search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டயர் வெடித்து"

    • வேன் தஞ்சை அருகே புனல்குளம் பகுதியில் வந்த போது திடீரென முன்பக்க டயர் வெடித்து.
    • காயம் அடைந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை இனாத்துக்கன்பட்டி யை சேர்ந்தவர் அஞ்சம்மாள் (வயது 70 ). இவர் அதே பகுதியை சேர்ந்த வேம்பரசி, ரங்கநாதன், ராஜா, மகாலட்சுமி உள்பட சிலருடன் ஒரு வேனில் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் துக்க வீட்டுக்கு சென்றனர்.

    பின்னர் அங்கிருந்து அதே வேனில் தஞ்சைக்கு புறப்பட்டனர். அந்த வேன் தஞ்சை அருகே புனல்குளம் பகுதியில் வந்த போது திடீரென முன்பக்க டயர் வெடித்து டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பு கம்பியில் மோதியது. இதில் அஞ்சம்மாள் உள்பட 9 பேர் பலத்த காயமடைந்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்த தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயம் அடைந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஜம்பையில் இருந்து கொங்கர்பாளையத்திற்கு மக்காச்சோளம் தட்டு ஏற்றிக்கொண்டு ஒரு மினி லாரி வந்து கொண்டு இருந்தது.
    • அத்தாணி-சத்தி ரோட்டில் வந்த போது லாரியின் பின் பக்க டயர் திடீரென வெடித்ததில் லாரி நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்தது.

    ஆப்பக்கூடல்:

    ஆப்பக்கூடல் அடுத்த அத்தாணி-சத்தி ரோட்டில் ஜம்பையில் இருந்து கொங்கர்பாளையத்திற்கு மக்காச்சோளம் தட்டு ஏற்றிக்கொண்டு ஒரு மினி லாரி வந்து கொண்டு இருந்தது.

    லாரியில் கொங்கர் பாளையத்தை சேர்ந்த தொழிலாளர்கள் அர்ஜூனன், முத்துசாமி, ராசன், விஜயா, முருகேசன், சுந்தரி, சாந்தி, பழனிச்சாமி மற்றும் வாணிப்புத்தூரை சேர்ந்த டிரைவர் சபேஷ்குமார் உள்பட 9 பேர் வந்தனர்.

    அப்போது அத்தாணி-சத்தி ரோட்டில் தனியார் திருமண மண்டபம் அருகே வந்த போது லாரியின் பின் பக்க டயர் திடீரென வெடித்தது. இதனால் மினி லாரி நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்தது.

    இதில் லாரியின் பின்பக்கத்தில் சோளத்தட்டு பாரத்தின் மேல் அமர்ந்து இருந்த அனைவரும் கீழே விழுந்தனர். தொழிலாளிகள் உள்பட 9 பேருக்கும் இடுப்பு மற்றும் கால்களில் அடிபட்டு காயம் எற்பட்டது.

    உடனே அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    இச்சம்பவம் குறித்து ஆப்பக்கூடல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×