search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கருணை தொகை"

    • நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் பரிசு வழங்கும் திட்டம் ஒன்றினை 15.10.2021 முதல் அரசு அறிவித்தது.
    • உயிர்காக்க உதவும் ஒரு நற்கருணை வீரருக்கு ரூ.5,000 வழங்கப்படும்.

    விழுப்புரம்:

    சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை, பொன்னான நேரத்தில், அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்து உயிர்காக்கும் நற்கருணை வீரருக்கு ரூ.5,000 கருணைத் தொகை வழங்கப்படும் என மாவட்ட கலெக்டர் பழனி தகவல். விழுப்புரம் மாவட்ட த்தில் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை, கோல்டன் ஹவர்ஸ் என்று சொல்லக்கூடிய பொன்னான நேரத்தில், அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்து, உதவி புரியும் நபர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, இந்திய அரசின் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் பரிசு வழங்கும் திட்டம் ஒன்றினை 15.10.2021 முதல் அரசு அறிவித்தது. அதன்படி பொன்னான நேரத்தில் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து உதவிபுரியும் நபர்களுக்கு ஏற்கனவே மத்திய அரசால் வழங்கப்பட்டு வந்த ரூ.5,000 தொகையுடன், மாநில அரசின் பங்களிப்பாக சாலைப்பாதுகாப்பு நிதியிலிருந்து கூடுதலாக ரூ.5,000 மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி நற்கருணை வீரர்கள் விபத்து நடைபெற்ற பகுதியினை சார்ந்த காவல்நிலையம் மற்றும் பாதிக்கப்பட்டவரை சேர்க்கப்படும் மருத்துவமனையிலிருந்து பரிந்துரை செய்யப்படுவார்கள். இந்நிலையில் ஒரு சாலை விபத்தில் ஒன்றுக்கு மேற்பட்டு பாதிக்கப்பட்ட நபர்களின் உயிர்காக்க உதவும் ஒரு நற்கருணை வீரருக்கு ரூ.5,000 வழங்கப்படும். மேலும் ஒரு விபத்தில் பாதிக்கப்பட்ட ஒரு நபரின் உயிர் காக்க உதவும் ஒன்றுக்கு மேற்பட்ட நற்கருணை வீரர்களுக்கு ரூ.5,000 தொகையினை சமமாக பகிர்ந்தளிக்கப்படும் எனத் தெரிவித்துக் கொள்ள ப்படுகிறது. இத்திட்டமானது 31.03.2026 வரை நடை முறையில் இருக்கும் என மாவட்ட கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார்.

    • விவரங்களுக்கு உதவி இயக்குநர், முன்னாள் படைவீரர் நல அலுவலகம், நாகர்கோவில் என்ற முகவரியை தொடர்பு கொள்ளலாம்.
    • குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் தகவல்

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    போர் மற்றும் போரை யொத்த நடவடிக்கைகளில் உயிரிழந்தோரைச் சார்ந்தோர் (மனைவி, பெற்றோர்) மற்றும் ஊன முற்ற படை வீரர்களுக்கு 23.9.2022 முதல் தொகுப்பு நிதியிலிருந்து வழங்கப்படும் கருணைத் தொகை உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.

    அதாவது போர் மற்றும் போரையொத்த நடவடிக்கை களில் உயிரிழந்தோரைச் சார்ந்தோர்(மனைவி, பெற்றோர்) ரூ.1 லட்சத்தில் இருந்து (ஒருமுறை மட்டும்) ரூ.2 லட்சமாக உயர்த்த ப்பட்டு உள்ளது.

    போர் மற்றும் போரை யொத்த நடவடிக்கைகளில் ஊனமுற்ற முன்னாள் படை வீரர்கள் ரூ.50 ஆயிரத்தில் (ஒருமுறை மட்டும) இருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தப்ப ட்டு உள்ளது.

    மேலும் விவரங்க ளுக்கு உதவி இயக்குநர், முன்னாள் படைவீரர் நல அலுவலகம், நாகர்கோவில் என்ற முகவரியை தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கூட்டுறவு ஊழியர் சங்கம் சார்பில் நடந்தது
    • கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்தது

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு குமரி மாவட்ட சி.ஐ.டி.யு. கூட்டுறவு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் இன்று நடந்தது.கூட்டுறவு சங்க ஊழியர்கள் அனைவருக்கும் 20 சதவீத போனஸ் 5 சதவீத கருணை தொகை வழங்க வேண்டும், பொது வினியோகத் திட்டத்தை தனித்துறையாக உருவாக்க வேண்டும், பண்டிகை காலம் முன்பணம் ரூ.25 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சவுந்தர் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தை சுந்தர்ராஜ் தொடங்கி வைத்தார். இதில் தங்கமோகன், ராஜேஷ், மேரி சுபா, கிறிஸ்டோபர், ராபின்சன், தெய்வநாயகம் உட்பட பலர் கலந்து கொண்டனர். கிருஷ்ணமூர்த்தி ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்து பேசினார். பத்மகுமார் நன்றி கூறினார் .ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.

    ×