என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வாலிபர் மூழ்கி பலி"
- நீச்சல் தெரியாததால் பரிதாபம்
- தீயணைப்பு துறையினர் 6 மணி நேரம் போராடி மீட்டனர்
சேத்துப்பட்டு:
சேத்துப்பட்டு அடுத்த கரிப்பூர் கிராமத்தை சேர்ந் தவர் ஏழுமலை. சென்னை யில் கட்டிட மேஸ்திரியாக வேலை செய்து வருகிறார்.
இவருக்கு சச்சின்(வயது 21), சரண்(19) என 2 மகன்கள் உள்ளனர். இருவரும் சென்னையிலேயே தங்கி தனியார் கம் பெனியில் வேலை செய்து வந்தனர்.
இந்நிலையில் சொந்த ஊரான கரிப்பூர் கிராமத்தில் குலதெய்வ கோவில் திருவிழா நடக்கிறது. விழாவுக்காக ஏழுமலை 2 நாட்களுக்கு முன் வந்துள்ளார்.
2-வது மகன் சரண் தனது நண்பர் ரமேஷ் என்பவரை அழைத்துக் கொண்டு நேற்று கரிப்பூருக்கு வந்தார்.
அருகே உள்ள கிணற்றில் குளிப்பதற்காக 2 பேரும் சென்றனர். அப்போது சரண் தனது நண்பர் ரமேஷிடம் நான் கிணற்றில் குதிக்கிறேன் அதனை வீடியோவாக எடு என்று கூறினார். அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டால் லைக்கள் கிடைக்கும் என்று தெரிவித்தார்.
இதனால் ரமேஷ் சரண் குதிப்பதை வீடியோ பதிவு செய்தார். கிணற்றில் குதித்த சரணிற்கு நீச்சல் தெரியாததால் தண்ணீரில் தத்தளித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த ரமேஷ் கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்தனர்.
கிணற்றில் பார்த்தபோது சரண் நீரில் மூழ்கினார். கிணற்றில் மூழ்கிய வாலி பரை மீட்க அங்கிருந்தவர்கள் முயன்றனர். முடியாததால் சேத்துப்பட்டு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் மின் மோட்டாரை பொருத்தி தண்ணீரை வெளியேற்றினர்.
பின்னர் 6 மணி நேரம் போராடி சரணை பிணமாக மீட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சேத்துப்பட்டு போலீசார் சரண் உடலை மீட்டனர்.
பிரேத பரிசோதனைக்காக அவரது உடலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
லைக்கிற்காக கிணற்றில் குதித்து வாலிபர் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- 35 வயது வாலிபர் ஒருவர் ஆற்றில் தண்ணீருக்குள் மூழ்கி கொண்டிருந்ததை சாலையில் சென்று கொண்டிருந்த பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
- தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்ணீரில் மூழ்கிய வாலிபரை தேடினார்கள்.
கடலூர்:
கடலூர் அருகே நெல்லிக்குப்பம் மேல்பட்டாம்பாக்கம் தென்பெண்ணை ஆற்றில் தொடர் மழை காரணமாக தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இன்று காலை 35 வயது வாலிபர் ஒருவர் ஆற்றில் தண்ணீருக்குள் மூழ்கி கொண்டிருந்ததை சாலையில் சென்று கொண்டிருந்த பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதனை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த சோதனை சாவடி போலீசாரிடம் தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் நெல்லிக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும் நெல்லிக்குப்பம் தீயணைப்பு துறை நிலைய அலுவலர் சிவா தலைமையில் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்ணீரில் மூழ்கிய வாலிபரை தேடினார்கள்.
அப்போது ஆழமான பகுதியில் வாலிபர் மூழ்கி இறந்த நிலையில் இருந்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து இறந்த வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இது குறித்து நெல்லிக்குப்பம் போலீசார் இறந்த வாலிபர் யார்? என்ன காரணத்திற்காக ஆற்றில் இறங்கினார்? என்பது குறித்துவழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்