search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தவறி விழுந்த"

    • கிணற்றில் இரவு ஆண் மயில் ஒன்று தவறி கீழே விழுந்துள்ளது.
    • ஆண் மயிலை உயிருடன் மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்துள்ளனர்.

    பவானி:

    ஈரோடு மாவட்டம் பவானியில் இருந்து கவுந்தப்பாடி செல்லும் வழியில் உள்ள சலங்கபாளையம் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் கிணறு ஒன்று 100 அடி ஆழத்தில் அமைந்துள்ளது.

    இந்த கிணற்றில் நேற்று இரவு ஆண் மயில் ஒன்று தவறி கீழே விழுந்துள்ளதாக பவானி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற பவானி தீயணைப்பு துறை நிலைய அலுவலர் மற்றும் வீரர்கள் 100 அடி ஆழமுள்ள கிணற்றில் கயிறு கட்டி கீழே இறங்கி கிணற்றில் இருந்த ஆண் மயிலை உயிருடன் மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்துள்ளனர்.

    • மோட்டார் சைக்களில் இருந்து ஈஸ்வரி தடுமாறி கீழே விழந்தார்.
    • சிகிச்சை பலனின்றி ஈஸ்வரி இறந்தார்.

    பெருந்துறை:

    பவானி அடுத்த பாண்டி யம்பாளையத்தை சேர்ந்தவர் வரதன். இவரது மனைவி ஈஸ்வரி (வயது 52). இவர் பெருந்துறை அருகி லுள்ள கள்ளாங்காட்டுபுதூர் அங்கன்வாடி மையத்தில் வேலை செய்து வந்தார்.

    சம்பவத்தன்று ஈஸ்வரி தன் மகன் கண்ணனுடன் மோட்டார் சைக்கிளில் பெருந்துறைக்கு வந்து பொருட்கள் வாங்கி கொண்டு ஊருக்கு திரும்பி செல்லும் வழியில் பெருந்துறை, அண்ணாசிலை அருகில் மோட்டார் சைக்க ளில் இருந்து ஈஸ்வரி தடு மாறி கீழே விழந்தார்.

    இதில் பலத்த காயம் அவரை சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்ந்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி ஈஸ்வரி இறந்தார்.

    இது குறித்து பெருந்துறை போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • சம்பவத்தன்று சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
    • நிலை தடுமாறி கீழே விழுந்து பலத்த காயம் அடைந்தார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கொடுமுடி வடுகனூரை சேர்ந்தவர் மணி (வயது 60). இவர் நீண்ட நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தொ டர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப் போது வடுகனூர் அருகே சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி கீழே விழுந்து பலத்த காயம் அடைந்தார்.

    இதை அடுத்து அவரை ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சை க்காக அழைத்துச் சென்ற னர். பின்னர் மேல் சிகிச்சை க்காக சேலம் அரசு மருத்து வமனைக்கு கொண்டு சென்றனர்.

    இந்நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த மணி சிகிச்சை பலனி ன்றி உயிரிழந்தார். பின்னர் இது குறித்து அவரது மகன் சங்கரன் மலையம்பாளையம் போ லீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரமேஷ் (வயது 49), விவசாயி. இவர் அங்குள்ள தனது தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சென்றார்.
    • அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி சரஸ்வதி மற்றும் உறவினர்கள் அக்கம் பக்கத்தில் தேடினர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள தேவூர் கோணகழுத்தனூர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 49), விவசாயி. இவர் அங்குள்ள தனது தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி சரஸ்வதி மற்றும் உறவினர்கள் அக்கம் பக்கத்தில் தேடினர். நேற்று அங்குள்ள அவரது உறவினரான செல்லப்பன் என்பவரது விவசாய கிணற்றில் ரமேஷ் பிணமாக மிதந்தார். இதனை பார்த்த உறவினர்கள் கதறி துடித்தனர். தொடர்ந்து அவரது உடலை கயிறு கட்டி மீட்டனர். தகவல் அறிந்த தேவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    அப்போது கிணற்றின் ஓரத்தில் நடந்து சென்ற போது அவர் கால் தவறி விழுந்தாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • எதிர்பாரா தவிதமாக தண்ணீர் தொட்டிக்குள் அங்கமுத்து தவறி விழுந்தார்.
    • போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், மாட்டியம்பட்டி பகுதியை சேர்ந்தவர் அங்கமுத்து (வயது73). இவர் கொளகத்தூரில் உள்ள ஆசைதம்பியின் புதிய வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு எதிர்பாரா தவிதமாக தண்ணீர் தொட்டிக்குள் அங்கமுத்து தவறி விழுந்தார். பின்னர் சிறிது நேரத்தில் அவர் உயிரிழந்தார். இது குறித்து தருமபுரி டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பிரதீப் தண்ணீர் தொட்டிக்குள் மூழ்கி கிடந்துள்ளார்.
    • உடல் பிரேத பரிசோதனை முடிந்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    டி.என்.பாளையம்:

    டி.என்.பாளையம் அடுத்த புள்ளப்பநாயக்கன் பாளையம் வேட்டுவன் புதூர் ரோடு, காந்தி வீதியை சேர்ந்தவர் பிரதீப் (27). இவர் டிராக்டர் ஓட்டும் வேலை செய்து கொண்டு, டி.என்.பாளையம் பகுதியை சேர்ந்த கோபால் என்பவரது தோட்டத்தில் தங்கி வேலை செய்து வந்தார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று காலை சுமார் 7 மணியளவில் கோபால் தோட்டத்தில் உள்ள 12 அடி ஆழம் உள்ள நிலத்தடி தண்ணீர் தொட்டி அருகே வந்த போது பிரதீப் அந்த தண்ணீர் தொட்டிக்குள் மூழ்கி கிடந்துள்ளார்.

    அதிர்ச்சி அடைந்த கோபால் பிரதீபின் உறவினர்களுக்கு போனில் தகவல் கொடுத்துள்ளார். உறவினர்கள் வந்து தண்ணீர் தொட்டியில் மூழ்கி கிடந்த பிரதீப் உடலை மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு பரிசோதித்த டாக்டர்கள் பிரதீப் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்து பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் உடல் பிரேத பரிசோதனை முடிந்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    இச்சம்பவம் குறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் விசாரணையில் பிரதீப் குளிக்க சென்ற போது எதிர்பாராமல் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து? நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    • மோட்டார் சைக்கிளில் இருந்து உதயகுமார் ரோட்டில் தவறி விழுந்தார்.
    • சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சென்னிமலை:

    சென்னிமலை அருகே வாய்க்கால்புதூரை சேர்த்தவர் உதயகுமார் (வயது 39). இவர் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் டெய்லராக வேலை பார்த்து வந்தார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று மாலை உதயகுமார் தனது வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிளில் வெப்பிலி-அய்யம்பாளையம் ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது புதுவலசு பிரிவு என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிளில் இருந்து உதயகுமார் ரோட்டில் தவறி விழுந்தார்.

    இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் காங்கேயம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் சிகிச்சை பலனின்றி உதயகுமார் இறந்து விட்டார்.

    இதுகுறித்து உதயகுமாரின் மனைவி நிர்மலா (35) கொடுத்த புகாரின் பேரில் சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கிணற்றுக்குள் கட்டுவிரியன் பாம்பு ஒன்று தவறி விழுந்து மிதந்து கொண்டிருந்தது.
    • தீயணைப்பு வீரர்கள் கருவி மூலம் பாம்பை லாவகமாக பிடித்து மேலே கொண்டு வந்தனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை அருகே பி.ஆர்.எஸ் ரோட்டில் பொதுமக்கள் பயன்படுத்தும் 50 அடி ஆழ கிணறு ஒன்று உள்ளது. இந்த கிணற்றில் தற்போது 30 அடி அளவுக்கு தண்ணீர் உள்ளது.

    இந்த கிணற்றில் தண்ணீர் எடுப்பதற்காக அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சென்ற போது கிணற்றுக்குள் கட்டுவிரியன் பாம்பு ஒன்று தவறி விழுந்து மிதந்து கொண்டிருந்ததை பார்த்தனர்.

    பின்னர் இதுகுறித்து சென்னிமலை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

    தீயணைப்பு நிலைய அலுவலர் முத்துசாமி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று கயிறு மூலம் கிணற்றுக்குள் இறங்கி பாம்பு பிடிக்கும் கருவி மூலம் கட்டு விரியன் பாம்பை லாவகமாக பிடித்து மேலே கொண்டு வந்தனர்.

    பின்னர் அந்த பாம்பை சென்னிமலை வன காவலர் மகாதேவனிடம் ஒப்படைத்தனர்.

    • இன்று காலை மீண்டும் அந்த வடிகாலில் அருகே சாலையோரம் மேய்ந்து கொண்டிருந்த மாடு தவறி அந்த கழிவுநீர் வடிகாலில் விழுந்துவிட்டது.
    • இதனை பாதுகாப்பான முறையில் மூடி பொதுமக்களுக்கும், கால்நடைகளுக்கும் பாதுகாப்பு வழங்கிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அந்தியூர்:

    அந்தியூர் அடுத்த புதுப்பாளையம் செல்லும் சாலையில் ஆத்தப்பம் பாளையம் பிரிவு என்ற இடத்தில் சாலையோரம் கழிவுநீர் வடிகால் உள்ளது. இந்த வடிகாலில் எப்பொழுதும் அதிக அளவில் கழிவு நீர் தேங்கி குளம் போல இருக்கும்.

    இந்த கழிவு நீர் வடிகாலில் கடந்த மாதம் 12-ந் தேதி எருமை மாடு ஒன்று விழுந்தது. அதனை உரிய நேரத்தில் மாட்டின் உரிமையாளர் இருந்ததால் உயிருடன் மீட்கப்பட்டது.

    இந்த நிலையில் இன்று காலை மீண்டும் அந்த வடிகாலில் அருகே சாலையோரம் மேய்ந்து கொண்டிருந்த மாடு தவறி அந்த கழிவுநீர் வடிகாலில் விழுந்துவிட்டது. இதனை மீட்க முடியாமல் மாட்டின் உரிமையாளர் சிரமப்பட்டு வந்தார்.

    அக்கம் பக்கத்தின் உள்ளவர்கள் உதவியோடு கயிற்றின் மூலம் பாதுகாப்பான முறையில் கட்டி மேலே மீட்டனர். இதனால் அந்தியூர் பர்கூர் சாலையில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறுகையில்,

    இந்த சம்பவம் தொடர்கதையாக நடந்து வருகிறது. இரவு நேரத்தில் இந்த பகுதிக்கு நாங்கள் வருவதற்கு மிகவும் அச்சத்தோடும், ஒருவித பயத்தோடுமே வர வேண்டி உள்ளது. புதியதாக இந்த பகுதிக்கு இரவு நேரத்தில் வருபவர்கள் யாரேனும் இந்த கழிவுநீரில் விழுந்து விடுவார்களோ? என்ற பயம் எங்களுக்குள் இருந்து வருகிறது.

    ஆகவே இதனை பாதுகாப்பான முறையில் மூடி பொதுமக்களுக்கும், கால்நடைகளுக்கும் பாதுகாப்பு வழங்கிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×