என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஷ்ரேயஸ் அய்யர்"

    • 246 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் ஐதராபாத் களமிறங்கியது.
    • அபிஷேக் சர்மா அதிரடியாக ஆடி சதமடித்ததுடன், அணி வெற்றி பெற முக்கிய பங்கு வகித்தார்.

    ஐதராபாத்:

    ஐ.பி.எல். 2025 தொடரின் 27-வது போட்டி ஐதராபாத்தில் இன்று நடைபெற்றது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 245 ரன்கள் குவித்துள்ளது.

    பிரியான்ஷ் ஆர்யா 36 ரன்னும், பிரப்சிம்ரன் சிங் 42 ரன்னும் எடுத்தனர். கேப்டன் ஷ்ரேயஸ் அய்யர் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடி அரை சதம் கடந்தார்.

    ஷ்ரேயஸ் அய்யர் 36 பந்தில் 6 சிக்சர், 6 பவுண்டரி உள்பட 82 ரன்கள் குவித்தார். நேஹல் வதேரா 27 ரன்கள் எடுத்தார். கடைசி கட்டத்தில் ஸ்டோய்னிஸ் 11 பந்தில் 34 ரன்கள் எடுத்தார்.

    ஐதராபாத் அணியின் ஹர்ஷல் படேல் 4 விக்கெட்டும், இஷான் மலிங்கா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 246 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் களமிறங்கியது. அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட் முதல் பந்தில் இருந்து விளாசத் தொடங்கினர். கிடைத்த பந்துகளை சிக்சர், பவுண்டரிகளாக அடித்தனர்.

    முதல் விக்கெட்டுக்கு 171 ரன்கள் சேர்த்த நிலையில் டிராவிஸ் ஹெட் 66 ரன்னில் அவுட்டானார். அதிரடியாக ஆடிய அபிஷேக் சர்மா சதமடித்து அசத்தினார். அபிஷேக் சர்மா 55 பந்தில் 10 சிக்சர், 14 பவுண்டரி உள்பட 141 ரன் குவித்து ஆட்டமிழந்தார்.

    இறுதியில், ஐதராபாத் அணி 18.3 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 247 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. நடப்பு தொடரில் ஐதராபாத் அணி பெறும் 2வது வெற்றி இதுவாகும். பஞ்சாப் அணியின் 2வது தோல்வி இதுவாகும்.

    • முதலில் ஆடிய இந்திய அணி 399 ரன்களை குவித்தது.
    • சுப்மன் கில், ஷ்ரேயஸ் அய்யர் ஜோடி அதிரடியாக ஆடி 200 ரன்கள் சேர்த்தனர்.

    இந்தூர்:

    இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி இந்தூரில் இன்று நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்மித் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ருதுராஜ் கெயிக்வாட், சுப்மன் கில் களமிறங்கினர். அணியின் எண்ணிக்கை 16 ஆக இருக்கும்போது ருதுராஜ் 8 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய ஷ்ரேயாஸ் அய்யர் சுப்மன் கில்லுடன் இணைந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    இந்திய அணி 9.5 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 79 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை பெய்ததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.

    சுப்மன் கில், ஷ்ரேயஸ் அய்யர் ஜோடியைப் பிரிக்க முடியாமல் ஆஸ்திரேலிய அணியினர் திணறினர். இருவரும் கிடைத்த பந்துகளை சிக்சர், பவுண்டரிகளாக விளாசினர்.

    சுப்மன் கில், ஷ்ரேயஸ் அய்யர் ஆகியோர் சதமடித்து அசத்தினர். ஷ்ரேயஸ் அய்யர் 86 பந்துகளில் 3 சிக்சர், 10 பவுண்டரிகள் உள்பட சதமடித்தார். அவர் 105 ரன்னில் அவுட்டானார். இது இவரது 3வது ஒருநாள் சதமாகும்.

    சுப்மன் கில் 92 பந்துகளில் 4 சிக்சர், 6 பவுண்டரி உள்பட சதமடித்து அசத்தினார். அவர் 104 ரன்னில் ஆட்டமிழந்தார். 2வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த இவர்கள் 200 ரன்கள் குவித்தனர். இஷான் கிஷன் 31 ரன்னில் வெளியேறினார்.

    தொடர்ந்து ஆடிய கேப்டன் கே.எல்.ராகுல், சூர்யகுமார் யாதவ் ஜோடியில் சிக்சர், பவுண்டரிகளாக அடித்தனர். ராகுல் அரை சதமடித்து 52 ரன்னில் அவுட்டானார்.

    கேமரூன் கிரீன் வீசிய 43-வது ஓவரில் சூர்யகுமார் யாதவ் தொடர்ந்து 4 சிக்சர்கள் அடித்து அசத்தினார்.

    இறுதியில், இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 399 ரன்களை குவித்தது. சூர்யகுமார் யாதவ் 72 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இதையடுத்து, 400 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்குகிறது.

    • கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியினர் வெற்றி கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.
    • பாலிவுட் பாடல்களுக்கு நடனம் ஆடும் வீடியோ வெளியாகி உள்ளது.

    நடந்து முடிந்த 2024 ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கோப்பை வென்று அசத்தியது. இதன் மூலம் அந்த அணி மூன்றாவது முறையாக ஐ.பி.எல். கோப்பையை வென்றது. இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியினர் வெற்றி கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.

    இது தொடர்பான வீடியோக்கள் ஒவ்வொன்றாக சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் அய்யர் பாலிவுட் பாடல்களுக்கு நடனம் ஆடும் காட்சிகள் கொண்ட வீடியோ வெளியாகி உள்ளது.

    இந்த வீடியோவில் ஷ்ரேயஸ் அய்யர், ஷாருக் கான் படத்தின் "லுங்கி டான்ஸ்" பாடலுக்கு மிகவும் உற்சாகமாக நடனம் ஆடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதேபோன்று மற்ற கொல்கத்தா வீரர்களும் நடனம் ஆடும் வீடியோக்கள் வெளியாகி உள்ளன. 


    • கர்நாடக அணி 383 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
    • அந்த அணியின் கிருஷ்ணன் ஸ்ரீஜித் 150 ரன்கள் குவித்தார்.

    அகமதாபாத்:

    விஜய் ஹசாரா கோப்பை ஒருநாள் தொடர் (50 ஓவர்) நேற்று தொடங்கியது. ஜெய்ப்பூர், மும்பை, அகமதாபாத், ஐதராபாத், விசாகப்பட்டினம் உள்ளிட்ட நகரங்களில் போட்டிகள் நடைபெறுகின்றன. இந்தப் போட்டி ஜனவரி 18-ம் தேதி வரை நடைபெறும்.

    இந்நிலையில், நேற்று நடைபெற்ற ஒரு போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான மும்பை அணி, மயங்க் அகர்வால் தலைமையிலான கர்நாடகாவை எதிர்கொண்டது. டாஸ் வென்ற கர்நாடகா பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய மும்பை அணி கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயரின் சதத்தின் உதவியுடன் 382 ரன்கள் குவித்தது. ஆயுஷ் மத்ரே (78 ரன்), ஹர்திக் தாமோர் (84 ரன்), ஷிவம் துபே (63 ரன்) ஆகியோர் அரை சதமடித்து அசத்தினர்.

    இதையடுத்து, 383 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி கர்நாடக அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களான நிகின் ஜோஸ் 21 ரன்னும், மயங்க் அகர்வால் 47 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    அதன்பின், கர்நாடக அணி வீரர்கள் அதிரடியில் மிரட்டினர். அனீஷ் 82 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இறுதியில், கர்நாடக அணி 46.2 ஒவரில் 3 விக்கெட்டுக்கு 383 ரன்கள் குவித்து அபார வெற்றி பெற்றது. விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான கிருஷ்ணன் ஸ்ரீஜித் 150 ரன்களுடனும், பிரவீன் துபே 65 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    • ரோகித் 76 ரன்னில் ரச்சின் ரவீந்திரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
    • ஷ்ரேயஸ் 48 ரன்னில் அவுட்டாகி அரைசதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார்.

    சாம்பின்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி துபாயில் இன்று நடைபெறுகிறது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இப்போட்டியில் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 251 ரன்கள் அடித்தது. நியூசிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக மிட்செல் 63 ரன்களும் பிரேஸ்வெல் 53 ரன்களும் அடித்தனர்.

    இந்திய அணி தரப்பில் வருண் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டுகளும் ஜடேஜா, முகமது ஷமி தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதனையடுத்து, 252 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தது.

    நிதானமாக விளையாடி வந்த கில் சாட்னர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். கில் தூக்கி அடித்த பந்தை சூப்பர் மேன் போல பறந்து பிலிப்ஸ் பிடித்தார். அடுத்ததாக களமிறங்கிய கோலி பிரேஸ்வெல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

    அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்த ரோகித் 76 ரன்னில் ரச்சின் ரவீந்திரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

    அடுத்ததாக ஷ்ரேயாஸ் - அக்சர் ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். பொறுப்புடன் விளையாடிய ஷ்ரேயாஸ் 48 ரன்னில் அவுட்டாகி அரைசதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். இதையடுத்து பிரேஸ்வெல் பந்துவீச்சில் அக்சர் அவுட்டானார். 

    42 ஓவர் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் அடித்துள்ளது.

    • முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 278 ரன்களை எடுத்துள்ளது.
    • அடுத்து ஆடிய இந்திய அணி 282 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது.

    ராஞ்சி:

    இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான 2-வது ஒருநாள் போட்டி ராஞ்சியில் நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 278 ரன்களை எடுத்துள்ளது. ஹென்ரிக்ஸ் 74 ரன்னிலும், மார்கிராம் 79 ரன்னிலும் அவுட்டாகினர். டேவிட் மில்லர் 35 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இந்தியா சார்பில் சிராஜ் 3 விக்கெட்டும், ஷபாஸ் அகமது, குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்குர் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 279 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவான், ஷுப்மான் கில் களமிறங்கினர்.

    தவான் 13 ரன்னிலும் கில் 28 ரன்னிலும் அவுட்டாகினர். அப்போது இந்தியா 2 விக்கெட்டுக்கு 48 ரன் எடுத்திருந்தது.

    அடுத்து இறங்கிய இஷான் கிஷன் ஜோடி நேர்த்தியாக ஆடியது. கிடைத்த பந்துகளை பவுண்டரி, சிக்சர்களாக விளாசினர். அரை சதம் கடந்த இஷான் கிஷன் அதிரடியில் மிரட்டினார். சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 93 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    3வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 161 ரன்களை குவித்து அசத்தியது. அடுத்து இறங்கிய சஞ்சு சாம்சன் ஒத்துழைக்க இந்திய அணி வெற்றிப் பாதைக்குச் சென்றது.

    பொறுப்புடன் ஆடிய ஷ்ரேயஸ் அய்யர் சதமடித்து அசத்தினார். இது அவரது 2வது சதமாகும்.

    இறுதியில், இந்திய அணி 45.5 ஓவரில் 282 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. ஷ்ரேயஸ் அய்யர் 113 ரன்னுடனும், சாம்சன் 30 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    இந்த வெற்றியின் மூலம் ஒருநாள் தொடரில் இரு அணிகளும் 1-1 என சமனிலை வகிக்கின்றன.

    ×