என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சிறுசேமிப்பு"
- பெண் குழந்தைகளுக்கான அஞ்சலக சிறு சேமிப்பு செல்வமகள் திட்டம் தொடக்க விழா நடந்தது.
- 10 கிராம ஊராட்சிகளில் வசிக்கும் 10 வயதுக்குட் பட்ட 120 பெண் குழந்தைகளுக்கு இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
கும்பகோணம்:
திருவிடைமருதூர் வட்டம் திருப்பனந்தாள் அருகே பந்தநல்லூரில் 10 கிராம ஊராட்சி பெண் குழந்தைகளுக்கான அஞ்சலக சிறு சேமிப்பு செல்வமகள் திட்டம் தொடக்க விழா நடந்தது.
திருப்பனந்தாள் ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவர் கோ.க.அண்ணா துரை, ஒன்றிய செயலாளர்கள் மிசா மனோகரன், உதயசந்தி ரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் அஞ்சல் துறை மேலாளர் சுரேஷ்பாபு திட்ட விளக்கமளித்தார்.
அரசு தலைமை கொறடா கோவி செழியன், சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு திட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.
இதில் பந்தநல்லூர், நெய்குப்பை, நெய்வாசல், திருமங்கைச்சேரி, ஆரலூர், கீழ்மாந்தூர், கருப்பூர், வேளூர், அத்திப்பாக்கம், மேலக்காட்டூர் ஆகிய 10 கிராம ஊராட்சிகளில் வசிக்கும் 10 வயதுக்குட் பட்ட 120 பெண் குழந்தைகளுக்கு இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
- ‘செல்வ மகள்’ சேமிப்பு திட்டத்துக்கான வட்டியில் மாற்றம் இல்லை.
- மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்ட வட்டி, 0.4 சதவீதம் உயர்ந்து 8 சதவீதம் ஆகிறது.
புதுடெல்லி
சிறுசேமிப்பு திட்டங்களுக்கு காலாண்டுக்கு ஒருமுறை வட்டி விகிதத்தை மத்திய நிதி அமைச்சகம் மாற்றி அமைத்து வருகிறது.
இந்தநிலையில், ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான காலாண்டுக்கான வட்டி விகிதத்தை நேற்று மாற்றி அமைத்தது. அதன்படி, வட்டி விகிதம் 1.1 சதவீதம்வரை உயர்த்தப்பட்டுள்ளது.
மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்ட வட்டி, 0.4 சதவீதம் உயர்ந்து 8 சதவீதம் ஆகிறது. கிசான் விகாஸ் பத்திரத்துக்கு, 123 மாதங்களில் முதிர்வடையும்வகையில் 7 சதவீத வட்டி வழங்கப்பட்டு வந்தது. அது, 120 மாதங்களில் முதிர்வடையும்வகையில், 7.2 சதவீத வட்டியாக உயர்த்தப்பட்டுள்ளது.
மாதாந்திர வருவாய் திட்ட வட்டி, 0.4 சதவீதம் உயர்ந்து 7.1 சதவீதம் ஆகிறது. தேசிய சிறுசேமிப்பு சான்றிதழ் வட்டி விகிதம் 0.2 சதவீதம் உயர்ந்து 7 சதவீதம் ஆகிறது.
அஞ்சலகங்களில் ஓராண்டு டெபாசிட் திட்ட வட்டி 6.6 சதவீதமாகவும், 2 வருட டெபா சிட் வட்டி 6.8 சதவீதமாகவும், 3 ஆண்டு டெபாசிட் வட்டி 6.9 சதவீதமாகவும், 5 ஆண்டு டெபாசிட் வட்டி 7 சதவீதமாக வும் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் வட்டி, 1.1 சதவீதம்வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு வருமானவரி சலுகை கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
அதே சமயத்தில், பெண் குழந்தைகளுக்கான 'செல்வமகள்' சேமிப்பு திட்ட வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படவில்லை. அது, 7.6 சதவீதமாக நீடிக்கும். அதுபோல், பொது வருங்கால வைப்புநிதிக்கான வட்டியும் 7.1 சதவீதமாக நீடிக்கும்.
வங்கி சேமிப்பு கணக்குக்கான வட்டி விகிதம் 4 சதவீதமாக நீடிக்கும்.
தொடர்ந்து 2-வது காலாண்டாக சிறுசேமிப்பு வட்டி விகிதம் உயர்த்தப்படுகிறது.
பணவீக்கத்தை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி, கடன்களுக்கான வட்டி விகிதத்தை தொடர்ந்து 5 தடவை உயர்த்தி உள்ளது. அதை பின்பற்றி டெபாசிட்களுக்கான வட்டி விகிதத்தை வங்கிகள் உயர்த்தி உள்ளன.
அந்த வரிசையில், சிறுசேமிப்பு திட்ட வட்டி விகிதமும் உயர்த்தப்பட்டுள்ளது.
- சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டியை 0.3 சதவீதம் வரை மத்திய அரசு உயர்த்தியது.
- விவசாயிகள் கடன் அட்டைக்கான காலவரம்பும், வட்டி விகிதமும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
அஞ்சலகங்களில் நடைமுறையில் உள்ள பல்வேறு சிறுசேமிப்பு திட்டங்களுக்கு காலாண்டுக்கு (3 மாதங்கள்) ஒரு தடவை மத்திய அரசு வட்டி விகிதங்களை மாற்றி அமைத்து வருகிறது.
இந்நிலையில், நடப்பு நிதியாண்டின் 3-வது காலாண்டான அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரையிலான 3 மாதங்களுக்கு வட்டி விகிதத்தை மத்திய நிதி அமைச்சகம் நேற்று மாற்றி அமைத்தது.
அதன்படி, 3 ஆண்டுகால டெபாசிட்டுக்கான வட்டி விகிதம் 5.5 சதவீதத்தில் இருந்து 5.8 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது, 0.3 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.
மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்துக்கான வட்டி 7.4 சதவீதத்தில் இருந்து 7.6 சதவீதமாக உயருகிறது. இது, 0.2 சதவீத உயர்வு ஆகும்.
விவசாயிகள் கடன் அட்டைக்கான காலவரம்பும், வட்டி விகிதமும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த மே மாதத்தில் இருந்து பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த கடன்களுக்கான வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி 1.4 சதவீதம் உயர்த்தியுள்ளது. 3 தவணைகளாக இவை உயர்த்தப்பட்டன. அதற்கேற்ப முதலீட்டுக்கான வட்டி விகிதங்களையும் மத்திய அரசு உயர்த்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்