என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிணமாக கிடந்த தொழிலாளி"

    • கல்குவாரியில் அழுகிய நிலையில் தங்கராஜ் பிணமாக கிடந்தார்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அடுத்த ஓடாநிலை வாழை தோட்ட வலசு பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ் (40). இவரது மனைவி பேபி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    தங்கராஜ் லேத் பட்டறையில் வேலை பார்த்து வந்தார். அவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. குடியை நிறுத்த முடியாததால் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சித்தோட்டில் உள்ள ஒரு மறுவாழ்வு மையத்திற்கு சென்று சிகிச்சை பெற்று அதன் பின்னர் வீடு திரும்பியுள்ளார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று காலையில் மோட்டார் சைக்கிளில் முத்தூரில் லேத் பட்டறைக்கு வேலைக்கு சென்று வருவதாக கூறி தங்கராஜ் சென்றுள்ளார்.

    அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடியும் எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை.

    இந்நிலையில் கொல்லன் வலசு பகுதியில் உள்ள ஒரு கல்குவாரியில் கழிவு கற்கள் கொட்டப்படும் இடத்தில் அழுகிய நிலையில் தங்கராஜ் பிணமாக கிடந்தார்.

    இது குறித்து அரச்சலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அளவுக்கு அதிகமாக மது அருந்தி இறந்து இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 2 மாதத்துக்கு முன்பு வீட்டைவிட்டு வெளியேறிய நிலையில், வீடு திரும்பவில்லை.
    • கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனா்.

    ஊட்டி

    ஊட்டி அருகே உள்ள முத்தொரை பாலடா பகுதியை சோ்ந்தவா் காளியப்பன்(33). கூலி தொழிலாளி. இவா் கடந்த 2 மாதத்துக்கு முன்பு வீட்டைவிட்டு வெளியேறிய நிலையில், வீடு திரும்பவில்லை.இது குறித்து ஊட்டி ஊரக காவல் நிலையத்தில் அவரது உறவினா்கள் புகாா் அளித்திருந்தனா்.

    இந்நிலையில், முத்தொரை பாலடா பகுதியில் உள்ள கிணற்றில் ஆண் சடலம் மிதப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்குச் சென்ற போலீசாா், தீயணைப்புத் துறையினா் கிணற்றில் கிடந்த சடலத்தை மீட்டனா். விசாரணையில், அவா் 2 மாதத்துக்கு முன் மாயமான காளியப்பன் என்பது தெரியவந்தது.

    இதைத் தொடா்ந்து, சடலத்தை பிரேத பரிசோதனைக்காக உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பிவைத்தனா்.

    மேலும், அவா் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனா்.

    ×