என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இருதய தினம்"

    • உலக இருதய தினத்தை முன்னிட்டு மணப்பாறையில் நடந்த மாரத்தான் போட்டியில் மழலையர் முதல் முதியோர்கள் வரை கலந்து கொண்டனர்
    • 21 கிலோ மீட்டர் ஆண்கள் பிரிவில் ஊட்டியைச் சேர்ந்த நிகில் குமார் என்பவர் முதலிடம் பிடித்தார். இதே போல் 10 கிலோ மீட்டர் பெண்கள் பிரிவில் மனப்பாறையை சேர்ந்த யுவா முதலிடம் பிடித்தார்

    திருச்சி:

    இயங்க மறுக்கம் இதயத்திற்கு உற்சாகம் தருவதே ஓட்டமும், நடைபயிற்சியும் தான். மனித உடலை சீராக வைத்து கொள்வதற்கு உடற்பயிற்சி நல்துணையாக இருக்கும் என்று அனைவரும் கூறி வரும் நிலையில் மழலைகள் முதல் முதியவர்கள் வரை கலந்து கொண்டு ஓடி அசத்திய மராத்தான் போட்டி அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.

    திருச்சி மாவட்டம், மணப்பாறையில் உலக இருதய தினத்தை முன்னிட்டு சிந்துஜா மருத்துவ மனை மற்றும் தியாகேசர் ஆலை முன்னாள் மாணவர்கள் சார்பில் "மணவை மராத்தான்" என்ற தலைப்பில் மராத்தான் போட்டி பள்ளியின் தலைமை ஆசிரியர் அருளரசன், செயலாளர் அசோக்குமார், ஆலை பொது மேலாளர் சதீஸ் குமார் தலைமையில் இன்று நடைபெற்றது.

    ஆண்களுக்கு 21 கிலோ மீட்டரும், பெண்களுக்கு 10 கிலோ மீட்டரும் ஆண், பெண் இருபாலருக்கும் தனித்தனியே 5, 3 கிலோ மீட்டர் ஓட்டமும் நடைபெற்றது. டாக்டர் கலையரசன் மற்றும் திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் போட்டியை தொடங்கி வைத்தனர்.

    21 கிலோ மீட்டர் ஆண்கள் பிரிவில் ஊட்டியைச் சேர்ந்த நிகில் குமார் என்பவர் முதலிடம் பிடித்தார். இதே போல் 10 கிலோ மீட்டர் பெண்கள் பிரிவில் மனப்பாறையை சேர்ந்த யுவா முதலிடம் பிடித்தார்.

    5 கிலோ மீட்டர் ஆண்கள் பிரிவில் பொள்ளாச்சியை சேர்ந்த கனிராஜா என்பவரும், பெண்கள் பிரிவில் மணப்பாறை ஏ.பி.ஜே. விளையாட்டு அகாடமியை சேர்ந்த கனிஷா என்பவரும், 3 கிலோ மீட்டர் ஆண்கள் பிரிவில் நத்தம் பகுதியை சேர்ந்த ராம்பிரதி,

    பெண்கள் பிரிவில் மணப்பாறை ஏ.பி.ஜே. விளையாட்டு அகாடமியை சேர்ந்த சாதனா பாரதி ஆகியோர் முதலிடம் பிடித்து வெற்றி பெற்றனர். ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

    ஒவ்வொரு பிரிவாக நடைபெற்ற போட்டியில் மழலைகளுக்கு 500 மீட்டர் ஓட்டம் நடைபெற்றது. இதில் குழந்தைகள் கலந்து கொண்டு போட்டி போட்டு ஓடியது அனைவரின் கவனங்களையும் வெகுவாக ஈர்த்தது.

    இந்த மராத்தான் போட்டியை தொடங்கி வைத்த போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் தங்கள் குழுவினருடன் 21 கிலோமீட்டர் முழுமையாக ஓடி ஓட்டத்தை நிறைவு செய்தார். தொழிலதிபர் காந்திராஜன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

    இந்த மராத்தான் போட்டியில் சுமார் நான்காயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஓடிய போது வழிநொடுகிளும் கிராம மக்கள் சாலை ஓரங்களில் நின்று அனைவரையும் கைத்தட்டி உற்சாகமூட்டினார்.

    பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஆணழகன்கள் மேடையில் அனைவகுத்து நின்று தங்களின் கட்டலகை காண்பித்தனர். மழலைகள் முதல் முதியவர்கள் வரை கலந்து கொண்ட பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற மராத்தான் போட்டி மக்களின் கவனங்களை வெகுவாக இருப்பதுடன் பாராட்டையும் பெற்றது.

    • உலக இருதய தினத்தையொட்டி மதுரையில் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
    • டாக்டர்கள் கணேசன், சிவக்குமார், செல்வமணி, ஜெயபாண்டியன், சம்பத்குமார், குமார், கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மதுரை

    உலக இருதய தினம் வருகிற 29-ந்தேதி அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி மதுரையில் இன்று விழிப்புணர்வு பேரணி மூன்று மாவடியில் இன்று காலை நடந்தது. இதில் டாக்டர்கள், நர்சுகள், செவிலியர்கள் உட்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    பேரணியில் பங்கேற்ற வர்கள் ஆரோக்கிய உணவு முறை, நடைப்பயிற்சி, உடற்பயிற்சியை ஊக்குவிப்பதை வலியுறுத்தும் வகையில் பதாகைகளை ஏந்தியபடி சென்றனர். மூன்று மாவடியில் தொடங்கிய பேரணி 120 அடி ரோடு வழியாக மேலூர் மெயின் ரோட்டை அடைந்தது.

    முன்னதாக மீனாட்சி மிஷன் மருத்துவமனை டாக்டர் கண்ணன் பேசுகையில், ரத்த தமனியில் சேரும் கொழுப்பு காரணமாக ரத்த ஓட்டம் குறைந்து மாரடைப்பு ஏற்படுகிறது. உலக அளவில் ஆண்டுதோறும் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மாரடைப்பால் இறக்கின்ற னர்.

    உடலுழைப்பு, உடற்பயிற்சி இல்லாத சோம்பேறித்தனமான வாழ்க்கை முறை மற்றும் தவறான உணவு பழக்கவழக்கம் ஆகியவையே இருதயநோய் அதிகரிப்புக்கு காரணம் ஆகும்.

    மாரடைப்பு வராமல் தடுப்பது மற்றும் உரிய நேரத்திற்குள் சிகிச்சை பெறுவது ஆகியவை மிகவும் முக்கியமாகும் என்றார்.

    இதில் டாக்டர்கள் கணேசன், சிவக்குமார், செல்வமணி, ஜெயபாண்டியன், சம்பத்குமார், குமார், கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×