என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "காமிராக்கள்"
- காமிராக்கள் பொருத்தும் பணிகள் கடந்த மாதம் முதல் தொடங்கி தீவிரமாக நடந்து வந்தது.
- டிரோன் காமிராவும் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
ஊட்டி,
சர்வதேச அளவில் புகழ்பெற்ற சுற்றுலா தலமாக ஊட்டி விளங்குகிறது.
இங்கு ஆண்டுதோறும் 30 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கோடை சீசனுக்கு மட்டும் 8 லட்சம் பேர் வந்து செல்கின்றனர்.
இதேபோல் ஊட்டி சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க ஊட்டி நகருக்கு வந்து செல்கிறார்கள்.
இதனால் ஊட்டியில் வார விடுமுறை, பண்டிகை மற்றும் சீசன் காலங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
இதையடுத்து போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் வகையிலும், குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையிலும் அதிநவீன கண்காணிப்பு காமிரா பொருத்த போலீசார் முடிவு செய்தனர்.
இதன்படி கடந்த டிசம்பர் மாதம் ஊட்டியில் சேரிங்கி ராஸ், பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் 90 அதிநவீன கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டது.
ஊட்டி நகர் முழுவதும் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தும் பணிகள் கடந்த மாதம் முதல் தொடங்கி தீவிரமாக நடந்து வந்தது.
இந்தநிலையில் புதிதாக பொருத்தப்பட்ட கண்காணிப்பு காமிராக்களை நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார்.
இதேபோல் டிரோன் காமிராவும் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர் கூறியதாவது:-
இதற்கு முன்பு பொருத்தப்பட்ட அதிநவீன காமிராக்கள் மூலம் 100 மீட்டர் தூரம் வரை உள்ள காட்சிகளை துல்லியமாக புகைப்படம் மற்றும் வீடியோவாக பதிவு செய்ய முடியும்.
மேலும் தானாகவே வாகன பதிவு எண்களை சேமித்து வைக்கும். இந்த பதிவுகள் அனைத்தும் 3 மாதங்களுக்கு அப்படியே இருக்கும். தேவைப்பட்டால் மீண்டும் எடுத்து கொள்ளலாம்.
தற்போது பொருத்தப்படும் காமிராக்கள், தனியார் பங்களிப்பு நிதியுடன் பொருத்தப்பட்டுள்ளது. ரூ.60 லட்சம் செலவில் மொத்தம் 100 கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் குற்ற சம்பவங்களை தடுக்கவும், போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஊட்டி,
கூடலூர் நகராட்சி உட்பட்ட காசிம்வயல் 16-வது வார்டு உறுப்பினர் ஆபிதாபேகம் கோரிக்கையை ஏற்று நீலகிரி மாவட்டத்தில் முதன் முதலாக கூடலூர் நகராட்சி மூலமாக அந்த பகுதியில் கண்காணிப்பு காமிரா வைக்கப்பட்டது.இதற்கு இன்ஸ்பெக்டர் அருள் மற்றும் போலீசார் நன்றி தெரிவித்தனர். காசிம்வயல் பகுதி மக்களின் சார்பில் முதல்-அமைச்சருக்கும், கூடலூர் நகரமன்ற தலைவர் பரிமளா, துணை தலைவர் சிவராஜ், நகராட்சி ஆணையாளர் ப்ரான்ஷிஸ் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
- ரப்பர் பால் வெட்ட சென்ற போது சிறுத்தை குதித்து ஓடியது. பதறிப்போன ஹெலன்மேரி அங்கிருந்து ஓட்டம்
- நடமாட்டம் இருந்தது காட்டு பூனையாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது
நாகர்கோவில் :
தக்கலை அருகே வேலிமலை வன பகுதியில் தனியார் ரப்பர் தோட்டம் உள்ளது. இங்கு ஏராளமான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். சரல் விளை பகுதியைச் சேர்ந்த நெல்சன் என்பவரது மனைவி ஹெலன் மேரி (வயது 40). இவர், குழிவிளை பகுதியில் ரப்பர் பால் வெட்ட சென்று கொண்டிருந்தார். அப்போது சிறுத்தை ஒன்று குதித்து ஓடியது. பதறிப்போன ஹெலன்மேரி அங்கிருந்து ஓட்டம் பிடித்து நடந்த சம்பவத்தை பொது மக்களிடம் தெரிவித்தார்.
மேலும் கொரங்கேற்றி மலைப் பகுதியில் 3 குட்டிகளுடன் சிறுத்தை புலி நடமாட்டம் இருந்ததை பொதுமக்கள் பார்த்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு நரிச்சிகல் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருந்ததையும் பொதுமக்கள் பார்த்துள்ளனர். இது தொடர்பாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறை அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர்.இந்த நிலையில் சிறுத்தை புலியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.
இந்த நிலையில் இன்று காலை வனத்துறை அதிகாரிகள் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக கூறப்பட்ட பகுதிக்கு சென்றனர்.அந்த பகுதியில் 4 நவீன காமிராக்கள் பொருத்தும் பணி நடந்து வருகிறது.
இது குறித்து வனத்துறை அதிகாரி இளையராஜா கூறுகையில், வேளிமலை வனப்பகுதியில் சிறுத்தை புலி நடமாட்டம் இருப்பதாக பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். வனத்துறை அதிகாரிகள் அங்கு சென்று பார்வையிட்டனர். நடமாட்டம் இருந்தது காட்டு பூனையாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இருப்பினும் சிறுத்தை நடமாட்டம் உள்ளதா என்பதை கண்டறிய அந்த பகுதியில் கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது.
இரவு பகலாக சிறுத்தை நடமாட்டம் உள்ளதா என்பது குறித்து கேமராவில் கண்காணிக்கப்படும். சிறுத்தை நடமாட்டம் இருந்தால் அதை பிடிக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
- 24-வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் கழிவு நீரோடைகள் மோசமான நிலையில் உள்ளது.
- மேயர் மகேஷ் தகவல்
நாகர்கோவில்:
நாகர்கோவில் மாநகராட்சி 24-வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் மேயர் மகேஷ் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
24-வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று மேயர் மகேஷ் மோட்டார் சைக்கிளில் சென்றும், நடந்து சென்றும் ஆய்வு செய்தார். அண்ணா பஸ்நிலையம் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட மேயர் மகேஷ் அங்குள்ள கழிவறையை சென்று பார்வையிட்டார். அப்போது கழிவறையில் கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினார்கள். இதை தொடர்ந்து அதிகாரியிடம் கூடுதல் கட்டணம் வசூல் செய்தால் சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
இதை தொடர்ந்து நாகராஜா திடல் , மீனாட்சிபுரம் சாலை உள்பட பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அந்த பகுதிகளில் கழிவுநீர் ஓடைகள் மோசமாக காணப்பட்டது. அதை உடனடியாக சீரமைக்க மேயர் மகேஷ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் .
இதை தொடர்ந்து மகேஷ் நிருபர்களிடம் கூறியதாவது:-
நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தை மேம்படுத்த ஏற்கனவே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் அண்ணா பஸ் நிலையம் மேம்படுத்தப்படும். பஸ் நிலையத்தில் உள்ள இருக்கைகள் சீரமைக்கப்படுவதுடன் கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
24-வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் கழிவு நீரோடைகள் மோசமான நிலையில் உள்ளது.அந்த ஓடைகளை உடனடியாக சீரமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. நாகர்கோவில் மாநகரப் பகுதியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் பகுதி சபா கூட்டங்கள் நடத்தப்பட்டு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு வருகிறது.அந்த மனுக்கள் மீதும் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின் போது ஆணையாளர் ஆனந்தமோகன்,மண்டலத் தலைவர் ஜவகர், கவுன்சிலர் ரோசிட்டா, திமுக மாணவர் அணி அமைப்பாளர் சதாசிவம் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
- பொதுமக்கள் வனத்துறையினரிடம் புகாா் அளித்தனா்.
- இரண்டு கண்காணிப்பு கேமராக்களை பொருத்தினா்.
ஊட்டி
நீலகிரி மாவட்டம், கூடலூா் வனச் சரகத்திலுள்ள ஸ்ரீமதுரை ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் இரவு நேரங்களில் புலி உலவி வருவதாக அப்பகுதி பொதுமக்கள் வனத் துறையினரிடம் புகாா் அளித்தனா்.அதைத் தொடா்ந்து, புலி நடமாட்டம் உள்ள பாதையில் இரண்டு கண்காணிப்பு கேமராக்களை வனத் துறையினா் பொருத்தினா்.இதன் மூலம் புலியின் நடமாட்டத்தை தொடா்ந்து கண்காணிக்க முடியும் என்றும், பொதுமக்கள் பயமின்றி இருக்கலாம் என்றும் வனச் சரக அலுவலா் ராஜேந்திரன் தெரிவித்துள்ளாா்.
- தேவகோட்டையில் முக்கிய சாலைகளில் கண்காணிப்பு காமிராக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
- குற்றச்சம்பவங்களை தடுக்கும் வகையிலும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் அமைக்கப்பட்டுள்ளது.
தேவகோட்டை
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகரில் மொத்தம் 27 வார்டுகள் உள்ளது. நகரில் குற்றச்சம்பவங்களை தடுக்கும் வகையிலும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் பொதுமக்கள் உதவியுடன் நகர்மன்ற தலைவர் சுந்தரலிங்கம் தலைமையில் நகர் முழுவதும் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து நகர்மன்ற துணைத்தலைவர் ரமேஷ், சொந்த செலவில் 3-வது வார்டு அண்ணாசாலை 5-ம் வீதியில் கண்காணிப்பு காமிராக்கள் நிறுவினார். இந்த நிகழ்ச்சியை காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ்குமார் தொடங்கி வைத்தார்.
அவர் கூறுகையில், இதேபோல் நகரில் அனைத்து வார்டுகளிலும் முக்கிய சந்திப்புகளில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தும் பட்சத்தில் நகர்பகுதி முழுவதும் பாதுகாப்பாக அமையும். கண்காணிப்பு காமிராக்கள் ஒவ்வொரு வீடுகளையும் 24 மணி நேரமும் கண்காணிப்பதால் முழு பாதுகாப்பு கிடைக்கிறது. நகரில் உள்ள வணிக நிறுவனங்கள் தாமாக முன்வந்து கண்காணிப்பு காமிராக்களை பொருத்த வேண்டும் என்றார். இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்