search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சமூக வலைத்தளங்கள்"

    • முகரத்தின்போது வெறுப்பு பேச்சு, வன்முறையை கட்டுப்படுத்த பஞ்சாப் மாகாண அரசு முடிவு.
    • மரியம் ஷெபாஸின் கேபினட் கமிட்டியின் பரிந்துரை அடிப்படையில் மத்திய அரசுக்கு பரிந்துரை.

    பெரும்பாலான பாகிஸ்தான் மக்கள் வாட்ஸ்அப், பேஸ்புக், டிக்டாக், இன்ஸ்டாகிராம், யூடியூப், எக்ஸ் போன்ற சமூக சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி வருகின்றன. இந்த நிலையில் ஜூலை 13-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை ஒரு வாரத்திற்கு வெறுப்பு பேச்சு போன்றவற்றை தவிர்க்க பாகிஸதானில் தடைவிதிக்கப்படுகிறது.

    முகரம் பண்டியை முன்னிட்டு ஜூலை 13-ந்தேதி முதல் ஜூலை 18-ந்தேதி வரை (முகரம் மாதம் 6-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை) பஞ்சாப் மாகாணத்தில் தடைவிதிக்க வேண்டும் அம்மாகாண முதல்வர் மரியம் நவாஸின் சட்டம் ஒழுங்கிற்கான கேபினட் கமிட்டி பரிந்துரை செய்துள்ளது.

    வெறுப்பு பேச்சு, வன்முறை போன்ற சம்பவங்களை தவிர்க்க இந்த நடவடிக்கை மேற்கொள்ள இருப்பதாக பஞ்சாப் அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

    பஞ்சாப் அரசு ஷெபாஸ் ஷெரீப் தலைமியிலான மத்திய அரசுக்கு இது தொடர்பாக வேண்டுகோள் விடுத்துள்ளது. மத்திய அரசு தடைவிதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பாகிஸ்தான் ராணுவத்தின் தலைமை ஜெனரல் ஆசிம் முனிர் ஏற்கனவே, சமூக வலைத்தளங்களை தீய மீடியா என குறிப்பிட்டள்ளார். அவற்றை டிஜிட்டில் பயங்கரவாதம் என அழைத்த அவர், அதை எதிர்த்து போராடுவது அவசம் என வலியுறுத்தியுள்ளார்.

    கடந்த பிப்ரவரி மாதம் தேர்தல் முடிவுகள் மாற்றப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் எக்ஸ் தளம் முடக்கப்பட்டது. ஏப்ரல் 2022-ல் நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் வெளியேற்றப்பட்டதில் இருந்து ராணுவம் மற்றும் அரசாங்கம் சமூக ஊடகங்களில் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டன என்பது குறிப்பிடத்தக்கது.

    பஞ்சாப் மாகாணத்தில் சுமார் 12 கோடி மக்கள் வசித்து வருகிறார்கள்.

    • கடந்த 12 மாதங்களில் உலகில் உள்ள குழந்தைகளில் எட்டில் ஒருவர் ஆன்லைன் மூலம் பாலியல் சுரண்டலுக்கு ஆளாகின்றனர்.
    • விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியுள்ள இந்த பிரச்சனை உலகளாவிய தொற்றுநோயாகப் பரவி வருவதாக ஆய்வாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

    உலக அளவில் ஒரு வருட காலத்தில்  300 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் ஆன்லைனில் பாலியல் சுரண்டலுக்கு ஆளாகின்றனர் என்று அதிர்ச்சி அறிக்கை வெளியாகியுள்ளது. ஸ்காட்லாந்தின் எடின்பெர்க் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில், கடந்த 12 மாதங்களில் உலகில் உள்ள குழந்தைகளில் எட்டில் ஒருவர் ஆன்லைன் மூலம் பாலியல் சுரண்டலுக்கு ஆளாகின்றனர்.

     

    குழந்தைகளைக் கட்டாயப்படுத்தி ஆபாசப் வீடியோ எடுத்து இணையத்தில் பகிர்தல்,செக்ஸ்டிங் (ஆபாச உரையாடல்) செய்தல், பாலியல் ரீதியான செயல்களை செய்ய வற்புறுத்துதல், டீப்பேக் வீடியோக்கள் மற்றும் படங்களை AI தொழில்நுட்பம் மூலம் உருவாக்கி பிளாக்மெயில் செய்து தங்களின் பேச்சுக்கு இணங்க வைத்தல் என எண்ணிலடங்கா குற்றங்கள் சிறுவர் சிறுமிகளுக்கு எதிராக அதிகம் அரங்கேறத் தொடங்கியுள்ளன.

     

     

    மோசடி செய்பவர்கள் பெரும்பாலும் தங்களை இளைஞர்கள் போல் காட்டிக்கொண்டு சமூக ஊடகங்கள் மூலம் சிறுவர், சிறுமிகளை ஏமாற்றுகிறார். உலகம் முழுவதும் இந்த வகை குற்றங்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில் முக்கியமாக உலகின் ராட்சத பொருளாதாரத்தைக் கொண்ட நாடான அமெரிக்காவில் அதிகமாக இந்த குற்றங்கள் நடந்துவருவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியுள்ள இந்த பிரச்சனை உலகளாவிய தொற்றுநோயாகப் பரவி வருவதாக ஆய்வாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். 

     

    • உறவினர் திருமணத்திற்காக குடும்பத்துடன் தூத்துக்குடி சென்றுள்ளார்.
    • 30 ஆயிரம் ரொக்கம் மற்றும் 2 பவுன் நகை திருட்டு போயிருந்தது தெரிய வந்தது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த சாமளாபுரம் பகுதியை சேர்ந்தவர் லாரன்ஸ்.இவர் அதே பகுதியில் காய்கறி கடை நடத்தி வருகிறார். தனது மனைவி மற்றும் தம்பியுடன் வசித்து வருகிறார்.

    இவர் இரண்டு நாட்களுக்கு முன்பு தனது உறவினர் திருமணத்திற்காக குடும்பத்துடன் தூத்துக்குடி சென்றுள்ளார்.திருமணம் முடிந்து வந்த போது அவரது வீட்டின் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 30 ஆயிரம் ரொக்கம் மற்றும் 2 பவுன் நகை திருட்டு போயிருந்தது தெரிய வந்தது.அதனை தொடர்ந்து அவரது வீட்டில் வைத்திருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது சொகுசு காரில் வந்த மர்ம நபர்கள் சிலர் லாரன்ஸ் வீட்டின் உள்ளே செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தது.

    சிசிடிவி., காட்சிகள் அடிப்படையில் மங்கலம் போலீசார் திருடர்கள் யார் என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது மர்ம நபர்கள் சொகுசு காரில் வந்து திருடி செல்லும் சிசிடிவி., காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • சப்- இன்ஸ்பெக்டர் அந்த பெண்ணை தாக்க முயல்வது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது
    • சப்- இன்ஸ்பெக்டர் முரளிதரன் நாகர்கோவில் நேசமணி நகர் போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டு உள்ளார்.

    நாகர்கோவில் :

    மண்டைக்காடு சப்- இன்ஸ்பெக்டராக பணி புரிந்து வந்தவர் முரளிதரன்.

    இவர் நடுவூர் கரையில் புகார் மனு ஒன்று தொடர்பாக விசாரணைக்கு சென்றிருந்தார். அப்போது பெண் ஒருவரிடம் விசாரணை மேற்கொண்டார். விசாரணைக்கு சென்ற பெண் சப்-இன்ஸ்பெக்டர் முரளிதரனிடம் அத்துமீறி பேசியதாக தெரிகிறது.

    இதையடுத்து சப்- இன்ஸ்பெக்டர் அந்த பெண்ணை தாக்க முயல்வது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது.

    இந்த நிலையில் சப்-இன்ஸ்பெக்டர் முரளிதரன் திடீரென இடமாற்றம் செய் யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் பிறப்பித்துள்ளார்.

    மண்டைக்காடு போலீஸ் நிலையத்திலிருந்து சப்- இன்ஸ்பெக்டர் முரளிதரன் நாகர்கோவில் நேசமணி நகர் போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டு உள்ளார்.

    ×