search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புறவழிசாலை"

    • ராஜபாளையத்தில் புறவழிசாலை அமைக்க தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்தார்.
    • அமைச்சர் எ.வ.வேலு இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையத்தில் புறவழிசாலை அமைக்க தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார். இந்த நிலையில் நெடுஞ்சாலைத்துறையின் ஆய்வுக்கூட்டத்திற்காக விருதுநகர் மாவட்டத்திற்கு வருகை புரிந்த பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலுவிடம் ராஜபாளையம் நகரில் நிறைவேற்றப்பட வேண்டிய வளர்ச்சித்திட்டப்பணிகள் குறித்து தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. மனு கொடுத்தார்.

    அதில் ராஜபாளையம் நேரு சிலை முதல் சொக்கர் கோவில் வரை உள்ள தேசிய நெடுஞ்சாலையில் தோண்டப்பட்டு திட்டப்பணி மேற்கொள்ளப்பட்டு குண்டும் குழியுமாக காணப்பட்ட சாலையை தற்காலிகமாக (பேட்ச்ஒர்க்) சீரமைக்கப்பட்டது .

    இந்த சாலையில் விரை வில் புதிய தார்ச்சாலை அமைக்க வேண்டும்.ராஜபாளையம் தொகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க எம்.பி.கே.புதுப்பட்டி விலக்கில் இருந்து கோதை நாச்சியார்புரம் வழியாக அமிழ் ஓட்டல் வரை புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு இருந்தது.மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சர் எ.வ.வேலு இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

    • பல்வேறு அரசு பணிகளுக்கு செல்வதற்கும் காலையில் பஸ்கள்வருவது கிடையாது.
    • வாகன ஆய்வாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று கூறி வருகின்றனர்.

    கடலூர்:

    புவனகிரியை சுற்றி சுமார் 40-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. அதில் பல ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் கடலூர், புதுச்சேரி, சென்னை மற்றும் பல்வேறு ஊர்களுக்கு செல்வதும் பின்னர் கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம், மற்றும் மருத்துவமனைக்கு செல்வதற்கும் இதுபோன்று பல்வேறு அரசு பணிகளுக்கு செல்வதும் காலையில் பஸ்கள்வருவது கிடையாது. இதனால் பெரும்பாலான மக்கள் பாதிக்கின்றனர்.

    இதேபோல் இரவு நேரங்களில் திரும்பி வருவதற்கும் பஸ்கள் புவனகிரி வழியாக வருவது கிடையாது. அனைத்து தனியார் மற்றும அரசு பஸ்கள் சி .முட்லூர் புறவழிச்சாலை வழியாக செல்கிறது. குறிப்பாக புறவழிச் சாலையில் தான் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதுபற்றி நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் புவனகிரி மற்றும் புவனகிரி சுற்றியுள்ள பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் தலைமையில் விரைவில் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று கூறி வருகின்றனர்.

    ×