search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மலை ரெயில்"

    • மலை ரெயில் சேவை 10 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டது.
    • மலை ரெயில் இயக்கப்பட்டு வருவதால் சுற்றுலா பயணிகள் அவற்றில் உற்சாகத்துடன் பயணித்து வருகின்றனர்.

    அருவங்காடு:

    நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் முடிந்த நிலையில், அங்கு சுற்றுலா பயணிகள் வரத்து குறையுமென எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது வெளி மாநில சுற்றுலா பயணிகளின் அதிகளவில் நீலகிரிக்கு வந்து செல்கின்றனர். மேலும் எண்ணற்றோர் மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையேயான மலைரெயிலில் பயணிக்க ஏற்கனவே முன்பதிவு செய்து காத்துக்கொண்டு உள்ளனர். இதனால் கடந்த ஏப்ரல் மாதம் 25-ந்தேதி நிலவரப்படி ஜூன் 15-ந்தேதிவரை முன்பதிவு செய்து காத்திருப்போர் பட்டியல் 6 ஆயிரத்துக்கும் மேல் நீண்டு வருகிறது.

    இதற்கிடையே நீலகிரியில் பலத்த மழை காரணமாக குன்னூர் -மேட்டுப்பாளையம் இடையே பாறை உருண்டு விழுந்து மண்சரிவு ஏற்பட்டதால், அந்த வழியாக செல்லும் மலைரெயில் சேவை 10 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டது.

    இருப்பினும் சனி-ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் குன்னூரில் இருந்து ஊட்டிக்கு தற்போது 5 பெட்டியுடன் கூடிய மலை ரெயில் இயக்கப்பட்டு வருவதால் சுற்றுலா பயணிகள் அவற்றில் உற்சாகத்துடன் பயணித்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக கடந்த 10-ந்தேதிவரை மேட்டுப்பாளையம், ஊட்டி மற்றும் குன்னூர் ஊட்டி இடையேயான மலை ரெயிலில் சுமார் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயணம் சென்றதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    நீலகிரியில் கோடை சீசன் முடிவடைந்து பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ள நிலையில் ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, கேரளா, மராட்டியம், மேற்குவங்காளம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருவதால் மலை ரெயில் போக்குவரத்து நிலையங்கள் மீண்டும் களைகட்ட தொடங்கி உள்ளன.

    • கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை வரை நீலகிரி மலை ரெயில் சேவை தினசரி நடைபெற்று வருகிறது.
    • நூற்றாண்டு பழமை வாய்ந்த மலை ரெயிலில் பயணித்தபடி நீலகிரி மலையின் இயற்கை அழகை கண்டு ரசிக்க உள்நாடு மட்டுமின்றி பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர்.

    நீலகிரி:

    தமிழகத்தின் பிரபல சுற்றுலா தலமாக நீலகிரி உள்ளது. இங்கு நிலவும் இதமான காலநிலை மற்றும் இயற்கை காட்சிகளை அனுபவிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். கோடை காலத்தில் விடுமுறையை கொண்டாட ஏற்ற இடமாக உள்ளதால் பலரும் குடும்பத்தினருடன் இங்கே வருகின்றனர்.

    மேலும், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை வரை நீலகிரி மலை ரெயில் சேவை தினசரி நடைபெற்று வருகிறது. நூற்றாண்டு பழமை வாய்ந்த மலை ரெயிலில் பயணித்தபடி நீலகிரி மலையின் இயற்கை அழகை கண்டு ரசிக்க உள்நாடு மட்டுமின்றி பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர்.

    இந்நிலையில், மலைகளுக்கு நடுவே நீலகிரி மலை ரெயில் செல்லும் அழகான காட்சியை தெற்கு ரெயில்வே வீடியோவாக வெளியிட்டுள்ளது. எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள ரெயிலின் பிரம்மிப்பூட்டும் வீடியோ ஆயிரக்கணக்கான பார்வைகளை கடந்து சென்றுள்ளது.

    • மலைரெயில் பாதையில் உள்ள தண்டவாளத்தில் மண் மற்றும் பாறைகள் சரிந்து விழுந்தன.
    • மலைரெயிலில் பயணிக்க வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

    மேட்டுப்பாளையம்:

    மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரிக்கு தினமும் மலைரெயில் இயக்கப்பட்டு வருகிறது. காடுகளுக்கு நடுவே செல்வதால் இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்கலாம் என்பதால் இந்த ரெயிலில் பயணிக்க சுற்றுலா பயணிகள் மிகுந்த ஆர்வம் காட்டுவார்கள்.

    நீலகிரி, மேட்டுப்பாளையத்தில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது. இந்த மழையால் கடந்த 18-ந் தேதி மலைரெயில் பாதையில் பாறைகள், மண்சரிவு ஏற்பட்டது. இதனால் 18-ந் தேதி தல் 21-ந் தேதி வரை 4 நாட்கள் ரத்து செய்யப்பட்டது.

    சீரமைப்பு பணிகள் முடிந்து நேற்று மீண்டும் மலைரெயில் போக்குவரத்து தொடங்கியது. இந்த நிலையில், மீண்டும் மழை பெய்ததால், மலைரெயில் பாதையில் உள்ள தண்டவாளத்தில் மண் மற்றும் பாறைகள் சரிந்து விழுந்தன. இதுகுறித்து ரெயில்வே ஊழியர்கள் ரெயில்வே நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தனர்.

    இதையடுத்து இன்று ஒருநாள் மலைரெயில் போக்குவரத்து ரத்து செய்யப்படும் என சேலம் கோட்ட ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் மலைரெயிலில் பயணிக்க வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

    • மலைரெயில், அங்கிருந்து மீண்டும் மேட்டுப்பாளையம் நோக்கி சென்றது.
    • அதிகாரிகள், ரெயில்வே ஊழியர்களுடன் விரைந்து வந்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர்.

    கோவை:

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக பரவலான மழை பெய்து வருகிறது.

    இந்நிலையில் மலைப்பாதை மட்டுமல்லாமல், மலை ரெயில் பாதையிலும் மண்சரிவு, மரங்கள் முறிந்து விழுவது உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டு வந்தன. இதனால் ரெயில் சேவையும் ரத்து செய்யப்பட்டிருந்தது.

    மழை ஒய்ந்த பின்னர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு தான் மலைரெயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது. அதனை தொடர்ந்து சுற்றுலா பயணிகள், உள்ளூர் மக்கள் ரெயிலில் பயணித்து வந்தனர்.

    வழக்கம் போல இன்று காலை 7.10 மணிக்கு, மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு 180 பயணிகளுடன் மலைரெயில் புறப்பட்டது.

    மலைரெயில் கல்லார்-ஹில்குரோவ் இடையே சென்ற போது தண்டவாள பகுதியில் பாறைகள் உருண்டு விழுந்ததுடன், மண்சரிவும் ஏற்பட்டது. இதனால் தண்டவாளம் சேதம் அடைந்தது.

    இதை பார்த்ததும் ரெயில் என்ஜின் டிரைவர், ரெயிலை சில அடி தூரத்திற்கு முன்பு நிறுத்தி விட்டு, அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்.

    இதையடுத்து அதிகாரிகள், ரெயில்வே ஊழியர்களுடன் விரைந்து வந்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் மலைரெயில், அங்கிருந்து மீண்டும் மேட்டுப்பாளையம் நோக்கி சென்றது.

    சுற்றுலா பயணிகள் அங்கிருந்து பஸ் மூலமாக ஊட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மலைரெயிலில் பயணிக்க வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    மலை ரெயில் பாதையில் மண்சரிவு ஏற்பட்டதை அடுத்து இன்று மட்டும் மேட்டுப்பாளையம்-ஊட்டி மலைரெயில் சேவை ரத்து செய்யப்படுவதாக ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

    • மலைரெயில் பாதையில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 2 முறை மண்சரிவு ஏற்பட்டது.
    • ரெயில்வே ஊழியர்கள் தண்டவாள பாதைகளை சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு தினந்தோறும் மலை ரெயில் போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

    இந்த ரெயிலில் பயணம் செய்தால் வழியில் இருக்கும் குகைகள், பள்ளத்தாக்குகள், நீர்வீழ்ச்சிகள் மற்றும் பச்சைப்பசேல் இயற்கை காட்சிகளை கண்குளிர கண்டுகளிக்க முடியும்.

    எனவே தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் மேட்டுப்பாளையம்-ஊட்டி ரெயிலில் பயணம் செல்ல அதிகம் விரும்புவர்.

    கோவை, நீலகிரி மாவட்டங்களில் தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக அங்குள்ள பல்வேறு பகுதிகளில் மண்சரிவு, பாறைகள் உருண்டு விழுதல், சாலையோர மரங்கள் முறிந்து விழுவது போன்ற விபத்துக்கள் அடிக்கடி நடந்து வருகின்றன.

    மேலும் மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையேயான மலைரெயில் பாதையில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 2 முறை மண்சரிவு ஏற்பட்டது. இதன்காரணமாக அந்த பகுதிகளில் மலைரெயில் போக்குவரத்து ஏற்கனவே 2 தடவைகள் ரத்து செய்யப்பட்டன. பின்னர் அங்கு சீரமைப்பு பணிகள் முடிந்தன. தொடர்ந்து கடந்த 19-ந் தேதி மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே மலை ரெயில் போக்குவரத்து தொடங்கியது.

    இந்த நிலையில் மேட்டுப்பாளையம், ஊட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக மேட்டுப்பாளையம்-ஹில்குரோவ் இடையே 3 பகுதிகளில் தண்டவாள பாதையில் பாறைகள் உருண்டு விழுந்தன. மேலும் மண்சரிவு ஏற்பட்டு தண்டவாளத்தை மணல் மூடியது. பாதையோரத்தில் நின்றிருந்த மரங்கள் முறிந்து விழுந்தன. மேலும் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், தண்டவாளத்தில் ஜல்லிக்கற்கள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டன. எனவே தண்டவாளப்பாதைகள் அந்தரத்தில் தொங்கின.

    இதற்கிடையே மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்தில் இருந்து 180 பயணிகளுடன் மலைரெயில் இன்று காலை 7:10 மணிக்கு புறப்பட்டது. அப்போது ஹில்குரோவ் அருகே 3 இடங்களில் தண்டவாள பாதையில் மண்சரிவு ஏற்பட்டது தெரியவந்தது.

    தொடர்ந்து மலைரெயில் கல்லாறு பகுதியில் நிறுத்தப்பட்டது. பின்னர் அந்த ரெயில் மீண்டும் மேட்டுப்பாளையத்தை வந்தடைந்தது. தொடர்ந்து மலை ரெயிலில் பயணிப்பதற்காக டிக்கெட் எடுத்திருந்த சுற்றுலா பயணிகளிடம் கட்டணத்தொகை திருப்பி தரப்பட்டது. இதனால் சுற்றுலாபயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

    மண்சரிவு பற்றிய தகவல் அறிந்ததும் ரெயில்வே அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு தற்போது 25-க்கும் மேற்பட்ட ரெயில்வே ஊழியர்கள் தண்டவாள பாதைகளை சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையேயான மலைரெயில் போக்குவரத்து கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 3 முறை ரத்து செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • 5-க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு, மரங்கள் முறிந்து கிடக்கின்றன
    • இடிபாடுகளை அகற்றும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் மும்முரம்

    மேட்டுப்பாளையம்,

    மேற்கு தொடர்ச்சி மலை பகுதியையொட்டியுள்ள நீலகிரி, கோவை மாவட் டத்தில் கடந்த 2 வாரங்களுக்கு மேலாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது.

    இதனிடையே குன்னூர், மேட்டுப்பாளையம் பகுதியில் கடந்த 3-ந் தேதி நள்ளிரவு பெய்த கனமழைக்கு ஆடர்லி, ஹில்கு ரோவ் இடையே 5க்கு மேற்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு பாறை கள், மரங்கள் முறிந்து தண்டவாளத்தில் விழுந்தது. இதனால் கடந்த 4-ந் தேதி முதல் 7-ந் தேதி வரை மலை ெரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.

    அதன்பின் மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே ெரயில்வே பணி மனை ஊழியர்கள் தண்ட வாளங்களில் பராமரிப்பு பணியை முடித்ததால் 8-ந் தேதி மலை ெரயில் இயக்கப்பட்டது.ஆனால் அன்றைய தினம் இரவு பெய்த கன மழையால் 10-க்கு மேற்பட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு தண்வாளத்தில் மரம், பாறைகள் சரிந்து விழுந்தன.

    இதனால் கடந்த 9-ந் தேதி முதல் 16-ந் தேதி (வியாழக்கிழமை) வரை மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே மலை ெரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக ரெயில்ேவ நிர்வாகம் அறிவித்தது.

    இந்நிலையில் மேட்டுப் பாளையம்-குன்னூர் மலை ெரயில் பாதையில் மேலும் சில இடங்களில் தண்டவாளத்தில் விழுந்த மரம், பாறைகளை அகற்றப்படாததால் இன்று (வெள்ளிக்கிழமை) மற்றும் நாளை(சனிக்கிழமை) ஆகிய 2 நாட்கள் மலை ெரயில் மீண்டும் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    இதனால் மலை ெரயிலில் பயணம் செய்ய காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    • நீலகிரி மாவட்டத்தில் குன்னூர், பர்லியாறு, கரன்சி, ஆர்டர்லி, ஹில்குரோவ் பகுதிகளில் நேற்று தொடர்ந்து கனமழை பெய்து வந்தது.
    • நடுக்காட்டில் நின்ற பயணிகள் மீண்டும் மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

    மேட்டுப்பாளையம்:

    மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக பகல் மற்றும் இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் குன்னூர், பர்லியாறு, கரன்சி, ஆர்டர்லி, ஹில்குரோவ் பகுதிகளில் நேற்று தொடர்ந்து கனமழை பெய்து வந்தது.

    மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு இன்று காலை 7.10 மணிக்கு மலை ரெயில் புறப்பட்டது. இந்த மலைரெயிலில் 186 பயணிகள் பயணித்தனர்.

    அப்போது ரெயில் ஆர்டர்லி அருகே சென்றபோது தண்டவாளத்தில் மண் சரிவு ஏற்பட்டு பாறை மற்றும் மண் கிடந்தது.

    இதை பார்த்த ரெயில் என்ஜின் டிரைவர் உடனடியாக ரெயிலை நிறுத்தினார். தொடர்ந்து லாவகமாக பின்னோக்கி இயக்கி வந்தார்.

    மேலும் இது தொடர்பாக உடனடியாக ரெயில்வே நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு ரெயில்வே பணிமனை ஊழியர்கள் விரைந்து வந்தனர்.

    அவர்கள் தண்டவாளத்தில் சரிந்து வந்து விழுந்த பாறை, மண்ணை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் நடுக்காட்டில் நின்ற பயணிகள் மீண்டும் மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அதன்பின் பஸ் மூலம் ஊட்டிக்கு பயணிகளை அனுப்பி வைத்தனர்.

    மேலும் தண்டவாளத்தில் மண், பாறை சரிந்து விழுந்ததால் மேட்டுப்பாளையம்- குன்னூர் இடையே மலை ரெயில் சேவை இன்று ரத்து செய்யப்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

    • மேட்டுப்பாளையத்தில் இருந்து செப்டம்பா் 16, 30, அக்டோபா் 21, 23 ஆகிய நாட்களில் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
    • மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 9.10 மணிக்கு புறப்படும் மலை ரெயில் மதியம் 2.25 மணிக்கு ஊட்டியை வந்தடையும்.

    கோவை:

    மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே நீலகிரி மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இது மலைமுகடுகள், குகைகள், நீர்வீழ்ச்சிகள், பசுமை பள்ளத்தாக்குகள் ஆகியவற்றை கடந்து செல்கிறது.

    எனவே நீலகிரி மலை ரெயிலில் பயணித்து அங்கு நிலவும் இயற்கை காட்சிகளை கண்டு ரசிப்பதற்காக, தினமும் 500-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு புறப்பட்டு சென்று வருகின்றனர்.

    இந்த நிலையில் வருகிற 18-ந்தேதி விநாயகர் சதுர்த்தி, அக்டோபர் 2-ந்தேதி காந்தி ஜெயந்தி, 23-ந்தேதி ஆயுதபூஜை ஆகிய விடுமுறை தினங்கள் வருகின்றன. எனவே சுற்றுலா பயணிகள் வசதியை கருத்தில் கொண்டு மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே மலை ரெயிலை கூடுதலாக இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி சிறப்பு மலைரெயில் இயக்கப்பட உள்ளது.

    ஊட்டியில் இருந்து குன்னூருக்கு செப்டம்பா் 16, 17, 30, அக்டோபா் 1 ஆகிய 4 நாட்கள் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

    குன்னூரில் இருந்து செப்டம்பா் 17, 18, அக்டோபா் 1, 2 ஆகிய நாட்களில் ஊட்டிக்கு சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. ஊட்டியில் இருந்து மாலை 4.45 மணிக்கு புறப்பட்டு மாலை 5.55 மணி அளவில் இந்த ரெயில் குன்னூரை வந்தடையும்.

    இதேபோல குன்னூரில் இருந்து காலை 8.20 மணிக்கு புறப்பட்டு காலை 9.40 மணிக்கு ஊட்டியை சென்றடையும்.

    மேட்டுப்பாளையத்தில் இருந்து செப்டம்பா் 16, 30, அக்டோபா் 21, 23 ஆகிய நாட்களில் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 9.10 மணிக்கு புறப்படும் மலை ரெயில் மதியம் 2.25 மணிக்கு ஊட்டியை வந்தடையும்.

    ஊட்டியில் இருந்து கேத்தி வரை செப்டம்பா் 17, அக்டோபா் 1 ஆகிய இரு நாட்கள் மலை ரெயில் இயக்கப்படுகிறது.

    • மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்தில் இருந்து ஊட்டி மலை ரெயில் மட்டுமின்றி சென்னை, கோவைக்கும் ரெயில்கள் இயக்கப்படுகிறது.
    • மாணவர்கள் அனைவரும் ஒரே மாதிரி டீ சர்ட் அணிந்து 150-வது ஆண்டு விழாவை கொண்டாடினர்.

    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டத்தின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள மேட்டுப்பாளையம் ரெயில் நிலையம் நாட்டில் உள்ள மிகப்பழமையான ரெயில் நிலையங்களில் ஒன்றாகும்.

    கடந்த 1873-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த ரெயில் நிலையத்தில் இருந்து தான் உலக பாரம்பரிய சின்னமான நூற்றாண்டு பழமை வாய்ந்த நீலகிரி மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது

    மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்தில் இருந்து ஊட்டி மலை ரெயில் மட்டுமின்றி சென்னை, கோவைக்கும் ரெயில்கள் இயக்கப்படுகிறது.

    மேட்டுப்பாளையம் ரெயில் நிலையம் மக்கள் செயல்பாட்டிற்கு வந்து 150 ஆண்டுகள் நிறைவு செய்ததை முன்னிட்டு ரெயில் நிலையத்தின் பழமையையும், முக்கியத்து வத்தையும் உணர்த்தும் வகையில் ரெயில்வே நிர்வாகம் அரசு பள்ளி மாணவ, மாணவிகளை மேட்டுப்பாளையம் முதல் கல்லாறு வரை இலவசமாக மலை ரெயிலில் பயணம் செய்ய ஏற்பாடு செய்தனர்.

    அதன்படி இன்று காலை 10 மணிக்கு மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்திலிருந்து மேட்டுப்பாளையம் சுற்று வட்டாரப்பகுதிகளான ஓடந்துறை, காட்டூர், ஊமப்பாளையம், மணிநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு பள்ளி மாணவ, மாணவிகள் 200 பேர் மேட்டுப்பாளையம் முதல் கல்லாறு வரை ஊட்டி மலை ரெயிலில் தென்னக ரெயில்வே சார்பில் அழைத்து செல்லப்பட்டனர். ரெயில் பெட்டியில் ஏறியது முதல் ரெயில் கிளம்பும் வரை மாணவ, மாணவிகள் சத்தமிட்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மாணவர்கள் அனைவரும் ஒரே மாதிரி டீ சர்ட் அணிந்து 150-வது ஆண்டு விழாவை கொண்டாடினர்.

    இந்த ரெயிலை இயக்குநர் மற்றும் சீனியர் டிவிசனல் மெக்கானிக்கல் என்ஜினீயர் பரிமளக்கு மார், நீலகிரி மலை ரெயில் உதவி இயக்குநர் சுப்ரமணி மற்றும் ரெயில் ஆர்வலர் டி.எல்.எஸ்.ராஜேந்திரன், ஹபிபுல்லா உள்ளிட்ட பலர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

    இந்நிகழ்ச்சியில் ரெயில்வே ஊழியர்கள், பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மேட்டுப்பாளையத்தில் இருந்து பயணிகளுடன் மலைரெயில் புறப்பட்டது.
    • ரெயில்வே தண்டவாளத்தில் ஒற்றை காட்டு யானை ஒன்று நடந்து சென்றது.

    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து தினந்தோறும் காலை 7.10 மணியளவில் ஊட்டிக்கு மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

    இன்று காலை மேட்டுப்பாளையத்தில் இருந்து பயணிகளுடன் மலைரெயில் புறப்பட்டது. பயணிகள் வனங்களை ரசித்தபடியும், இயற்கை நீர்வீழ்ச்சிகளை பார்த்த படியும் ரெயிலில் பயணித்து கொண்டிருந்தனர்.

    ஹில்குரோவ் பகுதியில் ரெயில் சென்று கொண்டிருந்தது. அப்போது ரெயில்வே தண்டவாளத்தில் ஒற்றை காட்டு யானை ஒன்று நடந்து சென்றது. மேலும் ரெயிலை நோக்கியும் யானை வந்தது.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த டிரைவர் உடனடியாக ரெயிலை நிறுத்தினார். இதற்கிடையே மலை ரெயிலில் பயணித்தவர்கள், தண்டவாளத்தில் காட்டு யானை நிற்பதை பார்த்து அச்சம் அடைந்தனர்.

    இருப்பினும் யானையை பார்த்த ஆர்வத்தில், ரெயிலில் இருந்தபடி அங்கு சுற்றி வந்த காட்டு யானையை செல்போனில் வீடியோ எடுத்தனர்.

    இதற்கிடையே யானை ரெயிலை மறித்த தகவல் அறிந்ததும் வனத்துறையினர் விரைந்து வந்து யானையை காட்டுக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

    ஆனால் யானை அந்த இடத்தை விட்டு நகரவில்லை. 10 நிமிடத்துக்கு பிறகு மீண்டும் அடர்ந்த காட்டுக்குள் திரும்பி சென்றது. அதன்பிறகு மேட்டுப்பாளையம் மலை ரெயில் மீண்டும் ஊட்டிக்கு புறப்பட்டு சென்றது.

    இந்த நிலையில் யானை ரெயிலை மறித்த வீடியோவை பயணிகள் சிலர் தங்களது சமூக வலைதளங்களில் வெளியிடவே தற்போது அது வைரலாகி வருகிறது.

    • குன்னூரில் இருந்து புறப்பட்ட மலைரெயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது.
    • தண்டவாளத்தில் கிடந்த மரத்தை வெட்டி அகற்றி அப்புறப்படுத்தினார்கள்.

    குன்னூர்:

    நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக மலைரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இதில் தினமும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் பயணம் சென்று வருகின்றனர்.

    இந்த நிலையில் அந்த மலை ரெயில் இன்று காலை குன்னூரில் இருந்து புறப்பட்டது. அப்போது வெலிங்டன் பகுதியில் ஒரு மரம் வேரோடு சாய்ந்து தண்டவாளத்தில் விழுந்தது.

    இதனை தற்செயலாக பார்த்த ரெயில்வே ஊழியர்கள், உயர்அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். எனவே குன்னூரில் இருந்து புறப்பட்ட மலைரெயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது.

    இதனை தொடர்ந்து மீட்புபடை ஊழியர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அங்கு தண்டவாளத்தில் கிடந்த மரத்தை வெட்டி அகற்றி அப்புறப்படுத்தினார்கள். அதன்பிறகு மலைரெயில் சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக ஊட்டிக்கு புறப்பட்டு சென்றது.

    • ஊட்டியில் குளுகுளு சீசன் தொடங்கி உள்ளது.
    • வாரந்தோறும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோடைகால சிறப்பு மலை ரெயில் இயக்கப்படுகிறது.

    மேட்டுப்பாளையம்:

    ஊட்டியில் குளுகுளு சீசன் தொடங்கி உள்ளது. இதையொட்டி சுற்றுலா பயணிகளின் வசதிக்காக மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே வருகிற 15-ந் தேதி முதல் ஜூன் மாதம் 25-ந் தேதி வரை வாரந்தோறும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோடைகால சிறப்பு மலை ரெயில் இயக்கப்படுகிறது.

    இதன்படி இந்த சிறப்பு ரெயில் சனிக்கிழமைகளில் காலை 9.10 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கும், ஞாயிற்றுக்கிழமை காலை 11.25 மணிக்கு ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கும் புறப்பட்டு செல்கின்றன.

    ×