என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஜெபம்"
- கடையம் அருகே உள்ள மேட்டூர் சேகர ஸ்தோத்திர பண்டிகை மேட்டூர் பரி திரித்துவ ஆலயத்தில் கடந்த 8-ந்தேதி மாலை பவனி மற்றும் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- அருணோதய பிரார்த்தனையை நல் ஆலோசனை திருப்பணி இயக்குனர் ஆமோஸ் நடத்தி வைத்தார்.
கடையம்:
கடையம் அருகே உள்ள மேட்டூர் சேகர ஸ்தோத்திர பண்டிகை மேட்டூர் பரி திரித்துவ ஆலயத்தில் கடந்த 8-ந்தேதி மாலை பவனி மற்றும் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இரவு ஆயத்த ஆராதனையை மஞ்சு விளை சேகரத் தலைவர் ஜேசன் தர்மராஜ் நடத்தி வைத்தார்.
நேற்று காலை அருணோதய பிரார்த்தனையை நல் ஆலோசனை திருப்பணி இயக்குனர் ஆமோஸ் நடத்தி வைத்தார். பின்னர் ஞானஸ்நான ஆராதனையை பாவூர்சத்திரம் மேற்கு சேகரதலைவர் வரதராஜ் நடத்தினார். பின்னர் நடைபெற்ற பண்டிகை ஆராதனையில் சி.எஸ்.ஐ. நெல்லை திருமண்டல பேராயர் ஏ.ஆர்.ஜி.எஸ்.டி.பர்ணபாஸ் கலந்து கொண்டு சிறப்பு செய்தி அளித்தார்.
நிகழ்ச்சியில் மேட்டூர் சேகரத்தலைவர் கிங்ஸ்லி ஜான் ஸ்டீபன், கவுரவ குரு லதா கிங்ஸ்லி, மேட்டூர் சேகர குரு ஜோயல் ஸாம் மெர்வின் பேராயர் உதவி குரு பொன்ராஜ், சேகரத் தலைவர்கள் கடையம் கேமில்டன், வி.கே.புரம் கிறிஸ்டோபர், ஸ்டாலின், புலவனூர் நிக்சன், மஞ்சு விளை ஜேசன் தர்மராஜ், மேல மெஞ்ஞானபுரம் ராஜ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை சேகர கமிட்டியினர், மேட்டூர், ஆவுடையானூர் வன்னிய நாடார்பட்டி சபை மக்கள் செய்திருந்தனர்.
- மணிப்பூர் மாநிலத்தில் அமைதி திரும்ப வேண்டி அகில இந்திய கிறிஸ்தவ சபைகளின் கூட்டமைப்பினர் ஜெப நடைபயணம் மேற்கொண்டனர்.
- தஞ்சை மாவட்டத்தில் மிஷனரிகளுக்கு மணி மண்டபம் அமைக்க வேண்டும் என்றார்.
தஞ்சாவூர்:
மணிப்பூர் மாநிலத்தில் தொடர்ந்து கலவரங்கள் நீடித்து வருகிறது.
இதனால் அம்மாநில பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் இன்று தஞ்சை மிஷனரி தெருவில் அகில இந்திய கிறிஸ்தவ சபைகளின் கூட்டமைப்பு சார்பில் மணிப்பூர் மாநிலத்தில் அமைதி திரும்ப வேண்டி ஜெப நடை பயணம் நடந்தது.
இதற்கு கூட்டமைப்பின் சேர்மன் பிஷப் மோகன்தாஸ் தலைமை தாங்கினார்.
அப்போது அவர் கூறும் போது :-
மணிப்பூர் மாநிலத்தில் அமைதியும், சமாதானமும் ஏற்பட வேண்டும். இயல்பு நிலை திரும்ப வேண்டும். இதனை வலியுறுத்தி அனைத்து கிறிஸ்தவ கூட்ட மைப்பு சார்பில் ஜெப நடை பயணம் மேற்கொண்டோம்.
மேலும் தஞ்சை மாவட்ட த்தில் கிறிஸ்துவ பணி மேற்கொண்ட மிஷனரிகளுக்கு மணி மண்டபம் அமைக்க வேண்டும் என்றார்.
இந்த ஜெப நடை பயணத்தில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு மணிப்பூர் மாநிலத்தில் அமைதி திரும்ப வேண்டி பதாகைகளை ஏந்தியப்படி பேரணியாக சென்றனர் .
- புனித அந்தோணியார் சொரூபங்களை தாங்கிய தேரும் இறுதியாக வியாகுல அன்னை தேரும் பவனியாக சென்றது.
- மக்கள் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி ஜெபித்து கொண்டும், பாடிக்கொண்டும் வந்தனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை பூக்காரத் தெருவில் அமைந்துள்ள புனித வியாகுல அன்னை ஆலயத்தில் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் ஆண்டு திருவிழா நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டு கடந்த 15-ந் தேதி வியாகுல அன்னையின் திருக்கொடி ஏற்றி வைக்கப்பட்டு நவநாள் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான வியாகுல அன்னையின் தேர்பவனி நேற்றிரவு நடைபெற்றது. முன்னதாக குடந்தை மறை மாவட்டத்தை சேர்ந்த அந்துவான் அடிகளார் தலைமையில் கூட்டுப் பாடல் திருப்பலி நடைபெற்றது. இதில் பேராலய பங்குத்தந்தை பிரபாகர் அடிகளார், உதவி பங்கு தந்தை பிரவீன் அடிகளார் உள்பட குருக்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதையடுத்து தேர் பவனி நடைபெற்றது. முதலில் மிக்கேல் சம்மனசு தேரும், அதனைத் தொடர்ந்து புனித சவேரியார், புனித சூசையப்பர், புனித அந்தோணியார் சுரூபங்களை தாங்கிய தேரும் இறுதியாக வியாகுல அன்னை தேரும் பவனியாக சென்றது. இதில் ஏராளமான இறை மக்கள் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி ஜெபித்துக் கொண்டும், பாடிக்கொண்டும் வந்தனர். முடிவில் பேராலய மக்கள் மன்றத்தில் அன்பு விருந்து வழங்கப்பட்டது.
வியாகுல அன்னை திருவிழாவின் நிறைவு நாளான இன்று வியாகுல அன்னை ஆலயத்தில் குடந்தை ஆயர் அந்தோணிசாமி தலைமையில் கூட்டுப் பாடல் திருப்பலி நடைபெற்றது. இதில் மறை மாவட்ட வேந்தர் ஜான் சக்கரியாஸ் கலந்து கொண்டார். முடிவில் பேராலய பங்குத்தந்தை பிரபாகர் அன்னையின் திருக்கொடியை இறக்கி வைத்தார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பங்கு பேரவை துணைத் தலைவர் வின்சண்ட், செயலர் குழந்தைராஜ், அன்பிய பொறுப்பாளர்கள், இளைஞர் மன்றத்தினர், பக்த சபைகள் செய்திருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்