search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ."

    • நெல்லை போக்குவரத்து கழக பொது மேலாளரை ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. சந்தித்து மனு அளித்தார்.
    • நெல்லையில் இருந்து சிந்தாமணி,பழனியப்பபுரம் வழியாக சாத்தான்குளத்திற்கு பஸ் சேவை வழங்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் அருகே உள்ள கோமானேரி, கலுங்குவிளை, நெடுங்குளம், கொம்பன்குளம், வழியாக சாத்தான்குளத்துக்கு அரசு பஸ் சேவை இல்லாமல் உள்ளது. பேய்க்குளத்தில் இருந்தும், கோமானேரி, கலுங்குவிளை, நெடுங்குளம், துவர்குளம், கொம்பன்குளம், மேட்டுக்குடியிருப்பு வழியாக சென்ற அரசு பஸ்சும் நிறுத்தப்பட்டதால் மக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.

    இதையடுத்து சாலைபாதுகாப்பு நுகர்வோர்குழு உறுப்பினர் போனிபாஸ், ஒன்றிய கவுன்சிலர் ப்ரெனிலா கார்மல் ஆகியோர் ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ.விடம் முறையிட்டனர். அவர்களது கோரிக்கையை ஏற்று நெல்லை போக்குவரத்து கழக பொது மேலாளரை ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. சந்தித்து மனு அளித்தார். அதில், சாத்தான்குளத்தில் இருந்து கலுங்குவிளை, நெடுங்குளம், முனைஞ்சிப்பட்டி வழியாக நெல்லைக்கு இயக்கப்பட அரசு பஸ் தடம் 65 இ, தடம் எண் 165 எச் இரவு நெல்லையில் இருந்து முனைஞ்சிப்பட்டி, கலுங்குவிளை வழியாக சாத்தான்குளத்துக்கு இயக்கப்பட வேண்டும் எனவும், அதேப்போல் தடம் எண் 137ஏ, 137கே ஆகிய பஸ்களை காலை, மாலை, நெல்லையில் இருந்து சிந்தாமணி, பேய்க்குளம், பழனியப்பபுரம் வழியாக சாத்தான்குளம், உடன்குடிக்கும், விராக்குளம், பிரண்டார்குளம், மடத்துவிளை, கலுங்குவிளை, வழியாக சாத்தான்குளத்துக்கும் இயக்கப்பட்டு வந்தது, தற்போது இயக்கப்படாததால் மீண்டும் கலுங்குவிளை, நெடுங்குளம் வழியாக இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என முறையிட்டனர்.

    • ஆரோக்கியமேரி என்ற மாணவி நெல்லையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.
    • மாணவி ஆரோக்கியமேரி கல்வி பயில ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. ரூ.6ஆயிரம் வழங்கினார்.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் அருகே உள்ள அரசூர் பூச்சிகாட்டை சேர்ந்த ஆரோக்கியமேரி என்ற மாணவி நெல்லையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. ஆங்கிலம் படித்து வருகிறார். இவரது தந்தை உயிரிழந்து விட்ட தால் மாணவியின் கல்வி பாதிக்கும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில் அரசூர் பகுதிக்கு வந்த ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ.விடம் தன்னுடைய படிப்பை தொடர்ந்திட உதவிட வேண்டும் மாணவி ஆரோக்கிய மேரி மனு அளித்து வலியுறுத்தினார்.

    அதன்படி ஆரோக்கிய மேரி கல்வி பயில ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. ரூ.6ஆயிரம் வழங்கினார். எம்.எல்.ஏ., வழங்கிய உதவித்தொகையை அவர் சார்பாக சாத்தான்குளம் தெற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் லூர்துமணி , பூச்சிக்காடு கிராம கமிட்டி தலைவர் பீட்டர் ஆகியோர் மாணவி குடும்பத்திடம் வழங்கினர். அப்போது சாத்தான் குளம் வட்டார காங்கிரஸ் துணைத் தலைவர் அன்னகணேசன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    • புதிய பஞ்சாயத்து அலுவலகத்தை ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
    • மழவராயநத்தம் சுடுகாட்டிற்கு புதிய பாலம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.

    தென்திருப்பேரை:

    ஆழ்வார்திருநகரியில் நெல்லை- திருச்செந்தூர் மெயின் ரோடு பஜாரில் ரூ.15.26 லட்சம் மதிப்பீட்டில் சுமார் 429 சதுர அடியில் புதிய கிராம நிர்வாக அலுவலகம் மற்றும் குடியிருப்பு கட்டிட அடிக்கல் நாட்டு விழா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஸ்ரீவைகுண்டம் தொகுதி எம்.எல்.ஏ. ஊர்வசி அமிர்தராஜ் தலைமையில் அடிக்கல் நாட்டப்பட்டது.

    இந்த கிராம நிர்வாக அலுவலம் மற்றும் குடியிருப்பு கட்டிடத்தின் திறப்பு விழா நேற்று தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரமசக்தி, ஆழ்வார் திருநகரி யூனியன் சேர்மன் ஜனகர், ஏரல் தாசில்தார் கண்ணன் முன்னிலையில் நடந்தது. ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி திறந்து வைத்தார்.

    மேலும் கடையனோடையில் ரூ19.72 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய பஞ்சாயத்து அலுவலகத்தை பஞ்சாயத்து தலைவர் பூல்பாண்டி முன்னிலையில் ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார். தொடர்ந்து தேமாங்குளத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் ரூ9.8 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டிடத்தையும் அவர் திறந்து வைத்தார். பின்னர் பொதுமக்கள் கொடுத்த கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

    இதேபோல மழவராயநத்தம் சுடுகாட்டிற்கு புதிய பாலம் கட்ட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர். இதையடுத்து பாலம் கட்டுவது குறித்து ஆய்வு செய்த ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. சுடுகாட்டிற்கு புதிய பாலம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

    இதையடுத்து அங்கன்வாடி குழந்தைகளுடன் வரிசையில் அமர்ந்து அவர்களுக்கு லட்டு வழங்கி புகைப்படம் எடுத்து கொண்டார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட பொதுச்செயலாளர் இசை சங்கர், நேர்முக உதவியாளர் சந்திரபோஸ், மாவட்ட பொருளாளர் எடிசன், தெற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜெயசீலன், ஆழ்வார்திருநகரி வட்டார காங்கிரஸ் தலைவர் கோதண்டராமன், ஸ்ரீவைகுண்டம் வட்டார காங்கிரஸ் தலைவர் நல்லகண்ணு, ஆழ்வார் திருநகரி யூனியன் சேர்மன் ஜனகர், துணை தலைவர் ராஜாத்தி, ஆழ்வார் திருநகரி வட்டார வளர்சி அலுவலர்கள் சிவராஜன், பாலசுப்பிரமணியன், ஆழ்வார் திருநகரி பேரூராட்சி தலைவர் சாரதா பொன் இசக்கி, துணை தலைவர் சுந்தரராஜன், செயல் அலுவலர் ராஜேஸ்வரி, பொதுப்பணித்துறை இளநிலை பொறியாளர் சிவக்குமார், கட்டிட ஒப்பந்ததாரர் ராமன், காண்டிராக்டர் சைமன், கடையனோடை தி.மு.க. கிளை செயலாளர் அண்ணாதுரை, ஆழ்வார் திருநகரி வட்டார வருவாய் ஆய்வாளர் முத்து ராமன், கிராம அலுவலர் ஜேம்ஸ், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • புனித மிக்கேல் அதிதூதரின் திருவிழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான 3-ம் ஆண்டு கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றது.
    • முதல் பரிசு ரூ.10,000 ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. சார்பில் பார்த்தசாரதி வழங்கினார்.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் அருகே புனித மிக்கேல் அதிதூதரின் திருவிழாவை முன்னிட்டு புனித மிக்கேல் கிரிக்கெட் கிளப் நடத்திய மாவட்ட அளவிலான 3-ம் ஆண்டு கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றது. இதில் முதல் பரிசை திசையன்விளை அணியும், 2-ம் பரிசை புனித மிக்கேல் கிரிக்கெட் கிளப் அணியும் தட்டிச் சென்றனர். முதல் பரிசு ரூ.10,000 தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. சார்பில் சாத்தான்குளம் வடக்கு வட்டார தலைவர் பார்த்தசாரதி வழங்கினார். நொச்சிகுளம் கிராம கமிட்டி தலைவர் அந்தோணிராஜன், சாத்தான்குளம் வடக்கு வட்டார இளைஞர் காங்கிரஸ் தலைவர் லாரன்ஸ்கிளிண்டன், சாத்தான்குளம் இளைஞர் காங்கிரஸ் ஜெரால்டுரீகன் ஆகியோர் பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    ×