(49) என்பவரை கைது செய்தனர்.

    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரி டவுன் போலீசார் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியின் பின்புறம் ரோந்து சென்றனர், அப்போது அங்கு ஒரு கும்பல் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தது.

    போலீசாரை கண்டதும் அந்த கும்பல் தப்பி ஓட முயன்றது. ஆனால் போலீசார் அவர்களை மடக்கிப்பிடித்து லாட்டரி சீட்டுக்கள் மற்றும் ரூ.350 பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    சூதாட்டத்தில் ஈடுபட்ட சுரேஷ்(வயது 35), தங்கராஜ்(44), சுரேஷ்(35), ராஜு (35), மணி (35), சதீஷ்குமார் (31) ஆகிய 6 பேரையும் கைது செய்தனர்.

    இதேபோல மகாராஜா கடை போலீசார் மேல்பட்டி பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்றுக்கொண்டிருந்த ராஜேந்திரன்(49) என்பவரை கைது செய்தனர்.

    வேப்பனப்பள்ளி பகுதியில் கஞ்சா விற்ற ரிஸ்வான் (25) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    • போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பச்சமுத்து தலைமையில் போலீசார் கோவிலூர் பகுதியில் ரோந்து சென்றனர்.
    • பணம் வைத்து சூதாடியதாக 6 பேர் கைது செய்யப்பட்டது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், நாகரசம்பட்டி பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பச்சமுத்து தலைமையில் போலீசார் கோவிலூர் பகுதியில் ரோந்து சென்றனர்.

    அப்போது பணம் வைத்து சூதாடியதாக காவேரிப்பட்டணம் பகுதியை சேர்ந்த ஹஸ்லாம் (வயது43), கோவிலூரை சேர்ந்த ரவி, முருகன், செட்டிமாரன்பட்டியை சேர்ந்த தேவராஜ், தளிஅள்ளிைய சேர்ந்த யுவராஜ், விஜயன் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

    • பணம் வைத்து சூதாடியதாக சின்னவன், முருகன், முனுசாமி, குமார் உள்பட 6 பேரை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர்.
    • கைதான அவர்களின் 6 இருசக்கர வாகனங்கள், பணம் ரூ.6 ஆயிரம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

    நல்லம்பள்ளி,

    தருமபுரி மாவட்டம், இண்டூர் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அவ்வைநகர் காட்டுபகுதியில் பணம் வைத்து சூதாடியதாக சின்னவன், முருகன், முனுசாமி, குமார் உள்பட 6 பேரை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர்.

    கைதான அவர்களின் 6 இருசக்கர வாகனங்கள், பணம் ரூ.6 ஆயிரம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

    ×