என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "அரசு மருத்துவ கல்லூரி"
- நியாயமான விளக்கம் தமிழ்நாடு அரசின் சார்பில் தேசிய மருத்துவ ஆணையத்திற்கு அளிக்கப்படவில்லை
- மருத்துவர்கள் நியமிக்கப்பட வில்லை என்பதும் தெளிவாகிறது.
சென்னை:
முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாட்டில் உள்ள பல மருத்துவக் கல்லூரிகளுக்கு மூன்று லட்சம் ரூபாய் அபராதத்தை தேசிய மருத்துவ ஆணையம் விதித்துள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குநர், மருத்துவக் கல்லூரி வளாகங்களில் 75 விழுக்காட்டிற்கும் குறைவாக மருத்துவப் பேராசிரியர்கள் இல்லை என்றால் விளக்கம் கேட்டு அறிவிப்புகள் பெறப்படும் என்றும், இதன் அடிப்படையில், தேசிய மருத்துவ ஆணையத்திடமிருந்து அறிவிப்புகள் பெறப்பட்டுள்ளன என்றும், தேர்வுப் பணி, ஆய்வுப் பணி போன்ற காரணங்களால் பயோ மெட்ரிக் வருகைப் பதிவேட்டில் மருத்துவப் பேராசிரியர்கள் கையெழுத்திடவில்லை என்று தெரிவிக்கப்பட்டாலும், அதனை தேசிய மருத்துவ ஆணையம் கணக்கில் எடுத்துக் கொள்ள வில்லை என்றும் கூறி இருக்கிறார்.
அதே சமயத்தில், இதுபோன்ற அபராதம் விதிக்கப்படுவதற்கு முன்பு தொடர்புடைய மருத்துவக் கல்லூரிகளுக்கு இரண்டு முறை விளக்கம் கேட்டு அறிவிப்புகள் அனுப்பப்படும் என்றும், விளக்கங்கள் திருப்தி அளிக்காத பட்சத்தில், கல்லூரி நிர்வாகத்தினருக்கு நேரில் வந்து விளக்கம் அளிக்க வாய்ப்பு அளிக்கப்படும் என்றும், அதற்கு பின்பே அபராதம் விதிக்கப்படும் என்றும் தேசிய மருத்துவ ஆணையத்தின் மருத்துவக் கல்வி வாரியத் தலைவர் தெரிவித்து உள்ளார்.
தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குநரின் கூற்றையும், தேசிய மருத்துவ ஆணைய அதிகாரியின் கூற்றையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, முறையான, நியாயமான விளக்கம் தமிழ்நாடு அரசின் சார்பில் தேசிய மருத்துவ ஆணையத்திற்கு அளிக்கப்படவில்லை என்பதும், போதுமானமருத்துவர்கள் நியமிக்கப்பட வில்லை என்பதும் தெளிவாகிறது.
மாணவ, மாணவியரின் நலனைக் கருத்தில் கொண்டு, முதல்-அமைச்சர் இதில் தனிக் கவனம் செலுத்தி, தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிகளுக்கேற்ப தமிழ்நாடு மருத்துவக் கல்லூரிகளில் காலியாக உள்ள மருத்துவ ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்பவும், இனி வருங்காலங்களில், அங்கீகாரம் ரத்தாகும் நிலை, அபராதம் விதிக்கும் நிலை போன்றவற்றிற்கு மருத்துவக் கல்லூரிகள் தள்ளப்படாது இருப்பதை உறுதி செய்யவும் நட வடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- நீட் தேர்வுக்கு மாணவ-மாணவிகள் கடந்த சில மாதங்களாக தயாராகி வருகிறார்கள்.
- நீட் தேர்வுக்கு இன்னும் 3 மாதங்கள் உள்ள நிலையில் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை:
எம்.பி.பி.எஸ். மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இத்தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே கல்லூரிகளில் சேர தகுதி உள்ளவர்களாக கருதப்படுவார்கள். அந்த அடிப்படையில் நாடு முழுவதும் நீட் தேர்வு ஒரே நேரத்தில் நடத்தப்படுகிறது.
இந்த ஆண்டிற்கான தேர்வு மே மாதம் 5-ந் தேதி நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் தற்போது தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
இன்று முதல் ஆன்லைன் வழியாக மாணவ-மாணவிகள் விண்ணப்பப் பதிவை மேற்கொள்ளலாம். nta.ac.exams, nta.ac.in.neet ஆகிய இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். மார்ச் மாதம் 9-ந் தேதி இரவு 9 மணி வரை விண்ணப்பிக்க அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வை தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சம் பேர் எழுதி வருகிறார்கள்.
அதில் அதிக மதிப்பெண் பெறுபவர்கள் அரசு மருத்துவ கல்லூரிகளில் சேர முடிகிறது.
நீட் தேர்வுக்கு மாணவ-மாணவிகள் கடந்த சில மாதங்களாக தயாராகி வருகிறார்கள். தற்போது பிளஸ்-2 தேர்வு எழுதக் கூடியவர்கள் மற்றும் ஏற்கனவே தேர்வு எழுதி எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காமல் வாய்ப்பை இழந்தவர்கள் மீண்டும் தேர்வு எழுத தயாராகி வருகின்றனர். நீட் தேர்வுக்கு இன்னும் 3 மாதங்கள் உள்ள நிலையில் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
- மாநிலத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை தற்போது 26-ஐ எட்டியுள்ளது.
- முதல்வர் கே.சி.ஆரின் மருமகன், சுகாதாரத்துறை அமைச்சர் ஹரிஷ் ராவ் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தெலுங்கானா மாநிலத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தபட்சம் ஒரு மருத்துவக் கல்லூரியாவது நிறுவ வேண்டும் என்ற அரசின் குறிக்கோளின் ஒரு பகுதியாக, தெலுங்கானா முதல்வர் முதல்வர் கே.சி.சந்திரசேகர் ராவ் 9 மாவட்டங்களில் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளை திறந்து வைத்தார்.
காமரெட்டி, கரீம்நகர், கம்மம், கும்ரம் பீம் ஆசிபாபாத், ஜெயசங்கர் பூபாலப்பள்ளி, ஜங்கான், நிர்மல், ராஜண்ணா சிர்சில்லா மற்றும் விகாராபாத் ஆகிய மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்ச்சியில், முதல்வர் கே.சி.ஆரின் மருமகன், சுகாதாரத்துறை அமைச்சர் ஹரிஷ் ராவ் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து முதல்வர் சந்திரசேகர் ராவ் கூறியதாவது:-
நாட்டில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தெலங்கானாவில் 34 அரசு மருத்துவக் கல்லூரிகள் அமைக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மாநிலத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை தற்போது 26-ஐ எட்டியுள்ளது. மேலும், 8 கல்லூரிகள் அடுத்த கல்வியாண்டு தொடக்கத்தில் திறக்கப்பட உள்ளன.
2014-ல் மருத்துவ இடங்களின் எண்ணிக்கை 2,850 ஆக இருந்தது. தற்போது அந்த எண்ணிக்கை 8,515 ஆக அதிகரித்து உள்ளது. அடுத்த எட்டு புதிய கல்லூரிகள் திறப்பு விழாவுடன் மாநிலத்தில் ஆண்டுக்கு 10,000 மருத்துவர்களை உருவாக்கும்.
2014ல் மாநிலத்தில் மருத்துவமனை படுக்கைகளின் எண்ணிக்கை 17,000 ஆக இருந்தது. தற்போது அது 34,000ஐ எட்டியுள்ளது. அந்த எண்ணிக்கை விரைவில் 50,000 ஐ எட்டும், மேலும் மருத்துவமனைகளில் உள்ள அனைத்து 50,000 படுக்கைகளும் விரைவில் ஆக்ஸிஜன் வசதிகளைக் கொண்டிருக்கும். எந்த நெருக்கடியான சூழலையும் சமாளிக்க தெலுங்கானா 500 டன் ஆக்ஸிஜனை உற்பத்தி செய்கிறது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் மருத்துவக் கல்லூரிகளை நிறுவுவதுடன், பாராமெடிக்கல் பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்க நர்சிங் கல்லூரிகள் மற்றும் நிறுவனங்களை நிறுவுமாறு சுகாதார அமைச்சர் டி. ஹரிஷ் ராவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
சுகாதாரம் தொடர்பான குறிகாட்டிகளில் எஐடிஐ ஆயோக் வழங்கிய தரவரிசையில் தெலுங்கானா 2014ல் 11 வது இடத்தில் இருந்து 3வது இடத்திற்கு வந்துள்ளது. மாநிலத்தில் தாய் இறப்பு விகிதம் மற்றும் சிசு இறப்பு விகிதம் குறைந்துள்ளது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
- பீடி சுருட்டும் தொழிலை கைவிட்டு மாற்றுத்தொழில் தேர்ந்தெடுத்த தொழிலாளர்களுக்கும் அமைச்சர் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
- மத்திய ஆயுஷ் மந்திரி சர்பானந்த சோனாவாலை சந்தித்து, திருச்சியில் எய்ம்ஸ் சித்த மருத்துவ கல்லூரி அமைப்பது தொடர்பான கோரிக்கையை முன்வைக்க உள்ளோம்.
சென்னை:
புகையிலை பயிரிடுவதை கைவிட்டு மாற்றுத்தொழில் தேர்ந்தெடுத்த விவசாயிகளுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ள பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை இயக்குநரகத்தில், சுகாதார நலப்பணியாளர்களின் திறன் மேம்பாட்டிற்கான 'ரேப்பிட் இமுனிசேசன் ஸ்கில் என்கேன்ஸ்மென்ட்' செயலியை தொடங்கி வைத்தார்.
பின்னர், புகையிலை பயிரிடுவதை கைவிட்டு மாற்றுத்தொழில் தேர்ந்தெடுத்த விவசாயிகளுக்கும், பீடி சுருட்டும் தொழிலை கைவிட்டு மாற்றுத்தொழில் தேர்ந்தெடுத்த தொழிலாளர்களுக்கும் அமைச்சர் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
பின்னர் அவர் அளித்த பேட்டி வருமாறு:-
3 அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை முற்றிலுமாக தடை செய்யப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக மத்திய சுகாதாரத் துறை மந்திரி மன்சுக் மாண்டவியாவை சந்தித்து மருத்துவத்துறை சம்பந்தப்பட்ட தேவைகளை விளக்கிக்கூறி, இப்பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து பேச உள்ளோம்.
அதன் பிறகு மத்திய ஆயுஷ் மந்திரி சர்பானந்த சோனாவாலை சந்தித்து, திருச்சியில் எய்ம்ஸ் சித்த மருத்துவ கல்லூரி அமைப்பது தொடர்பான கோரிக்கையை முன்வைக்க உள்ளோம். அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள சிறிய குறைபாடுகளுக்கு எல்லாம் அங்கீகாரம் ரத்து போன்றவை ஏற்புடையது அல்ல.
- மருத்துவ கல்லூரிக்கான அங்கீகாரம் ரத்தைக் கண்டித்து ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரி மற்றும் கல்லூரி வாசல் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
- தேசிய மருத்துவ ஆணையம் ரத்து செய்ததை எதிர்த்தும், மத்திய அரசை கண்டித்தும் அவர்கள் கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
ராயபுரம்:
சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி, திருச்சி விஸ்வநாதன் அரசு மருத்துவ கல்லூரி, தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி ஆகிய 3 கல்லூரிகளில் குறிப்பிட்ட விதிமுறைகளை பின்பற்றாததால் அந்த கல்லூரிகளுக்கான அங்கீகாரத்தை திரும்ப பெற முடிவு செய்து இளங்கலை மருத்துவ கல்வி வாரியம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
பயோமெட்ரிக் வருகை பதிவில் குறைபாடு, கண்காணிப்பு கேமராக்கள் திருப்திகரமாக இல்லாதது ஆகியவற்றை காரணமாக சுட்டிக்காட்டி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
இந்த நிலையில் மருத்துவ கல்லூரிக்கான அங்கீகாரம் ரத்தைக் கண்டித்து ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரி மற்றும் கல்லூரி வாசல் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். செல்வராஜ் எம்.பி. தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தின்போது, மருத்துவக் கல்லூரிகளில் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான அங்கீகாரத்தை தேசிய மருத்துவ ஆணையம் ரத்து செய்ததை எதிர்த்தும், மத்திய அரசை கண்டித்தும் அவர்கள் கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
இதில், வடசென்னை மாவட்ட செயலாளர் வெங்கடேஷ் வேம்புலி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- 500 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை தடைபடும் நிலைமை உருவாகி இருக்கிறது.
- மருத்துவக்கல்லூரி நிர்வாகங்கள் அளித்த விளக்கத்தை ஏற்க மறுத்து, அங்கீகாரத்தை ரத்து செய்தது வன்மையான கண்டனத்துக்கு உரியது.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தேசிய மருத்துவ ஆணையம், தமிழ்நாட்டின் பழமை வாய்ந்த சென்னை ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி மற்றும் திருச்சி, தர்மபுரியில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய முடிவு செய்திருப்பது அதிர்ச்சி தருகிறது.
ஒன்றிய பா.ஜ.க அரசின் இந்நடவடிக்கையால் இந்த 3 கல்லூரிகளில் நடப்பு ஆண்டில் மருத்துவக்கல்விக்கான 500 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை தடைபடும் நிலைமை உருவாகி இருக்கிறது.
பேராசிரியர் மற்றும் மாணவர்களின் ஆதாருடன் இணைக்கப்பட்ட பயோ-மெட்ரிக் வருகைப் பதிவு, சிசிடிவி கேமராக்கள் போன்றவை முறையாக இல்லாததும், பராமரிக்கப்படாததும் அங்கீகாரத்தை ரத்து செய்ததற்குக் காரணம் என தேசிய மருத்துவ ஆணையம் கூறுவதை ஏற்று கொள்ள முடியாது.
மருத்துவக்கல்லூரி நிர்வாகங்கள் அளித்த விளக்கத்தை ஏற்க மறுத்து, அங்கீகாரத்தை ரத்து செய்தது வன்மையான கண்டனத்துக்கு உரியது.
எனவே ஒன்றிய அரசு, சென்னை ஸ்டான்லி, திருச்சி, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி அங்கீகாரத்தை ரத்து செய்யும் முடிவை கைவிட வேணடும் என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- மத்திய அரசின் மருத்துவ துறையின் தவறான கொள்கையால் தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகளில் உள்ள இடங்கள் சரண்டர் செய்வதிலும், அதனை நிரப்புவதிலும் சிக்கல் ஏற்பட்டு வருகிறது.
- தமிழகத்தில் உள்ள சிறந்த அரசு மருத்துவ கல்லூரிகளில் இடங்கள் இருந்தும் தவறான கொள்கையால் சேர்ந்து படிக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
சென்னை:
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகள் மற்றும் தனியார் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி. எஸ். இடங்களுக்கு 4 கட்டமாக ஆன்லைன் கலந்தாய்வு நடந்து முடிந்துள்ளது.
அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு இந்திய மருத்துவ கவுன்சில் 2 முறை ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடத்தியது. அதன்பிறகும் தமிழகத்தில் உள்ள பிரபலமான அரசு மருத்துவக் கல்லூரிகளில் 6 எம்.பி.பி.எஸ். இடங்கள் காலியாக உள்ளன.
சென்னை மருத்துவ கல்லூரியில் (எம்.எம்.சி.) ஒரு இடம், ஸ்டான்லி மருத்துவ கல்லூரியில் ஒரு இடம், மதுரை, தஞ்சாவூர், கரூர், அரியலூர் ஆகிய அரசு மருத்துவ கல்லூரிகளில் தலா ஒரு எம்.பி.பி.எஸ். இடங்கள் ஒரு கலந்தாய்வு முடிந்தபிறகும் காலியாக இருக்கின்றன.
இந்த ஆண்டு தமிழ்நாடு மருத்துவ கல்வி இயக்ககம் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு 800 எம்.பி.பி.எஸ். இடங்களை ஒதுக்கியது. 15 சதவீத ஒதுக்கீட்டின் அடிப்படையில் ஒதுக்கப்பட்ட அந்த இடங்களுக்கு டெல்லியில் உள்ள பொது சுகாதார பணிகள் இயக்ககம் கலந்தாய்வு நடத்தி முடித்துள்ளது.
டிசம்பர் 29-ந்தேதியுடன் மருத்துவ கலந்தாய்வு முடிவுக்கு வந்தன. அதன் பிறகும் அகில இந்திய ஒதுக்கீட்டில் இடங்கள் ஒதுக்கப்பட்ட 6 பேர் அந்த இடங்களில் சேரவில்லை. அவர்கள் அனைவரும் வேறு மாநிலத்தவர்கள்.
அவர்கள் அகில இந்திய ஒதுக்கீட்டு கலந்தாய்விலும் மாநில ஒதுக்கீட்டு கலந்தாய்விலும் பங்கேற்று இடங்களை தேர்வு செய்து பின்னர் மாநில ஒதுக்கீட்டு இடத்தில் சேர்ந்துள்ளனர். இதனால் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் தற்போது காலியாக உள்ளன.
2020 வரை 2 கட்ட அகில இந்திய கலந்தாய்விற்கு பிறகு காலியாக உள்ள இடங்கள் மாநில அரசுக்கு கொடுக்கப்பட்டு வந்தது. ஆனால் 2021-ம் ஆண்டுக்கு பிறகு காலி இடங்கள் மாநில அரசிடம் சரண்டர் செய்வது இல்லை.
கடந்த ஆண்டு கலந்தாய்வு முடிந்த பிறகு 24 இடங்கள் காலியாக இருந்தன. அரசு மருத்துவக்கல்லூரிகளில் காலியாக இருந்த அந்த இடங்களை நிரப்ப அனுமதிக்க வேண்டும் என தமிழக அரசு கடிதம் எழுதியும் கோர்ட்டு மூலம் அணுகியும் வாய்ப்பை பெற்றது.
மத்திய அரசின் மருத்துவ துறையின் தவறான கொள்கையால் தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகளில் உள்ள இடங்கள் சரண்டர் செய்வதிலும், அதனை நிரப்புவதிலும் சிக்கல் ஏற்பட்டு வருகிறது.
தமிழகத்தில் உள்ள சிறந்த அரசு மருத்துவ கல்லூரிகளில் இடங்கள் இருந்தும் தவறான கொள்கையால் சேர்ந்து படிக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இந்த கொள்கையை மாற்ற வேண்டும் என்றும், இதனால் அந்த இடங்கள் கடைசி வரை காலியாகவே போய்விடுவதால் மருத்துவ கனவுகளுடன் வந்த ஏழை, நடுத்தர மாணவர்களுக்கு கிடைக்காமல் போய்விடுகிறது என்று கல்வியாளர்கள் மனம் குமுறுகிறார்கள்.
இதுபற்றி மருத்துவ மாணவர் சேர்க்கை செயலாளர் டாக்டர் முத்துசெல்வன் கூறுகையில், 'அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள், எல்லாம் நிரம்பி விட்டன. இது குறித்து வேறு எதையும் கூற இயலாது' என்றார்.
- தூய்மை பணியாளர்கள் சங்கத்தினர் இன்று 4-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
- போராட்டம் காரணமாக இது வரை ஊதியம் வழங்க வில்லை.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் ஈரோடு மருத்துவ கல்லூரி மருத்துவ மனை செயல்பட்டு வரு கிறது. இங்கு தூய்மை பணி, காவலர், ஹவுஸ் கீப்பிங் ஆகிய பணிகளில் தனியார் நிறுவனம் சார்பில் ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்கள் வேலை செய்து வரு கிறார்கள்.
இவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் அறிவித்த குறைந்த பட்ச ஊதியம் வழங்க வேண்டும். மேலும் வார விடுமுறை சூழற்சி முறையில் வழங்க வேண்டும். ஒப்பந்த முறை ப்படி 3 சிப்ட் வழங்க வேண்டும்.
பெண் ஊழியர்களுக்கு இரவு பணி வழங்க கூடாது என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி கடந்த 6-ந் முதல் தமிழக மருத்துவமனை தூய்மை பணியாளர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் உள்ளிருப்பு போராட்டம் தொடங்கி நடந்து வருகிறது.
அவர்கள் நேற்று 3-வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து தூய்மை பணியாளர்கள் சங்கத்தினர் இன்று (வெள்ளிக்கிழமை) 4-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து சங்க நிர்வாகிகள் கூறியதாவது:
நாங்கள் கோரிக்கைகள் வலியுறுத்தி இன்று 4-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். மருத்துவமனை டீன் எங்களி டம் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது அவர் பேசும் போது, தனி யார் நிறுவனம் தான் உங்களின் கோரிக்கை ஏற்க வேண்டும் என தெரிவி த்தனர்.
மேலும் மாதம் தோறும் 7-ந் தேதி எங்களுக்கு ஊதியம் வழங்கப்படும். ஆனால் போராட்டம் காரணமாக இது வரை ஊதியம் வழங்க வில்லை. போராட்டம் கைவிட பல அழுத்தம் கொடுக்க ப்படுகிறது. கோரிக்கைகள் நிறை வேறும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என்றனர்.
- கீழ்பாக்கம் மருத்துவ கல்லூரி பேராசிரியர் சீனிவாசன் கரூர் மருத்துவ கல்லூரி முதல்வராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
- தேனி மருத்துவ கல்லூரி முதல்வர் பாலாஜி தஞ்சாவூர் மருத்துவ கல்லூரிக்கு மாற்றப்பட்டு உள்ளார்.
சென்னை:
அரசு மருத்துவ கல்லூரிகளில் பணியாற்றிய 6 பேராசிரியர்களுக்கு மருத்துவ கல்லூரி முதல்வர்களாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை மருத்துவ கல்லூரி இயக்குனராக இருந்த கே.நாராயணசாமி செங்கல்பட்டு மருத்துவ கல்லூரி முதல்வராகவும், தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி பேராசிரியர் செந்தில்குமார் ராமநாதபுரம் மருத்துவ கல்லூரி முதல்வராகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
கீழ்பாக்கம் மருத்துவ கல்லூரி பேராசிரியர் சீனிவாசன் கரூர் மருத்துவ கல்லூரி முதல்வராகவும், சென்னை மருத்துவ கல்லூரி இயக்குனர் திருப்பதி கடலூர் மருத்துவ கல்லூரி முதல்வராகவும், ஓமந்தூரார் மருத்துவ கல்லூரி கண்காணிப்பாளர் ராஜாஸ்ரீ திண்டுக்கல் மருத்துவ கல்லூரி முதல்வராகவும் பதவி உயர்வு பெற்றனர்.
திருச்சி மருத்துவ கல்லூரி பேராசிரியர் சிவக்குமார், தூத்துக்குடி மருத்துவ கல்லூரி முதல்வராகவும், பெரம்பலூர் மருத்துவ கல்லூரி முதல்வர் மீனாட்சி சுந்தரம் தேனி மருத்துவ கல்லூரிக்கும், தேனி மருத்துவ கல்லூரி முதல்வர் பாலாஜி தஞ்சாவூர் மருத்துவ கல்லூரிக்கும் மாற்றப்பட்டு உள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்