search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுப்ரமணிய சாமி"

    • பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி, வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் ஜெயின் ஆகியோர் இந்த மனுவை அளித்திருந்தனர்.
    • அடுத்து வரும் அரசுகளும், தங்களுக்கு ஏற்ப முகவுரையை தொடர்ந்து திருத்தம் செய்யும் வாய்ப்பு உள்ளது.

    இந்திய அரசியலமைப்பின் முகவுரையில் உள்ள 'மதச்சார்பற்ற' மற்றும் 'சோஷியலிச' என்ற வார்த்தைகளை நீக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது. பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி, வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் ஜெயின் ஆகியோர் இந்த மனுவை அளித்திருந்தனர்.

    இந்நிலையில் இந்த மனுவானது உச்சநீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கண்ணா மற்றும் சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. 1976 ஆம் ஆண்டு எமர்ஜென்சி காலத்தில் 42 வது சட்டத்திருத்தத்தின் மூலம் இந்திரா காந்தி அரசால் பாராளுமன்றத்தில் உரிய விவாதம் நடத்தப்படாமல் தன்னிச்சையாக இந்த வார்த்தைகள் முகவுரையில் சேர்க்கப்பட்டுள்ளது.

    இது செல்லாது. அவ்வாறு செல்லும் என்றால், அடுத்து வரும் அரசுகளும், தங்களுக்கு ஏற்ப முகவுரையை தொடர்ந்து திருத்தம் செய்யும் வாய்ப்பு உள்ளது. முகவுரையை எழுதியபோது, சோஷலிசம் என்ற வார்த்தையை சேர்த்தால், மக்களின் தனிநபர் சுதந்திரம் பாதிக்கப்படும் என்பதாலேயே அதை அம்பேத்கர் சேர்க்கவில்லை. எனவே 42வது சட்டத் திருத்தம் செல்லாது என்று அறிவித்து, சோஷலிசம் மற்றும் மதச்சார்பின்மை ஆகிய வார்த்தைகளை நீக்கி 1949 இல் கொண்டுவரப்பட்ட முகவுரையைத் தொடர உத்தரவிட வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

     

    இதன்பிறகு பேசிய நீதிபதிகள், உங்களுக்கு இந்தியா மதச்சார்பற்று இருப்பது பிடிக்கவில்லையா அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை கட்டமைப்பின் ஒரு பகுதியே மதச்சார்பின்மை. அரசியலமைப்பு முகவுரையில் உள்ள சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய வார்த்தைகளும் மதச்சார்பின்மை என்பதையே குறிக்கின்றன.

    எனவே அதை நீக்க உத்தரவிட விடமுடியாது. அதே நேரம் மனுதாரர் சுட்டிக்காட்டியபடி முகவுரையை சட்டத் திருத்தம் வாயிலாக திருத்தம் செய்ய முடியுமா என்பது குறித்து ஆராயப்படும் என்று தெரிவித்தனர்.

    இதற்கிடையே இந்துத்துவா என்ற வார்த்தையை இந்திய அரசியலமைப்பு என்று பொருள்படும் பாரதிய சம்விதானத்வா என்பதாக மாற்றக்கோரிய மற்றொரு மனுவும் உச்சநீதிமன்றத்தால் நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்திய பகுதிகளை சீனா தொடர்ந்து ஆக்கிரமிப்பு செய்து வருகிறது.
    • சீன ஆக்கிரமிப்பை பிரதமர் மோடி தடுக்கவில்லை.

    புதுடெல்லி:

    பா.ஜ.க. மூத்த தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான சுப்ரமணிய சாமி தனியார் நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது:

    இந்திய பகுதிகளைத் தொடர்ந்து சீனா ஆக்கிரமிப்பு செய்து வருகிறது. சீன ஆக்கிரமிப்பை பிரதமர் மோடி தடுக்கவில்லை.

    இந்திய பகுதிகளை ஆக்கிரமித்த சீனப்படைகளை ஏற்கனவே நாம் இரு முறை விரட்டியுள்ளோம்.

    நம்மிடம் உள்ள ராணுவ வலிமையால் சீனா ஆக்கிரமித்த பகுதிகளை எளிதில் கைப்பற்றிவிடலாம். ஆனால் பிரதமர் மோடி அதை செய்வதில்லை. காரணம் என்னவென்றால் பிரதமர் மோடியை சீனா பிளாக்மெயில் செய்து வருகிறது.

    சீனா பிரதமர் மோடியை பிளாக்மெயில் செய்வதற்கான காரணத்தை தேர்தலுக்குப் பிறகு வெளிப்படுத்துவேன் என தெரிவித்துள்ளார்.

    மோடி மீண்டும் பிரதமர் பதவிக்கு வரக்கூடாது என கடந்த மாதம் கருத்து தெரிவித்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கொழும்புவில் ராஜபக்சே சகோதரர்களை சுப்ரமணிய சாமி நேரில் சந்தித்து பேசினார்.
    • அதிபர் பதவியில் இருந்து விலகி வெளிநாடு தப்பி ஓடிய கோத்தபய ராஜபக்சே சமீபத்தில் தாய்நாடு திரும்பினர்.

    கொழும்பு:

    பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவர் சுப்ரமணிய சாமி. இலங்கை முன்னாள் அதிபர்களான மகிந்த மற்றும் கோத்தபய ராஜபக்சேவின் குடும்ப நண்பர் ஆவார். அவர்களை கொழும்புவில் அடிக்கடி சந்தித்தும் வருகிறார்.

    இந்நிலையில், கொழும்புவில் நேற்று முன்தினம் மகிந்த ராஜபக்சே வீட்டில் நடந்த நவராத்திரி பூஜையில் சுப்ரமணிய சாமி பங்கேற்றார். அப்போது அவரைச் சந்தித்து பேசினார். இதைத்தொடர்ந்து நேற்று கோத்தபய ராஜபக்சேவையும் சந்தித்துப் பேசினார். இந்த தகவல்களை ராஜபக்சே குடும்ப வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    வெளிநாடு தப்பி ஓடிய கோத்தபய ராஜபக்சே சமீபத்தில்தான் தாய்நாடு திரும்பினார். அவரைச் சந்தித்த முதல் வெளிநாட்டு தலைவர் சுப்ரமணிய சாமி என்பது குறிப்பிடத்தக்கது

    ×