என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
நீங்கள் தேடியது "பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்"
- நடிகர் வடிவேலுவை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் சந்தித்து பேசியுள்ளார்.
- இது தொடர்பான புகைப்படங்களை அமைச்சர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மாரிசெல்வராஜ் இயக்கத்தில் வெளியான 'மாமன்னன்' படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் வடிவேலு தொடர்ச்சியாகபல்வேறு படங்களில் தற்போது நடித்து வருகிறார்.
இந்நிலையில், நடிகர் வடிவேலுவை விமான நிலையத்தில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் சந்தித்து பேசியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், "தன்னிகரற்ற நகைச்சுவை திரைக்கலைஞர், இன்றளவும் மீம்(Meme) உலகின் முடி சூடா மன்னனாக விளங்கும் எங்கள் மதுரை மண்ணின் மைந்தன் வைகைப்புயல் வடிவேலு அவர்களை விமான நிலையத்தில் சந்தித்து உரையாடியதில் நானும் அவரது ரசிகன் என்ற முறையில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன்" என்று பதிவிட்டுள்ளார்.
தன்னிகரற்ற நகைச்சுவை திரைக்கலைஞர், இன்றளவும் மீம்(Meme) உலகின் முடி சூடா மன்னனாக விளங்கும் எங்கள் மதுரை மண்ணின் மைந்தன் வைகைப்புயல் வடிவேலு அவர்களை விமான நிலையத்தில் சந்தித்து உரையாடியதில் நானும் அவரது ரசிகன் என்ற முறையில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். pic.twitter.com/6pNlquAeNl
— Dr P Thiaga Rajan (PTR) (@ptrmadurai) February 6, 2025
- ஆதரவற்றோர்-நலிந்தோருக்கு உதவி செய்யவே அரசியலுக்கு வந்தேன் என்று அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பேசினார்.
- எனக்கு இந்த வாய்ப்பு அளித்த மக்களுக்கு என்றும் செய்நன்றி மறவாதவனாக இருப்பேன்.
மதுரை
மதுரை கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் நிதி மற்றும் மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
அரசியலுக்கு பலர் பல்வேறு காரண ங்களுக்காக வந்திருக்கலாம். ஆனால் நான் வெளிநாட்டில் ஒரு பெரிய நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தேன். பின்பு அந்த வேலை வேண்டாம் என்று எண்ணி அரசியலுக்கு வந்தேன். இதற்கு ஒரே காரணம் ஆதரவற்றோர்,நலிந்தோர், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிட வேண்டும் என்பதே ஆகும்.
நான் அமைச்சரான பின்பு தொகுதியில் இது போன்ற பல நிகழ்ச்சிகளை நடத்தி பலருக்கு உபகர ணங்களை வழங்கி இருக்கிறேன். தற்போது மாவட்டம் முழுவதும் ஒன்றிய அரசின் அலோன் கோ நிறுவனத்தின் உதவியுடன் இணைந்து தமிழக அரசு இதுபோன்று முகாம்களை நடத்துவதை எங்களுக்கு செய்கின்ற உதவியாக கருதுகிறேன்.
இதுவரை எனக்கு வந்த தகவலின் படி 800 பேர் பதிவு செய்து அதில் 200 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 600 பேருக்கு விரைவில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும்.
நான் எந்த பொறுப்புக்கு போனாலும் இந்த தொகுதி மக்களை மறக்க மாட்டேன். என்னை முதன் முதலில் இதே இடத்தில் வாக்காளர்கள் வாக்களித்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்தீர்கள். தற்போது மீண்டும் என்னை தேர்ந்தெடுத்து தமிழக முதல்வரின் ஆசியினால் தற்போது அமைச்சராக பணியாற்றி வருகிறேன்.
எனக்கு இந்த வாய்ப்பு அளித்த மக்களுக்கு என்றும் செய்நன்றி மறவாதவனாக இருப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.