search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒப்பந்ததாரர்கள்"

    • கீழக்கரையில் டெண்டர் பணிகளை ஒப்பந்ததாரர்கள் விரைந்து முடிப்பதில்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளது.
    • டெண்டர் எடுத்த பணிகள் குறைபாடு இருக்கிறது.

    கீழக்கரை

    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகரச் செயலாளர் பாசித் இல்யாஸ் நிருபர்களிடம் கூறிய தாவது:-

    ராமநாதபுரம் மாவட்டத் திற்கு அரசு திட்டங்களை கண்காணிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தமிழக அரசு சார்பாக நியமிக்கப் பட்டுள்ளதை கீழக்கரை விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக வரவேற்கிறோம்.

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் திட்ட பணிகளில் அதிக அளவு தேக்க நிலையில் இருக்கிறது டெண்டர் எடுத்த பணிகள் ஒப்பந்தக்காரர்கள் விரைந்து முடிப்பதில்லை யாரும் முறையான ஆய்வு செய்வதில்லை. பல இடங்களில் டெண்டர் எடுத்த பணிகள் குறைபாடு இருக்கிறது.

    கழிவுநீர் பைப் லைன் போட்ட இடங்களில் கழிவுநீர் வெளியே ஓடுகிறது.இதனால் மக்கள் வரி பணமும் சுகாதாரமும் கேள்விக்குறியாகி உள்ளது. இதற்கு முன்பு என்னென்ன டெண்டர் எடுத்த பணிகள் எல்லாம் குறைபாடு இருக்கிறது என்பதை ஆராய்ந்து மீண்டும் அதை முறைப்படுத்தி ஒப்பந்தம் எடுத்தவர்களை சரி செய்ய வலியுறுத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.

    மேலும் தமிழக அரசு சார்பாக எந்த வித திட்டப் பணிகளும் கீழக்கரையில் அமல்படுத்தவில்லை. உதாரணமாக கீழக்கரை மற்றும் சுற்றுவட்டார பொதுமக்கள் கீழக்கரை அரசு மருத்துவமனையை நம்பி உள்ளனர். ஆனால் அரசு சார்பில் குறைந்த நிதியே ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே கூடுதல் நிதி ஒதுக்கி கீழக்கரை மருத்துவ மனையை மேம்படுத்த வேண்டும்.

    கீழக்கரையில் ஆரம்ப சுகாதார நிலையத்தை வேகமாக அமைக்க வேண்டும். கீழக்கரை கடற்கரையில் கழிவுநீர் சேராமல் தடுக்க சுத்திகரிப்பு திட்டம் அல்லது பாதாள சாக்கடை திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

    காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் தண்ணீர் சரியாக வருவதில்லை. அதனால் புதிய மின்மோட்டார் பொருத்தி தண்ணீர் முறையாக கிடைக்கச் செய்ய வேண்டும்.

    புதிதாக தண்ணீர் தொட்டிகள் கட்ட ஏற்பாடு செய்ய வேண்டும். எரியாத நிலையில் உள்ள மின்விளக்கு களை மாற்றி புதிதாக வாங்கப்பட்ட எல்.இ.டி.விளக்குகளை பொருத்த வேண்டும். திட்டப் பணிகளை விரைந்து முடிக்க நகராட்சி ஆணையர், பொறியாளர், சுகாதார ஆய்வாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சிவகங்கை மாவட்ட வன அலுவலகத்தில் ஒப்பந்ததாரர்கள் ஏலத்தை புறக்கணித்தனர்.
    • நிதி இழப்பீடு செய்வதாக புகார் எழுந்துள்ளது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட வன அலுவலகத்தில் 7 கண்மாய்களில் வளர்ந்துள்ள கருவேல மரங்களை வெட்டுவதற்கான ஏலம் நடந்தது. இந்த ஏலத்தில் டெண்டர் எடுக்க 30-க்கும் மேற்பட்ட ஒப்பந்ததாரர்கள் பங்கேற்றனர்.

    ஒக்கூர் சிறுகுளம், கரையகுடி, திருமலை ஊராட்சி திருமலை கண்மாய், அண்டகுடி பீதாம்பரனேந்தல் கண்மாய், செய்களத்துார் நத்தபுரக்கி கண்மாய், திருப்பத்தூர் அருகே உள்ள ஏ.தெக்கூர் பாண்டி கண்மாய், சிராவயல் காணிக் கண்மாய் போன்ற 7 கண்மாய் ஏலத்தில் 3 கண்மாய்கள் மட்டும் ஒப்பந்ததாரர்களுக்கு ஒதுக்கப்பட்டது. இதை கண்டித்து ஒப்பந்ததாரர்கள் ஏலத்தை புறக்கணித்து வெளியேறினார்.

    4 கண்மாய் ஏலம் பஞ்சாயத்து அலுவலகத்திற்கு அரசு ஒதுக்கி உள்ளதாகவும், எஞ்சியுள்ள தெக்கூர் பாண்டி கண்மாய், சிராவயல் தாணிக்கண்மாய், திருமலை கண்மாய் ஆகிய 3 கண்மாய்களுக்கு மட்டும் ஏலம் நடைபெறுவதாக வனத்துறை அதிகாரிகள் அறிவித்தனர்.

    மீதமுள்ள 4 கண்மாய்கள் மரங்களை அகற்றிக் கொள்ள அந்த உரிமையை ஊராட்சிக்கே வழங்கப் பட்டுள்ளது. இதனால் எஞ்சிய 3 கண்மாயை ஏலம் கேட்கலாம் என தெரிவித்தார். ஆனால் ஏலதாரர்கள் அனைத்து கண்மாய்களையும் ஏலம் விடாவிட்டால் ஏலத்தை புறக்கணிப்பதாக கூறி வெளியேறினர்.

    இதுகுறித்து ஒப்பந்ததாரர் துபாய் காந்தி கூறுகையில், வன அலுவலகத்தில் பொது ஏலம் நடந்தால் அதிக தொகைக்கு போகும். ஊராட்சி மன்றங்களில் ஏலம் விடுவதால் முறைகேடுகள் நடப்பதுடன், அரசுக்கும் நிதி இழப்பு ஏற்படும்.

    குத்தகை வருவாயில் 65 சதவீத தொகையை ஊராட்சிக்கு ஒதுக்க வேண்டும். அதற்காக அந்த கண்மாய்களை சொற்ப தொகைக்கு வழங்கி, அரசுக்கு நிதி இழப்பு ஏற்படுத்துகின்றனர்.

    அனைத்து கண்மாய்க ளையும் பொது ஏலம் விட்டால் அதிக தொகைக்கு ஏலம் போகும். அதன்மூலம் ஊராட்சிக்குதான் கூடுதல் வருவாய் கிடைக்கும். இதை கண்டித்து தான் ஏலத்தை புறக்கணித்தோம் என்றார்.

    ×