search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புது ரேசன் கார்டு"

    • புது ரேசன் கார்டு 587 வரப்பெற்று அவை 14 தாலுகா அலுவலகத்துக்கு தனித்தனியே பிரித்து அனுப்பப்பட்டுள்ளன.
    • புது ரேசன் கார்டை கட்டணமின்றி பெற்றுக்கொள்ளலாம்.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த மாதம் 26-ந்தேதி புது ரேசன் கார்டு 587 வரப்பெற்று அவை 14 தாலுகா அலுவலகத்துக்கு தனித்தனியே பிரித்து அனுப்பப்பட்டுள்ளன. அதில் அதிகபட்சமாக சேலம் மேற்கு தாலுகாவுக்கு 101 குறைந்தபட்சமாக ஏற்காடு -5 ரேசன் கார்டுகள் வரபெற்றுள்ளது. விண்ணப்பித்த பயனாளிகள் சம்பந்தப்பட்ட தாலுகாவுக்கு சென்று புது ரேசன் கார்டை கட்டணமின்றி பெற்றுக்கொள்ளலாம். நடப்பாடு இதுவரை 19 ஆயி ரத்து 896 புது ரேசன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் சேர்த்து, தற்போது மாவட்டத்தில் மொத்தம் ரேசன் கார்டு எண்ணிக்கை 11 லட்சத்து 813 ஆக அதிகரித்துள்ளது.

    ×