என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "விஜய் வசந்த் எம்பி"
- சாலையில் ஏற்பட்டுள்ள குண்டு, குழிகளை மூட உத்தரவிட்டார்.
- நிரந்தரமாக தேசிய நெடுஞ்சாலை சரி செய்யப்படும்.
கன்னியாகுமரி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், அங்குள்ள தேசிய நெடுஞ்சாலைக்கு சென்று ஆய்வு செய்தார்.
அப்போது சாலையை சீரமைக்க 14.87 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டுள்ள நிலையில், தற்போது சாலை மிகவும் பழுதடைந்து மக்கள் பயணிக்க சிரமப்படுகின்றனர்.
எனவே நெடுஞ்சாலை துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு ஒப்பந்தக்காரர் இறுதி செய்வதற்கு முன் சாலையில் ஏற்பட்டுள்ள குண்டு குழிகளை மூட வேண்டும், உடனடியாக சாலைகளை செப்பனிடவும் உத்தரவிட்டார். இதையடுத்து இன்று குழித்துறை பகுதியில் சாலையை சீரமைக்கும் பணிகள் நடைபெற்றது.
மேலும் நெடுஞ்சாலை துறை மற்றும் நகராட்சி அதிகாரிகளிடம் விஜய் வசந்த் எம்பி பேசி சாலையை நல்ல முறையில் சீரமைக்க அறிவுறுத்தினார்.
இதையடுத்து ஓடையில் நீர் செல்ல முடியாமல் மழை நீர் சாலையில் தங்குவதால் சாலை சேதமடைவதை உணர்ந்து ஜே.சி.பி. எந்திரம் மூலம் ஓடையை தூர் வாரவும் கோரினார்.
இது தற்காலிகமான தீர்வு தான் எனவும் கூடிய விரைவில் நிரந்தரமாக தேசிய நெடுஞ்சாலை சரி செய்யப்படும் எனவும் உறுதி அளித்தார்.
- காங்கிரஸ் மாநில தலைவர் செல்வபெருந்தகை தலைமையில் தமிழ்நாடு காங்கிரஸ் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
- கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.
சென்னையில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் செல்வபெருந்தகை தலைமையில் தமிழ்நாடு காங்கிரஸ் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் அஜோய்குமார், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சூரஜ் எம்.என்.ஹெக்டே, சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் ராஜேஷ்குமார் உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு பல்வேறு தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், முன்னாள் மாநில தலைவர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு தலைவர்களுக்கு வாழ்த்து தெரிவித்ததாக கன்னியாகுமரி தொகுதி எம்.பி விஜய் வசந்த் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பான பதிவு மற்றும் புகைப்படங்களை அவரது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
- சிறப்பு விருந்தினர்களாக குமரி எம்.பி விஜய்வசந்த், குளச்சல் எம்.பி ஜே.ஜி.பிரின்ஸ் கலந்துக் கொண்டனர்.
- பிறந்த நாள் முன்னிட்டு 121 மாணவ மாணவிகளுக்கு நோட்டு, புத்தகங்கள் வழங்கப்பட்டது.
பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 121 வது பிறந்தநாளை முன்னிட்டு, குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் கே.டி.உதயம் தலைமையில் பிறந்த நாள் விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த், குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் ஜே.ஜி.பிரின்ஸ் ஆகியோர் கலந்துகொண்டு கேக் வெட்டியும், 121 மாணவ மாணவிகளுக்கு நோட்டு, புத்தகங்கள் வழங்கியும் சிறப்பித்தனர்.
காங்கிரஸ் பேரியக்க மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள், மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள், நகர நிர்வாகிகள், வட்டார நிர்வாகிகள், பேரூராட்சி நிர்வாகிகள், ஊராட்சிமன்ற நிர்வாகிகள், காங்கிரஸ் பேரியக்க துணை அமைப்புகளின் நிர்வாகிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
- இரவு நேர ஏரநாடு விரைவு ரெயில் குழித்துறை ரெயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- புதிதாக அறிமுகமாக உள்ள சென்னை-நெல்லை 'வந்தே பாரத்' ரெயிலை கன்னியாகுமரி வரை நீட்டித்து இயக்க வேண்டும்.
சென்னை:
கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தென்னக ரெயில்வே பொது மேலாளரை சந்தித்து மனு அளித்தார்.
வேளாங்கண்ணிக்கு புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள பண்டிகை கால சிறப்பு ரெயில் நாகர்கோவிலில் இருந்து சனிக்கிழமை மதியம் புறப்பட்டு அன்று நள்ளிரவு வேளாங்கண்ணி சென்றடைகிறது. அதே ரெயில் ஞாயிற்றுக்கிழமை காலை வேளாங்கண்ணியில் இருந்து புறப்பட்டு இரவு நாகர்கோவில் வந்தடைகிறது.
ஆகையால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நேர அட்டவணையை மாற்றி சனிக்கிழமை மாலை நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு ஞாயிற்றுக்கிழமை காலை வேளாங்கண்ணி சென்றடையும் வகையிலும் ஞாயிற்றுக்கிழமை மாலை வேளாங்கண்ணியில் இருந்து புறப்பட்டு திங்கள் காலை நாகர்கோவில் வந்தடையும் வகையிலும் மாற்ற வேண்டும்.
அதுபோல கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா காலத்திற்கு முன்பிருந்தது போல் மதுரை-புனலூர் ரெயில் ஆரவ்வாய் மொழி பள்ளியாடி குழித்துறை மேற்கு போன்ற நிலையங்களில் நிறுத்த வேண்டும். நாகர்கோவில்-கோட்டயம் ரெயில் நாகர்கோவில் டவுன், பள்ளியாடி குழித்துறை மேற்கு ஆகிய இடங்களில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். இரவு நேர ஏரநாடு விரைவு ரெயில் குழித்துறை ரெயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதிதாக அறிமுகமாக உள்ள சென்னை-நெல்லை 'வந்தே பாரத்' ரெயிலை கன்னியாகுமரி வரை நீட்டித்து இயக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- விஜய் வசந்த் நற்பணி மன்றத்தின் சார்பாக பிறந்தநாள் கொண்டாட்டம்.
- இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்தின் 40 வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது.
இதை முன்னிட்டு விஜய் வசந்த் நற்பணி மன்றத்தின் சார்பாக நேற்று கன்னியாகுமரி ஆசாரி பள்ளம் மருத்துவமனையில் பிறந்த அனைத்து குழந்தைகளுக்கும் விஜய் வசந்த் அவர்களின் ஆதரவாளரும் தீவிர ரசிகருமான ஆ.சுபுகான் தங்க மோதிரம் மற்றும் சீர் வரிசைகள் வழங்கினார்
இந்நிகழ்ச்சியில் அக்ரம் கான், ஷேக் செய்யது, டாக்டர் தினேஷ், ஆரோக்கிய ராஜன், சாந்தி, எமில்டா, பனிமேரி, நித்யா மற்றும் பல நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
- நேருயுவகேந்திரா அமைப்பின் பாண்டிச்சேரி மற்றும் தமிழக நிர்வாகி செந்தில்குமார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- நிகழ்ச்சியில் இயற்கை காய்கறிகள் மற்றும் தானிய வகைகளின் கண்காட்சியும் நடைபெற்றது.
கன்னியாகுமரி மாவட்டம் அழிக்கால் பகுதியில் உள்ள ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி வளாகத்தில் நேருயுவகேந்தரா அமைப்பின் சார்பில் கலாச்சார விழா நடைபெற்றது.
இந்த விழாவை கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். மேலும் அங்கு நடைபெற்ற கண்காட்சி மற்றும் இளைஞர்களை விளையாட்டில் ஊக்குவித்தார்.
நேருயுவகேந்திரா அமைப்பின் பாண்டிச்சேரி மற்றும் தமிழக நிர்வாகி செந்தில்குமார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் இயற்கை காய்கறிகள் மற்றும் தானிய வகைகளின் கண்காட்சியும் நடைபெற்றது.
பின்னர், விழாவில் பேசிய கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த், " நேருயுவகேந்திரா அமைப்பு இது போன்று மாணவ மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. குறிப்பாக மாணவ மாணவிகள் கல்வியில் மட்டும் ஆர்வம் செலுத்தாமல் விளையாட்டு போட்டிகளிலும் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை நிரூபிக்க வேண்டும். இதில் அவர்கள் வெற்றி தோல்வியை பற்றி கவலைப்பட கூடாது. வருங்காலங்களில் கல்வி அல்லாத பிற தகுதிகளும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதால் இதனை மாணவர்கள் பின்பற்ற வேண்டும்" என்று கூறினார்.
- விஜய் வசந்த் எம்.பி. தனது சொந்த செலவில் மாற்றுத்திறனாளி ஒருவருக்கு மூன்று சக்கர சைக்கிளை வழங்கினார்.
- கொண்டாட்டத்தில் மாவட்ட,வட்டார தலைவர்கள், மாநில மாவட்ட நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நாகர்கோவில் வெட்டூர்ணிமடத்தில் உள்ள எம்.பி. அலுவலகத்தில் காங்கிரஸ் சார்பில் பொங்கல் விழா நேற்று நடந்தது. விஜய் வசந்த் எம்.பி. குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார். மண்பானையில் மகளிரணியினர் பொங்கலிட்டனர்.
பின்னர் விஜய் வசந்த் எம்.பி. தனது சொந்த செலவில் மாற்றுத்திறனாளி ஒருவருக்கு மூன்று சக்கர சைக்கிளை வழங்கினார்.
விழாவில் கிழக்கு மாவட்ட தலைவர் கே.டி.உதயம், மேற்கு மாவட்ட தலைவர் பினுலால் சிங், அகில இந்திய காங்கிரஸ் போலிங் பூத் கமிட்டி தலைவர் ராதாகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து விஜய் வசந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
அதில், "நாகர்கோவிலில் உள்ள நமது அலுவலகத்தில் காங்கிரஸ் குடும்பத்தினருடன் இன்று பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடினோம். மாவட்ட,வட்டார தலைவர்கள், மாநில மாவட்ட நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்" என்று குறிப்பிட்டிருந்தார்.
- குழித்துறை ரெயில்வே பயணிகள் சங்கத்தினர் விஜய்வசந்திடம் கோரிக்கை மனுவினை அளித்தனர்.
- ரெயில் நிலையத்தில் இருந்த பயணிகள் பலரிடம் விஜய் வசந்த் எம்.பி. தேவைகளை கேட்டறிந்தார்.
கன்னியாகுமரி:
குழித்துறை ரெயில் நிலையத்தில் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
இன்று காலை 10 மணி அளவில் குழித்துறை ரெயில் நிலையம் சென்ற விஜய் வசந்த் எம்.பி. அங்கு இருந்த பயணிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். கழிப்பறை வசதிகள் குடிநீர் வசதிகள் சரியான முறையில் உள்ளதா என பயணிகளிடம் கேட்டறிந்தார்.
அப்போது கழிவறை ஒன்று கட்டப்பட்டு இன்னும் பயணிகள் பயன்பாட்டிற்கு வராதநிலையில் உள்ளதை அறிந்து அதனை விரைந்து பயணிகள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்க வேண்டும் என அதிகாரிகளிடம் வலியுறுத்தினார். மேலும் குழித்துறை ரெயில்வே பயணிகள் சங்கத்தினர் விஜய்வசந்திடம் கோரிக்கை மனுவினை அளித்தனர். அதில் மார்த்தாண்டம் பேருந்து நிலையத்திலிருந்து குழித்துறை ரெயில் நிலையம் வழியாக பேருந்துகள் கடந்து செல்லும் வகையில் மேம்பாலம் அமைக்க வேண்டும் எனவும், அனந்தபுரி விரைவு ரெயிலை அதிவிரைவு ரெயிலாக வேகப்படுத்த வேண்டும், நாகர்கோவில் வழியாக திருவனந்தபுரத்திலிருந்து வேளாங்கண்ணிக்கு செல்ல ஏதுவாக புதிய ரெயிலை இயக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.
தொடர்ந்து ரெயில் நிலையத்தில் இருந்த பயணிகள் பலரிடம் விஜய் வசந்த் எம்.பி. தேவைகளை கேட்டறிந்தார்
இந்த ஆய்வின்போது காங்கிரஸ் மேற்கு மாவட்டத் தலைவர் டாக்டர்.பினுலால் சிங், மாநில பொதுக்குழு உறுப்பினர் ரத்தினகுமார், விளவங்கோடு பஞ்சாயத்து தலைவர் லைலா ரவிசங்கர், மார்த்தாண்டம் தொழில் வர்த்தக சங்க தலைவர் அல் அமீன், காங்கிரஸ் கட்சி மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் செல்வகுமார், வட்டார தலைவர் பாகோடு மோகன்தாஸ், உண்ணாமலைக்கடை பேரூராட்சி தலைவர் பமலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்