search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐ.நா. சபை"

    • காசாவில் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்
    • இரு தரப்பினரும் போரை கைவிட வேண்டும் என்றார் டெட்ரோஸ்

    இஸ்ரேல்-ஹமாஸ் போர் 40 நாட்களை கடந்து நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.

    ஹமாஸ் அமைப்பினரின் கட்டுப்பாட்டில் இருந்த பாலஸ்தீன காசாவின் பெரும் பகுதி இஸ்ரேல் வசம் வந்து விட்டது. பாலஸ்தீன பொதுமக்களுக்கு மருந்து, உணவு, எரிபொருள், மின்சாரம் உள்ளிட்ட பல அத்தியாவசிய தேவைகள் கிடைக்காமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியிருக்கிறார்கள். பலர் குண்டு வீச்சில் தங்கள் வீடுகளை இழந்து தவிக்கிறார்கள்.

    இந்நிலையில், காசாவில் நிலவும் சூழ்நிலை குறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேசஸ் (Tedros Adhanom Ghebreyesus) தனது அதிகாரபூர்வ எக்ஸ் வலைதள கணக்கில் கருத்தை பதிவிட்டுள்ளார்.

    அதில் அவர் கூறியிருப்பதாவது:

    நான் ஒன்றை உறுதியாக கூற விரும்புகிறேன். ஹமாஸ் மற்றும் பிற பயங்கரவாத அமைப்பினர் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலையும், அதில் 1200 பேர் இறந்ததையும், 200 பேருக்கு மேற்பட்டவர்களை பணய கைதிகளாக கொண்டு சென்றதையும் எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது.

    ஆனால், இஸ்ரேலின் பதில் தாக்குதலினால் பல லட்சம் பொதுமக்கள் காசாவில் இருந்து குடிபெயர்ந்துள்ளனர். 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். பல மருத்துவமனைகள் செயல்பட முடியாத நிலைக்கு வந்து விட்டன. சுத்தமான குடிநீர், உணவு, மின்சாரம், எரிபொருள் உள்ளிட்ட தேவைகள் முற்றிலும் தடை செய்யப்பட்டு விட்டது. குடும்பங்கள் தாங்கள் வாழ்ந்த வீடுகளுக்கு கீழேயே புதைக்கப்படுகின்றன. இஸ்ரேலின் இந்த செயலையும் நியாயப்படுத்த முடியாது.

    இனி வெறும் பேச்சு வார்த்தைகளோ, தீர்மானங்கள் போடுவதோ போதாது. காசா மக்களுக்கு எந்த தடையும் இல்லாமல் மனிதாபிமான உதவிகள் கிடைக்க வேண்டும். ஹமாஸ் அமைப்பினர் தங்கள் வசம் உள்ள பணய கைதிகளை விடுவிக்க வேண்டும்; இஸ்ரேலும் பொதுமக்களுக்கு உதவிகள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.

    சர்வதேச மனிதாபிமான சட்டங்களின் அடிப்படையில் இரு தரப்புமே தங்கள் கடமைகளை செய்ய வேண்டும். மருத்துவமனைகள் செயல்பட முடியாமல் இருப்பது கண்டனத்துக்குரியது. இந்த போர் விரைவில் முடிவுக்கு வர வேண்டும்.

    ஐ.நா. அமைப்பு உலக அமைதிக்காக உருவாக்கப்பட்டது. ஆனால், இந்த போர் ஐக்கிய நாடுகளின் சபை மற்றும் அதன் உறுப்பினர் நாடுகளுக்கு விடப்பட்டிருக்கும் ஒரு பெரும் சவாலாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.


    • தலைமையகம் அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ஐ.நா. சபை தலைமையகத்தில் உள்ளது
    • ஐ.நா. பொதுசபையின் 10-வது அவசர கூட்டம் அக்டோபர் 26 அன்று நடைபெறும்

    உலகின் 193 நாடுகளை உள்ளடக்கிய ஐக்கிய நாடுகள் கூட்டமைப்பின் (UNO), 6 முக்கிய உறுப்பு அமைப்புகளில் முக்கியமானது, ஐக்கிய நாடுகள் பொதுச்சபை (UNGA). பொதுசபை, 1945ல் ஐ.நா. கூட்டமைப்பின் கொள்கை முடிவுகளை வகுக்கவும், உலக நாடுகளுக்கிடையே சச்சரவு எழும் போது ஐ.நா. சபையின் பிரதிநிதியாக செயல்பட்டு முக்கிய முடிவுகளை எடுக்கவும் உருவாக்கப்பட்டது.

    இதன் தலைமையகம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. சபை தலைமையகத்தில் உள்ளது. ஒவ்வொரு வருடமும் இதன் உறுப்பினர் நாடுகளின் வருடாந்திர சந்திப்பு நடைபெறும்.

    உலக நாடுகளுக்கிடையே ஏற்படும் சிக்கல்களால் நெருக்கடி நிலை தோன்றும் போது, அவசியம் ஏற்பட்டால் அவசர சந்திப்புகளுக்கு தன் உறுப்பினர் நாடுகளுக்கு அழைப்பு விடுத்து பொதுசபை கூடுவதுண்டு.

    கடந்த அக்டோபர் 7-லிருந்து பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் போர் தொடுத்து அவர்கள் பாலஸ்தீன காசா பகுதியில் ஒளிந்திருக்கும் இடங்களில் தாக்குதல் நடத்தி வருகிறது.

    இந்நிலையில், ஐக்கிய நாடுகள் பொதுசபையின் 10-வது அவசர சந்திப்பு அக்டோபர் 26 அன்று நடைபெறும் என அதன் தலைவர் டென்னிஸ் பிரான்சிஸ் (Dennis Francis) அறிவித்துள்ளார்.

    "உறுப்பினர் நாடுகள் அவசர சந்திப்பிற்கு ஐ.நா. பொதுசபைக்கு கோரிக்கை வைத்தன. இக்கோரிக்கையை ஏற்று 10-வது அவசர கூட்டம் வரும் 26 அன்று நடத்தப்படும்" என தனது அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கில் டென்னிஸ் பதிவிட்டுள்ளார்.

    கடந்த 2022 பிப்ரவரி மாதம் தனது அண்டை நாடான உக்ரைனை ரஷியா ஆக்ரமித்ததையடுத்து அவசர கூட்டம் நடைபெற்றது.

    உலக சூழலுக்கு ஏற்ப 24 மணி நேரத்திலேயே அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுக்க ஐ.நா. பொதுசபைக்கு அதிகாரம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



    ஐநாபாதுகாப்பு கவுன்சிலின் தலைமை பொறுப்பை இந்தியா சார்பில் ருச்சிரா கம்போஜ் ஏற்று இந்த மாத நிகழ்ச்சிகளை நடத்த உள்ளார்.

    வாஷிங்டன்:

    ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தலைமை பொறுப்பை உறுப்பு நாடுகள் சுழற்சி முறையில் வகித்து வருகின்றன. அவ்வகையில் டிசம்பர் மாதங்ததிற்கான தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது.

    பாதுகாப்பு கவுன்சிலின் தலைமை பொறுப்பை இந்தியா சார்பில் ஐ.நா. சபைக்கான நிரந்தர இந்திய பிரதிநிதி ருச்சிரா கம்போஜ் ஏற்று இந்த மாத நிகழ்ச்சிகளை நடத்த உள்ளார். இதையொட்டி அவர் ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரசை சந்தித்து பேசினார்.

    பின்னர் அவர் ஐ.நா. தலைமையகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது இந்தியாவின் பத்திரிகை சுதந்திரம் மற்றும் ஜனநாயகம் குறித்து நிருபர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்து கூறியதாவது:-

    உலகில் மிக பழமையான நாகரீகம் இந்தியா என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். 2,500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்தியாவின் ஜனநாயகத்தின் வேர்கள் இருந்தன. நாங்கள் எப்போதுமே ஜனநாயக நாடாகவே உள்ளோம்.

    ஜனநாயகத்தின் அனைத்து தூண்களும் எங்களிடம் வலுவாக உள்ளது. நீதித்துறை, பத்திரிகைத்துறை, துடிப்பான சமூக ஊடகம் என உலகின் சிறந்த ஜனநாயக நாடாக இந்தியா திகழ்ந்து வருகிறது.

    5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நாங்கள் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவை நடத்தி வருகிறோம். எங்கள் நாட்டில் யார் வேண்டுமானாலும் அவர்கள் மனதில் இருப்பதை சொல்லும் உரிமை இருக்கிறது. நாங்கள் தொடர்ச்சியாக ஏற்றங்களை, மாற்றங்களை கண்டு வருகிறோம். எங்கள் முன்னேற்றம் மிக சிறப்பாக உள்ளது. எனவே ஜனநாயகத்தை பற்றி எங்களுக்கு யாரும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தலைவர் பொறுப்பை இந்தியா அடுத்த மாதம் ஏற்க உள்ளது.
    • இதையடுத்து, ஐ.நா. தலைமையகத்தில் மகாத்மா காந்தியின் சிலை திறக்கப்படுகிறது.

    நியூயார்க்:

    ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தலைவர் பொறுப்பை இந்தியா டிசம்பர் மாதம் ஏற்கிறது. இதையொட்டி மகாத்மா காந்தியின் மார்பளவு சிலை ஒன்றை ஐ.நா.வுக்கு இந்தியா பரிசளித்துள்ளது.

    இந்த சிலை ஐ.நா. தலைமையகத்தின் வடபகுதியில் உள்ள புல்வெளியில் நிறுவப்படுகிறது. அடுத்த மாதம் 14-ம் தேதி மத்திய வெளியுறவு மந்திரி ஐ.நா. செல்கிறார். அப்போது இந்த சிலை திறக்கப்படுகிறது. இந்த சிலை திறப்பு விழாவில் ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் மற்றும் பாதுகாப்பு கவுன்சிலின் 15 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த மகாத்மா காந்தி சிலையை புகழ்பெற்ற சிற்பியும், பத்மஸ்ரீ விருது பெற்றவருமான ராம் சுதர் வடிவமைத்துள்ளார். இதன்மூலம் ஐ.நா. தலைமையகத்தில் முதல் முறையாக மகாத்மா காந்தி சிலை இடம்பெறுகிறது.

    முன்னதாக, கடந்த 1982-ம் ஆண்டு சூரிய கடவுளின் சிலை ஒன்றை இந்தியா ஐ.நா.வுக்கு பரிசளித்து இருந்தது. இந்த தகவல்களை ஐ.நா.வுக்கான இந்தியாவின் பிரதிநிதி ருச்சிரா கம்போஜ் தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர்களாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்திற்கு வரலாற்று ரீதியாக தொடர்ந்து பின்னால் நிற்கிறோம்.
    • இந்தியா நிரந்தர உறுப்பினராக அமரவில்லை என்றால் எங்களுக்கு மட்டும் அல்ல, சர்வதேச அமைப்புகளுக்கும் அது நல்லதல்ல.

    உலக தலைவர்கள் பங்கேற்ற ஐ.நா.சபை கூட்டத்தில் அமெரிக்க அதிபர் ஜோபைடன் பேசினார். அப்போது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை சீர்திருத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

    பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர மற்றும் நிரந்தரமற்ற பிரதிநிதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு அமெரிக்கா ஆதரவு அளிக்கிறது. நாங்கள் நீண்ட காலமாக ஆதரித்து வரும் நாடுகளுக்காக நிரந்தர இடங்களும் இதில் அடங்கும் என்றார்.

    இந்தநிலையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவை நிரந்தர உறுப்பினராக்க அமெரிக்கா ஆதரவு அளித்துள்ளது. இது தொடர்பாக வெள்ளை மாளிகையில் மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, சீர்திருத்தப்பட்ட ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர்களாக இந்தியா, ஜெர்மனி, ஜப்பான் ஆகிய நாடுகளை கொண்டு வர அதிபர் ஜோபைடன் ஆதரிக்கிறார்.

    இந்த 3 நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர்களாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்திற்கு வரலாற்று ரீதியாக தொடர்ந்து பின்னால் நிற்கிறோம் என்றார்.

    அமெரிக்கா சென்றுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசும்போது, இந்தியா இன்னும் சில ஆண்டுகளில் உலகின் 3-வது பெரிய பொருளாதாரமாக மாறும்.

    எனவே ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக அமரவில்லை என்றால் எங்களுக்கு மட்டும் அல்ல, சர்வதேச அமைப்புகளுக்கும் அது நல்லதல்ல என்றார்.

    ×