என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "புத்தக வெளியீட்டு விழா"
- கலைஞரால் பட்டை தீட்டப்பட்டவர் பொன்முடி. அதனால்தான் தனது செயல்பாடுகளால் மின்னுகிறார்.
- திராவிடம் என்ற சொல்லை கேட்டாலே சிலருக்கு அச்சமாக உள்ளது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் அமைச்சர் பொன்முடி எழுதியுள்ள 'திராவிட இயக்கமும் கருப்பர் இயக்கமும்' நூல் வெளியீட்டு விழா நடைபெற்று வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புத்தகத்தை வெளியிட்டார்.
பின்னர் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியதாவது:-
கலைஞரால் பட்டை தீட்டப்பட்டவர் பொன்முடி. அதனால்தான் தனது செயல்பாடுகளால் மின்னுகிறார்.
ஆழ்கடலில் கண்டெடுத்த நன்முத்து பென்முடி. அறிவுமுடிதான் பொன்முடி.
திராவிடம் என்ற சொல்லை கேட்டாலே சிலருக்கு அச்சமாக உள்ளது. திராவிடம் என்பது ஆரியத்தை பதம் பார்க்கும் சொல்.
அடிமைத்தனத்தை ஒழிப்பதற்காகவே, திராவிட இனமும், கருப்பர் இனமும் தோன்றியது.
திராவிட நல் திருநாடு-ன்னு சொன்னா உங்க நாக்கு தீட்டாகிடுமா? இப்படி பாடினா சிலருக்கு வாயும், வயிரும் எரியும்னா திரும்பத் திரும்ப பாடுவோம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- சீமானை கட்டிப்பிடித்து அன்பை பரிமாறிய அண்ணாமலை.
- அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, எதிரியும் இல்லை.
கோவை:
கோவையில் தனியார் மருத்துவமனை தலைவரின் வாழ்க்கை வரலாறு பற்றிய புத்தக வெளியீட்டு விழா நேற்று நடந்தது. விழாவில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், பா.ம.க. தலைவர் அன்புமணி உள்பட அரசியல் பிரமுகர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
விழாவில் கலந்து கொள்ள வந்த அண்ணாமலை முன்வரிசையில் அமர்ந்திருந்த சீமானை நோக்கி சென்று அவரை கட்டிப்பிடித்தார். இருவரும் அன்பை பரிமாறிக்கொண்டனர். இதன் வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
பொதுமேடைகளில் அண்ணாமலையும், சீமானும் ஒருவரையொருவர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். பாராளுமன்ற தேர்தலின்போது அவர்களின் மோதல் உச்சக்கட்டத்தை எட்டியது.
இவ்வாறு அரசியலில் எதிர், எதிர் துருவங்களாக உள்ள 2 தலைவர்கள் நேரில் சந்தித்துக் கொண்டபோது கட்டிப்பிடித்து அன்பை பரிமாறக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை என்ற கூற்றைப் போல், பொதுமேடைகளில் அரசியல் தலைவர்கள் ஒருவரைஒருவர் கடுமையாக விமர்சித்துக் கொள்வதும், தனிப்பட்ட முறையில் நட்பு பரிமாறிக் கொள்வதும் அவ்வப்போது நடந்து வருகிறது. அந்த வகையில்தான் அண்ணாமலை, சீமானின் சந்திப்பு நிகழ்ந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
- நீதித்துறை போட்டி தேர்வு புத்தக வெளியீட்டு விழா நடந்தது.
- மதுரை ஐகோர்ட்டு வக்கீல் ராஜு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
மதுரை
மதுரை சட்ட நூல் எழுத்தாளர் கே. சுவாமிராஜ் எழுதிய 'நீதித்துறை போட்டி தேர்வு' ஆங்கில புத்தக வெளியீட்டு விழா, மதுரை ஓட்டலில் நடந்தது. மதுரை ஐகோர்ட்டு வக்கீல் சங்க தலைவர் ஆண்டிராஜ் தலைமை தாங்கினார். மதுரை ஐகோர்ட்டு வக்கீல் சங்க செயலாளர் அன்பரசு புத்தகத்தை வெளியிட, சிதம்பரம் வக்கீல் ஜெயச்சந்திரன் முதல் பிரதியை பெற்றுக் கொண்டார்.
நிகழ்ச்சியில் வக்கீல் லீமா, ராஜசேகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். மதுரை ஐகோர்ட்டு வக்கீல் ராஜு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
- பாலமுத்தழகு குழுமத்தின் பெஸ்ட் மணிகோல்டு நிறுவனம் சார்பில் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது.
- திண்டுக்கல் ஐ.லியோனி நூலை வெளியிட அதனை பி.எல்.ஏ.ஜெகநாத் மிஸ்ரா பெற்றுக்கொண்டார்.
உத்தமபாளையம்:
சென்னையில் உள்ள மியூசிக் அகடாமியில் பாலமுத்தழகு குழுமத்தின் பெஸ்ட் மணிகோல்டு நிறுவனம் சார்பில் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இதற்கு பாலமுத்தழகு குழுமத்தின் தலைவர் பி.எல்.ஏ.ஜெகநாத் மிஸ்ரா தலைமை தாங்கினார்.
கவிஞர் தியாரூ எழுதிய 4 புத்தகங்களை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக தலைவருமான திண்டுக்கல் ஐ.லியோனி வெளியிட்டார். அதனை பி.எல்.ஏ.ஜெகநாத் மிஸ்ரா பெற்றுக்கொண்டார்.
விழாவில் லியோனி பேசுகையில், பாலமுத்தழகு குழுமம் தமிழ் வளர்ச்சிப் பணிகளுக்காக பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். இது பாராட்டுக்குரியது என்றார். நிகழ்ச்சியில், தஞ்சை தமிழ்ப்பல்கலைக் கழகத்தின் அயலக தமிழ்த்துறைத் தலைவர் குறிஞ்சிவேந்தன், பாலசாகித்ய புரஸ்கார் விருதாளர் ராணி பத்திரிகை ஆசிரியர் மீனாட்சி, ஓசூர் தமிழ்ச்சங்க தலைவர் கவிஞர் எல்லோராமணி, தேசிய செட்டியார்கள் பேரவை மாநில கவுரவ தலைவர் வக்கீல் ஜெயராமன், தலைமை நிலைய செயலாளர் ரகுபதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக கவிஞர் தியாரூ வரவேற்று பேசினார். பேராசிரியர் நசீமா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை பெஸ்ட் மணிகோல்டு நிறுவனத்தினர் செய்திருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்