search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசு பள்ளி ஆசிரியை"

    • ரகுநாத் (59). தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி ஜூலியட் பிரேமலதா(56).
    • காலை 10 மணிக்கு புறப்பட்டு காரில் பெங்களூர் நோக்கி சென்றனர். மதியம் 1 மணியளவில் கிருஷ்ணகிரி அருகே ஒரு பாலத்தில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார் அங்கிருந்த சுவரின் மீது மோதியது.

    நாமக்கல்:

    நாமக்கல் பொன்விழா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரகுநாத் (59). தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி ஜூலியட் பிரேமலதா(56).

    அரசு பள்ளி ஆசிரியர்

    இவர் நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் முதுநிலை ஆங்கில பட்டதாரி ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.

    இந்த நிலையில் பெங்களூரில் உள்ள தங்கள் மகனைப் பார்ப்பதற்காக கணவன்- மனைவி இருவரும் நாமக்கல்லில் இருந்து காலை 10 மணிக்கு புறப்பட்டு காரில் பெங்களூர் நோக்கி சென்றனர். மதியம் 1 மணியளவில் கிருஷ்ணகிரி அருகே ஒரு பாலத்தில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார் அங்கிருந்த சுவரின் மீது மோதியது.

    இதில் சம்பவ இடத்திலேயே ஆசிரியை ஜூலியட் பிரேமலதா உயிரிழந்தார். அவரது கணவர் ரகுநாத் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு பெங்களூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இந்த விபத்து குறித்து கிருஷ்ணகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பிரேத பரிசோதனைக்குப் பிறகு ஆசிரியையின் உடல் நாமக்கல் கொண்டு வரப்பட்டு இறுதிச் சடங்குகள் நடைபெற்றன.

    அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் உள்ளிட்ட ஆசிரியர்கள் பலரும் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

    • 2 பேர் மீது பெண் வன்கொடுமை பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை
    • படுகாயமடைந்த ஆசிரியை குளச்சல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    கன்னியாகுமரி:

    குளச்சல் அருகே பெத்தேல்புரம் குழிவிளையை சேர்ந்தவர் மரியதாஸ் (60).

    இவரது மனைவி ஆன்லெட் புஷ்பம் (58). இவர் திட்டுவிளை அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். ஆசிரியை தினமும் வேலைக்கு செல்ல குழிவிளை பஸ் ஸ்டாப்பில் நிற்கும்போது அதே பகுதியை சேர்ந்த சுயம்பு மற்றும் வீரமணி ஆகியோர் கிண்டல் செய்வார்களாம். இதனால் அவர்களிடையே முன்விரோதம் ஏற்பட்டது.

    இந்நிலையில் சம்பவத்தன்று மரியதாஸ் மனைவியுடன் காரில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வீடு திரும்பினார். குழிவிளையில் ஒரு கோவில் முன்பு செல்லும்போது சுயம்பு, வீரமணி அவரது காரை வழிமறித்தனர். மரியதாஸ் உடனே காரை வீட்டை நோக்கி ஓட்டினார்.

    இதில் ஆத்திரமடைந்த இருவரும் காரை துரத்தி கொண்டு பின்னால் சென்றனர். வீட்டு முன் நின்ற காரிலிருந்து ஆன்லெட் புஷ்பம் இறங்கும்போது அவரை பிடித்து இழுத்து தாக்கினர். இதை தடுத்த கணவர் மரியதாசிற்கும் அடி-உதை விழுந்தது.இதில் படுகாயமடைந்த ஆசிரியை குளச்சல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து மரியதாஸ் குளச்சல் போலீசில் புகார் செய்தார்.போலீசார் சுயம்பு, வீரமணி ஆகியோர் மீது பெண் வன்கொடுமை பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த சில தினங்களுக்கு முன்பு நிவாஸ் மற்றும் சுசீந்திரன் ஆகியோர் ஆசிரியை கரும்பலகையில் எழுதியவற்றை கையால் அழித்ததாக புகார் கூறப்பட்டது.
    • கோபமடைந்த ஆசிரியை துடப்பதால் மாணவர்களின் முட்டிக்கு கீழ் அடித்ததாக புகார் எழுந்தது.

    அரியலூர்:

    அரியலூர் வாலாஜா நகரம் பகுதியைச் சேர்ந்தவர் அம்பிகாபதி இவரது மகன் நிவாஸ் (வயது9). இந்த சிறுவன் அங்குள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகிறான்.

    அரியலூர் வாலாஜா நகரம் கல்லாத்து பாலம் பகுதியைச் சேர்ந்தவர் ஆசை தம்பி. அவரது மகன் சுசீந்திரன்( 9). இந்த சிறுவனும் அதே பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகிறான்.

    இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நிவாஸ் மற்றும் சுசீந்திரன் ஆகியோர் ஆசிரியை கரும்பலகையில் எழுதியவற்றை கையால் அழித்ததாக புகார் கூறப்பட்டது.

    இதில் கோபமடைந்த அந்த ஆசிரியை துடப்பதால் அந்த மாணவர்களின் முட்டிக்கு கீழ் அடித்ததாக புகார் எழுந்தது.

    இது பற்றி அறிந்த அந்த மாணவர்களின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க கோரி தலைமை ஆசிரியரிடம் புகார் மனு அளித்தனர். ஆனால் அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் பள்ளிக்கூடத்தை முற்றுகையிட்டனர்.

    இதுபற்றி தகவல் அறிந்த மாவட்ட கல்வி அலுவலர் விஜயலட்சுமி, பள்ளிக்கூடத்தில் நேரடி விசாரணை நடத்தினார்.

    பாதிக்கப்பட்ட மாணவர்கள், சக மாணவர்கள், ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    விசாரணை அறிக்கையின் அடிப்படையில் ஆசிரியையின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களை ஆசிரியை துடப்பத்தால் அடித்த சம்பவம் அரியலூரில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×