search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இணையதள வசதி"

    • பள்ளிகளுக்கு அதிவேகம் கொண்ட இணைய இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது.
    • பள்ளிகளுக்கு ஜூன் மாத இரண்டாம் வார இறுதிக்குள் நிறைவடையும் வண்ணம் பணிகள் நடைபெற்று வருகிறது.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசு பி.எஸ்.என்.எல். நிறுவனத்துடன் இணைந்து இணையதள வசதியினை ஏற்படுத்தி வருகிறது, தமிழ்நாட்டிலுள்ள 6,223 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், இதுவரை 5,913 பள்ளிகளில் இணையதள வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. மொத்தமுள்ள 6,992 நடுநிலைப் பள்ளிகளில் 3,799 பள்ளிகளில் இவ்வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தொடக்கப் பள்ளிகளைப் பொறுத்தமட்டில் மொத்தமுள்ள 24,338 பள்ளிகளில் 10,620 பள்ளிகளில் இணையதள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இப்பள்ளிகளுக்கு அதிவேகம் கொண்ட இணைய இணைப்பு வழங்கப்பட்டுஉள்ளது.

    மொத்தமுள்ள 37,553 அரசுப் பள்ளிகளில் 20,332 பள்ளிகளில் இப்பணியானது முழுமையாக முடிக்கப்பட்டு, மீதமுள்ள 17,221 அரசுப் பள்ளிகளுக்கு ஜுன் மாத இரண்டாம் வார இறுதிக்குள் நிறைவடையும் வண்ணம் பணிகள் நடைபெற்று வருகிறது. வரும் கல்வியாண்டு முதல் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகள் கற்றல் செயல்பாட்டில் புதுமையான அனுபவங்களோடு உத்வேகமான மன நிலையோடு கல்வி கற்பார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • அரசுப் பள்ளிகளில் 8,180 உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் ரூ.519.73 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வருகின்றன.
    • 22,931 திறன்மிகு வகுப்பறைகள் ரூ.455.32 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வருகின்றன.

    தமிழகத்தில் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் இணையதள வசதி ஏற்படுத்த தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

    இதற்கான பணி இம்மாத இறுதிக்குள் நிறைவடையும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

    அரசுப் பள்ளிகளில் இணைய வேகத்தை 100 எம்பிபிஎஸ் என்ற அளவில் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

    பிஎஸ்என்எல் நிறுவனத்துடன் இணைந்து இணையதள வசதியை தமிழ்நாடு அரசு ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் உள்ள 6223 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் இதுவரை 5,907 பள்ளிகளில் இணையதள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    6992 நடுநிலைப் பள்ளிகளில் 3267 பள்ளிகளில் இணையதள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    மொத்தமுள்ள 24,338 தொடக்கப் பள்ளிகளில் 8,711 பள்ளிகளில் இணையதள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    மீதமுள்ள 19,668 அரசுப் பள்ளிகளுக்கு இம்மாத இறுதிக்குள் இணையதள வசதி வழங்கப்படும்.

    மேலும், அரசுப் பள்ளிகளில் 8,180 உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் ரூ.519.73 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வருகின்றன.

    22,931 திறன்மிகு வகுப்பறைகள் ரூ.455.32 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வருகின்றன.

    அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் புதுமையான அனுபவங்களோடு உத்வேகமான மனநிலையோடு கல்வி கற்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

    • தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் மூலம் தற்போது முழு வீச்சில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
    • உபகர ணங்களை சேதப்படுத்தும் அல்லது திருடும் நபர்கள் மீது நட வடிக்கை மேற்கொள்ள ப்படும்

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அருண் தங்கராஜ் விடுத்து ள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    கடலூர் மாவட்டத்தி லுள்ள 683 கிராம ஊராட்சி களிலும் இணையதள வசதி வழங்கும் பாரத் நெட் திட்டமானது, தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் மூலம் தற்போது முழு வீச்சில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இணையதள இணைப்பு வழங்கும் பணி வருகிற செப்டம்பர் மாதம் முதல் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கண்ணாடி இழை இணைப்பு 85 சதவீதம் மின்கம்பங்கள் மூலமாகவும், 15 சதவீதம் தரை வழியாகவும் இணைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இத்திட்டத்திற்கான ரேக், யூ.பி.எஸ். உள்ளிட்ட உபகரணங்கள், ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் உள்ள கிராம ஊராட்சி சேவை மையம் அல்லது அரசு கட்டிடத்தில் நிறுவப்ப ட்டு வருகிறது. இந்த உபக ரணங்கள் பொருத்தப்ப ட்டுள்ள அறை, சம்பந்த ப்பட்ட ஊராட்டசி மன்றத் தலைவரால் பராமரிக்க ப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்கான உபரகணங்களை பாதுகா த்திடவும், தடையில்லா மின் வசதி உள்ளதை உறுதி செய்திடவும், பி.ஓ.பி. பொறுத்தப்பட்டுள்ள அறையை கண்காணிப்பது உள்ளிட்ட பணிகளுக்கு, சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சி செயலாளர் அரசாணையின்படி பெறுப்பு வழங்கப்பட்டு உள்ளது. இதனால் இத்திட்டம் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும் போது, ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் வசிக்கும் மக்கள் அனைவரும் இணையதள வசதிகளை பெற முடியும். ஒவ்வொரு கிராம ஊராட்சியில் மையங்களில் பொருத்த ப்பட்டுள்ள மின்கலம், மற்றும் கண்ணாடி இழை உள்ளிட்ட உபகரணங்கள் யாவும் அரசின் உடைமைக ளாகும். மேற்கண்ட உபகர ணங்களை சேதப்படுத்தும் அல்லது திருடும் நபர்கள் மீது இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் காவல் துறையினர் மூலம் கடுமையான குற்றவியல் நட வடிக்கை மேற்கொள்ள ப்படும் என எச்சரிக்கப்ப டுகிறது. இவ்வாறு கூறப்பட்டு ள்ளது.

    • ஊராட்சிகளில் பணிபுரியும் செயலர்களே கம்ப்யூட்டர்களை ஆப்ரேட் செய்கின்றனர்.
    • வரி செலுத்துவோரின் மொபைல்போன் எண்களை பதிவு செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    உடுமலை :

    ஊராட்சிகளில் சொத்து வரி உள்ளிட்ட கட்டணங்களை, இணைய வழியில் செலுத்தும் வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. இதையொட்டி மக்களிடம் இருந்து நேரடியாக வரி இனங்களை வசூல் செய்யும் பணி ஊராட்சிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.அவ்வகையில் கிராம மக்கள், vptax.tnrd.tn.gov.in என்னும் இணையதளம் வாயிலாக வரி செலுத்தலாம்.

    இதற்காக வீட்டு உரிமையாளர்கள், பயனாளிகள் செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில்வரி ஆகியவை இந்த இணையதளத்தில் கிராம ஊராட்சிகளால் உள்ளீடு செய்யப்பட்டுள்ளது.ஆனால் இணையதளத்தில் எடிட் ஆப்சன் கிடையாது. இதனால், வரி வசூல் பதிவை முறைபடுத்த முடியாமல் உடுமலை சுற்றுப்பகுதி கிராமச் செயலர்கள் தவித்து வருகின்றனர்.அவ்வாறு ஆன்லைன் வாயிலாக வரி வசூல் செய்யப்பட்டாலும் பதிவேடுகளை பராமரிக்கும் கட்டாயம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:- ஊராட்சிகளில் பணிபுரியும் செயலர்களே கம்ப்யூட்டர்களை ஆப்ரேட் செய்கின்றனர். ஆன்லைன் வாயிலாக வரி இனங்கள் செலுத்தப்பட்டாலும் அந்த விபரங்களை பதிவேட்டில் பராமரிக்க வேண்டியுள்ளது.இதனால் முதற்கட்டமாக வரி செலுத்துவோரின் மொபைல்போன் எண்களை முறையாக பதிவு செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக பதிவேடுகளுடன் கம்ப்யூட்டரிலும், விவரங்களை பதிவு செய்ய அறிவுறுத்தப்படுவதால் கூடுதல் வேலைப்பளு ஏற்படுகிறது.

    அதேபோல இணையதளத்தில் எடிட் ஆப்சன் கிடையாது. அதனால் ஆன்லைன் பதிவில் பிழை ஏற்பட்டால் அதனை சரிபடுத்த முடியாது. தற்போதைய சூழலில் வரி இனங்கள் செலுத்தியதிற்கு ரசீது வழங்க அனுமதி கோரப்பட்டுள்ளது. இக்காரணங்களால் ஊராட்சிகளில் இந்த திட்டத்தை முழுமையாக செயல்படுத்த காலதாமதம் ஏற்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • தமிழ்நாடு மின்சார வாரியம், மின்நுகர்வோரின் செல்போன் எண்களுக்கு, ஆதார் இணைக்கலாம்.
    • மின் இணையதள முகவரியில் சென்று, மின் இணைப்பு எண்ணை பதிவிடலாம்.

    திருப்பூர் : 

    தமிழ்நாடு மின்சார வாரியம், மின்நுகர்வோரின் செல்போன் எண்களுக்கு, ஆதார் இணைக்கலாம் என மின்வாரியம் குறுஞ்செய்தி அனுப்பி வருகிறது. மின் இணைப்பு எண்ணுடன் வரும் குறுஞ்செய்தியில், இதுதொடர்பான அரசாணை தேதியும், ஆதார் இணைப்புக்கான இணையதள முகவரியும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    மின்நுகர்வோர், https://www.tnebltd.gov.in/adharupload என்ற இணையதள முகவரியில் சென்று, மின் இணைப்பு எண்ணை பதிவிடலாம். பதிவு செய்த செல்போன் எண்ணுக்கு வரும் ஓ.டி.பி. எண் வாயிலாக, உரிமையாளர் சரிபார்க்கப்படுகின்றனர். அதற்கு பிறகு, ஆதார் எண்ணை பதிவு செய்து, அதன் போட்டோவை பதிவேற்றம் செய்ய வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது.

    சொத்து வாங்கிய உரிமையாளர், தங்கள் பெயருக்கு மின் இணைப்பை மாற்றாமல் இருந்தாலும், புதிய உரிமையாளரின் ஆதார் எண்ணை பதிவு செய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்யாமல் ஏராளமான சொத்துக்கள் இருக்கின்றன. எனவே ஆதார் இணைக்க வசதியாகவும், பெயர் மாற்ற ஏதுவாகவும், சிறப்பு முகாம்கள் நடத்திட மின்வாரியம் திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

    • விரிவான நில தகவல் இணையதளத்தில் பதிவேற்றம் செய்வது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
    • தமிழக அரசின் சி.எல்.ஐ.பி. இணையத்துடன் இணைப்பதற்கு இந்த தகவல் பரிமாற்றம் மிகவும் உதவியாக இருக்கும்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட கோர்ட்டில் சொத்துப்பிரச்சினை வழக்கில் நில விவரங்களை, விரிவான நில தகவல் இணையதளத்தில் (சி.எல்.ஐ.பி.) பதிவேற்றம் செய்வது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு முதன்மை மாவட்ட நீதிபதி ஸ்வர்ணம் நடராஜன் தலைமை தாங்கினார்.

    மோட்டார் வாகன விபத்து வழக்குகள் தீர்ப்பாய நீதிபதி ஸ்ரீகுமார், மகளிர் நீதிமன்ற நீதிபதி நாகராஜன், முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதி பத்மா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    அனைத்து வழக்கறிஞர்கள் சங்கங்களின் நிர்வாகிகள், அரசு வக்கீல்கள், மூத்த சிவில் வக்கீல்கள், மாவட்ட வருவாய் அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பல்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். வக்கீல்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் தங்களது வழக்குகளில் தொடர்புடைய சொத்து விவரங்களை கோர்ட்டு மென்பொருளில் பதிவேற்றம் செய்யும்போது, தானாகவே தமிழக அரசின் சி.எல்.ஐ.பி. இணையத்துடன் இணைப்பதற்கு இந்த தகவல் பரிமாற்றம் மிகவும் உதவியாக இருக்கும்.

    மேலும் வக்கீல்களும், பொது மக்களும் மேற்கூறிய சி.எல்.ஐ.பி. இணையத்தில் ஒரு சொத்து சம்பந்தமாக தற்போது வில்லங்கசான்று பதிவுத்துறையில் இருந்து பெறுவது போலவே, நிலுவை வழக்குகள் பற்றிய விவரங்களை அறிய வசதியாக அமையும். பதிவுத்துறை, வருவாய்த்துறை, காவல்துறை அதிகாரிகள் பங்கேற்று கருத்துக்களை தெரிவித்தனர். மேலும் வழக்குகளில் தொடர்புடைய சொத்து விவரங்களை விரைந்து வழங்குவதாக உறுதி அளித்தனர்.

    ×