என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தர்பூசணி"

    • ரத்த சிவப்பாக இருந்தால் நன்றாக முதிர்ந்து பழுத்த பழம் என்பது நம்பிக்கை.
    • வெட்டப்படாத முழு தர்பூசணியை வாங்குவது நல்லது.

    சென்னை:

    அடிக்கிற வெயிலில் அரை மணிநேரத்துக்கு ஒரு முறை தண்ணீர் குடித்தாலும் தாகம் தீருவதில்லை. வெளியே சுற்றும் போது தாகம் தணிக்க இளநீர் குடிக்கலாமென்றால் ரூ.60 முதல் ரூ.70 வரை விற்கிறது.

    தர்பூசணி துண்டுகள் கண்ணை கவர்கிறது. ரத்த சிவப்பாக காட்சியளிக்கும் ஒரு துண்டின் விலை ரூ.20 தான். விலை குறைவு அதிக தண்ணீர் சத்தும் இருப்பதால் எல்லோரும் அதை விரும்பி சாப்பிடுகிறார்கள்.

    ரத்த சிவப்பாக இருந்தால் நன்றாக முதிர்ந்து பழுத்த பழம் என்பது நம்பிக்கை. ஆனால் கலருக்கு வண்ண சாயங்களை ஊசி மூலம் செலுத்துவதாக அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது.

    விழிப்புணர்வு, சோதனைகள் மூலம் இப்போது கலருக்கான ஊசி செலுத்துவது குறைந்து வருவதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி டாக்டர் சதீஷ்குமார் கூறினார்.

    இருப்பினும் விற்பனையாளர்கள் தர்பூசணி துண்டுகளில் கலர் பொடியை சர்க்கரை பாகுவில் கலந்து பூசுவதை பார்க்க முடிவதாகவும் தெரிவித்தார். இது இயற்கையான சுவையை மாற்றியமைக்கும். உணவில் தேவையற்ற சர்க்கரையை சேர்க்கிறது. ஒரு வகையில் உடலுக்கு தீங்கை தான் ஏற்படுத்தும்.

    வெட்டப்பட்ட தர்பூசணி துண்டுகளை கையாள்வதும் நீண்ட நேரம் திறந்தவெளியில் வைத்திருப்பதால் சுகாதாரமற்ற சூழலால் கெடும். ஆனால் விற்பனையாளர்கள் அழுகுவதை மறைக்கவே சர்க்கரை பாகுவை தடவுவதாக கூறப்படுகிறது.


    தர்பூசணி ஜூஸ் தயாரிக்க விற்பனையாளர்கள் சுகாதாரமற்ற தண்ணீர் மற்றும் ஐஸ் கட்டிகளை பயன்படுத்துகிறார்கள். கண்ணாடி டம்ளர்களை ஓடுகிற தண்ணீரில் கழுவுவதில்லை.

    ஒரு வாளி தண்ணீர் வைத்துள்ளார்கள். அதிலேயே தொடர்ந்து டம்ளர்களை கழுவுகிறார்கள். இது கடுமையான உடல்நல கோளாறை ஏற்படுத்தலாம்.

    ஏனெனில் அசுத்தமான தண்ணீர் உணவில் பரவும் நோய்களுக்கு வழிவகுக்கும். தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை கொண்டு உள்ளது.

    எனவே நுகர்வோர்கள் தான் விழிப்புடன் இருக்க வேண்டும். வெட்டப்படாத முழு தர்பூசணியை வாங்குவது நல்லது. துண்டுகள் மற்றும் ஜூஸ் வாங்கி சாப்பிடுவதாக இருந்தால் சுகாதாரமாக இருப்பதையும், செயற்கை வண்ணம் சேர்க்கவில்லை என்பதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும் என்று உணவு பாதுகாப்புத்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.

    • வீடியோ வைரலாகி 81 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளையும், ஆயிரக்கணக்கான லைக்குகளையும் குவித்து வருகிறது.
    • வீடியோவைப் பார்த்த பயனர்கள் பலரும் தர்பூசணிகளை வீணடித்துவிட்டீர்கள் எனவும், மிகப்பெரிய உணவான பிரியாணியை கெடுக்காதீர்கள் எனவும் பதிவிட்டு வருகின்றனர்.

    சமூக வலைதளங்களில் புதுமையான உணவு தயாரிப்பு தொடர்பாக ஏராளமான வீடியோக்கள் பதிவிடப்படுகின்றன. அதில் சில உணவு வகைகள் பயனர்கள் மத்தியில் வரவேற்பையும், சில உணவு வகைகள் விமர்சனத்தையும் ஏற்படுத்துகின்றன. அந்த வகையில் தர்பூசணி ஜூஸ் சேர்த்து சிக்கன் பிரியாணி செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    இன்ஸ்டாகிராமில் பரவி வரும் அந்த வீடியோவில், சில இளைஞர்கள் தர்பூசணி பழங்களை கழுவி, வெட்டும் காட்சிகளுடன் தொடங்குகிறது. பின்னர் அந்த பழங்களை துண்டு, துண்டாக வெட்டி ஜூஸ் தயாரிக்கின்றனர். அது முடிந்ததும், கோழி இறைச்சி வெட்டி ஒரு பெரிய கடாயில் போட்டு எண்ணெய், மசாலா, இஞ்சி, பூண்டு சேர்த்து தயாரிக்கிறார்கள். அதன்பிறகு சிக்கன் கலவையில் தர்பூசணி ஜூஸை சேர்த்து, பாஸ்மதி அரிசி போட்டு பிரியாணி தயாரிக்கும் காட்சிகள் உள்ளது. அந்த வீடியோ வைரலாகி 81 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளையும், ஆயிரக்கணக்கான லைக்குகளையும் குவித்து வருகிறது.

    இதைப்பார்த்த பயனர்கள் பலரும் தர்பூசணிகளை வீணடித்துவிட்டீர்கள் எனவும், மிகப்பெரிய உணவான பிரியாணியை கெடுக்காதீர்கள் எனவும் பதிவிட்டு வருகின்றனர். சில பயனர்கள், இது ஒருபோதும் சுவையாக இருக்காது எனவும், இதை சாப்பிட்ட பிறகு ஆம்புலன்சிற்காக காத்திருக்க நேரிடும் எனவும் பதிவிட்டு உள்ளனர்.


    • வெயிலுக்கு இதமாக என்ன செய்வதென்று தாய்மார்களின் மிக பெரிய கவலையாகவும் உள்ளது.
    • செலவில்லாமலும் மிகவும் எளிமையாக செய்யக் கூடியது இந்த ஐஸ்கிரீம்.

    கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இவற்றில் இருந்து குழந்தைகள் மற்றும் பெரியவர்களை பாதுகாப்பது வீட்டில் உள்ளவர்களுக்கு சவாலாக இருக்கிறது. பள்ளிகள் விடுமுறை என்பதால் பிள்ளைகளுக்கு வெயிலுக்கு இதமாக என்ன செய்வதென்று தாய்மார்களின் மிக பெரிய கவலையாகவும் உள்ளது. வீட்டிலேயே குறைந்த செலவில் ஐஸ்கிரீம் கிடைந்ததால் எப்படி இருக்கும். அதைதான் நான் இப்போது சொல்ல போகிறேன். வாங்க அனைவரும் ஜில் என்று ஆகலாம்.

    தேவையான பொருட்கள்:

    தர்பூசணி - 1

    கிரீம் மில்க் - 750 ml

    சர்க்கரை - தேவையான அளவு

    செய்முறை:

    * ஒரு முழு தர்பூசணி பழத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும்.

    * நறுக்கிய தர்பூசணி துண்டுகளை கரண்டி கொண்டு நன்கு நசுக்கி சாறு எடுக்க வேண்டும். (குறிப்பாக மிக்ஸியில் அரைக்கக் கூடாது)

    * பின்னர் அந்த சாரை ஒரு அடி கனமான பாத்திரத்தில் மாற்றில் அதை அடுப்பில் மிதமான தீயில் வைத்து சூடு செய்ய வேண்டும்.

    * அந்த சாரானது ஒரு திக்கான கலவையாக வந்த உடன் அடுப்பை அனைத்து விட வேண்டும். (குறிப்பாக 1 டம்ளர் சாறு அரை டம்ளர் வந்தவுடன்)


    * அடுத்ததாக கிரீம் மில்க்கை ஒரு பாத்திரத்தில் ஊற்றி ஹாண்டு மிக்சரை வைத்து அதை நன்கு மிக்ஸ் செய்து ஒரு திக்காக கிரீம் பதத்திற்கு கொண்டு வரவேண்டும். அதனுடன் தேவையான அளவு சர்க்கரை சேர்த்து மீண்டும் நன்கு மிக்ஸ் செய்யவேண்டும்.

    * சர்க்கரையும், மில்க் கிரீமும் நன்கு ஒன்று சேர்ந்தவுடன் தயாரித்து வைத்துள்ள தர்பூசணி திரவத்தை அதனுடன் சேர்த்து, பின்னர் அனைத்தையும் நன்கு மிக்ஸ் செய்து ஒரு நல்ல கிரீம் பதத்திற்கு கொண்டு வரவேண்டும்.

    * பின்னர் இதை ஒரு கண்ணாடி பவுல் அல்லது வேறு ஏதாவது ஒரு பாத்திரத்தில் மாற்றி, ஃப்ரிசரில் 4 முதல் 5 மணி நேரம் வைக்க வேண்டும்.

    5 மணிநேரம் கழித்து எடுத்து பரிமாறினால் சுவையான ஐஸ்கிரிம் ரெடி. இந்த வெயிலுக்கு குடும்பமாக செலவில்லாமலும் மிகவும் எளிமையாக செய்யக் கூடியது இந்த ஐஸ்கிரீம்.

    • தர்பூசணி துண்டுகளின் மீது சிக்கன் மாவு பூசி எண்ணெயில் நன்றாக வறுக்கும் காட்சிகள் உள்ளது.
    • வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பயனர்கள் தங்களது விமர்சன கருத்துக்களை பதிவிட்டனர்.

    உணவு பிரியர்களை கவர்வதற்காக சமூக வலைதளங்களில் புதிய உணவு வகைகள் தயாரிப்பு குறித்த வீடியோக்கள் அதிகளவில் வெளியாகின்றன. அவற்றில் சில வீடியோக்கள் வரவேற்பையும், சில வீடியோக்கள் கடும் விமர்சனங்களையும் சந்திக்கிறது.

    அந்த வகையில் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில் சமையல் கலைஞர் ஒருவர் தர்பூசணியை சிக்கன் மாவில் பூசி, வறுத்த கோழி தர்பூசணி தயாரிக்கும் காட்சிகள் உள்ளது. அதில், சமையல் கலைஞர் ஒரு முழு தர்பூசணியை சிறு, சிறு துண்டுகளாக வெட்டுகிறார். பின்னர் அந்த தர்பூசணி துண்டுகளின் மீது சிக்கன் மாவு பூசி எண்ணெயில் நன்றாக வறுக்கும் காட்சிகள் உள்ளது.

    இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பயனர்கள் தங்களது விமர்சன கருத்துக்களை பதிவிட்டனர். ஒரு பயனர், நரகத்தில் யார் இந்த கொடூரத்தை சாப்பிடுவார்கள் என பதிவிட்டுள்ளார். மற்றொரு பயனர், இது நான் நாள் முழுவதும் பார்த்த அமெரிக்கா விஷயம் என பதிவிட்டுள்ளார். அதே நேரம் சில பயனர்கள், இது அற்புதம், நான் பார்த்ததிலேயே மிகவும் சுவையான உணவு என பதிவிட்டுள்ளனர்.

    • ஒழுங்கில்லாத ரத்த நாளங்களை ஒழுங்குபடுத்தி, ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்.
    • விளையாட்டு வீரர்களுக்கு ஏற்படக்கூடிய தசை வலிகளுக்கு, தர்பூசணி ஜூஸ் சிறந்த நிவாரணி.

    ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்

    தர்பூசணியில் இருக்கும் சிட்ரூலின் அமினோ அமிலம், ஒழுங்கில்லாத ரத்த நாளங்களை ஒழுங்குபடுத்தி, ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்.

    நல்ல கண் பார்வை

    தர்பூசணியில் பீட்டா கரோட்டீன், லீட்டின் மற்றும் வைட்டமின்-சி போன்ற சத்துக்கள் நிறைந்திருப்பதால், விரைவில் வயதாகும் தோற்றத்தை வரவிடாமல் தடுத்து, கண் ஆரோக்கியத்தை மெருகூட்டுகிறது.

     

    தசை வலி போக்கும்

    விளையாட்டு வீரர்களுக்கு ஏற்படக்கூடிய தசை வலிகளுக்கு, தர்பூசணி ஜூஸ் சிறந்த நிவாரணி. விளையாட்டு பயிற்சி, உடற்பயிற்சி, ஓட்டம் மற்றும் நடைப்பயிற்சி 'மேற்கொள்பவர்கள், தர்பூசணி ஜூஸ் குடிப்பது நல்லது.

    சிறுநீரக ஆரோக்கியம்

    தர்பூசணியில் பொட்டாசியம் அதிகமாக இருப்பதால், சிறுநீரகத்தை பாதிக்கும் அம்சங்களை விலக்கி, சிறுநீரகத்தில் கல் பிரச்சனை ஏற்படாமல் பாதுகாக்கிறது.

    இதய நலன்

    லைக்கோபென், சிட்ரூலின் போன்றவை தர்பூசணியில் நிறைந்திருப்பதால், இதய நலன் காக்கப்படுகிறது. இதயம் தொடர்பான நோய் பாதிப்புகள் குறைகின்றன.

    • குகேஷ் இளம்வயதில் உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்று சாதனை.
    • விளையாட்டு ஆர்வலர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    கூடலூர்:

    சிங்கப்பூரில் நடந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் சென்னையை சேர்ந்த குகேஷ் இந்தியா சார்பில் கலந்து கொண்டு பட்டம் வென்றார். இதன் மூலம் இளம்வயதில் உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றவர் என்ற புதிய சாதனையை படைத்துள்ளார்.

    அவருக்கு பிரதமர் மோடி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இந்தியாவில் உள்ள பல்வேறு அரசியல் கட்சியினர், விளையாட்டு ஆர்வலர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    அவரது சாதனையை கவுரவிக்கும் வகையில் தேனி மாவட்டம் கூடலூரை சேர்ந்த சிற்பி இளஞ்செழியன் என்பவர் தர்ப்பூசணியில் குகேஷின் உருவத்தை வரைந்துள்ளார். இந்தியாவின் இளம் வயது செஸ் சாம்பியனுக்கு வாழ்த்துக்கள் என்று அதில் பதிவிட்டுள்ளார்.


    இதனை பார்வையிட்ட அப்பகுதி மக்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் இளஞ்செழியனுக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது.

    இவர் ஏற்கனவே அப்துல்கலாம், இஸ்ரோ தலைவர் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களை தர்ப்பூசணியில் செதுக்கி பாராட்டு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கோடை காலத்தில் அறுவடை செய்யும் வகையில் ஆயிரம் ஏக்கர் வரை சாகுபடியானது.
    • ஏக்கருக்கு 20 டன் வரை மகசூலும் எடுத்தனர்.

    உடுமலை :

    உடுமலை பகுதிக்கு ஆண்டுதோறும் சேலம், திண்டிவனம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கோடை சீசனுக்கு பல லோடு தர்பூசணி கொண்டு வரப்பட்டது. எனவே கோடை சீசனை இலக்காக வைத்து புதிய தொழில்நுட்பங்கள் உதவியுடன் கிணற்று ப்பாசனத்துக்கு, தர்பூசணி சாகுபடியிலும் உடுமலை பகுதி விவசாயிகள் களமிறங்கினர்.

    கடந்த2 ஆண்டுகளாக உடுமலை, மடத்துக்குளம் வட்டாரங்களில் கோடை காலத்தில் அறுவடை செய்யும் வகையில் ஆயிரம் ஏக்கர் வரை சாகுபடியானது.நிலப்போர்வை, சொட்டு நீர் பாசனம், நீர் வழி உரம் பயன்பாடு காரணமாக தர்பூசணி காய்களும் திரட்சி யாக பிடித்தது. ஏக்கருக்கு 20 டன் வரை மகசூலும் எடுத்தனர்.ஆனால் கடந்த கோடை சீசனில் ஊரடங்கு, வரத்து அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் இதற்கு விலை கிடைக்கவில்லை.

    அறுவடை செய்யாமல் அதை அப்படியே விளைநிலங்களில் விடும் நிலை உருவானது.இந்நிலையில் கோடை சீசன் மட்டுமல்லாது இடைப்ப ட்டத்திலும், பரவலாக தர்பூசணி சாகுபடி செய்துள்ளனர். இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    கோடை சீசனில் ஏற்பட்ட இழப்பை ஈடுசெய்யும் வகையில் இடைப்பட்டத்தில் தர்பூசணி சாகுபடி செய்துள்ளோம்.வீரிய ரக விதைகளை சாகுபடிக்கு பயன்படுத்துவதால் 70 முதல் 80 நாட்களில் தர்பூசணியை அறுவடை செய்ய முடிகிறது. தற்போது அறுவடைக்கு தயாராகி வருகிறது. பிற மாநில வியாபாரிகள் நேரடியாக விளைநிலங்களுக்கே வந்து கொள்முதல் செய்கின்றனர். பருவமழை சீசன் துவங்கும் முன் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.

    ×