search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இங்கிலாந்து பாகிஸ்தான் தொடர்"

    • இங்கிலாந்து- பாகிஸ்தான் அணிகள் மோதிய 2 ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.
    • 4 போட்டிகள் கொண்ட தொடரை இங்கிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    ஓவல்:

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது.

    இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டியும், 3-வது டி20 போட்டியும் மழையால் ரத்து செய்யப்பட்டது. 2-வது போட்டியில் இங்கிலாந்து அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 4-வது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று ஓவலில் நடந்தது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 19.5 ஓவரில் 157 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து சார்பில் மார்க் வுட், அடில் ரஷீத், லிவிங்ஸ்டோன் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 15.3 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 158 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் இங்கிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் டி20 தொடரை கைப்பற்றி அசத்தியது.

    இந்நிலையில் 4-வது டி20 போட்டியில் பாகிஸ்தான் விக்கெட் கீப்பரான அசாம் கான் மீது அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஸ் ராஃப் கோபத்தை வெளிப்படுத்தினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    இந்த போட்டியில் 9-வது ஓவரை ஹரிஸ் ராஃப் வீசினார். இதனை இங்கிலாந்து அணியின் அதிரடி ஆட்டக்காரர் வில் ஜக்ஸ் எதிர் கொண்டு ஆடினார். முதல் 2 பந்துகளில் ரன் ஏதும் எடுக்காமல் திணறினார். 3-வது பந்தை அதிரடியாக விளையாடினார். ஆனால் பந்து பேட்டில் பட்டு கீப்பரிடம் சென்றது. இதனால் ஹரிஸ் ராஃப் விக்கெட் என கொண்டாடினார். ஆனால் விக்கெட் கீப்பராக நின்ற அசாம் கான் அந்த எளிதான கேட்ச்சை தவற விட்டார். இதனை சற்று எதிர்பார்காத ஹரிஸ் கோபத்தில் கத்தினார்.

    இதற்கு ரசிகர்கள் அசாம் கானை ஏன் அணியில் வைத்துள்ளீர்கள் என சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர். இங்கிலாந்துக்கு எதிராக விளையாடி 2 போட்டியிலும் அசாம் கான் பெரிய அளவில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 157 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • அடுத்து ஆடிய இங்கிலாந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வென்றது.

    ஓவல்:

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது.

    இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டியும், 3-வது டி20 போட்டியும் மழையால் ரத்து செய்யப்பட்டது. 2-வது போட்டியில் இங்கிலாந்து அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 4-வது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று ஓவலில் நடந்தது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 19.5 ஓவரில் 157 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. உஸ்மான் கான் 38 ரன், பாபர் அசாம் 36 ரன், முகமது ரிஸ்வான் 23 ரன்கள் எடுத்தனர்.

    இங்கிலாந்து சார்பில் மார்க் வுட், அடில் ரஷீத், லிவிங்ஸ்டோன் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது. தொடக்க வீரர்களான பில் சால்ட், ஜாஸ் பட்லர் அதிரடியாக விளையாடினர்.

    பிலிப் சால்ட் 24 பந்தில் 45 ரன்னும், ஜாஸ் பட்லர் 21 பந்தில் 39 ரன்னும் எடுத்து அவுட்டாகினர். வில் ஜாக்ஸ் 20 ரன்னில் அவுட்டானார்.

    இறுதியில், 15.3 ஓவரில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுக்கு 158 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் இங்கிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் டி20 தொடரை கைப்பற்றி அசத்தியது.

    ஆட்ட நாயகன் விருது அடில் ரஷீத்துக்கும், தொடர் நாயகன் விருது ஜாஸ் பட்லருக்கும் வழங்கப்பட்டது.

    • இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் பாபர் அசாம் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
    • இதன் மூலம் ரோகித் சர்மாவின் சாதனையை பாபர் அசாம் முறியடித்துள்ளார்.

    இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி, 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் போட்டியானது மழையால் கைவிடப்பட்ட நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி நேற்று நடைபெற்றது.

    இதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்களைச் சேர்த்தது. அதிகபட்சமாக கேப்டன் ஜோஸ் பட்லர் 84 ரன்கள் குவித்தார். பாகிஸ்தான் தரப்பில் ஷாஹின் அஃப்ரிடி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    இதனையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் கேப்டன் பாபர் அசாம், ஃபகர் ஸ்மான் இணை அதிரடியாக விளையாடிய போதிலும் மற்ற வீரர்கள் சோபிக்க தவறியதால் 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 160 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இங்கிலாந்து அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது. இங்கிலாந்து அணி தரப்பில் ரீஸ் டாப்லி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    இந்நிலையில் இப்போட்டியில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் 32 ரன்களை எடுத்ததன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மாவின் சாதனையை முறியடித்து புதிய சாதனையை படைத்துள்ளார்.

    அதன்படி சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா 3974 ரன்களைச் சேர்த்து அதிக ரன்களை அடித்த வீரர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருந்த நிலையில், இப்போட்டியில் அதனை முறியடித்து பாபர் அசாம் இரண்டாம் இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார்.

    சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்களை அடித்த வீரர்கள் பட்டியலில் இந்திய வீரர் விராட் கோலி 4037 ரன்களுடன் முதலிடத்திலும், பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் 3987 ரன்களைச் சேர்த்து இரண்டாம் இடத்திலு, இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா 3974 ரன்களைச் சேர்த்து மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.

    அவர்களுக்கு அடுத்த இடத்தில் அயர்லாந்தின் பால் ஸ்டிர்லிங் நான்காம் இடத்தையும், நியூசிலாந்தின் மார்ட்டின் கப்தில் 5-ம் இடத்தையும் பிடித்துள்ளனர்.

    • முதலில் ஆடிய பாகிஸ்தான் 169 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய இங்கிலாந்து 170 ரன்களை எடுத்து வென்றது.

    லாகூர்:

    பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து வரும் இங்கிலாந்து அணி 7 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் இதுவரை 5 போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. இதில் பாகிஸ்தான் 3-2 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.

    இந்நிலையில், இவ்விரு அணிகள் இடையிலான 6வது டி-20 போட்டி லாகூரில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 169 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் பாபர் அசாம் 59 பந்துகளில் 87 ரன்கள் எடுத்தார்.

    இங்கிலாந்து சார்பில் வில்லி மற்றும் சாம் கர்ரன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

    170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 14.3 ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

    அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் பிலிப் சால்ட் அதிரடியாக ஆடி 41 பந்தில் 88 ரன்கள் குவித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். இதன்மூலம் இந்த தொடரில் தற்போது 3-3 என்ற கணக்கில் இரு அணிகளும் சமனிலை பெற்றுள்ளன.

    • பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் 63 ரன்கள் குவித்தார்.
    • இங்கிலாந்து கேப்டன் மொயின் அலி 51 ரன் அடித்தார்.

    லாகூர்:

    பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து வரும் இங்கிலாந்து அணி 7 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் இதுவரை 4 போட்டிகள் நடந்து முடிந்திருந்த. இதில் இரு அணிகளும் தலா 2 வெற்றிகள் பெற்றன. இந்நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 5வது டி-20 போட்டி லாகூரில் நேற்று நடைபெற்றது.

    இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. இதன்படி முதலாவதாக களமிறங்கிய பாகிஸ்தான் அணி 19 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 145 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக முகமது ரிஸ்வான் 46 பந்துகளில் 63 ரன்கள் எடுத்தார். 


    இங்கிலாந்து வீரர் மார்க் வுட் 3 விக்கெட்டுகளும், வில்லி மற்றும் சாம் குரண் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினார். இதனைத்தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி 20 ஒவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியில் டேவிட் மலான் 36 ரன்னும், கேப்டன் மொயின் அலி 51 ரன்னும் அடித்தனர்.


    பாகிஸ்தான் தரப்பில் ஹரிஸ் ரூப் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதன்மூலம் இங்கிலாந்து அணிக்கு எதிரான 5வது டி-20 போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றது. இந்த தொடரில் தற்போது 3-2 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணி முன்னிலை பெற்றுள்ளது.

    • பாகிஸ்தான் வீரர் ரிஸ்வான் 67 பந்துகளில் 88 ரன் குவித்தார்.
    • டி20 தொடரில் இரு அணிகளும் தலா 2 போட்டியில் வெற்றி பெற்றுள்ளன.

    கராச்சி:

    பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, அந்நாட்டு அணியுடன் 7 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை முடிந்த 3 போட்டிகளின் முடிவில் 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலை பெற்றது.

    இந்நிலையில் 4வது டி20 ஆட்டம் கராச்சி நகரில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஒவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ரிஸ்வான் 67 பந்துகளில் 88 ரன்களும், பாபர் அசாம் 28 பந்துகளில் 36 ரன்னும் எடுத்தனர். ஷான் மசூத் 21 ரன் அடித்தார்.

    இதனைத்தொடர்ந்து 167 ரன்கள் என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களம் இறங்கியது. அந்த அணி வீரர் பென் டுக்கெட் 33 ரன்னும், ஹாரி புரூக் 34 ரன்னும் அடித்தனர். கேப்டன் மொயின் அலி 29 ரன்களில் ஆட்டமிழந்தார். டேவ்சன் 34 ரன் அடித்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னுக்கு ஆட்டமிந்தனர்.

    19.2 ஒவர் முடிவில் இங்கிலாந்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 163 ரன் எடுத்தது. இதனால் பாகிஸ்தான் அணி 3 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக முகமது நவாஸ் மற்றும் ஹரிஸ் ரூப் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும், ஹஸ் நைன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இந்த தொடரில் தற்போது 2-2 என்ற வெற்றிக் கணக்கில் பாகிஸ்தான், இங்கிலாந்து அணிகள் சமநிலையில் உள்ளன.

    ×