என் மலர்
நீங்கள் தேடியது "ஆர்.எஸ்.எஸ்."
- நிகழ்ச்சியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் கலந்து கொள்வதாக இருந்தது
- செருப்பாலூரில் இருந்து குலசேகரம் சந்தை வழியாக திட்டமிடப்பட்டிருந்தது.
கன்னியாகுமரி:
தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலங்கள் நடத்தப்படாமல் உள்ள நிலையில், ராஷ்ட்ர சேவிகா சமிதி-மகளிர் அமைப்பு சார்பில் வழக்க மாக நடைபெறுகின்ற அணிவகுப்பு ஊர்வலம் குலசேகரத்தில் இன்று மாலை 3 மணிக்கு நடத்த தீர்மானிக்கப்பட்டு அனுமதி கோரப்பட்டிருந்து.
இதற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின்பேரில் தக்கலை டி.எஸ்.பி கணேசன் தடை உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. இந் நிலையில் செருப்பாலூரில் இருந்து குலசேகரம் சந்தை வழியாக காவல் ஸ்தலம், கூடத்தூக்கி தனியார் பள்ளியில் நிறைவு விழா நிகழ்ச்சி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிகழ்ச்சியில் 1320 பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் கலந்து கொள்வதாக இருந்த நிலையில் ஊர்வலம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- இந்த முடிவுக்காக மத்திய அரசை பாராட்ட வார்த்தைகள் போதாது.
- தடையை எதிர்ப்பவர்கள், வன்முறை மற்றும் கொலைகளை ஆதரிக்கின்றனர்.
பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா (பி.எப்.ஐ.) அமைப்பின் மீது தடை விதித்துள்ளதற்கு பல்வேறு எதிர்க்கட்சிகள் மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளன. ஆர்.எஸ்.எஸ்.அமைப்பையும் மத்திய அரசு தடை செய்ய வேண்டும் என்றும் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதாதளம் உள்ளிட்ட கடசிகள் மத்திய அரசை வலியுறுத்தி உள்ளன. இந்நிலையில் பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மூத்த தலைவர் இந்திரேஷ் குமார் கூறியுள்ளதாவது:
பி.எப்.ஐ.மீதான தடை காலத்தின் மிகப் பெரிய தேவையாக இருந்தது. நாடு மற்றும் மனித நேயத்தை பாதுகாக்க மத்திய அரசு மிக முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளது. இந்த முடிவுக்காக மத்திய அரசை பாராட்ட வார்த்தைகள் போதாது. இந்த தடையை எதிர்ப்பவர்கள் இந்தியாவிற்கு எதிரானவர்கள். நாட்டின் அமைதி, நல்லிணக்கம் மற்றும் வளர்ச்சிக்கு எதிரானவர்கள்.
இந்த தடையை எதிர்ப்பதன் மூலம், அவர்கள் வன்முறை மற்றும் கொலைகளை ஆதரிக்கின்றனர். ஆர்.எஸ்.எஸ்-க்கு தடை கோருபவர்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள். இன்று ஆர்.எஸ்.எஸ்ஸைத் தடை செய்யக் கோரும் அனைத்துத் தலைவர்களும் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியால் கொண்டு வரப்பட்ட அவசரநிலையின் போது சிறையில் அடைக்கப்பட்டனர். ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களின் போராட்டமும், அவர்களின் தியாகமும்தான் இந்தத் தலைவர்கள் அனைவரையும் சிறையிலிருந்து வெளியே கொண்டு வந்தது. ஆர்.எஸ்.எஸ். இந்திய அரசியலமைப்பை பாதுகாத்ததுடன், நாடு சர்வாதிகார ஆட்சிக்கு செல்வதை தடுத்து நிறுத்தியது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.