என் மலர்
நீங்கள் தேடியது "உற்பத்தி பாதிப்பு"
- தொடர் மழையால் தென்னந்தோப்புகளில் நீர் தேங்கியுள்ளதால் தேங்காய் பறிப்பு பணிகளும் பாதித்துள்ளன.
- வரத்து குறைவு காரணமாக தேங்காய் மற்றும் கொப்பரை விலை சற்று உயர்ந்துள்ளது.
குடிமங்கலம் :
உடுமலை பகுதிகளில் 1.25 லட்சம் ஏக்கர் பரப்பளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. உற்பத்தியாகும் தேங்காய் நேரடி விற்பனைக்கும் தேங்காய்கள் உடைந்து கொப்பரை உற்பத்தி செய்து கொப்பரையாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் வட்டாரங்களில் 300க்கும் மேற்பட்ட கொப்பரை களங்களில் நாள் ஒன்றுக்கு 100 டன் வரை உற்பத்தி செய்யப்பட்டு காங்கயத்திலுள்ள எண்ணை ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வந்தது.கடந்த ஒரு ஆண்டாக கொப்பரைக்கு உரிய விலை கிடைக்காததால் கொப்பரை உற்பத்தி குறைந்து கொப்பரை களங்கள் மூடப்பட்டு வருகின்றன.
தற்போது செயல்பட்டு வரும் குறைந்த அளவு கொப்பரை களங்களிலும் தொடர் மழை காரணமாக உற்பத்தி பெருமளவு பாதித்துள்ளது.தென்னந்தோப்புகளில் பிப்ரவரி முதல் ஆகஸ்டு வரை காய்வரத்து அதிகரிக்கும் சீசன் காலமாகும். இக்காலத்தில் ஏக்கருக்கு 1,400 தேங்காய் வரை வரத்து காணப்படும்.
தற்போது சீசன் குறைந்துள்ளதால் வரத்து பாதியாக குறைந்துள்ளது. மேலும் தொடர் மழையால் தென்னந்தோப்புகளில் நீர் தேங்கியுள்ளதால் தேங்காய் பறிப்பு பணிகளும் பாதித்துள்ளன.
தேங்காய் வரத்து குறைந்துள்ள நிலையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக கொப்பரை களங்களில் 70 சதவீதம் வரை உற்பத்தி பாதித்துள்ளது.இதனால் கொப்பரை விலை சற்று உயர்ந்துள்ளது. கடந்த மாதம் ஒரு கிலோ கொப்பரை, 78 முதல் 79 வரை விற்று வந்தது 86 முதல் 90 ரூபாய் வரை விற்று வருகிறது.
அதே போல் வரத்து குறைவு காரணமாக தேங்காய் விலையும் சற்று உயர்ந்துள்ளது. ஒரு டன் பச்சை தேங்காய் 25 ஆயிரம் ரூபாயாகவும், கருப்பு காய், டன் 26 ஆயிரம் ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. மட்டை விலை 20 காசு என்ற அளவிலேயே உள்ளது.
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:- தென்னை காய்ப்பு சீசன் இல்லாததால் தேங்காய் வரத்து பெருமளவு குறைந்துள்ளது. தொடர் மழை காரணமாக தென்னந்தோப்புகளில் தேங்காய் பறிக்க முடிவதில்லை.கொப்பரை களங்களிலும் தேங்காய்கள் உடைப்பதில்லை. களத்திலுள்ள கொப்பரைகளிலும் பூஞ்சானம் தாக்குதல் பாதிப்பு ஏற்படுகிறது.இதனால் கொப்பரை உற்பத்தி பெருமளவு குறைந்துள்ளது.
வரத்து குறைவு காரணமாக தேங்காய் மற்றும் கொப்பரை விலை சற்று உயர்ந்துள்ளது. மகசூல் குறைவு காரணமாக விவசாயிகளுக்கு பயனில்லை. அடுத்து ஜனவரி - பிப்ரவரி மாதங்களில் மீண்டும் தேங்காய் மகசூல் சீசன் துவங்கும்.எனவே மத்திய, மாநில அரசுகள் கொப்பரைக்கு ஆதார விலையை உயர்த்தி அரசு கொப்பரை கொள்முதல் மையங்களை துவக்கி கட்டுப்பாடுகள் இல்லாமல் முழுமையாக கொள்முதல் செய்ய வேண்டும்.
இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.
- பட்டு புழு வளர்ப்பு மனைகளில் 21 நாட்களில் புழு வளர்ந்து கூடு கட்டி விற்பனைக்கு தயாராகும்.
- பட்டுக்கூடுக்கு உரிய விலை கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உடுமலை:
உடுமலை சுற்றுப்பகுதிகளில் வெண் பட்டுக்கூடு உற்பத்தி தொழில் அதிக அளவு உள்ளது. மாவட்டத்தில் 2,778 ஏக்கர் பரப்பளவில் மல்பெரி செடி சாகுபடி செய்யப்பட்டு 1,221 பட்டு புழு வளர்ப்பு மனைகள் வாயிலாக மாதம் தோறும் பல டன் பட்டுக்கூடு உற்பத்தி செய்யப்படுகிறது.மத்திய, மாநில அரசுகளின் பட்டு வளர்ச்சித்துறையால் அமைக்கப்பட்டுள்ள முட்டை வித்தகங்களிலிருந்து இளம் புழு வளர்ப்பு மனைகளில் முட்டை பொரித்து 7 நாட்கள் பராமரித்து பட்டுக்கூடு உற்பத்தி மனை அமைந்துள்ள விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.பட்டு புழு வளர்ப்பு மனைகளில் 21 நாட்களில் புழு வளர்ந்து கூடு கட்டி விற்பனைக்கு தயாராகும்.
கடந்த சில மாதங்களாக பட்டுக்கூடு கிலோ 500 ரூபாய் வரை மட்டுமே விற்று வந்த நிலையில் தற்போது விவசாயிகள் உற்பத்தி செய்யும் பட்டுக்கூடுகளுக்கு நல்ல விலை கிடைத்து வருகிறது. கர்நாடக மாநிலம் ராம்நகர் மார்க்கெட்டில் கிலோ 750 முதல் 800 வரை விற்கிறது. உடுமலை மார்க்கெட்டில் 574 முதல் 650 ரூபாய் என தமிழக மார்க்கெட்களில் சராசரியாக 650 ரூபாய் வரை விற்று வருகிறது. ஆனால் விலை உயர்ந்தாலும் மகசூல் குறைவு காரணமாக விவசாயிகள் பாதித்துள்ளனர். சீதோஷ்ண நிலை மாறி பனிப்பொழிவு காணப்படுவதால் மல்பெரி செடிகளில் குருத்தடி புழு தாக்குதல் அதிகரித்துள்ளது.
மேலும் பட்டுப்புழு வளர்ப்பு மனைகளில் பெருமளவு புழுக்கள் கூடு கட்டாமலும் இறந்தும் சுண்ணாம்பு கட்டி நோய் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளால் 25 சதவீதம் வரை உற்பத்தி குறைந்துள்ளது.
இது குறித்து பட்டுக்கூடு உற்பத்தி விவசாயிகள் கூறியதாவது:-
குளிர் சீதோஷ்ண நிலை காரணமாக பட்டு புழு வளர்ப்பு மனைகளில் உற்பத்தி பெருமளவு பாதித்துள்ளது.100 முட்டை தொகுதியில் வழக்கமாக 80 முதல் 90 கிலோ வரை மகசூல் இருக்கும் மனைகளில் தற்போது 70-75 கிலோ மட்டுமே உற்பத்தியாகிறது. இதனால் விலை உயர்ந்தாலும் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.அதே போல் கர்நாடக மாநிலத்தில் கூடுதல் விலை கிடைத்து வரும் நிலையில் தமிழகத்தில் பட்டு நூல் உற்பத்தி நிறுவனங்கள் குறைவு காரணமாகவும் வியாபாரிகள் சிண்டிகேட் காரணமாகவும் போதிய விலை கிடைப்பதில்லை. எனவே பட்டுக்கூடுக்கு உரிய விலை கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பட்டுக்கூடு விவசாயிகளுக்கு உரிய தொழில் நுட்ப உதவிகள், முட்டை, இளம்புழு வளர்ப்பு மனை, பட்டுப்புழு வளர்ப்பு மனை ஆகியவற்றின் பிளீச்சிங் பவுடர் உள்ளிட்ட பட்டு புழு வளர்ப்பு தொழிலுக்கான உபகரணங்கள் மானிய விலையில் வழங்கவும், பட்டுக்கூடு அங்காடிகளுக்கு தேவையான நிதி உதவி, உற்பத்தியாளர்களுக்கு பட்டுக்கூடு கொள்முதல் மானியம் உள்ளிட்ட உதவிகளை அரசு வழங்க வேண்டும்.
இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.
- ஆண்டியூர், தும்பலபட்டி உள்ளிட்ட பகுதிகளில் கோழிக்கொண்டை சாகுபடியில் சில விவசாயிகள் தொடர்ச்சியாக ஈடுபடுகின்றனர்.
- தற்போது நிலவும் பனிப்பொழிவு காரணமாக பூக்கள் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
உடுமலை:
உடுமலை வட்டாரத்தில் கிணற்றுப்பாசனத்துக்கு காய்கறி சாகுபடி பிரதானமாகவும், கோழிக்கொண்டை, செண்டுமல்லி உள்ளிட்ட பூக்கள் சாகுபடி சீசன் அடிப்படையிலும் மேற்கொள்ளப்படுகிறது.குறிப்பாக ஆயுத பூஜை சீசனை இலக்காக வைத்து பூக்கள் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபடுகின்றனர். பின்னர் முகூர்த்த சீசனில் குறைந்த பரப்பில் சாகுபடியாகிறது.முக்கோணம், பாப்பனூத்து, புங்கமுத்தூர், ஆண்டியூர், தும்பலபட்டி உள்ளிட்ட பகுதிகளில் கோழிக்கொண்டை சாகுபடியில் சில விவசாயிகள் தொடர்ச்சியாக ஈடுபடுகின்றனர்.
தற்போது நிலவும் பனிப்பொழிவு காரணமாக பூக்கள் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தரமான பூக்கள் கிடைக்க மருந்து தெளித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் தீவிரமாக நடக்கிறது.தும்பலபட்டியில் கோழிக்கொண்டை பூ சாகுபடி செய்து வரும் முருகேசன் கூறியதாவது:-
கடந்த 7 ஆண்டுகளாக கோழிக்கொண்டை பூ சாகுபடியில் ஈடுபட்டு வருகிறேன். இப்பகுதியில் நாற்றுகள் கிடைப்பதில்லை. எனவே ஓசூர் சென்று நாற்று வாங்கி வந்து நடவு செய்தேன். ஏக்கருக்கு 40 ஆயிரம் நாற்றுகள் வரை பிடிக்கும். நடவு செய்த 2 மாதத்துக்கு பிறகு பூக்களை அறுவடை செய்யலாம்.தொடந்து நான்கு மாதங்கள் வரை குறிப்பிட்ட இடைவெளியில் பூக்கள் கிடைக்கும். சாகுபடியில் களைச்செடிகளை கட்டுப்படுத்த போராட வேண்டியுள்ளது. மக்காச்சோளம், உளுந்து பயிர் சாகுபடியில் களைக்கொல்லி தெளித்து கட்டு ப்படுத்துகின்றனர். ஆனால் இச்சாகுபடியில் மருந்து தெளிக்க முடியாது என்பதால் தொழிலாளர்களை கொண்டு களை பறிக்க வேண்டியுள்ளது.
இதற்கு அதிக செலவாகிறது. சீதோஷ்ண நிலை ஒத்துப்போனால் ஏக்கருக்கு ஒன்றரை டன் வரை, மகசூல் கிடைக்கும். முகூர்த்த சீசனில் கிலோ 70 - 80 ரூபாய் வரை கோழிக்கொண்டை பூ விற்பனையாகும். பிற நாட்களில் விலை கிடைக்காது.
தற்போது பனிப்பொழிவு அதிகரித்துள்ளதால் கருகல் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படுகிறது. கட்டுப்படுத்த மருந்து தெளித்து வருகிறோம். இத்தகைய சீசனில் தரமான பூக்கள் உற்பத்தி செய்ய சிரமப்பட வேண்டியுள்ளது.குறித்த நேரத்தில் பூக்களை பறித்தாலும், உடுமலையில் சந்தை வாய்ப்புகள் இல்லை. எனவே திருப்பூர், திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கு பூக்களை விற்பனைக்காக கொண்டு செல்ல வேண்டியுள்ளது. சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்தினால் உடுமலை பகுதியில் பூக்கள் சாகுபடி பரப்பு பல மடங்கு அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- இந்தியாவிலும் பருவமழை குறைவால் காபி உற்பத்தி சரிந்துள்ளது.
- தமிழகம், கேரளாவிலும் காபி உற்பத்தி செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
புனே:
பலரும் விரும்பி பருகும் பானங்களில் காபி முதன்மையானது. இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் காபி பயிரிட்டாலும் பிரேசில், வியட்நாம் போன்ற நாடுகளில் இருந்து காபி இறக்குமதியும் செய்யப்படுகிறது. இந்திய காபி வெளிநாடுகளுக்கு செல்கிறது.
இந்நிலையில் உலக அளவில் பிரேசில், வியட்நாமில் காபி உற்பத்தி குறைந்துள்ளது. இந்தியாவிலும் பருவமழை குறைவால் காபி உற்பத்தி சரிந்துள்ளது. இதன்காரணமாக நாடு முழுவதும் காபி விலை உயரும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
கர்நாடகாவின் சிக்கமளூருவில் உள்ள எஸ்டேட்டுகளில் இருந்து தரமான காபி கொட்டைகளை விற்பனை செய்யும் வியாபாரிகள் அதன் விலையை கணிசமாக உயர்த்தி உள்ளனர். ரோபஸ்டா மற்றும் பீப்ரி ரக காபி கொட்டைகள் கிலோவுக்கு ரூ.580 ஆக இருந்தது. தற்போது இது ரூ.64 முதல் ரூ.650 வரை விற்கப்படுகிறது.
ரொபஸ்டா விலை 50 சதவீதமும், அரபிகா ரக விலை 15 சதவீதமும் உயர்ந்துள்ளது. இதுபற்றி வியாபாரிகள் கூறுகையில், ஆண்டுக்கு ஒருமுறை ஜனவரி மாதம் காபி விலை உயர்த்தப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு தற்போது விலை உயர்த்தும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் சில சிறிய காபி விற்பனையாளர்கள் கடையை மூடிவிட்டனர்.
காபி விளையும் சிக்கமகளூரு பகுதிகளில் காலநிலை மாற்றமும் உற்பத்தியை பாதித்துள்ளது. பூக்கும் நாட்களில் பருவமழை பெய்ததால் கடந்த ஆண்டை விட 20 சதவீதம் விளைச்சல் குறைந்துள்ளதாக காபி எஸ்டேட் ஊழியர்கள் கூறுகின்றனர்.
இந்தியாவில் 70 சதவீத காபி கர்நாடக மாநிலத்தில் உற்பத்தி ஆகிறது. தமிழகம், கேரளாவிலும் காபி உற்பத்தி செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
காபி உற்பத்தியாகும் பகுதிகளில் பழங்கள் சரியாக பழுக்காததால் வழக்கமான 2 அறுவடைகளுக்குப் பதிலாக 4 சுற்றுகள் தேர்ந்தெடுத்து அறுவடை செய்துள்ளனர். பிரேசிலின் அராபிகா காபி விலைகள் சர்வதேச சந்தைகளில் குறைய தொடங்கியுள்ளன. இருப்பினும், உள்நாட்டு சந்தையில் விலை சற்று அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சில நிறுவனங்கள் கடந்த ஆண்டு 200 கிராம் ஜாடியின் விலை 280 ரூபாயில் இருந்து அதே ஜாடியின் விலையை 360 ரூபாயாக உயர்த்தியுள்ளது. அடுத்த காலாண்டில் மேலும் 10 சதவீதம் விலையை உயர்த்த திட்டமிட்டுள்ளது. அரேபிகாவிற்கும் ரொபஸ்டாவிற்கும் இடையேயான விலை வேறுபாடு குறைந்துள்ளதால், அராபிகா ரக காபியை மக்கள் விரும்புவதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.
காபி பயிரிடுதற்கு தொழிலாளர் செலவில் இருந்து உரம் மற்றும் பூச்சிக்கொல்லி செலவுகள் வரை அதிகரித்து உள்ளது. ஆனால் அரபிகா காபி விலை கடந்த ஆண்டை விட இப்போது கொஞ்சம் குறைவாக உள்ளது. வணிகர்கள் அதை பொதுவாக மொத்தமாக வாங்குகிறார்கள், எனவே விலை உயரும் சூழல் உள்ளது என்று என்று கர்நாடக காபி தோட்டக்காரர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர்.
மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கர்நாடகத்தில் 4 முக்கிய நீர்த்தேக்கங்களில் தண்ணீர் போதிய அளவில் இருந்தும் அந்த மாநில அரசு திறந்து விட மறுப்பதால் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. குறுவை பயிர்கள் கருகி வருவதால் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உடனடியாக தலையிட வேண்டும். தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய தண்ணீரை முழுமையாக திறந்து விட மாவட்டங்களில் (பாதிக்கப்பட்ட பகுதிகளில்) வருகிற 14-ந்தேதி (திங்கட்கிழமை) ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- வடமாநிலங்களில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக தக்காளி விலை உயர்வு.
- இல்லத்தரசிகள் பெரிதும் கவலை அடைந்துள்ளனர்.
போரூர்:
கோயம்பேடு, மார்க்கெட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து இன்று 500-க்கும் மேற்பட்ட லாரிகளில் காய்கறிகள் விற்பனைக்கு குவிந்தது.
பரவலாக பெய்து வரும் மழை மற்றும் வடமாநிலங்களில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக தக்காளிக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.
வெளிமாநில வியாபாரிகள் ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களில் அதிகளவில் குவிந்து தக்காளியை கொள்முதல் செய்து வருகின்றனர். இதனால் தக்காளியின் விலை கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்கப்படுகிறது வெளி மார்க்கெட்டில் உள்ள காய்கறி மற்றும் சூப்பர் மார்க்கெட் கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.70 வரை விற்பனைசெய்யப்பட்டு வருகிறது.
இதேபோல் கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து உச்சத்தில் இருந்து வந்த பீன்ஸ் விலை குறைந்து மொத்த விற்பனையில் ஒரு கிலோ ரூ.50-க்கும், அதேபோல் ஊட்டி கேரட், அவரைக்காய், முருங்கைக்காய் ஆகிய காய்கறிகள் ஒரு கிலோ ரூ.60-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சமையலுக்கு தினசரி பயன்படுத்தப்படும் தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் இல்லத்தரசிகள் பெரிதும் கவலை அடைந்துள்ளனர்.
கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி மொத்த விற்பனை விலை (கிலோவில்) வருமாறு:-
நாசிக் வெங்காயம்-ரூ.38
சின்ன வெங்காயம்-ரூ.60
உருளைக்கிழங்கு-ரூ.34
உஜாலா கத்தரிக்காய்-ரூ.50
வரி கத்தரிக்காய்-ரூ.40
பீன்ஸ்-ரூ.50
அவரை க்காய்-ரூ.60
வெண்டைக்காய்-ரூ.15
முருங்கைக்காய்-ரூ.60
ஊட்டி கேரட்-ரூ.60
பீட்ரூ.ட்-ரூ.25
முள்ளங்கி-ரூ.30
சவ்சவ்-ரூ.30
கோவக்காய்-ரூ.30
வெள்ளரிக்காய்-ரூ.30
குடை மிளகாய்-ரூ.50
பன்னீர் பாகற்காய்-ரூ.50
நைஸ் கொத்தவரங்காய்-ரூ.50
புடலங்காய்-ரூ.25
முட்டை கோஸ்-ரூ.20
பீர்க்கங்காய்-ரூ.20
சுரக்காய்-ரூ.8
- தீபாவளி முடிந்து கிட்டத்தட்ட 10 நாட்கள் கடந்தும் ஈரோட்டுக்கு திரும்பி வரவில்லை.
- மாநகராட்சியில் நடந்து வரும் கட்டுமான பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு பணிகளில் பல ஆயிரத்துக்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக கட்டுமான பணிகளில் வடமாநில தொழிலாளர்கள் அதிகளவில் ஈடுபட்டு வருகின்றனர். இதைப்போல் அரசு திட்டப்பணிகளிலும் வடமாநில தொழிலாளர்கள் அதிகளவில் ஈடுபட்டு வருகிறார்கள்.
ஈரோடு மாநகராட்சியில் பெரும்பள்ளம் ஓடை விரிவாக்கம், சோலாரில் புதிய பஸ் நிலையம் அமைக்கும் பணி, ஈரோடு மத்திய பஸ் நிலையத்தில் புதிய வணிக வளாகம் உள்ளிட்ட பல்வேறு திட்ட பணிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இவர்கள் தீபாவளியை கொண்டாட சொந்த ஊருக்கு சென்றனர். தீபாவளி முடிந்து கிட்டத்தட்ட 10 நாட்கள் கடந்தும் ஈரோட்டுக்கு திரும்பி வரவில்லை. இதனால் மாநகராட்சியில் நடந்து வரும் கட்டுமான பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:- மாநகராட்சியில் நடந்து வரும் கட்டுமான பணிகளில் வட மாநில தொழிலாளர்கள் அதிக அளவில் ஈடுபட்டு வந்தனர். இதில் பெரும்பாலானோர் கடந்த பாராளுமன்ற தேர்தலில் ஓட்டு போடுவதற்காக சென்ற நிலையில் பலர் தற்போது வரை திரும்பவில்லை. இதைப்போல் தீபாவளியை முன்னிட்டு சொந்த ஊருக்கு சென்ற வட மாநில தொழிலாளர்களும் இதுவரை திரும்பி வரவில்லை.
ஈரோட்டில் அவர்களுக்கு கிடைக்கும் சம்பளத்தை போலவே அவர்களது சொந்த மாநிலத்திலும் வழங்க அம்மாநில அரசுகள் முன்வந்துள்ளதாக தெரிகிறது. இதனால் பெரும்பாலான தொழிலாளர்கள் சொந்த மாநிலத்திலேயே பணிபுரிய முடிவு எடுத்துள்ளனர். எனவே சொந்த ஊருக்கு சென்ற வட மாநில தொழிலாளர்களுக்கு பதிலாக புதிய தொழிலாளர்கள் பணிக்கு அழைத்து வருவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவ ர்கள் கூறினர்.
இதுகுறித்து, ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் ராஜமாணிக்கம் கூறியதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு தொழில் நிறுவனங்களில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். குறிப்பாக பெருந்துறையில் மட்டும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகிறார்கள். அவர்களில் சொந்த ஊருக்கு சென்ற பெரும்பாலானோர் ஈரோடு திரும்பி வரவில்லை.
இதற்கான காரணம் மத்திய அரசின் சிறப்பு திட்டங்களால் பீகார், ஒடிசா, மத்திய பிரதேசம், ஜார்கண்ட் என அந்தந்த மாநிலங்களிலேயே தொழில் வளர்ச்சி ஊக்குவிக்கப்ப ட்டுள்ளது. இதனால் பெரு ம்பாலான தொழிலாளர்கள் தங்களின் சொந்த மாநில த்திலேயே பணிபுரிய முடி வெடுத்துள்ளனர். தமிழக த்தின் தொழில் வளர்ச்சியில் இது பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
எனவே மத்திய, மாநில அரசுகள் இந்த விவகாரத்தில் உரிய கவனம் செலுத்தி தமி ழகத்தில் தொழில் வள ர்ச்சியை மேலும் ஊக்குவிக்க வேண்டும். தற்போது ஈரோடு மாவட்டத்தில் வட மாநில தொழிலாளர்கள் பெரும்பாலானோர் திரும்பி வராததால் திட்டப் பணி களில் சுணக்கம் ஏற்பட்டு ள்ளது. இதைப்போல் தொழிற்சாலைகளிலும் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
வட மாநில தொழிலாளர்களுக்கு சாதகமான சலுகைகளை தமிழக அரசு வழங்கினால் அவர்கள் தமிழகத்திற்கு வர வாய்ப்பு அதிகம் உள்ளது. அத்துடன் தொழில்துறை வளர்ச்சிக்கு தமிழக அரசு சாதகமான அறிவிப்பு களை வெளியிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மரக்காணம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான அழகன் குப்பம் முதல் பெரியமுதலியார் சாவடி வரை இன்று அதிகாலை முதலே மழை பெய்து வருகிறது.
- தொடர்ந்து காற்றுடன் கூடிய மழை பெய்து வருவதால் பெரும்பாலான மீனவர்கள் இன்று மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.
கடலூர்:
தமிழர் முழுவதும் 4 நாட்கள் தொடர்ந்து மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.அதன்படி மரக்காணம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான அழகன் குப்பம் முதல் பெரியமுதலியார் சாவடி வரை இன்று அதிகாலை முதலே மழை பெய்து வருகிறது. மேலும் ஆலத்தூர், கீழ்குத்துபட்டு, கந்தாடு உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இந்த மழை பெய்தது. தொடர்ந்து பெய்து வரும் இந்த மழையினால் மரக்காணத்தில் உள்ள உப்பளப் பகுதியில் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டு வேலை இன்று நடைபெறவில்லை.
இதனால் இந்த உப்பு உற்பத்தியில் வேலை பார்க்கும் கூலி தொழிலா ளர்கள் வேலைக்கு செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் மரக்காணம் மீனவ பகுதிகளில் தொடர்ந்து காற்றுடன் கூடிய மழை பெய்து வருவதால் பெரும்பாலான மீனவர்கள் இன்று மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை ஒரு சில மீனவர்கள் மட்டும் சென்றனர். இதனை அடுத்து அந்த பகுதியில் கடலோர காவல் படையினர் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாத வண்ணம் கடற்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ளனர்.