search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாவர்க்கர்"

    • ஜோதிபா பூலே தனது மனைவி சாவித்திரிபாயை படிக்க வைத்தார்.
    • இந்தியாவின் முதல் பெண் ஆசிரியராக சாவித்ரிபாய் உருவெடுத்தார்.

    அண்மையில் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு இயக்குநர் சுதா கொங்கரா பேட்டி அளித்தார். அப்போது சாவர்க்கர் குறித்து அவர் பேசிய விஷயங்கள் சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாகின.

    "நான் அடிப்படையிலேயே வரலாறு மாணவி. நான் வுமன் ஸ்டடிஸ் படிப்பு படித்துக்கொண்டு இருக்கும் போது, எனக்கு பாடம் எடுத்த ஆசிரியர் ஒருவர், சாவர்க்கர் கதையை சொன்னார். அதாவது, சாவர்க்கர் மிகப் பெரிய தலைவராக இருந்த போது, அவர் தன்னுடைய மனைவியை நீ படிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்திக் கொண்டே இருந்தார்.

    ஆனால் அவரது மனைவிக்கு வீட்டில் இருக்க வேண்டும், வீட்டில் உள்ள வேலைகளை கவனித்துக் கொண்டு இல்லத்தரசியாக தன்னுடைய வாழ்க்கையை கொண்டு செல்ல வேண்டும் என்பதுதான் ஆசையாக இருக்கும்.

    அந்த நேரத்தில் பெண்கள் யாரும் படிக்க மாட்டார்கள். அவர் படிக்கச் செல்லும் போது, தெருவில் பலர் அவரை அவமானப்படுத்துவார்கள். இதனையடுத்து, அவர் நான் பள்ளிக்குச் செல்ல மாட்டேன் என்று சொல்லி, வீட்டிற்கு வந்து விடுவார்.

    இதை கவனித்த சாவார்க்கர், நான் உன்னை அழைத்துச் செல்கிறேன். யார் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம் என்று, மறுபடியும் அவரது கையைப் பிடித்து பள்ளிக்கு அழைத்துச் செல்வார். இது சரியா தவறா…? என்ற கேள்வியை கேட்டேன். என்னுடைய தாத்தா, சகுந்தலாவின் கதையை சொல்லும் பொழுதும், எனக்கு பல கேள்விகள் எழுந்தன. அவர் ராமர் சீதையோடு வனவாசம் சென்றதை, மிகவும் பக்தி மயமாக சொல்லிக் கொண்டிருப்பார். அவரிடம் நான் பல கேள்விகளை எழுப்புவேன்.

    ஆண், பெண் விவகாரத்தில் ஏன் அங்கு வித்தியாசம் என்ற ஒன்று வருகிறது. நான் உடல் ரீதியான வித்தியாசத்தை சொல்லவே இல்லை. எனக்கு அது தேவையே கிடையாது. ஒரு ஆண் அளவுக்கு ஒரு பெண்ணுக்கு வலிமை இல்லை என்பது ஒத்துக்கொள்கிறோம்.. ஆனால், நான் ஒரு பெண் என்பதாலேயே நான் தாழ்வு மனப்பான்மையோடு இருக்கிறேன் என்று சொல்வதெல்லாம் கேள்விக்கு உட்பட்டது. இந்த மாதிரியான கேள்விகளை என்னுடைய படங்களில் எந்த அளவுக்கு எழுப்ப முடியுமோ, அந்த அளவுக்கு நான் எழுப்புவேன்" என்று சுதா கொங்கரா பேசியிருந்தார்.

    இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் ஜோதிபா பூலே மற்றும் சாவித்திரி பாய் புலேவின் வரலாற்றை சாவர்க்கரின் வரலாறு என சுதா கொங்கரா திரித்து பேசியதாக விமர்சித்தனர்.

    ஜோதிபா பூலே தனது மனைவி சாவித்திரிபாயை படிக்க வைத்தார். அப்போது அவர்கள் இருவரும் அந்த பிற்போக்கு சமூகத்தால் ஒடுக்கப்பட்டனர். அந்த ஒடுக்குமுறையை மீறி இந்தியாவின் முதல் பெண் ஆசிரியராக சாவித்ரிபாய் உருவெடுத்தார். இதுதான் வரலாறு என்று பலரும் சுதா கொங்கராவை சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் விமர்சித்தனர்.

    இந்நிலையில் ஜோதிபா பூலே மற்றும் சாவித்திரிபாய் புலேவின் வரலாற்றை சாவர்க்கரின் வரலாறு என மாற்றி கூறியதற்கு சுதா கொங்கரா மன்னிப்பு கேட்டுள்ளார்.

    இது தொடர்பான அவரது எக்ஸ் பதிவில், "என் தவறுக்கு வருந்துகிறேன். எனது பதினேழாவது வயதில் பெண் கல்வி குறித்த எனது வகுப்பு ஒன்றில் எனது ஆசிரியர் சொன்னதை வைத்து நான் அந்த நேர்முகத்தில் பேசியிருந்தேன். ஒரு வரலாற்று மாணவியாக அதன் உண்மைத் தன்மையை நான் சோதித்திருக்க வேண்டும். அது என் பக்கத்தில் தவறுதான். எதிர்காலத்தில் அப்படி நேராது என்று உறுதியளிக்கிறேன். மற்றபடி ஒருவருடைய உன்னதமான செயலுக்கான புகழை இன்னொருவருக்குத் தர வேண்டும் என்ற நோக்கம் எனக்கு இல்லை. எனது பேச்சில் இருந்த தகவல் பிழையை சுட்டிக் காட்டியவர்களுக்கு நன்றி. ஜோதிபா மற்றும் சாவித்திரிபாய் புலே ஆகியோருக்கு என்றும் தலை வணங்குகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கடந்த 9 ஆண்டுகளுக்கும் மேலாக புத்தகம் எழுதிய எஸ்.ஜி. சூர்யா.
    • புத்தகத்தை சாவர்க்கரின் புகைப்படம் முன்பு வைத்து அஞ்சலி.

    சாவர்க்கரின் 141-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. பிரதமர் மோடி, ஆளுநர் ஆர்.என். ரவி என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில், "தாய்நாட்டின் சேவையில் தனது வாழ்க்கையை அர்ப்பணித்த மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரர் வீர் சாவர்க்கர் ஜிக்கு அவரது பிறந்தநாளில் அஞ்சலி" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    நாடு முழுவதும் உள்ள அவரது சிலைக்கு பா.ஜ.க. மற்றும் இந்து அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் மாலை அணிவித்தும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் பா.ஜ.க. மாநில செயலாளர் எஸ்.ஜி. சூர்யா கடந்த 9 ஆண்டுகளுக்கும் மேலாக தான் எழுதி வந்த "வீர சாவர்க்கர் - ஒரு கலகக்காரனின் கதை" என்ற புத்தகத்தை வெளியிட்டார்.

    அந்தமான் சிறையில் சாவர்க்கர் அடைக்கப்படிருந்த அறைக்கு நேரில் சென்ற எஸ்.ஜி. சூர்யா அவர் எழுதிய "வீர சாவர்க்கர் - ஒரு கலகக்காரனின் கதை" புத்தகத்தை சாவர்க்கரின் புகைப்படம் முன்பு வைத்து அஞ்சலி செலுத்தினார்.

    அதன் பின்னர் சாவர்க்கர் சிறையில் பயன்படுத்திய உரை, தட்டு உள்ளிட்ட பொருட்களைப் பார்வையிட்ட அவர், சிறை வளாகத்தில் இருந்த சாவர்க்கர் சிலைக்கும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

    • சாவர்க்கருக்கு மரியாதை செலுத்தியபின், உள்துறை அமைச்சர் அமித் ஷா டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்
    • இந்தியர்களின் இதயங்களில் தேசபக்தியின் சுடரை ஏற்றிவைத்தார் என அமித் ஷா குறிப்பிட்டுள்ளார்.

    புதுடெல்லி:

    சாவர்க்கரின் பிறந்தநாள இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி புதிய பாராளுமன்றத்தில் உள்ள சாவர்க்கரின் திருவுருவப் படத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மற்றும் மத்திய மந்திரிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள் சாவர்க்கர் படத்துக்கு மரியாதை செலுத்தினர். 

    சாவர்க்கருக்கு மரியாதை செலுத்தியபின், உள்துறை மந்திரி அமித் ஷா டுவிட்டரில் தனது கருத்தை பதிவிட்டுள்ளார். அதில், சாவர்க்கர் தன் எண்ணங்களால் எண்ணற்ற இந்தியர்களின் இதயங்களில் தேசபக்தியின் சுடரை ஏற்றிவைத்தார், என குறிப்பிட்டுள்ளார். வீர் சாவர்க்கரின் தேசபக்தி, தியாகம் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவை போற்றத்தக்கது என்றும், எப்போதும் நாட்டு மக்களுக்கு ஊக்கமளிக்கும் என்றும் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

    சாவர்க்கர் மகாராஷ்டிராவில் 1883இல் மே 28ம் தேதி பிறந்தார். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்குகொண்ட இவர், இந்துத்துவா கொள்கை கொண்ட கட்சிகள் மற்றும் அமைப்புகளால் வீர் சாவர்க்கர் என்று பெருமையுடன் அழைக்கப்படுகிறார்.

    • மகாத்மா காந்தி குறித்த பாடம் 7-வது செமஸ்டருக்கு மாற்றப்பட்டு உள்ளது.
    • கல்வியை காவிமயமாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

    புதுடெல்லி:

    டெல்லி பல்கலைக்கழக இளங்கலை (பி.ஏ.) அரசியல் அறிவியல் பட்டப்படிப்பு மாணவர்களுக்கு 5-வது செமஸ்டரில் மகாத்மா காந்தி குறித்து ஒரு பாடம் உள்ளது. இதை ரத்து செய்ய பல்கலைக்கழக நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

    இதற்கு பதிலாக சாவர்க்கர் குறித்த பாடத்தை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அதேநேரம் மகாத்மா காந்தி குறித்த பாடம் 7-வது செமஸ்டருக்கு மாற்றப்பட்டு உள்ளது. இதனால் 3 ஆண்டு பட்டப்படிப்பை தேர்வு செய்யும் மாணவர்கள், காந்தி குறித்த பாடத்தை படிக்க இயலாத நிலை ஏற்பட்டு உள்ளது.

    இது தொடர்பாக டெல்லி பல்கலைக்கழகத்தின் கல்விக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. பல்கலைக்கழக நிர்வாக கவுன்சில் இதற்கு ஒப்புதல் அளித்தால், இது அமல்படுத்தப்படும்.

    டெல்லி பல்கலைக்கழகத்தின் இந்த நடவடிக்கைக்கு ஒரு பிரிவு ஆசிரியர்கள், மாணவர்கள், கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. கல்வியை காவிமயமாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    • ராகுல் காந்தி சாவர்க்கரை அவமதித்து விட்டார் என பா.ஜ.க, சிவசேனா கட்சிகள் குற்றம் சாட்டின.
    • தேசபக்தர்களின் பெயர்களை அரசியலை ஊக்குவிக்கப் பயன்படுத்துவது தவறு என்றார் சாவர்க்கர் பேரன்.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி பதவி பறிக்கப்பட்டதை அடுத்து நேற்று முன்தினம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, மன்னிப்பு கேட்க என் பெயர் சாவர்க்கர் இல்லை என தெரிவித்தார். இதனால் ராகுல் காந்தி சாவர்க்கரை அவமதித்து விட்டார் என பா.ஜ.க, சிவசேனா கட்சிகள் குற்றம் சாட்டின.

    இந்நிலையில், சாவர்க்கர் மன்னிப்பு கேட்டதை நிரூபிக்கும் ஆவணங்களை காண்பிக்க வேண்டும் என ராகுல் காந்திக்கு சாவர்க்கர் பேரன் ரஞ்சித் சாவர்க்கர் சவால் விடுத்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தான் சாவர்க்கர் இல்லை என்பதால் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று ராகுல் காந்தி கூறி வருகிறார். சாவர்க்கர் மன்னிப்பு கேட்டதை நிரூபிக்கும் ஆவணங்களை காண்பிக்க வேண்டும் என அவருக்கு சவால் விடுகிறேன்.

    தேசபக்தர்களின் பெயர்களை அரசியலை ஊக்குவிக்கப் பயன்படுத்துவது தவறானது மற்றும் வருந்தத்தக்கது. ராகுல் காந்தி மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.

    • சாவர்க்கர் சிறையில் சித்தரவதை அனுபவித்தார்.
    • அரசியல் கட்சித் தலைவர்கள் பொய் சொல்வதையே வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

    நாக்பூர்:

    சாவர்க்கர் ஆங்கிலேயர்களிடமிருந்து உதவித் தொகை பெற்றதாகவும், அவை வரலாற்று உண்மை என்றும் காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி தெரிவித்திருந்தார். இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் ஆர்.எஸ்.எஸ்.தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய அந்த அமைப்பின் தலைவர்களில் ஒருவரான இந்திரேஷ் குமார் தெரிவித்துள்ளதாவது:

    இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ஒரே புரட்சியாளர் சாவர்க்கர் மட்டுமே. அவர் சித்திரவதைகள் நிறைந்த சிறை தண்டனையை அனுபவித்தார். ஆனால் காங்கிரஸ் தலைவர்கள் சிறையில் நிம்மதியாக கழித்தனர். எனவே, (அவரது ) தேசபக்தியை இழிவுபடுத்துவது கண்டிக்கத்தக்கது, மனிதாபிமானமற்றது.

    உங்களால் அவரை மதிக்க முடியாவிட்டால், அவரை அவமதிக்க யாருக்கும் உரிமை இல்லை. அரசியல் கட்சித் தலைவர்கள் பொய் சொல்வதையே வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஆர்எஸ்எஸ் அமைப்பில் அனைத்து சாதியினரும் மதிக்கப்படுகிறார்கள். தீண்டாமை என்பது அதர்மம், பாவம். பாகிஸ்தான் உருவாவதற்கு முன்பு ஜவஹர்லால் நேரு மற்றும் முகமது அலி ஜின்னாவை பேச்சுவார்த்தை நடத்துமாறு மகாத்மா காந்தி தெரிவிக்கவில்லை.அப்படி நடத்தியிருந்தால் நாடு பிரிக்கப்பட்டிருக்காது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×