search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மென்பொருள்"

    • உலகம் முழுவதும் 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இதன் வாடிக்கையாளர்களாக உள்ளன.
    • இந்தியாவில் நேற்று மட்டும் சுமார் 300 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

    சென்னை:

    அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு மைக்ரோ சாப்ட் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் (விண்டோஸ்) மென்பொருளின் பல்வேறு பதிப்புகள் உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

    இதன் மூலம் கல்வி, மருத்துவம், போக்குவரத்து, தொழில்நுட்ப சேவைகள், தொலைத் தொடர்பு சேவைகள், வங்கிகள், பங்கு சந்தைகள் உள்பட பல்வேறு முக்கிய அத்தியாவசிய சேவைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

    மைக்ரோ சாப்ட் மென்பொருள் நிறுவனத்துக்கு அமெரிக்காவை சேர்ந்த 'கிரவுட் ஸ்டிரைக்' என்ற நிறுவனம் சைபர் பாதுகாப்பு சேவையை வழங்கி வருகிறது. மைக்ரோ சாப்ட், கூகுள் உள்பட உலகம் முழுவதும் 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இதன் வாடிக்கையாளர்களாக உள்ளன.

    'கிரவுட் ஸ்டிரைக்' நிறுவனம் தனது வாடிக்கையாளர்களின் சைபர் பாதுகாப்பை உறுதி செய்ய அடிக்கடி தனது பால்கன் சென்சார் மென் பொருளை மேம்படுத்துவது உண்டு. அப்படி மேம்படுத்தினால்தான் மென் பொருள் நிறுவனங்களின் இயங்கு தளங்கள் எந்தவித அச்சுறுத்தலும் இல்லாமல் சிறப்பாக செயல்பட முடியும்.

    இந்த நிலையில் மைக்ரோ சாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் மென்பொருளில் நேற்று 'கிரைவுட் ஸ்டிரைக்' நிறுவனம் பால்கன் சென்சார் மென்பொருளை மேம்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டது. அப்போது விண்டோஸ் மென்பொருளின் குறிப்பிட்ட சில இயங்கு தளங்களில் திடீர் கோளாறு ஏற்பட்டது.

    இத்தகைய சர்வர் முடக்கத்தால் உலகம் முழுவதும் கணினி மற்றும் மடி கணினிகளின் முகப்பு திரை நீல நிறமாக மாறி பல்வேறு சேவைகள் முடங்கியது. இதனால் 'கிரவுட் ஸ்டிரைக்' நிறுவன ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பால்கன் சென்சார் மென்பொருளை மேம்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டனர்.

    என்றாலும் தொழில்நுட்ப செயலிழப்பை உடனடியாக சரி செய்ய இயலவில்லை. இதனால் நேற்று மதியம் முதல் உலகம் முழுவதும் போக்குவரத்து, மருத்துவம், தொலைத் தொடர்பு, வங்கி பணிகள் போன்றவற்றில் கடும் பாதிப்பு ஏற்பட்டது.


    அமெரிக்கா, இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஜெர்மனி உள்பட பல நாடுகளில் சுமார் 1,400-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் முடங்கின. இந்தியாவில் டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூர், ஐதராபாத் உள்பட பல்வேறு முக்கிய நகரங்களில் விமான சேவைகள் முடங்கின.

    இந்தியாவில் நேற்று மட்டும் சுமார் 300 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. 200-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டன. அது போல வங்கி சேவை, பங்கு சந்தை சேவை ஆகியவற்றிலும் பாதிப்பு காணப்பட்டது.

    'கிரவுட் ஸ்டிரைக்' நிறுவனத்தினர் இன்று பால்கன் சென்சார் மென்பொருளை ஓரளவு சரி செய்து விட்டனர். இதன் காரணமாக இயல்பு நிலை திரும்பி வருகிறது. என்றாலும் உலகம் முழுவதும் இன்று 2-வது நாளாக தொழில்நுட்ப செயல் இழப்பின் பாதிப்பு இருந்தது.

    மைக்ரோ சாப்ட் தொழில் நுட்ப பிரச்சனையால் உலகம் முழுவதும் வர்த்தகத்தில் முடக்கம் ஏற்பட்டு உள்ளது. பல நாடுகளில் இன்றும் பெரிய நிறுவனங்கள் மற்றும் நடுத்தர அலுவலகங்கள் ஸ்தம்பிக்கும் நிலையில் இருந்தன. இன்று மாலை முதல் இயல்பு நிலை முழுமையாக திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்தியாவில் இன்று 2-வது நாளாக விமான சேவை, வங்கி சேவை, பங்கு சந்தை நிறுவன செயல்பாடு ஆகியவற்றில் பாதிப்பு காணப்பட்டது. டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூர், ஐதராபாத் உள்பட பல நகரங்களில் 2-வது நாளாக விமானங்கள் தாமதமாக புறப்பட்டன. இதனால் லட்சக்கணக்கான பயணிகள் அவதிக்குள்ளானார்கள்.

    சென்னையில் நேற்று மதியத்தில் இருந்து, நள்ளிரவு வரை 32 விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் பல மணி நேரம் தாமதமாகி ஆயிரக்கணக்கான பயணிகள் சென்னை விமான நிலையத்தில் கடும் அவதிக்குள்ளானார்கள்.

    இந்த நிலையில் 2-வது நாளாக இன்றும் சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டது. இதுவரை வருகை விமானங்கள் 8 புறப்பாடு விமானங்கள் எட்டு என மொத்தம் 16 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    ரத்தான அந்த 16 விமானங்களில் செல்ல முன்பதிவு செய்திருந்த பயணிகளில் பலர் பயணத்தை ரத்து செய்து விட்டு வீடுகளில் திரும்பி சென்றனர். சில பயணிகள் காத்திருந்து மாற்று விமானங்களில் புறப்பட்டு சென்றனர்.

    சென்னை விமான நிலையத்தில் லண்டன், சிங்கப்பூர், கோலாலம்பூர், துபாய், குவைத், அபுதாபி, தோகா, இலங்கை மற்றும் டெல்லி மும்பை கொல்கத்தா, புனே, அந்தமான், திருவனந்தபுரம் கொச்சி, திருச்சி, மதுரை உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டன.

    இதனால் சென்னை விமான நிலையத்தில் 2-வது நாளாக பயணிகள் இன்றும் அவதிக்குள்ளானார்கள்.

    இந்த நிலையில் இன்று காலை 9 மணிக்கு பிறகு தொழில் நுட்ப செயல் இழப்பு கொஞ்சம் கொஞ்சமாக சீராக தொடங்கியது. இதன் காரணமாக சென்னை விமான நிலைய கணினிகள் ஓரளவு செயல்பாட்டுக்கு வந்தன. இதன் மூலம் விமான இயக்கம் இயல்பு நிலைக்கு வர தொடங்கி உள்ளது.

    11 மணிக்கு பிறகு உள்ளூர் விமான சேவைகள் வழக்கம் போல செயல்பட தொடங்கின. இதனால் சென்னையில் இருந்து மதுரை, திருச்சி, தூத்துக்குடி, கோவைக்கு இன்று வழக்கம் போல விமான சேவைகள் இயக்கப்பட்டன.

    என்றாலும் வங்கி சேவைகளில் இன்றும் பாதிப்பு காணப்படுகிறது. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தவிர மற்ற வங்கிகள் இன்று மதியத்திற்கு இயல்பு நிலைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இங்கிலாந்து, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் தொலைக்காட்சி சேவை மற்றும் ரெயில் போக்குவரத்திலும் இன்று பாதிப்பு இருந்தது. மைக்ரோ சாப்ட் தொழில்நுட்ப பிரச்சனையில் ரஷியா, சீனா இரு நாடுகளும் எந்த பாதிப்பையும் சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • பெரு நிறுவனங்கள் தங்களின் பாதுகாப்புக்காக CrowdStrike மென்பொருளை சார்ந்துள்ளது
    • இது சைபர் தாக்குதல் கிடையாது என்றும் CrowdStrike சிஇஓ ஜார்ஜ் குர்டிஸ் தெரிவித்துள்ளார்.

    உலகம் முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான மைக்ரோசாப்ட் வின்டோஸ் கணினி திரைகளில் நேற்று  தோன்றிய புளூ ஸ்க்ரீன் ஆப் டெத் Blue Screen of Death (BSOD) குளறுபடி  உலகம் முழுவதிலும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. மைகோரசாப்டை ஐ.டி நிறுவனங்கள், விமான நிலையங்கள், வங்கிகள், தொழில்துறை நிறுவனங்கள் ஆகியவற்றின் செயல்பாடுகள் முற்றிலுமாக முடங்கியது. இதற்கு முக்கிய காரணம் CrowdStrike எனப்படும் சைபர் பாதுகாப்பு நிறுவனம் மைக்ரோசாப்டில் செய்ய முயன்ற அப்டேட் ஆகும்.

     

    அமெரிக்கவைத் தலைமையிடமாக கொண்டு 2011 முதல் இயங்கி வரும் CrowdStrike சைபர் பாதுகாப்பு மென்பொருள் நிறுவனமானது முன்னணி நிறுவனங்கள், அரசு அமைப்புகள், வங்கிகள், விமான நிலையங்களின் சைபர் ஸ்பேஸ் பாதுகாப்பை உறுதி செய்யும் நிறுவனம் ஆகும். சுருக்கமாக தனிநபர்கள் காஸ்பர்ஸ்கை, அவாஸ்ட் உள்ளிட்ட ஆட்டிவைரஸ்களை தங்களின் கணினியின் பாதுகாப்புக்காக நிறுவுவது போல், பெரு நிறுவனங்கள் தங்களின் பாதுகாப்புக்காக CrowdStrike மென்பொருளை சார்ந்துள்ளது. அந்த வகையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் CrowdStrike மென்பொருளை உபயோகித்து வருகிறது.

    CrowdStrike மென்பொருளை கணினியில் இன்ஸ்ட்டால் செய்ததும் அது ஆட்டோமேட்டிக்காக வைரஸ் மற்றும் பாதுகாப்பு குறைபாடுகளையும், ஆபத்துகளையும் ஸ்கேன் செய்யும். கணினியில் உள்ள மிகவும் நுட்பமான தகவல்களையும் அணுகுவதால், இந்த மென்பொருளில் ஏற்படும் சின்ன பிரச்சனையும் கணினிக்கும் எளிதாக பரவும். சோனி நிறுவனத்தை வட கோரிய ஹேக்கர்கள் ப்ரீச் செய்த விவகாரத்தை ஆராய்ச்சி செய்தது, அமெரிக்க ஜனநாயக கட்சியின் செர்வர்கள் ஹேக் செய்யப்பட்ட போது அதில் சம்பந்தப்பட்ட ரஷிய சைபர் நடவடிக்கைகளை ஆராய்ந்தது உள்ளிட்ட முக்கிய விவகாரங்களிலும் CrowdStrike பணியாற்றியுள்ளது. 

     

    இந்நிலையில் தற்போது மைகோரஸாப்ட் விண்டோஸில் நடந்துள்ள இந்த சைபர் குளறுபடியாந்து  தங்களின் நிறுவனம் மென்பொருளில்  புதிதாக அறிமுகப்பபடுத்திய சாப்ட்வேர் அப்டேட் குளறுபடியானதால் ஏற்பட்டது என்று விளக்கம் CrowdStrike நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. மேலும் manual ஆக மென்பொருளை ரீசெட் செய்து வருகிறோம் என்றும்   அந்நிறுவனத்தின்  தெரிவிக்கின்றனர். அதுமட்டுமின்றி பரவலாக கூறப்படுவது போல் இது சைபர் தாக்குதல் கிடையாது என்றும் CrowdStrike சிஇஓ ஜார்ஜ் குர்டிஸ் தெரிவித்துள்ளார். இந்த பாதிப்பு வின்டோஸ் கணினிகளில் மட்டுமே ஏற்பட்டுள்ளது என்றும் Mac, Linux உள்ளிட்டவற்றில் இயங்கும் கணினிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

    • வெளிநாட்டு தொழில் நுட்பத்தை சார்ந்திருப்பதை குறைக்க சீனா இந்த நடவடிக்கைகளை எடுத்து உள்ளது
    • சீனாவின் உள்நாட்டு சிப் உபகரண உற்பத்தி நிறுவனங்களின் வருவாய் மேலும் கணிசமாக அதிகரிக்கும் .

    அமெரிக்காவிற்கும் ,சீனாவிற்கும் இடையே தொழில்நுட்ப போர் நடந்து வருகிறது. இந்நிலையில் சீன அரசுத்துறை அலுவலகங்களில் கம்ப்யூட்டர் மற்றும் சர்வர்களில் 'இன்டெல்' மற்றும் 'ஏஎம்டி' சிப்கள், மென்பொருட்கள் பயன்பாட்டை தடுக்கும் விதமாக புதிய வழிகாட்டுதல்களை சீனா தற்போது செயல்படுத்தி உள்ளது.

    இந்த புதிய வழிகாட்டுதல்களின்படி, சீனா அரசு கணினிகளில் Intel அல்லது AMD செயலிகள் இருக்காது.  மைக்ரோசாப்ட் விண்டோஸ் மற்றும் வெளிநாட்டு தரவுத்தள மென்பொருளுக்குப் பதிலாக உள்நாட்டு தயாரிப்பு செயலி, சிப்களை பயன்படுத்த வேண்டும் என பரிந்துரை செய்து உள்ளது.

    சீனாவின் முக்கிய மென்பொருள் உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை பயன்படுத்த அமெரிக்கா ஏற்கனவே ஏற்றுமதி கட்டுப்பாடுகளை விதித்து இருந்தது.

    இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சீனா தனது நாட்டில் சொந்த தயாரிப்பு மென்பொருள்களை பயன்படுத்தினால் அமெரிக்காவின் மைக்ரோசாப்ட் விண்டோஸ் இயங்குதளம் மற்றும் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட தரவுத்தள மென்பொருட்கள் உற்பத்தி பாதிக்கப்படும்.




    இதன் மூலம் சீனாவின் உள்நாட்டு மென்பொருட்கள் உபயோகம் சொந்த நாட்டில் வளர்ச்சி அடையும் என கருதுகிறது.

    மேலும் உள்நாட்டில் தயாரிக்கப்படும் பாதுகாப்பான மற்றும் நம்பகமான பிராஸசர்கள், ஆபரேடிங் சிஸ்டம்களையே சீன அரசு துறை நிறுவனங்கள், உள்நாட்டு நிறுவனங்களில் பயன்படுத்தவும் அறிவுறுத்தி உள்ளது.

    இதன் மூலம் வெளிநாட்டு தொழில் நுட்பத்தை சார்ந்திருப்பதை குறைக்க சீனா இந்த நடவடிக்கைகளை எடுத்து உள்ளது.இதன் விளைவாக, சீனாவின் உள்நாட்டு சிப் உபகரண உற்பத்தி நிறுவனங்களின் வருவாய் மேலும் கணிசமாக அதிகரிக்கும் என  நம்பி உள்ளது.

    • செயற்கைகோள் மென்பொருள் தயாரித்த மாணவிகளுக்கு எம்.எல்.ஏ. பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
    • 10 பேர் மென்பொருள் தயாரித்தனர்.

    திருமங்கலம்

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்ட எஸ்.எஸ்.எல்.வி. ராக்கெட்டுடன் ஆசாதி-2 செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த செயற்கைகோளுக்கு மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 10 பேர் மென்பொருள் தயாரித்தனர். அவர்கள் செயற்கை கோள் விண்ணில் ஏவப்படும் நிகழ்ச்சிக்கு இஸ்ரோ சென்று வந்தனர். செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதை அடுத்து மாணவிகளுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

    இந்த நிலையில் உசிலம்பட்டி எம்.எல்.ஏ. அய்யப்பன் திருமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு வருகை தந்து செயற்கைக்கோள் மென்பொருள் தயாரிப்பில் ஈடுபட்டு வெற்றி பெற்ற மாணவிகளை பாராட்டி சால்வை அணிவித்து கவுரவித்தார்.

    • மக்கள் பிரச்சினையை தெரிந்து கொள்ள மென்பொருள் சேவையை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
    • மதுரை மாநகராட்சி மென்பொருள் சேவை மூலம் கவுன்சிலர்கள் நிறைவேறாத பிரச்சினைகள்குறித்து அதிகாரிகளிடம் வலியுறு த்த முடியும்.

    மதுரை

    மதுரை மகபூப்பாளையம் சுன்னத்வல் ஜமாஅத் பள்ளிவாசலில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது. அதன் திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது. இதில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாப்பாளையம் பள்ளிவாசல் புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் மேயர் இந்திராணி, ஜுவாகிருல்லா எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பின்னர் மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகை 3-வது தளத்தில் உள்ள பொதுமக்களின் குறை தீர்க்கும் மையத்தில் புதிய தொலைபேசி எண் மற்றும் மென்பொருள் சேவை அறிமுக நிகழ்ச்சி நடந்தது. இதில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டு சேவைைய தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மதுரை மாநகராட்சியின் பொது மக்களுக்கான சேவையில், இது ஒரு முக்கிய மைல் கல் ஆகும். பொது மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது என்பது கடினமான பணி. இதற்கு ஒரு கட்டமைப்பு அமைய வேண்டியது முக்கியம். மதுரை மாநகராட்சி மென்பொருள் சேவை மூலம் பொதுமக்கள் மட்டுமின்றி அதிகாரிகளும் நிறைவேறாத பிரச்சினைகள்பற்றிய விவரங்களை அறிந்து கொள்ள இயலும்.

    பொது மக்களும் கோரிக்கை மீதான நடவடிக்கை, தற்போதைய நிலை ஆகியவை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

    மதுரை மாநகராட்சி மென்பொருள் சேவை மூலம் கவுன்சிலர்கள் நிறைவேறாத பிரச்சினைகள்குறித்து அதிகாரிகளிடம் வலியுறு த்த முடியும். மதுரை மாநகராட்சி ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு அறையில் பொதுமக்களுக்கான கட்டமைப்பை உருவாக்கிய கமிஷனருக்கு இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

    இது தொடர்பாக பொது மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அவர்களிடம் புகாருக்கான தனி அடையாள எண் பெறுவது முக்கியம் என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.

    அடுத்தபடியாக கவுன்சிலர்கள் வாரம் ஒரு முறை மென்பொருள் சேவை மூலம் பொது மக்கள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டதா? என்பதை தெரிந்து கொண்டு, அவற்றை நிறைவேற்றுவதற்கான பணிகளில் ஆர்வம் காட்ட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சிவகாசி பி.எஸ்.ஆர். கல்லூரியில் மென்பொருள் வடிவமைப்பு பயிற்சி முகாம் நடந்தது.
    • எந்திரவியல் துறையை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    சிவகாசி

    சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியில் ''ஆட்டோடெஸ்க் யூசன் 360'' என்ற மென்பொருள் வடிவமைப்பு தொடர்பாக பயிற்சி முகாமை கல்லூரியின் ஐ.சி.டி. அகாடமி நடத்தியது.

    பி.எஸ்.ஆர். கல்வி குழுமங்களின் தாளாளர் ஆர்.சோலைசாமி தலைமை தாங்கினார். இயக்குநர் விக்னேஷ்வரி அருண்குமார் தொடங்கி வைத்தார். முதல்வர் விஷ்ணுராம் வாழ்த்துரை வழங்கினார். டீன் மாரிச்சாமி சிறப்புரை ஆற்றினார்.

    இந்த பயிற்சி முகாமை சென்னை ஐ.சி.டி.அகாடமி நிர்வாக அதிகாரி திவ்யபிரசாத் நடத்தினார்.

    அவர் பேசுகையில், இந்த மென்பொருள் ஆட்டோ மெஷனில் உற்பத்திதுறை மற்றும் வடிவமைப்பு துறையின் பயன்பாடு பற்றியும், இதன் மூலமாக உள்ள வேலைவாய்ப்பு பற்றியும் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.இதில் எந்திரவியல் துறையை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகம், எந்திரவியல் துறை பேராசிரியர்கள் முத்தையா, குமாரசாமி ஆகியோர் செய்திருந்தனர்.

    எந்திரவியல் துறைத்தலைவர் கனகசபாபதி நன்றி கூறினார்.

    ×